Tuesday, December 25, 2007

உன்னை நினைக்கவில்லை..



சூரிய கதிர்கள் தீண்டுகையில்
விழிகள் அறியா தூரத்தில்
உன்னையும் சூரியன்
தொட்டு எழுப்பி இருப்பான்
என நினைக்கவில்லை..

காலை எழுந்ததும் முதலில்
மனதில் உன்னை நினைக்கவில்லை..

உணவு சாப்பிட்டால்
நீ சாப்பிட்டு இருப்பாயா?
என தோன்றவில்லை..

வீட்டில் சிரித்து பேசினால்
உன் சிரிப்புகள்
ஏதும் நினைவு வரவில்லை..

ஏதேனும் வரி தொலைத்த
பாட்டை கேட்டால்..
உன் முகம் மனதில் நிற்கவில்லை..

அழகானவை எதுவுமே
உன்னை நியாபகபடுத்தவில்லை..

கனவினில் வந்து
காயங்களும் செய்யவில்லை..

நிலவின் வெப்பத்தில் கூட
நினைவுக்கு வரவில்லை நீ..

இந்த பாழாய் போன
இதயத்துடிப்புகள் மட்டும்
உன்னை நினைவூட்டாமல் இருந்திருந்தால்....

Sunday, December 23, 2007

சுப்புனி நான் பெங்களூர் பேசறேன் ராஜேஷ்ல இருந்து..



நம்ம வாழ்க்கையில தினமும் எத்தனையோ பேரை பார்க்கிறோம்.. சிலரிடம் சிரிச்சு பேசுவோம்.. சிலரை மறு நாள் மறந்து விடுவோம்.. சிலர் எவ்ளோ நாள் தெரிந்தவர்களாக இருந்தாலும் அன்னியவராகவே இருப்பார்கள்.. ஆனா திடீர்னு ஒருத்தங்க வருவாங்க.. நம்ம வாழ்கை ஸ்தம்பிச்சு நிற்கும்.. நம்ம வாழ்க்கையின் தடங்கள் மாறும்.. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பின் பிரதிபலிப்பு தான் இந்த வீடியோ.. தலைப்பு.. ஏனோ தெரியல திடீர்னு பிடிச்சு போச்சு.. அதான்!

Short post தான்! Wish you all a Merry Christmas!

Thursday, December 20, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்



அதிகம் பேசுவதில்லை மலர்கள்..
அதில் மௌனங்கள் கூட
உறங்கித்தான் கிடக்கும்..

என்றேனும் ஒரு நாள்
எழுப்பி விடும் நம்பிக்கையில்...
தொடர்ந்து வீசும் தென்றல்....

தென்றலே
உண்மை தெரியுமா?

இதழ் திறந்து காத்து இருக்கையில்
மௌனங்கள் பலனில்லை மலர்க்கும்..
--------------------------------------------------------------------------



பூவே...

இடைவெளி இன்றி பேசி கொண்டிருந்தாய்..
பிடித்தது..
இதழ் தொட்டு பறித்து கொண்டேன்..

விரல் தீண்டியதில்
விழித்து கொண்டது
உறங்கி கொண்டிருந்த
உன் மௌனங்கள்..

இப்பொழுதோ
ஓயாமல் மௌனம் பேசுகின்றாய்..
என்ன சொல்லி தூங்க வைப்பேன்
விழித்து கொண்ட யாவையும்!

-------------------------------------------------------------------



வெற்று இதயங்கள்..
அர்த்தமில்லாத பேச்சுகள்..
காகித பூக்கள்..

பூக்களில்
உறங்கும் மௌனங்களை எழுப்ப முடியும்..
இதயங்களில்
உறங்குவதாய் நடிக்கும் மனங்களை?

--------------------------------------------------------------------


பி.கு: நச்சுன்னு ஒரு கவிதை போட்டிக்கான தலைப்பில் எழுதினது தான்.. :) இதில் முதல் கவிதையின் கடைசி இரெண்டு வரிகள் இதற்கு முன்பே நான் எழுதி இருந்தாலும்.. இங்க Conceptku நல்லா பொருந்துச்சு என்பதால்..


