Monday, December 25, 2006

Veyil - வெயில் , வாழ்க்கை ....

கவிதை பற்றி ஒரு Post போடலாமா... இல்லை comedy track ஒன்று போடலாமா.. என்று யோசித்து கொண்டு இருக்கையில், சரி இரண்டும் வேண்டாம்... நேற்று பார்த்த படம் பத்தி, அப்பறம் கொஞ்சம் comedy, கவிதை என்று கலந்து போட முடிவு எடுத்தேன்... அது தான் இது!

மு.கு: கொஞ்சம் different ஆக format இருக்கும்.. hopefully, easy ஆக புரியும்!

முதலில் படம்:
படத்தின் ஆழம் இவங்க காதல்தான்! கொஞ்சம் வித்தியாசமான கதை ... வாழ்க்கையில் ஜெயிப்பவர்களை பற்றியே கதை எடுப்பவர்கள் மத்தியில், ஒரு variant attempt .. மனதை தொடும் சமுதாய உண்மைகள்... படம் முடிவில் மனதில் நிற்பவை ..Pasupathy character.. மற்றும் வாழ நினைத்து தோற்று(?) போன அவரது முடிவு... இது தொல்வியா? வெற்றியா? என்று தோன்றும் climax குழப்பம்! படத்தின் பாட்டுக்கள் நல்லா தான் இருக்கு. " உருகுதே.. மறுகுதே... " super!

அடுத்து comedy:

படத்துக்கு இவங்க ரெண்டு பேரும் முக்கியம் இல்லை! comedy track தவிற... ;)

உங்களுக்காக ஒரு குட்டி comedy scene: இங்க உள்ள "Boxing Day" culture பற்றி..
(அவரவர் பாணியில் படிக்கவும்)
நம்ம விவேக் : இடம்: Walmart முன்னாடி.. நேரம்: 5:OO AM
(டெய் என்னடா இது... இங்க எதாச்சும் church ல நம்ம மாரியாத்தா கோவில் rangeல கூழ் ஊத்தறாங்களா.. எதுக்கு இப்படி வெள்ளை கார பயலுக இங்க queueல நிக்கிறாங்க?)
ஒரு வெள்ளை கார madamமிடம்
"Hello.. escuse me.. "
"what?"
"here church கூழ் pouring? why you standing"
"church? no i went there yesterday.. this is shopping"
(ஒன்னும் புரியலையே!)
"What you doing here?"
"idiot, i just said it"
"என்னது இடியாப்பம் தராங்களா... ஆகா.. அது தான் matter a.. நம்மளும் நிற்ப்போம்"

நம்ம வடிவேல்: is running early morning singing "Black and love... love and black"
("யம்மே ..என்னாடா இது...எதாச்சும் மரியல் கிரியல் பன்றாங்களா?... சரி அங்க நிற்கிற வெள்ளை figure கிட்ட பேசி அப்படியே correct பன்னிட வேண்டியதுதான்..")
"hello..excuse me .. இங்க என்ன நடக்குதுனு சொல்ல முடியுமா?"
"What?"
"Oh sorry.. u dont know Tamil.. but i know English.."
"???"
"Oh me introduce.. I am terror of Tamilnadu.. you know tamilnadu.. I am terror there! people see me they run"
"What you are a terrorist?"
"yeah..yeah.. so you what? who?"
நம்ம அம்மணி அவ்ங்க hubbyய கூப்பிடராங்க..
"honey, this man claims to be a terrorist..he is watching and talking to me for the past 15 minutes"
அவரு "hey who are you man"
"ஆஹா... இது யாரு புது character!"
"Oh nothing..me just seeing... early morning running..seeing crowd...asking"
"non-sense..go away or I will call 911"
என்னாது 9/11க்கு நான் தான் காரணம் என்று உள்ள பிடிச்சு போடுவியா... escape!

அடுத்து கவிதை:
படத்தோட கவிதை அம்சம் இவங்க கதை! பாண்டி character, கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் பதியும் உண்மை.

சரி ..ஒரு குட்டி ஹைக்கூ அல்லது கவிதை.. எப்படி சொன்னாலும் ரோஜா ரோஜா தான!
யாராச்சும் ரம்மி விளையாடி இருக்கீங்களா?

" Joker வந்தாலும் ஆடலாம்
set சேர்ந்தாலும் ஆடலாம்
ஆனா
ரம்மி வந்தா தான் அடிக்கலாம்!"

இது வந்து

"நிலவில்லா வானமும்
அழகு தான்! அம்மாவாசை இரவு
ஆனால் முழுமை இல்லை
முழுமை - பௌர்ண்மி இரவு"

என்னும் அதே concept! கொஞ்சம் மாற்றி :)

Added on Dec 26th: மக்களே சொல்ல மறந்து விட்டேன்.. Belated Merry Xmas and Advanced Happy New year!

Tuesday, December 12, 2006

Life...நல்லதொரு வீணை செய்தே..

கதை comedy கவிதை என்று கற்பனைகள் எழுதினாலும், வாழ்க்கை போல் சுவையானதொன்று எதுவும் இல்லை! உங்களுக்காக சில Flash Backs!

