Quantum Reflections - I - ஐம்பது வருடம் கழித்து..
மு.கு: மக்களே..இது heavy duty post. கொஞ்சம் பெரிய பதிவு.
உலக யுத்த வியூகங்கள். அதாவது War strategy on global level. அதுல நமக்கு தோணினது. I am always fascinated by war. especially since they are one constant - worthless - yet never leaving aspect of humanity. or maybe simply because i am male!
மனிதர்கள் Social Animals. அவங்களுக்கு குழுக்களாக இருப்பது தான் பிடிக்கும். மிக அடிப்படையான நிலையில் பார்த்தீங்கனா நாடு, மதம், ஜாதி ... எல்லாம் அதுக்கு மேல கட்டபட்ட பெரிய குழுக்கள். நாம் என்ற சொல் எப்பவுமே நான் என்ற சொல்ல விட மயக்கம் கொடுக்க கூடியது. எடுத்துகாட்டுக்கு சாதாரண கல்லூரி பெண்ணை எடுத்தீங்கனா, நாம நடந்து போனம்னா, அது பாட்டுக்கு அமைதியா போவும். அதுவே ஒரு 5-6 பொண்ணுங்க சேர்ந்து இருக்கும் போது தனியா போனா! The Behavior of a mob/group is distinctly unrelated and different from any given individual. அதனால தான் நாட்டு பற்று வெறியர்களும், மத வெறியர்களும் இருப்பது. அது ஒரு மயக்கம். A sense of invulnerability. Like a herd of Zebras are more safe from the predator than a isolated one. இதுல சரி தவறு என்று எல்லாம் யாரும் யோசிக்காதீங்க. சரி தவறு என்பதே மிகவும் relative terms. Mostly there is no absolute right, nor wrong.
இப்ப உலக வரைபடம் பாத்தீங்கனா, நாடுகள் தான் மிக முக்கியமான குழுக்கள். அதுக்கு போட்டியா இருப்பது மதம். (for this discussion pls ignore the spiritualistic impact of any religion - and just consider them as a group of power like nations - which in truth they are ;) ) எல்லாரும் நம்பற மாதிரி மதம் இல்லன பிரச்சனை இருக்காது என்பது பைத்தியக்காரத்தனம். பிரச்சனை எப்பவும் இருக்கும்.. மதம் ஒரு சாக்கு. நாடு ஒரு சாக்கு. நான் பெரியவனா, அவன் பெரியவனா என்ற எண்ணம் இருக்கும் வரை... மனிதர்கள் இருக்கும் வரை.. பிரச்சனைகள் இருக்கும்.ஆனால் அது எப்பவும் நாடு, மதம் என்னும் போர்வைக்குள் ஒளிந்து இருக்கும். ஆக, இப்ப உள்ள மேஜர் குழுக்கள் - மதம் ரீதியா, நாடு ரீதியா.
சரி. இப்ப நம்ம சில பிற்கால சூழ்நிலைகல பத்தி பேசுவோம்.
இப்ப நம்ம அமெரிக்கா Iraq, Afghanisthan ல சண்டை போடுது. அவங்க அங்க என்னைக்கும் ஜெயிக்க முடியாது. Not unless they break the will of every soul in those nations or nuke them. காரணம் - guerilla warfare. பாஷ்டுன் மக்கள் மலைகளில் பரம்பரை பரம்பரையாக வசித்தவர்கள் - அந்த போர் முறை அவர்களுக்கு அத்துபடி. அன்றைய Alexander ல இருந்து நேற்றைய பிரிட்டிஷ், இன்றைய அமெரிக்கா வரை யாரும் நிலையான வெற்றி பெற முடியல. ஆனா அவங்களாலும் ஜெயிக்க முடியாது.