Wish you all a merry Christmas and a Happy New year folks!!!

Monday, December 17, 2007

மயிலிறகு காயங்கள்..



என்னை மட்டும் தான்
கொன்று செல்வதாய்
நினைத்து இருந்தேன்..
ஆனால்
என் கோபங்களையும்
சேர்த்து கொல்கின்றாய் நீ..

உன் பிடிவாதங்கள்
எல்லாம்
பிடித்து போனபின்
எங்கே செல்வேன் நான்
உன்னாலான காயங்கள் சொல்ல..

உன்னுடனான என் கோபங்கள்
இன்று அவள் வரட்டும்..
என காத்திருக்க...
உன் குரல் கேட்டதும்
எங்கே சென்று விடுகின்றன
என்னிடம் சொல்லாமல்?



நான் வெண்மேகம்
நீ நீர்த்துளி..
நீ சேர்வதில் கனமாகிறேன்..
நீ பிரிவதில் கலைந்து போகின்றேன்..

ஒரு நிமிடம்
என நீ மறைந்து போகின்றாய்..
நீ இல்லாத ஒரு முழு நிமிடத்தில்
துடிக்க மறுக்கும்
என் இதயத்தின்
வலிகள் புரியுமா உனக்கு?






எனற்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி..
சிரிக்கின்றாய்..
உனற்கும் பிடித்திருக்கா?
இல்லை
பைத்தியம் என எண்ணியா?

உனற்கான காத்திருப்புகள்
காயங்கள் செய்யும்
என நினைத்து இருந்தேன்..
காதலிக்க சொல்லும்
என எவரும் சொல்லவில்லையே..




இடிகள் இன்றி
மழைகள் இல்லை..
ஊடல் இன்றி
உறவு ஏது?

உன் வார்த்தை வருடல்களில்
ஏற்படும்
மயிலிறகு காயங்களில்
தினமும்
செத்து எழுந்திடும்
ஓர் வரம் வேண்டும்..

Friday, December 14, 2007

புது வருட தீர்மானங்கள் -AND- கலாய்த்தல் திணை!

Tagged by Sudhakar :) பாசமா ...கொலை வெறியா?

எனக்கு விவரம் தெரிஞ்சு நான் எடுத்த முதல் தீர்மானம் வாழ்கையில தீர்மானம் எல்லாம் எடுத்து நேரத்த வீணடிக்க கூடாது! தோணினா செய்யணும்! தேவை பட்டா செய்யணும்! நாலு பேருக்கு நல்லதுனா செய்யணும்!(அந்த நாலு பேருல நான் ஒருத்தனா இருக்க வேண்டியது முக்கியமான point!) அப்படின்னு தான்! அதுக்கு அப்புறம் எந்த தீர்மானமும் எடுத்தது இல்லை!

அதுனால நிஜமாவே ரொம்ப நேரம் யோசிச்சும் இதுக்க என்ன எழுதனு தெரியல!அதுக்காக விட முடியுமா? (டேய், இதெல்லாம் என்னடா அநியாயம்!). அதுனால நான் பதிவு உலகத்துக்கு வந்த பிறகு பல பேரு கிட்ட பேசி பழகி இருப்பதில் கிடைத்த சில adviceகளை பாப்போம்! கொடுத்தவங்க நியாபகம் இருந்த வீட்டுக்கு ஆள் ஆட்டோவிலோ, ஏரோபிளேநிலோ அனுப்பாம, சிரிச்சிட்டு மறந்திடனும்!

கலாய்த்தல் திணை! இனி ஆரம்பம்!