Flash back 1 : இது நான் நீச்சல் கத்துக்கிட்ட புதுசு! ஏதோ ஓரளவுக்கு apartment ல உள்ள swimming pool போகி கத்துக்கிட்டேன்! அன்று என்னை பார்க்க வந்தார் என்னோட நண்பர் ஒருவர். நான் swimming pool போக கிளம்பி கொண்டு இருந்த பொழுது வந்தார் சரி நீங்களும் வாங்க என்று கூப்பிட்டு கொண்டு போனேன்.. தனக்கு நீச்சல் அவ்வளவாக தெரியாது என்று சொன்னார். அங்க pool ல shallow side இருக்கும், deep side உம் இருக்கும், வாங்க என்று கூப்பிட்டு போனேன். நான் முதல்ல உள்ள இறங்கி விட்டேன். ஆடை மாறறி கொண்டு வந்த நண்பர் திடீர் என்று ஓடி வந்து deep side ல dive அடித்தார். அட பாவி, நீச்சல் தெரியாது என்று சொல்லிவிட்டு இப்படி super அ dive பண்றார் என்று நான் நினைக்கும் பொழுது, "ஐயோ டேய் காப்பாதது டா" என்று அலற ஆரம்பிச்சார்! ஆகா.. என்று அவரை காப்பாற்றி கரை சேர்த்து விட்டு பின் கேட்டால், "தண்ணீர் பார்க்க ரொம்ப deep ஆ தெரியல..அதான் குதித்தேன"் என்று அசடு வழிஞ்சார்! "அடப்பாவிகளா, swimming pool ல பெருசா கொட்ட எழுதில DEEP,SHALLOW என்று red colorla paint பண்ணி வைத்தததா கூடமா பார்க்காம வந்து குதிப்ப" என்று நினைத்து கொண்டேன்... ஏதோ போங்க.. ஒரு உயிர காப்பபத்தின நல்ல காரியம் அன்னைக்கு பண்ணேன்!

அதோட கொடுமை இன்னொரு நாள் அதே swimming pool ல ஒரு வெள்ளை கார 2 year old குழந்தை ஓடி வந்து DEEP side ல கு்திச்சது தான் - without the life saver! ஏதோ நான் அங்கயே இருந்ததால டக் என்று பிடித்தேன்! அவங்க அப்பா கிட்ட "Dad, I forgot it was the deep side and my tubby (life saver toy)" என்று அது சொன்ன அழகு இருக்கே!


Flash Back 2 :"டேய் உன் மூஞ்ச போய் யவ Love பண்ணுவா?" என்று நண்பன் கேட்ட அதே நாள் மனசுக்கு பிடிச்ச ஒரு பெண்,என்னிடம் "நீ ரொம்ப Handsome அ இருக்க" என்று சொன்னது! (சரி சரி விடுங்க.... அந்த பொண்ணுக்கு கண்ணில ஏதோ கோளாறு என்று நீங்க சொல்றது கேட்கிறது!)


Flash Back 3: Fire Alarm அப்போ 12த் floor ல இருந்து கீழ இறங்கின பொழுது "பார்த்து நட அண்ணா" என்று சொன்ன தம்பியிடம் "டே நாங்கெல்லாம் படு steady ... ஒண்ணும் நடக்காது.." என்று 8த் floor ல dialogue பேசி 5த் floorla வழுக்கி விழுந்து, என் தம்பி சிரிப்பை அடக்கி கொண்டு "அண்ணா என்ன ஆச்சு" என்று கேட்க, நான் அசடு வழிந்தது


FlashBack 4: 2002(?) Worldcup soccer ல Senegal ஜெயிக்கும் என்று சொல்லி Bet கட்டினது! (அப்ப எல்லாம், எனக்கு cricket தவிர எதுவும் தெரியாது !)


Flash Back 5: நான் மயிர் இழையில் உயிர் தப்பிய பல தருணங்களில் இதுவும் ஒன்று! என்னோட college பக்கத்தில ஒரு Railway station. Mostly, College Bus பிடிச்சு வந்தாலும், சில நாள், Train ல வர பழக்கம்.. அப்படி ஒரு நாள், வந்தேன். Railway station ல இருந்து எங்க college வாசல் ஒரு 0.5 km. எப்பொவும் விசில் அடிச்சிக்கிட்டு track மேல நடப்பது என் பழக்கம். அன்றும் அப்படி தான் நான் பாட்டுக்கு நடந்து கொண்டு இருந்தேன். திடீர்னு ஏதோ தோன்றி பின்னால திரும்பி பார்த்தா, ஒரு 50 அடி ல Train அதே track ல என்னை நோக்கி வந்து கொண்டு இருக்குது ஒரு second நம்ம போன கதையில் வந்தது போல இதயம் நின்று துடித்தது! அப்படியே side ல இருந்த புதர் ல ஒரு dive ... சில சின்ன காயங்களோட தப்பினேன்!


சரிங்க, இதோட முடித்து கொள்கிறேன்... அப்பறம் நம்ம அடுத்த ரெண்டு வாரம் Christmas Vacation! So, கொஞ்ச time தான் வந்து பார்ப்பேன் ... அதனால ..