இப்ப நடந்த British soldiers Kidnap பாத்தீங்கனா, Iran விவரமா British soldiers கடத்தனான்..இல்ல பிடிச்சான். அதே US army people அ பிடிச்சு இருந்தான்.. இவ்ளொ நேரத்ல இரெண்டு பேரும் மோதிட்டு இருப்பானுங்க. It is by mere luck(?) this did not happen.. எப்படி இவன் சரியா அமெரிக்கா ஆளுகளை பிடிக்காம இவனுங்கள பிடிச்சான்?? I cant believe it was a chance encounter. smells like pre-mediated.
சரி இது இன்றைய நிலை. இப்ப நாம கொஞ்சம் variables introduce செய்வோம்.
கடந்த பல நூற்றாண்டுகலை விட, crusades அ விட, இப்ப இஸ்லாமுக்கு சோதனை காலம். Islam as a religion to survive, is facing a tough time in this time. Against the western onslaught on everything that is Islam. ஆக, இந்த நாடுகள் (Arab states)ஐரோப்பாவிடமும் அமெரிக்காவிடமும் சண்டையில்ல மீள முடியாத நிலைக்கு தள்ளபடும். Lower economy. Less technology. Less power. இப்படி நடந்தா, நம்ம அண்டை நாடான பாகிஸ்தான் மட்டும் எப்படி சும்மா இருக்கும்? Not unless they reduce their religious interests from the state to the level of present day Turkey... or even further.
ஏனா, அணுகுண்டு வச்சி இருக்கும் ஒரே நாடு அது தான். இஸ்லாமிய நாடுகளில். ஆனா கண்டிப்பா அமெரிக்கா மேல எல்லாம் போடாது. நம்ம தான்! எப்படியும் ஒரு அணுகுண்டாச்சும் நம்ம மேல விழும். அப்படி நடந்தா மறுநாள் அது இருக்க்காது என்பது வேறகதை. நம்ம கிட்ட இருக்க்கும் அணுசக்திய வச்சி we can burn every square kilometre into ahses. ஆனா நம்ம பக்கத்துல இன்னொரு கண்டம் இருக்கு. பேரு சீனா. எப்படியும் நாம கடசில ஜெயிச்சிடுவோம். ஏனா இந்த மாதிரி நடந்தா ஐரொப்பாவும் அமெரிக்காவும் நம்ம பக்கம் இருக்கும்.
Just remember not to stay in Delhi or Mumbai during those time. Prime targets for nukes!
அடுத்தது இஸ்லாமிய நாடுகள் முழித்து கொண்டால்.. அப்போ அது எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டமைப்பு வைக்கும். they will control most of the oil production in the world. இப்போ தான் சிக்கல். இப்போ இந்த இஸ்லாமிய கூட்டமைப்பு கொஞ்சம் புத்திச்சலிதனமா இருந்தா, they will strive for peace. and grow. economically.. and eventually militarily into a formidable power. இல்லனா இதுக்கு முன்னாடி சொன்னாப்ல தான்.
If the later happens, that will be WWIII. The casualties will be more than X10 times of WWI and WWII casualities combined. இது சீனா இல்லாம. சீனா குதிச்சா, X50 to X100 தான்.
இதுல நமக்கு என்னடா பிரச்சனை என்று தான கேட்கறீங்க.. சொல்லறேன். நம்ம மக்கள் பெரும்பாலும் இந்துக்கள். கொஞ்சம் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என இரெண்டு மதங்களும் உண்டு. அப்போ ஒரு பகுதி மக்கள் ஒரு பக்கமும் மீதி இன்னொரு பக்கமும் இருப்பாங்க. Expect Riots.
இது ஒரு scenario. இன்னொன்னு சண்டையில்லாத யுத்தம். உலக மக்களெல்லாம் கிறிஸ்துவர்களாக மாற்றும் ஒரு scenario. Core biblists/ Evangelists in their zest to show "enlightment" to masses of pagan worshippers (நம்ம தான்) in Asia - China and India - will invade as missionaries. நம்ம நாட்டுல ஏற்கனவே அதுக்கான அடித்தளம் இட்டாச்சு. கிறிஸ்துவ பள்ளி கூடங்கள் - friday seminars என்று பைபிள் போதிப்பது, influencing vulnerable young minds, western culture influence that makes todays youngsters knowledge of traditons and their understanding zero.. என்று.