1. பொண்ணுங்கள சைட் அடிக்கலாம். ஆனா ஒரு முறை தான் பார்க்கலாமாம். இன்னொரு முறை பார்த்தா தப்பாம்! இத? (அதே பொண்ண திரும்ப வரும் போது பார்த்தா? அதுக்காக பாக்கிற பொண்ணுங்க கழுத்தில போர்டா மாட்ட முடியும்! ஒரு முறை பார்த்துட்டேன்னு? என்ன கொடும டா இது? மம்மி! என்னை அடிக்க வராங்க!)

2. தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத? (அப்பறம் நம்ம படத்தயா போடறது? இல்ல தெரிஞ்சவங்க படத்த போட முடியுமா? பொதுவா ஒரு படத்த போட்டா கூட விடமாட்டாங்களே! நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும்!)

3. கவிதை போடரதையே நிறுத்தணும்! - இத? (தமிழ் சேவைல யாருப்பா கை வைக்கிறது? வளர்க்க விடமாட்டாங்களே!)

4. தலைப்புகேல்லாம் தமிழ்ல பேரு வைக்கணும்! இத? (ஆமா, ஏற்கனவே சினிமாக்கு எல்லாம் தமிழ்ல பேரு வைக்க சொல்லி மான்யம் கொடுத்து தமிழ் வளர்ப்பதற்கு நான்காவது சங்கத்த திறந்து இருக்காங்க! இது ஒன்னு தான் இப்ப பாக்கி! ஏன்டா, இதுக்கு வைக்கிற ஒத்தை பேருல தமிழ் வளர போகுதா? ஒரு வேளை இதுக்கும் பணம் கொடுப்பாங்களோ??... சின்ன பிள்ளை தனமால இருக்கு!)

5. tag போட்டா அதோட விதிமுறைகளை ஒழுங்கா கடைபிடிக்கணும்! இத? (டேய்!, நான் எல்லாம் நாலாவது வகுப்புல பிட் அடிச்சவேன்! என் கிட்ட இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசின கோபம் வரும்! நாம இங்க நடத்திற olympics க்கு இது ஒன்னு தான் இப்ப குறைச்சல்!)

6. எதையாச்சும் எழுதி இது கவிதை, இது கதை னு நானே சொல்லிக்க கூடாது! இத? (இதுக்காக தனிய ஆளா appoint பண்ண முடியும்? சொன்னாலே பலருக்கு புரியறது இல்லை! எங்கடா கதைன்னு கேட்கறீங்க ;))

7. பதிவ எழுதிட்டு போன பதிவுல இது இல்லைன்னு கவலை பட்டீங்க. அதுனால இத போட்டேன் அப்படின்னு பீலா விடாம, தோணுச்சு எழுதினேன்னு dejenta சொல்லணும்! இத? (ஏற்கனவே கல் எரியறது பத்தாது! இதுல சில பேரு மேல பாரங்கல்லு செங்கல்லு போடலாம்னு எல்லாம் கூட்டம் கூடி பேசறாங்க! இதுல இப்படி உண்மைய போட்டேன்! ஒருத்தன் நல்ல இருந்தா விட மாட்டேன்களே..)

8. தத்துவம் சொல்லறதை நிறுத்தனும்! இத? (G3 சுடுவத நிறுத்தட்டும், வேதா கவிதைய நிறுத்தட்டும்,CVR போட்டோ பிடிக்கறதை நிறுத்தட்டும், கோப்ஸ் ஆங்கிலத்தில் தமிழை நிறுத்தட்டும்,புலி உறுமுவதை நிறுத்தட்டும், ரசிகன் ஆப்பு வைக்கிறதை நிறுத்தட்டும், மத்தாப்பு திவ்யா ஐடியா கொடுக்கிறதை நிறுத்தட்டும்... அப்புறம் நாம யோசிக்கலாம் )

9. அடுத்தவங்களை அதிகமா கலாய்க்க கூடாது! இத? (நானா கலாய்கிறதா? அப்படினா என்ன? ஒண்ணுமே புரியல!)