Tuesday, December 05, 2006

ஐந்து பேர் சேர்ந்து வளக்குற மரம் !

சில நல்ல எண்ணவாதிகள் நம்மள மாட்டி விட்டததுல நானும் இந்த மரத்துக்கு தண்ணி ஊத்துகின்றேன்! அநியாயமா ஒரு அமானுஷ்ய கதைய crime கதைய மாத்துகின்றா தப்பு நடந்திருக்கு SO நாங்க அத மீண்டும் பேய் கதை யா மாத்துகின்றேன்!

இது உஷாவோட கற்பனை
The Unusual Endings
"Ennadhan panra ava anga?" he wondered aloud, as he got out of the cab outside the building that flaunted a board that read "Amanushya vishayangaluku anugavum: Dr. JevitsJayaraj". Aniku kalaila, he had got a call, and pesinadhu Meeradhan. Aana he could notice the difference between the voice he had listened to 2 days ago and the one he heard in the morning. '2 days munnadi sema super-a veenai madhiri ketta kural iniku kaalaila eppadi husky-a vichitrama?', he shuddered for a moment recollecting the conversation he had.."Hello, iss it Vassisht, naan Meera" - there was an eerieness around the voice he heard...

இது வேதா எழுதின பகுதி...
மீராவின் குரலை இப்ப நினைத்தாலும் ஒரு பயம் அவன் மனதில் பரவியது. சட்டென்று நினைவை கலைத்தது அவன் கைப்பேசி. அவன் அதை எடுக்...
ட்ரிங்,ட்ரிங்
'சே நல்ல கட்டத்துல இப்படி போன் அடிக்குதே, சத்யா சத்யா போன் அடிக்குது பார் எடு'
ட்ரிங்,ட்ரிங்
'அடச்சே, இந்த அத்தியாயத்தை இன்னிக்கு பத்திரிக்கைக்கு அனுப்பனும் இந்த நேரம் பார்த்து எழுத இவ்ளோ தடங்கல்'
ட்ரிங்,ட்ரிங்
'இந்த சத்யா எங்க போய் தொலைஞ்சா? நானே போய் எடுக்க வேண்டியது தான்'
இவன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தது போல் தொடர்ந்து அடித்த போனை எடுத்தான் எழுத்தாளன் சூர்யா.
'ஹலோ யாரு?'
'நான் தான்' என்று ரகசியம் பேசுவது போல் ஒரு பெண் குரல்
'அட யாருன்னு சொல்லித்தொலைங்க'
'மீரா பேசுறேன்'
'எந்த மீரா?'
'என்ன சூர்யா அதுக்குள்ள மறந்துட்ட? இப்ப தான என்னை பத்தி எழுதின?'
'என்னது? யாருங்க இது?'
'உன் கதையின் கதாபாத்திரம் மீரா' என்று கூறிய குரல் அவன் நினைவலைகளில் நீந்தி திரொலித்தது.
அதிர்ந்துப்போன சூர்யா தொலைப்பேசியை நழுவ விட்டான்...

இது நம்ம கார்த்தி அண்ணாத்த!

ரத்தமெல்லாம் உறைய அப்படியே சேரில் அமர்ந்தான் சூர்யா..
யா..யார் போன் பண்ணி இருப்பா..
அவன் தலைக்குள்ளே ஆயிரம் கேள்விகள்... சரியாக அந்த நேரம் பார்த்து மின்சாரம் போய் அந்த இடமே கருங்கும்மென இருட்டாகியது.. நெஞ்சில் பயத்துடன் மெல்ல மெழுகுவர்த்தியை தேடி மெதுவாக அடி எடுத்து வைத்தான்.. அப்போ காற்றில் மெல்ல கொலுசு சத்தம் கேட்டது.. அந்த சத்தம் மெதுவாக இவனை நோக்கி வந்தது..எடுத்து வைத்த காலைக்கூட திரும்ப பின்னால் எடுத்து வைத்தான்.. கொலுசு சத்தம் நெருங்க நெருங்க மல்லிகைப்பூ வாசமும் இவன் நாசியை துளைத்தது.. சூர்யாவுக்கு அதிர்ச்சியில் தொண்டை வறண்டது..
சூர்யா.. எப்படி இருக்க சூர்யா.. காதல் தொய்த்த மயக்கம் கலந்த ஒரு பெண் குரல் கேட்டது.. இந்த இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று சூர்யா குழம்பிய போது..
என்ன சூர்யா..என்னை மறந்துட்டியா..நான் தான் நீ காதலிச்சு ஏமாத்துன மலர்விழி..

இனி நம்ம கதை!

