Wednesday, October 31, 2007

கவிதை M.A

எங்கடா பரிசு அப்படினு எல்லாரும் துரத்தி விரட்டி.. இப்ப இங்க... இப்படி...

மதித்து கவிதை எழுதின எல்லார்க்கும் நன்றி. கவிதைகள் குழந்தைகள் மாதிரி. 5 குழந்தைல, இது தான் ரொம்ப நல்ல குழந்தைனு எப்படி சொல்லுவேன்? ஒவ்வொன்றும் ஒரு விதம்...

மு.கு:: ஆக்சுவல் பரிசுகள் என்னுடைய 75வது பதிவில் கொடுக்கப்படும்.
அட நிஜமாங்க!


//சப்தமில்லாமல் அசைவது சலனமாமில்ல - ரசிகன்//
இந்த வரிகள் அசத்தல்...

//நொடிகள்புரண்டும் நிறுத்தமறுக்கும்
உன் விழிப்பட்ட சலனமட்டும்... - ஜி//
நச் வரிகள்...

//கல்லெறிந்தவனின் குற்றமோ
அனுமதித்த உன் குற்றமோ - வேதா
..// என மொத்த கவிதையிலும் ஆழ கருத்துக்கள்..
அருமை...

//மனதுக்கு இனியவள்!
அருகில் அம்சமாய் நான்
மரிக் கொழுந்தாய் மச்சினி! - அம்பி//
ROFL! கவிதையில் நகைச்சுவை தூவி..

//என் தனிமையின் முகவரி
தேடிப்பிடித்து என் முன் வந்தாள் - C.V.R
// சீக்கிரம் வருவாங்க! வாழ்த்துக்கள். உங்களுக்காக ஒருத்தி எங்கேனும் பிறந்து வளர்ந்து காத்திருக்கின்றாள். தேடினாலும், தேடானாலும், பார்த்தாலும், இல்லாலும், கிடைப்பாள்.. கிடைக்கும்.



சரி, சமாளிச்சாச்சு. இனி மேட்டர்க்கு. போன வாரம் மட்டும் 78 மணி நேரம் வேலை பார்த்தேன்.. இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்லை. வேலை கொஞ்சம் கம்மி..

ம்ம்..இன்னைக்கு தான் தமிழ் M.A படம் பார்த்தேன்... எல்லா படமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த படம் மனதில் உறங்கி இருக்கும் பழைய நினைவுகளை தட்டி எழுப்புகின்றது. எவ்வளவு சின்ன முடிவுகள்... எவ்வளவு எளிதாய் உலகம் மாறுது!

சின்ன வயசுல என்ன ஆகனும்னு கேட்டப்ப, தமிழ் வாத்தியார்னு சொன்னவன் நான். தமிழ்னா உயிர். ஆனா தமிழ், 12வதோட போச்சு. தமிழ் படிச்சு இருந்தா இப்படி தான், 2000 ரூபாய் சம்பளத்துக்கு இருந்திருப்பேனோ? தமிழ் இனி மெல்ல சாகும் னு சொன்னாங்க. நாமளே கொல்லுவோம் என்பதை மறைப்பதேன்...?

கற்றது தமிழ்..... அழகு. அழகு எப்போதும் மகிழ்ச்சியை தருவதில்லை. உண்மைகள் இனிப்பதில்லை.

இந்த உலகத்தில் பொய் மட்டும் இல்லனா... அழகு ஏது? அதிசயம் ஏது? ....

love marriage னா, பொருள் வராது.. பொண்ணு வரும்..Arranged marriage னா பொருள் வரும்.. பொண்ணு?(ணோட மனசு) வருமா.... ? படத்தின் நச் வசனங்கள்..

"Unbutton me", "Touch me here If you Dare" போன்ற வசனம் எழுதி, பாரதி கண்ட புதுமைப்பெண், ஆண் வர்க்கத்தின் egoism அதை தவறாக பார்ப்பதாக சொல்கின்றாள். பெண்ணாக இருக்கனும் என்பது என் கருத்து. (இது பெண்களிம் சுய உரிமையை மறுக்கும் கருத்தல்ல. ஆண் பெண் சமம் என்பது முட்டாள்தனம். இருபாலர்க்கும் சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு. they compliment each other. Trying to be masculine doesnt make feminine equal to it.. nor greater... nor lesser... How can Yin and Yang be equal or one better than the other? But yes they are opposing forces of the same balance. என்பது என் மனப்பான்மை. தவறாயிருக்கலாம்)

வண்டியில் போகும் போது காதலி தோளில் சாய்வாள் பாருங்க. ஒரு நிமிஷம் இதயம் நிற்கும். எப்பவாச்சும் உங்களுக்கு இந்த நிமிஷத்தோட செத்திடனும்னு தோன்றி இருக்கா?
5 வருஷமா பழகி காதலிச்ச பொண்ணு தோளில் சாய்ந்தால் கண்டிப்பா தோணும்..
ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசறது இப்போ சாதாரணமாயிருக்கலாம். ஆனாலும் கூட...
ம்ம்ம்ம்... என்ன சொல்ல... சில விஷயங்களை விளக்க முடியாது.. உணர வேண்டும்..
உண்மையின் பிரதிபலிப்புக்கள்... சினிமாவிலும்.