சரி கடைசியா மேட்டருக்கு வருவோம்! (அடப்பாவி! அப்போ மேல சொன்னதெல்லாம்?) பொதுவா நாம யாரையும் tag எல்லாம் பண்ணுவது இல்லை! ஆனா இந்த முறை! இவங்களுக்கு எல்லாம் ஆப்..ஐ மீன் taggu..!
1. வேதா
2. CVR

3. Divya
4. G3
5. Rasigan


எதோ நான் தான் இப்படி போட்டு ஏமாத்திட்டேன்.. நீங்களாச்சும், முன்னால link எல்லாம் பார்த்து ஒழுங்கா போடுங்கப்பு!.. (ஹேய் யாருப்பா, சொல்லிட்டு ஆரம்பிக்கணும்! பேசிகிட்டு இருக்கும் போதே கல்லு எரியற?).

Monday, December 10, 2007

இன்னமொரு காதலி கவிதை!

மு.கு: போன கவிதைல சோகம் இல்லைன்னு கவலை பட்ட நண்பர்களுக்கு,

மெலிதான சிரிப்புடன்
மெதுவாக வெட்டுகிறாள்..
நீங்கியதும்
உதட்டில் சிரிப்பு
மனதில் வலி..


என்னை பார்த்து
சிரிப்பது புரிந்தது..
எகைப்பா
நகைப்பா
நீ தான் சொல்ல வேண்டும்..


அணு அணுவாய்
கொன்று விட்டு
நாளை வருகின்றேன்
என்கிறாய்..
மீண்டும் கொல்லவா?
மீட்டு செல்லவா?


தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..


சுட்டெரித்த பூக்களின்
எண்ணிக்கை தெரியுமா
சூரியனுக்கு?

காதலி
காத்திருக்கும் வலி..



பி.கு: இவங்க பதிவு தான் இந்த கவிதைக்கு Inspiration. மிக மிக ஆழமான கவிதைகள். இவங்க கவிதை பத்தி இந்த வார இறுதியில் ஒரு பதிவு காத்திருக்கு!

Sunday, December 09, 2007

தேவதை பொய்கள்



எனற்கு நானே சிறைசாலையா?
அப்படிதான் சொல்லுகின்றது
என் இதயம்
உனை கண்ட பின்..

சில கேள்விகளுக்கு
மௌனம் பதில்
சில கேள்விகளுக்கு
கண்ணீர் பதில்
என் எல்லா கேள்விகளுக்கும்
நீயே பதில்..



எல்லா நாளும்
உன் விழி விடியல் கொடு
இல்லை ஒரே நாள்
உன் விழி மடியல் கொடு..

அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!



உன் கூந்தல் வழி நிலவு
உன் கொலுசொலியில் கலையும் உறக்கம்
உன் நககீறல் தழும்பு
ஒரு முறையேனும் இறப்பதற்குள்..

இமை மூடியதும்
வந்து நிற்கும் நீ..
இமை திறந்ததும்
மறைந்து போகும்
மாயம் சொல்லி கொடு எனக்கும்..



உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?

விழி பேச்சு வேறாகவும்
மொழி பேச்சு வேறாகவும்
தேவதையும் பொய்கள் சொல்லும்..

Thursday, December 06, 2007

மீண்டும் ஒரு அழகான "அவன் அவள்" குட்டி கதை..