சூர்யா மெதுவாக திரும்பி பார்த்தான்... பார்த்தால் அது அவன் அத்தை மகள் சீதா!
"அட குரங்கே, நீ தானா ... நான் கூட பயந்துட்டேன்"
"என்ன நீ காதலிச்சு, வேற ஒருத்தன் கல்யாணம் பண்ண மலர்விழி என்று நினைத்தியா?"
"வந்த உடனே ஆரம்பிச்சிட்டியா..ஆமா எப்போ வந்த திருச்சில இருந்து? Phone பண்ணறதில்ல? "
சத்யா: "யாரு கூட பேசரீங்க? ...கொஞ்ச நேரத்துக்கு முன்ன எதுக்கு கூப்பிடீங்க?..phone அ ஒழுங்க வைப்பதில்ல?"
"இங்க வந்து பாருடி யாரு என்று"
சூர்யா பேசி திரும்பினால் சீதா காணவில்லை..
"எங்க போனா அவ இதுக்குள்ள..."
"யாரு கூட பேசிக்கிட்டு இருக்கீங்க? "
"இப்போ தான் சீதா வந்த எங்க போன என்று தெரியல.. "
"சீதாவா? எப்போ வந்த திருச்சியில் இருந்து... ஒரு phone கூட பண்ணல "
"தெரியல.. சரி ...எங்கயாவது போகி இருப்ப..திரும்ப வருவா.. "
ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்,ட்ரிங்
"நீ போய் எடு சத்யா .. போன முறைய யாரென்னு தெரியல.." சொல்லிவிட்டு தான் எழுதும் கதையை continue செய்ய உட்கார்ந்து பார்த்தான்.. எழுதிய கதையில், மீரா என்ற பெயருக்கு பதில் சீதா என்று இருந்தது ..அதிர்ச்சியில் உறைந்தான்!
"என்னாங்கா...!" சத்யா வின் அலறல் சத்தம் .உள்ள ஓடினா சத்யா மயக்கமுற்று தள்ளாடி நின்றாள். ஓடி போய் பிடித்து, சோபாவில் உட்கார வைத்து தண்ணி எடுத்து முகத்தில் தெளித்து.. "என்னடி ஆச்சு?"
"எண்ணங்க சீதாவும் உங்க friend மலர்விழியும் சேர்ந்து வந்த Bus ஆக்ஸிடெண்ட் ஆகி ரெண்டு பேரும்......" விம்மினாள்
சூரியாக்கு ஒரு முறை இதயம் நின்று பிறகு மீண்டும் துடித்தது..

***********************************************************************

சரிங்க இதோட நம்ம கதைய முடித்து கொள்கின்றேன் .. நம்ம மரம் தொடர்ந்து வளர்க்க
எங்க அக்கா அபர்ணா உம் , அண்ணாச்சி கிட்டு வையும் மாட்டி விட்டு நான் ஜூட் !

ஓ...அப்பறம் ஏதோ rules, மரமெல்லாம் இருக்காம்.. time கிடைத்தால் இதுக்கு முன்னால இந்த மரம வளர்த்தவர்கள் blog பார்த்து தெரிஞ்சு கொள்ளுங்க... ஏதோ சின்ன பையன் நான் தான் rules அ follow பண்ணல... தவறுக்கு நான் ஒரு முறை கன்னத்துல போட்டு கொள்கின்றேன்! அடுத்து போடுபவர்கள்... :)

Sunday, December 03, 2006

வருத்தப்படாத வாலிபர் சங்கம்....

சரி பல blog entries ல நம்ம senti யா போட்டு தாக்கிட்டோம் என்ற மன வருத்தத்திலும்
இதுக்கு முன்னால நாம comedy (Gaptain Interview) போட்டு பல நாள் ஆனதால இது

கதை இங்க இருந்து ... வடிவேல் பாணில படிச்சு பாருங்க

SCENE 1:
வடிவேலு attended அ IT interview,
வீட்டுக்கு வந்து அம்மா கிட்ட சொல்றாரு:
நான் சரி ஒரு round தானே னு ஒரு interview கு போனேன்
அங்க 5 பேர் மா,
மாத்தி மாததி கேள்வி கேட்டானுங்க.
என்னால முடிஞ்ச வரைக்கும் answer சொன்னேன். அப்புறம் 4த்
floor போங்க offer வாங்கிக்குங்க னு சொன்னானுங்க
சரினு நானும் நம்பி 4த் floor கு போனேன்.
அங்க 8 பேர் மா,
அவங்காளால எவ்ளோ முடியுமோ அவ்ளோ கேள்வி கேட்டாங்க.
திடீர் னு ஒருத்தன் HR கு phone அ போட்டு
" மச்சான்.. free ய இருந்தா வாடா இங்க ஒருத்தன் சிக்கி
இருக்கானு சொன்னான். "
நானும் எவ்ளோ நேரம் தான் answer தெரிஞ்ச மாதிரியே
நடிக்கறத்து
அதுல ஒருத்தான் சொன்னான் , என்ன கேட்டாலும்
பேந்த பேந்த னு முழிக்கிறான்டா
இவன் ரொம்ப நல்லவனு சொல்லித்டான் மா....