இன்னொரு scenario. இது நம்ம நாடு இந்துத்துவ நாடா மாறுவது. அப்புறம் we can share the fate of Islamist fundamentalist states of today :) அரோகரா!.
சரி.. அப்ப என்னதான் பண்ணனும் இந்தியா? நிறைய. உள்ள இருந்து ஆரம்பிச்சு நிறைய மாத்தனும். உள்ள மாத்த வேண்டியது பத்தி அடுத்த பாகத்தில்.
முதல்ல Jammu and Kashmir. எப்படியும் பாகிஸ்தான் எங்கயாச்சும் சருக்கும். அமெரிக்காவுக்கு எதிரா பாகிஸ்தான் வரும். அடுத்த நாள் நாம போருக்கு செல்லனும். இந்த முறையாச்சும் கேனத்தனமா ஜெயிச்சும் நிலத்த வாரி வழங்காம, போன காரியத்தா ஒழுங்கா முடிக்கனும். அத செய்தால் அப்புறம் நமக்கு கிட்டத்து முதல் எதிரி சைனா தான். நாம ஒன்னு சைனா கூட கூட்டு வைக்கனும். அது நடக்காது. Not with communism in china in its present avatar. despotic-communism. பாப்போம்.
ஒரு அணுக்குட்டி 4 states of Quantum ல இருக்கலாம். So the number of possible futures is given by the formula XC4 where X = number of அணுக்கள் involved. ஆக நான் சொல்ல வருவது.. நான் சொன்னது எல்லாம் நடக்க கூடிய chance ரொம்ப கம்மி.
(அப்புறம் எதுக்குடா சொன்ன என்று தான கேட்கறீங்க? ;) ) (உங்களுக்கு எல்லாம் physics மறந்து இருக்கும் என்ற தைரியத்துல சொல்றேன்.. +2 ல படிச்சது)
But Scientists have partially proved that the probability of a electron in one quantum state can be influenced by human thoughts. அதாவது நாம எல்லாருமா சேர்ந்து ஒன்ன நம்பினா அது நிஜமாயிடும். ஆக, ஐம்பது வருஷம் கழிச்சு இதுல எதுனா நடந்தா என்ன திட்டாதீங்க.
Peace is an expensive commodity maintained by strength. Not by idealogy or principles. you enforce peace. Not close your eyes and hope everything will remain calm. American arrogance, Pakistanian pestilence, Chinese cannons.. நாம வல்லரசு ஆகும் முன் செய்ய வேண்டியது.. நடக்க வேண்டியது நிறைய.எந்த வல்லரசும் பக்கத்துல நம்மள மாதிரி எதிரிகள வைத்து வல்லரசு ஆனதில்ல.. சும்மா எல்லாரும் ITல வேல பாத்தா இந்தியா வல்லரசு ஆகாது. கீழ்நிலை குடிமகன்ல இருந்து எல்லாருக்கும் அடிப்படை தேவை, கல்வி கிடைக்கனும். Pakistan and Chinese nuclear threats should be eliminated... Internal policies need to change... இது போல ஏகப்பட்டது.
ம்ம்... சரி.. இதோட முடிச்சுக்கின்றேன். அதுத்த பாகத்துல உள்ள என்ன மாறுதல்கள்கள் வந்தா நல்லா இருக்கும் என்று பார்ப்போம்.
"ஆயிரம் இளைஞர்களை கொடு
நான் உலகத்தை மாற்றுகின்றேன்
என்று சொன்ன விவேகானந்தருக்கு
காத்திருப்பதை விட்டு விட்டு
வா...
ஆயிரம் விவேகானந்தர்கள்
உலகத்தை எப்படி மாற்றுவர் என
காண்பிப்போம்"
ஜெய்ஹிந்த்.