"என்ன ஆசைடா உனக்கு? சொல்லு" கொஞ்சுவதாய் அவள்.
"அழகான குட்டி வீடு.. ரெண்டு குழந்தைகள்.. போதுமான அளவு பணம்.. ஓரளவு நல்ல வேலை ... அப்புறம் நிம்மதி.." அவன்.
"அப்ப உனக்கு நான் வேணாமா?" கொஞ்சம் செல்ல கோபமாய் அவள்.
"நீ இல்லாம நிம்மதியா எனக்கு?" பதிலுக்கு அவன்.
"அப்ப நான் இல்லைனா நிம்மதியா இருக்க மாட்டியா?" கேள்விகள் அவளது.
"கொஞ்ச நாள் கவலை படுவேன் அப்பறம் வேற figure பிக் அப் பண்ணிப்பேன்" நக்கலாய் அவன்.
"நீ பண்ணாலும் பன்னுவடா.. seriousa சொல்லு.. என்ன பண்ணுவ.. நான் இல்லைனா?"
அவள்.
"ம்ம்ம்.. நீ இல்லனா.. கொஞ்ச நாள் கவலை படுவேன்.. அப்புறம் அம்மா சொல்லற பொண்ண பாத்து கட்டிபேன்..!" அவன்.
"அடப்பாவி.. போடா. பேசாத.." அவள்.
"இத பாருமா.. நம்ம காதல் உண்மைனா கண்டிப்பா அந்த காதல் நம்மல
சேர்த்து வைக்கும்.. எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல.. நாம பிரிந்தால் என்ன அர்த்தம் .. உன்னை விட நான் வேற எதையோ ஒன்றையும்.. என்னை விட நீ எதையோ ஒன்றையும் ஆசை படுற னு தான.. அது career, Money, Family இப்படி எது வேணும்னாலும் இருக்கலாம்.." அவன்.
"அப்ப உன்னை காதலிச்சா வேற எது மேலயும் ஆசை படாம உன் கூட வரணுமாக்கும்?" அவள்.
"இல்ல.. காதல் நம்ம வாழ்க்கைக்கு வலிமை சேர்க்க கூடியதா இருக்கும்.. அது புரியர மன பக்குவம் உனக்கோ எனக்கோ இல்லாம போச்சுனா நமக்குள்ள வந்த காதலே ஒரு கேள்வி குறி.. I am not meaning we should love as per our convenience. But I am meaning True Love has no hindrance. என்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்பது மாற்ற முடியாத கருத்தா ஆயிட்ட.. you will make the others bend to this. இல்லனா நம்ம காதல தான் அதுங்களுக்கு விட்டு தரனும்.. தரலாம் தப்பில்லை.. ஆனால் அது போல ஓர் காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை.." அவன்.
"போடா என்னமோ சொல்லி குழப்பற..எனக்கு ஏற்கனவே காதல் மேலேயே நம்பிக்கை இல்லை.." அவள்.
"ஹேய் இது என்ன புதுசா.. என்ன காதலிக்கிற தான?" அவன்.
"என்னப்பா விளையாடுற.. சும்மா விளையாட்டுக்கு தானா அப்படி பேசினோம்.. I donot believe in லவ்.. நண்பர்களாய் பழகினோம்.. பேசினோம்.. அப்படியே பிரிவோமே.." அவள்.
"ஹேய் என்ன சொல்லற..
---------------------------------------------------
"டேய் உன்னை எவ்ளோ நேரம்டா எழுப்புவேன்.. சீக்கிரம் எழுந்து கிளம்புடா.. என் ஆபிசுக்கும் நேரம் ஆச்சுல.. இன்னைக்கு night வேற படத்துக்கு போலாம்னு சொன்ன.. சீக்கிரம் போனா தாண்டா ஏதாச்சும் காரணம் சொல்லி சீக்கிரம் வர முடியும்.." அவள்.
"அப்ப என்ன நிஜமா காதலிக்கிற ஹையா!" அவன்.
"ஆமா.. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சாகும் உனக்கு தெரிய.. இந்த லட்சணத்துல லவ் marriage வேற நமது.." அவள்.

கனவுகள் பொய் ஆகலாம்.. நிஜங்களும் ஆகாத வரை..
பி.கு: ஆமா, இது குட்டி கதை( ok.. அது என்ன அழகான கதை? அதாவது, கதைல வர அவள் அழகா இருப்பானு ஒரு நம்பிக்கை தான்! :D

ithukku munthaiya soga version padichanvanga atha ellam manasula vechukaatheengappa! post pathividugayil manasu sariilla. but konja nerathula thelivaitomla! :D nammala kulappa ellam inime thaan piranthu varanum ;)