Scene 2:
5 வருடம் கழிச்சு
கைப்புள்ள எழுதிய code இல் bug இருப்பதாக testing engineer ஒருவர் வந்து சொல்கிறார்...
டெஸ்ட் : என்னது codeல bug இருக்கு?
கை : நாம நாலு code எழுதும்போது ஒரு நாப்பது bug வரத்தான் செய்யும்...bug இல்லாத code எந்த கம்பெனியில எழுதுறாங்க?? ம்ஹும்...நல்லா கேட்க வந்துட்டான்யா டீட்டேயிலு...
டெஸ்ட் : சரி எப்ப bug எல்லாம் fix பண்ணப்போற?
கை : தம்பி testing team பக்கம் போய் கேட்டுப்பாருங்க நம்மளப் பத்தி...இதுவரைக்கும் எத்தன buggoda code எழுதிக் கொடுத்திருப்போம்....ஒன்னாவது fix பண்ணியிருப்பேனா?? ச்சும்மா சத்தமில்லாம support team க்கு assign பண்ணிட்டு போயிக்கே இருப்போம்ல!!!
டெஸ்ட் : சரி அப்ப நானே fix பண்ணிக்கிறேன்..
கை : தம்பி இது சாதாரண கம்பெனி இல்ல..ஒரு டொச்சுக் கம்பெனி..இங்க code எழுதினா output வராது வெறும் error தான் வரும்...இது bug gu பூமி....
(அந்தப் பக்கமாக ஒரு சீனியர் டெஸ்டிங் எஞ்சினியர் போகிறார்...அவரைப் பார்த்து நம்ம கைப்புள்ள...)
கை : அண்ணே, எதோ bug இருக்கு fix பண்ணனும்னு சொன்னீங்க அனுப்பவே இல்ல???

Matter பெரியதாகி, company MD கூப்பிடரார்
Scene 3:
TeamJrMember : தல தல வாங்க.. Testu உங்கள MD கிட்ட போட்டு கொடுத்திடுச்சு..அவரு உங்கள கூப்பிடாரார்
கை: என்னாது ம்ம்ம்... MD க்கு மண்டை empty ஆயிடுச்சு...testtu நமக்கு pest ஆயிடுச்சு..
இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு பண்றேன்...நானா அந்த MD யானு
MD office
கை: என்ன நம்மள பததி ஒரே e-maila இருக்கம்..என்ன விஷயம்... என்ன சொன்னான் அந்த testtu ?
MD: என்ன இது bug எழுதின fix பண்றது இல்ல?
கை ஒரு paper கொடுக்கிறார்
MD: என்ன printout இது?
கை: இது தான் என் இ-மைல்... இந்த இ-மைல் தாண்டி நானும் ஒண்ணும் சொல்லமாட்டேன் நீங்களும் ஒண்ணும் சொல்ல கூடாது
ம்த்: ஆண் ஆண் ...என்னாது
கை: பேச்சு பேச்சா இருக்கணும்..warning எல்லாம் கொடுக்க கூடாது
ம்த்: அப்படிய... இந்தா உன் warning letter
கை: ஹே..ஹே..வேடிக்கைய இருக்கு..சரி நான் வறேன்
ம்த்: ஏன்டா நீ திருந்தவே மாட்டிய? போன மாதம் தான ஒரு வர்நிங் கொடுத்தேன்?
கை: அது போன மாதம்..இது இந்த மாதம்...
தொடரும்...
பி:கு : இதுல முதல் 2 scene நம்ம orkut community-la சுட்டது
கடைசி scene மற்றும் முதல் Scene தமிழாக்கம் நம்மது

Wednesday, November 29, 2006

பொய்யாய் சிரிக்கின்றாய்...Love




சில குழந்தைகள் இறந்தே தான் பிறக்கும்...
காதலும் குழந்தை மாதிரி தான் ..



"இதுக்கு மேல..இதுக்கு மேல எனக்கு எதுவும் தோனல .. " அப்படினு பாடிட்டு போக வேண்டியது தான்....

Friday, November 24, 2006

hmm....காதலெனும் நட்பு!


உங்க கிட்ட ஒரு கவிதையே கவிதை கேட்டா என்ன செய்வீங்க? என் உயிர் தோழிக்கு... கவிதை(க்கு) சமர்ப்பணம்



நீ நாம்
என்பதில்
தொடங்கிய கவிதை இது

நான் எழுதிய கவிதைகளை விட
நான் படித்த கவிதைகள் அழகு
நான் படித்த கவிதைகளை விட
நான் பார்த்த கவிதைகள் அழகு
நான் பார்த்த கவிதைகளில்
நீயே முதல் அழகு!




தேவதை கதைகளை
உன்னால் நம்ப தொடங்கினேன

நெல் விதைத்து
கோதுமை அறுவடை தருமா?
காதல் விதைத்து
நட்பு அறுவடை செய்தவர் நாம்

நம் தேடல்களில்
தொடங்கி
நம் துயரங்களில்
வளர்ந்தது..நட்பு

யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது என்றேன்
தோழி, நீ அழைக்கும் தொலைபேசி
மணி ஓசை கேட்கும் வரை..

இடியும் மின்னலும்
மலர்வதற்கான
இடை மௌனத்தில்
பூக்கும் கனவு
காதலெனும் நட்பு

Monday, November 20, 2006

என் செய்தாயோ...மனமே (Maturity)

நம்ம சின்ன வயசுல கண்டிப்பா யாராவது "ஆள் மட்டும் வளந்தா பத்தாது அறிவும் வளரனும்" அப்படினு சொல்லி கேட்டு இருப்பீங்க.. அதே கொஞ்சம் நாள் கழிச்சு "அவன் ரொம்ப immatured-அ நடந்துகிறான்" அப்படினு சொல்லி கேட்டு இருப்பீங்க.