தைரியமாக படம் எடுத்த டைரக்டருக்கும், producerக்கும், நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றது தமிழுலகம். இப்படி பட்ட படங்களை ஊக்குவித்தால் தான், தமிழ் பட கலாச்சாரம் கொஞ்சமாச்சும் மாறும். (எங்க வீட்டுல என்னை தவிற யாருக்கும் பிடிக்கல என்பது வேற மேட்டர்!).. நடிகரின் நடிப்பு ... 10/10. அப்புறம் யாருப்பா அந்த பொண்ணு. So cute!

ஏப்பா, 2000 வருஷமா இருக்கும் மொழிப்பா.. அவ்வளவு லேசில் போகாது! அப்படினு வேதாந்தம் பேசாதீங்க. > 2000 வருஷமா இருந்த civilisation - Native Americans. ஒரு 200 வருஷத்தில், சுவடில்லாமல் அழியவில்லையா?

ஆரம்பம் ஆன எல்லாத்துக்கும் முடிவுண்டு. மறுப்பில்லை. எனக்கும், உங்களுக்கும்.. தமிழுக்கும். ஆனால் சில விஷயங்களுக்கு ஆரம்பமே இல்லை. தமிழை எப்ப நேசிக்க ஆரம்பிச்சேனு எனக்கு தெரியாது.

ஏனோ தெரியவில்லை
காதலுக்கான
அணைத்து முயற்ச்சியும்
விரிசலில்.. விலகலில்
(எழுத்து பிழைகளோடு)
முடிகின்றது.
இப்பதிவு
என் காதலுக்கான
கடைசி சந்தர்ப்பம்..
தங்குவாளா தமிழ்?

Wednesday, October 17, 2007

சலனம் பேசுகின்றேன்..

பிறப்புரிமையா? பிறவிக்குணமா? கண் கூசும் சூரியன் இருக்கும் போதும், கண் குளிரும் சந்திரன் இருக்கும் போதும், நட்சத்திரங்களை தேடச்சொல்லும் இந்த சின்ன குரல்...

சாமிக்கு படைக்கும் முன் எடுத்து சாப்பிடக்கூடாது எனும் அம்மாவின் அதட்டல்களையும் மீறி, கொஞ்சம் வாயில் போட்டு சாப்பிடுவதில் இருந்து... வெளியில் பொகும் போது, பார்க்கும் பிகரை நம்மையும் அறியாமல், ஒரு வினாடி ரசிப்பது வரை...

இதை ஏன் சலனம்னு சொல்லறோம்? அமைதியாக இருக்கும்ம் ஏரியில் கல்லை எரிந்தால் சல சல்னு தண்ணீர் சத்த்ம் போடுமாம். அதுனால சலனம். அதுமாதிரி அமைதியாக இருக்கும் மனதில் ஏற்படும் சலசலப்புகள்..
(நல்லா கேட்டுகோங்கப்பா.. கல்லு மேல தான் குத்தம்.. ஏரி என்ன பண்ணும்?.. அதே மாதிரி மனசு என்ன செய்யும், கொஞ்சம் அழகு கம்மியா படைக்க்க சொல்லி பிரம்மன் கிட்ட complaint பண்னுங்க..)

ஆமா நீ என்ன சொல்ல வர? ஹிஹி! என்ன எழுதலாம்னு யோசிச்ச பொழுது, இந்த தலைப்பு தோன்றியது... ஆனா மேட்டர் எதுவும் தோணல... அடப்பாவி.. அப்ப மொக்கையா??
சரி வந்தது வந்தீங்க ஒரு சின்ன போட்டி.

இந்த பதிவோட தலைப்புக்கு குட்டியா ஒரு கவிதை எழுதனும்.. எழுதினா என்ன தருவ? முதல்ல எழுதி கமெண்ட்டுங்க... அப்புறம் சொல்லுறேன்... கண்டிப்பா பரிசு உண்டு !

நட்சத்திரமும் அழகு தான்.. மறுக்க முடியாது..

Monday, October 08, 2007

காதல் தீ..

..

ழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...





தேனி

தழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..





அம்மாவாசை


நிலவை காண
நீ காத்திருக்கையில்..
நீ இருக்கின்றாய்
என
நிலவின் விடுமுறை நாள்..



விலையேற்றம்



ன் அழகை
கூட்டாவிடினும்
தங்கம்
விலை கூடுதடி
உன் தீண்டலில்..

(ஹிஹி.. இது காதல் கவிதை மாதிரியும் எடுத்துக்கலாம் ... அதாவது பெண்கள் நகை அணிவதால் தான் நாளுக்கு நாள் தங்கம் விலை கூடிக்கொண்டே போகின்றது என இன்னொரு கருத்து.. அத சொல்ல வந்தேன்பா!)

Wednesday, October 03, 2007

விண்மீனாய்..

எப்போதும் போல ஒரே கவிதை எழுதாம, மூன்று குட்டி கவிதை..

விண்மீனாய்..


வாழ்க்கையெல்லாம்
இருட்டில் வாடி
வாழ்ந்து வந்தேன்..
வின்மீனாய் விழியிறங்கி
என் வழியெங்கும்
வெளிச்சமூட்டினாய் நீ...






ஒரு இதயம்




மனிதனுக்கு
ஒரு இதயம் போதுமாம்!
உன் இதயத்தை
இரவல் கொடு எனக்கு..
உனக்காக
நான் துடிக்கின்றேன்..





தீண்டாமை கொடுமை!




எங்கோ இருக்கும்
மேகத்தின் அழுகையெல்லாம்
கவனிக்க தெரிந்த உனற்கு..
அருகில் இருந்தே
அழுது கொண்டிருக்கும்
என் காதலின் அழுகை
கேட்காதது ஏனோ?