Veyil - வெயில் , வாழ்க்கை ....
கவிதை பற்றி ஒரு Post போடலாமா... இல்லை comedy track ஒன்று போடலாமா.. என்று யோசித்து கொண்டு இருக்கையில், சரி இரண்டும் வேண்டாம்... நேற்று பார்த்த படம் பத்தி, அப்பறம் கொஞ்சம் comedy, கவிதை என்று கலந்து போட முடிவு எடுத்தேன்... அது தான் இது!
மு.கு: கொஞ்சம் different ஆக format இருக்கும்.. hopefully, easy ஆக புரியும்!
முதலில் படம்: படத்தின் ஆழம் இவங்க காதல்தான்! கொஞ்சம் வித்தியாசமான கதை ... வாழ்க்கையில் ஜெயிப்பவர்களை பற்றியே கதை எடுப்பவர்கள் மத்தியில், ஒரு variant attempt .. மனதை தொடும் சமுதாய உண்மைகள்... படம் முடிவில் மனதில் நிற்பவை ..Pasupathy character.. மற்றும் வாழ நினைத்து தோற்று(?) போன அவரது முடிவு... இது தொல்வியா? வெற்றியா? என்று தோன்றும் climax குழப்பம்! படத்தின் பாட்டுக்கள் நல்லா தான் இருக்கு. " உருகுதே.. மறுகுதே... " super!
அடுத்து comedy:
படத்துக்கு இவங்க ரெண்டு பேரும் முக்கியம் இல்லை! comedy track தவிற... ;)
உங்களுக்காக ஒரு குட்டி comedy scene: இங்க உள்ள "Boxing Day" culture பற்றி..
(அவரவர் பாணியில் படிக்கவும்)
நம்ம விவேக் : இடம்: Walmart முன்னாடி.. நேரம்: 5:OO AM
(டெய் என்னடா இது... இங்க எதாச்சும் church ல நம்ம மாரியாத்தா கோவில் rangeல கூழ் ஊத்தறாங்களா.. எதுக்கு இப்படி வெள்ளை கார பயலுக இங்க queueல நிக்கிறாங்க?)
ஒரு வெள்ளை கார madamமிடம்
"Hello.. escuse me.. "
"what?"
"here church கூழ் pouring? why you standing"
"church? no i went there yesterday.. this is shopping"
(ஒன்னும் புரியலையே!)
"What you doing here?"
"idiot, i just said it"
"என்னது இடியாப்பம் தராங்களா... ஆகா.. அது தான் matter a.. நம்மளும் நிற்ப்போம்"
நம்ம வடிவேல்: is running early morning singing "Black and love... love and black"
("யம்மே ..என்னாடா இது...எதாச்சும் மரியல் கிரியல் பன்றாங்களா?... சரி அங்க நிற்கிற வெள்ளை figure கிட்ட பேசி அப்படியே correct பன்னிட வேண்டியதுதான்..")
"hello..excuse me .. இங்க என்ன நடக்குதுனு சொல்ல முடியுமா?"
"What?"
"Oh sorry.. u dont know Tamil.. but i know English.."
"???"
"Oh me introduce.. I am terror of Tamilnadu.. you know tamilnadu.. I am terror there! people see me they run"
"What you are a terrorist?"
"yeah..yeah.. so you what? who?"
நம்ம அம்மணி அவ்ங்க hubbyய கூப்பிடராங்க..
"honey, this man claims to be a terrorist..he is watching and talking to me for the past 15 minutes"
அவரு "hey who are you man"
"ஆஹா... இது யாரு புது character!"
"Oh nothing..me just seeing... early morning running..seeing crowd...asking"
"non-sense..go away or I will call 911"
என்னாது 9/11க்கு நான் தான் காரணம் என்று உள்ள பிடிச்சு போடுவியா... escape!
அடுத்து கவிதை:
படத்தோட கவிதை அம்சம் இவங்க கதை! பாண்டி character, கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் பதியும் உண்மை.
சரி ..ஒரு குட்டி ஹைக்கூ அல்லது கவிதை.. எப்படி சொன்னாலும் ரோஜா ரோஜா தான!
யாராச்சும் ரம்மி விளையாடி இருக்கீங்களா?
" Joker வந்தாலும் ஆடலாம்
set சேர்ந்தாலும் ஆடலாம்
ஆனா
ரம்மி வந்தா தான் அடிக்கலாம்!"
இது வந்து
"நிலவில்லா வானமும்
அழகு தான்! அம்மாவாசை இரவு
ஆனால் முழுமை இல்லை
முழுமை - பௌர்ண்மி இரவு"
என்னும் அதே concept! கொஞ்சம் மாற்றி :)
Added on Dec 26th: மக்களே சொல்ல மறந்து விட்டேன்.. Belated Merry Xmas and Advanced Happy New year!