நான் 12த் படிக்கும் போது எங்க classல ஒரு பையன். எல்லாரையும் பயங்கரமாக கிண்டல், கேலி பண்ணுவான். யார் சொன்னாலும் கேட்கவே மாட்டான்.ஆனா அவனுக்கு அம்மா இல்ல. அதுனால அவன் என்ன செஞ்சாலும் நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு அவன் என்கிட்டே எதுவுமே செய்ய மாட்டான் மத்தவங்க எல்லாம் ஏன்டா அவன மட்டும் ஒண்ணும் கிண்டல் செய்யல என்று கேட்டபோது "தெரியல" அப்படினு சொல்லுவன்.
(ம்ம்..ஒரு காலத்தில எவலோவு நல்லவன இருந்திருக்கோம்!!)

ஆனா, இப்பெல்லாம் அந்த பொறுமை இல்ல. எப்போ தொலைசேன் என்று தெரியல. ஒரு நாள் சும்மா யோசிக்கும் போது இது தோணுச்சு.

எங்க classla ஒரு பையன் இருந்தான் ரொம்ப நல்லவன். அநியாயத்துக்கு நல்லவன்! நாமெல்லாம் யாராவது சும்மா கீழ விழுந்த, கேலி யா சிரிப்போம்.. ஆனா, அவன் உடனே ஓடி போய் "டேய், எதுவும் ஆகலையே என்று " கேட்பான்...நமக்கெல்லாம் அந்த அளவு "நல்லவன்" எப்பவும் வரமாட்டான்!

சரி topic வறேன் maturity என்றால் என்ன --என்ன பொருத்த வரைக்கும், maturity என்றால், முகமூடி! ஒரு குழந்தை இருக்கு. table மேல chocolate ஒன்றை பார்க்குது. அதோட மனசுக்கு "ஹை அந்த chocolate வேணும்" அப்படினு தோணுச்சு என்றால், உடனே ஓடி போய் எடுத்துக்கும்.அதே நானோ, நீங்களோ பார்த்தால், நம்ம மனசுக்கும் அது வேணும் அன்று தோணும். ஆனால் நம்ம அது யவருடையது , சுத்தி யார் இருக்காங்க அப்படினு எல்லாம் "extra" யோசனை செய்வோம்! ஆனா, நமக்கும் அந்த குழந்தை மாதிரி basic அ "அந்த chocolate வேணும்"... நம்ம உணர்வா நாம் திரைகள் போட்டு மறைத்து விடுகின்றோம்..

நல்ல நடிப்பீங்களா? you are a matured person!

சரி serious matter விடுங்க...
நம்ம தீபா போட்டோ போட்டது பயங்கர popular ஆயிடுத்து!

நம்ம தபூ ஷங்கர் ஓட சில வரிகள்

"எல்லா நாட்களும் வருத்ப்படுகின்றன
உன் பிறந்த நாளாய் பிறந்திருக்க கூடாதா என்று"

"எதை கேட்டாலும்
வெட்கத்தை தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்"

- Dreams!

Friday, November 10, 2006

Deepa - தீபா

நெறைய பேரு விசாரிச்சதனால அவங்க பேரும் கொஞ்சம் போட்டோ - உம்










பி.கு :: ரொம்ப வழிய வேண்டாம் !!!
எல்லாரும் ஒரு முறை சாமி பேரு சொல்லி கன்னத்தில போட்டுக்கொள்ளுங்க

Thursday, November 09, 2006

சில சமயம் விளையாட்டாய் (Quirks of LIFE)

நிஜமாவே கடவுள் என்று ஒருவர் நம்மை பார்த்து கொண்டு இருந்தால், அவருக்கு ரொம்ப லொள்ளுங்க!

நான் 10த் படிக்கும் போது class -ல ஒரு discussion. வெளிநாட்டுக்கு போய் வேலை பார்ப்பது சரிய தவறா? என்று. class-ல நான் ஒருத்தான் தான் அது சரியில்லை என்று சொன்னேன். மற்றவங்க எல்லாரும் அது சரி தானு என்று சொல்ல ஒரே சண்டை . கடைசி வரைக்கும் நான் ஒத்துககவே இல்லை.
ஆனா, Engg. முடித்து ரெண்டாவது மாதம் அமெரிக்க வந்தவன். இன்னும் இந்தியா ஒரு முறை கூட திரும்ப வரலை. ரெண்டு வருஷம் ஆகுது


ரொம்ப நாளா பசி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது ..எனக்கு ஒரு 12 வயசு இருக்கும். ஒரு நாள் busstand ல நிற்கும் போது ஒருவன் road இல் படுத்து அழுது உருண்டு கொண்டு இருந்தான். யாராவது ரெண்டு ரூபா கொடுங்க..சாப்பிட்டு 5 நாளாச்சு அப்படினு .. அப்பா அவன் act பண்ணானா இல்ல நிஜமாவே பசிச்சுதா அப்படினு எல்லாம் எனக்கு தெரியாது ஆனா அவன் முக்ம, அந்த அலறல், நான் சாப்பிடும் போது எல்லாம் ஞாபகம் வரும்.. அதனால தானோ என்னவோ, யாராவது பிச்சை கேட்டா என்னால அவங்க சும்மா ஏமாததுராங்களா அப்படினு எல்லாம் யோசிக்க தோன்றாது.. 12த் ல bus ஒன்றில், கால் ஊனம் போல் வந்த பிச்சை காரன் bus start ஆனதும் , இறங்கி ஓடினது பார்த்து மாதவங்கெல்லாம் திட்டின கூட எனக்கு திட்ட தோன்றவில்லை ...


மற்ற ஒரு சம்பவம்.. கவிதையா..
கையில் குழந்தையுடன்
பத்து வயது பென்..
அவளுக்கு தாய்
இட்ட பெயர் நான் அறியேன்
ஆனால்
சமூகம் இட்ட பெயர்
பிச்சைகாரி..
பசிக்கும் பொழுது
அவளும் அழுவாளா
அவள் கையில் இருக்கும்
குழந்தையை போல..
அவளுக்கு கடவுள் நம்பிக்கை
இருக்குமா?
எது அவள் கடவுள்?
ராமரா ஏசுவா அன்றி அல்லாவா?..
பெரியவள் ஆனதும்
என்னவாக வேண்டும்
என அவள்
கனவு காண்பாள்..
அவளை கண்டதும் தான்
எனக்கு
என் உடைகளும்
சுமைகள் ஆகின..
அவள் கிழிந்த உடையில் தெரிவது
அவள் தேகம் அல்ல
நமது தேசம்..


ம்ம்..ரொம்ப Sad மூடு வந்துடுச்சா..
சரி அதனால lets finish with a poem from "விழி ஈர்ப்பு விசை" ப்றோம் தபு சங்கர்

சற்று முன் நீ
நடந்து போன தடயம் எதுவும் இன்றி
அமைதியாக கிடக்கிறது வீதி

எனினும்
அதிவேக ரயில் கடந்த போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கின்றது
என் இதயம்

Thursday, November 02, 2006

தீபாவளி..

ஹ்ம்ம்.. US ல இருக்கிறதுல ஒரே ஆறுதல்.. மூன்று படம் பார்த்துட்டேன் .. (இந்த படமெல்லாம் பார்ப்பது ஆறுதலா? என்று படம் பார்த்தவர்கள் கேட்பது தெரியுது..)

தர்மபுரி
- என்னோட அம்மா வழி சொந்த ஊர். நம்ம Gaptain படத்தில ஒரு முறை கூட காட்டலை.. எதுக்கு அந்த பேர்னு யாரை கேட்பது? படம் முழுக்க Gaptain தான்.. No Logic

வரலாறு
- நம்ம விவெக் styleல "அட பாவிக்ளா.. இதுக்காடா இந்த Build up கொடுத்தீங்க?..இது "History of godfather" (படத்தோட Caption) இல்லடா இது "History of "censored" " என்று சொல்லலாம். எனக்கு என்னமோ அஜீத் மீசை இல்லாம, நீளமான முடியோட..கொஞ்ஜம் overஆகவே roleக்கு பொறுத்தமா இருக்காரோ என்று ஒரு doubt. படத்துக்கு ஒரு 9 மார்க் போடலாம் (நூத்துக்கு) (ROFL)

வட்டாரம்
- முதல் இரெண்டு படத்தொட compare பன்னா எவ்வளவோ பரவாயில்லை. But Still, கடைசியில Heroine தன் அப்பா,அண்ணன்களை, கொலை செய்த Hero வோடு "naive" அ ஒட்டிகிராங்கா..

தமிழ் cinemaவை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியலை.
Condition for e hero: சாதாரண மனிதனாக இருக்க கூடாது.. Instead, ரவுடி,பொறுக்கி,கொலைகாரன் - இதில் எதவது ஒன்றாக இருக்கனும்

Now the Cinema has deteriorated to such low level. For example:
முன்பெல்லாம் "திரௌபதி" காட்சி வந்தால் Hero காப்பாற்றும் போது முதல்ல தன் "shirt/ வேஷ்டி / மேல் துண்டு" என்று ஏதாவது ஒன்றை எடுத்து அந்த பொண்ணு மேல போர்த்திவிட்டு பின் தான் சண்டை போட ஆரம்பிப்பார்.
eg- MGR, sivaji, Kamal,Rajini..etc;

இப்ப கொஞ்ச நாள் முன்னாடி ஒரு படம் வந்தது. நம்ம ஆஜித் , த்ரிஷா நடித்தது. (படம் பேர் நியாபகம் இல்லை). அதி நம்ம அஜித் ஷிர்ட்-Jeans-coat சகிதமா roadல இறங்கி சண்டை போடுவார். எல்லாம் சரி தான், ஆனா அந்த பொண்ணு அவர் சண்டை போட்டு முடிக்கிற வரை அப்படியே அழுதுகிட்டு குறுகி நிற்கும். இதுல என்ன கொடுமைனா நம்ம அஜித் chennai வெயில்ல shirt பொட்டு அதுக்கு மேல styleஅ Coat போட்டு அப்படியே சன்டை போடுவார்.

"என்ன கொடுமை இது சரவணன்" என்று நம்ம சொல்லத்தான் முடியும்.
அந்த கடவுல் தான் நம்மளை காப்பாற்றனும்..

Wednesday, October 25, 2006

தமிழும் ..நானும்

தமிழுக்கு அமுதென்று பெயர்..

So Some beautiful tamil Quotes...

[கலைஞர் Quotes : I am not his political fan, but his tamil fan]
1. ஒரு கவிஞர் : விதவை என்ற சொல்லில் கூட
பொட்டு வைக்க முடிவதில்லை

கலைஞர் : கைம்பெண் என்ரு சொல்லி பார்
இரு முறை பொட்டு வைக்கலாம் !

2. நான் என்று சொன்னால்
உதடுகள் கூட ஒட்டாது
நாம் என்ரு சொல்லி பார்
உதடுகல் கூட ஒட்டும்

ம்ம்... வேறு எதுவும் மனசுக்கு தோன்றவில்லை..
So என்னொட சில கவிதைகள்..
இரண்டு வரிகள் தான்
ஆனால்
அழகிய ஹைக்கூ
உன் உதடு

இரண்டு புள்ளிகள் தான்
ஆனால்
அழகிய கோலம்
உன் விழிகள்

இரண்டு கோடுகள் தான்
ஆனால்
அழகிய விண்மீன்
உன் காதணி
*************************
நீ இன்றி
பிறக்கின்றது
தனிமை
நீ இருக்கையில்
பிறக்கின்றது
மௌனம்
**************************
இருண்ட வானம்
கதை கேட்கும்
நிலவு
எரிந்து விழும்
விண்மீன்
அருகே நான்
இரவெல்லாம் விழித்திருக்கும்
இரகசிய காதலி
நிலவுப்பெண்
****************************

Monday, October 23, 2006

இது ஒரு உண்மை கதை....

ஒரு நண்பன் வாழ்வில் நடக்கும் உண்மை கதை ரொம்ப interesting அ எல்லாம் இருக்காது..anyway :)

(பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது)
Date: In 90's
பெயர்: கண்ணன்
வயது :15
இடம்: கண்ணன் வீடு

வீட்டுக்கு ஒரு பிரபல ஜோதிடர் வந்து இருக்கார் கண்ணன் அவரும் அவன் அப்பாவும் பேசுவதை ஒட்டுக்கேட்கிறான்
அப்பா: சீர், kannan ஜாதகம் எப்படி இருக்கு? (மு.கு அப்பாக்கு ஜோதிடத்தில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது
ஜோதிடர்: ம்ம்.. பயன் நல்ல படிப்பான்...foreign போவான்..ஆனா 16 வயதுல ஒரு பொண்னை love பண்ணுவான். அவளை தான் கல்யாணமும் பண்ணுவான்..
அப்பா: என்ன sir..joke அடிக்கிறீங்க.. (topic வேற மாறுது )

கண்ணன் (நம்மலாவது love பண்ணுவதாவது)

வருடங்கள் ஓடுகின்றன.. கண்ணனின் வாழ்க்கையில் ஏகப்பட்ட திருப்பங்கள்..
Now, He is in US..Software engineer.
Date: August 2006
வயது :23
கண்ணன் ம்ம்... நம்மளாக்கும் வயது 23 ஆகுது..இன்னோம் ஒண்ணும் set ஆனா மாதிரி தெரியல (love ஆம்)
சரி காலத்தில ஜோதிடர் ஒண்ணு சொன்னானே..நம்ம 16 வயதுல யாரை எல்லாம் sight அடீச்சொம்..யோசிக்கிரான்
அட ஒண்ணு விட்ட அத்தை பொண்ணு வேதா. நம்ம அப்ப தான அவளை பார்த்தோம்..
ம்ம்..சுமாரான figure..adjust பண்ணலாம்..
maybe அவளை பததி கொஞ்சம் தெரிஞ்சு வைத்து கொள்ள வேண்டும்

e-mail id யை ரொம்ப தேடி பின்பு கண்டுபிடிக்கிறான். ஒரு anonymous mail
(ஆமா, பின்ன வீட்டுக்கு தெரிஞ்சா கதை puncture ல)


கொஞ்ச நாள் கழிச்சு பதிலும் வருது..ஆரம்பத்தில் அந்த பொண்ணு "நீ யார்னு தெரியாம பேச மாட்டேன்" என்று பயப் படர பின், அவ relative என்று கொஞ்சம் convince பண்ணி யார்னு clue கொடுத்த பின் ஒரு வாரம் ரெண்டு பெரும் நல்லா "chat" பண்றாங்க.. பின், வேதா கண்ணன் பெயரை கண்டு பிடித்து விடுகின்றாள். ரெண்டு பெரும் நல்ல chat பண்றாங்க... இப்போ நல்ல friends..

Date: September 2006 Time: Midnight
ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்.. ரிங்..
எடுத்தா ஒரே பாட்டு
அம்மா: ... இப்படியாதா செய்வா. etc;etc;
கடசில matter இது தான்:::--- பொண்ணு anonymous mail அனுப்பன அன்னைக்கு அப்பா கிட்ட சொல்லிட , அதுககப்பறம் நடந்தததை மறைத்து விடுகிறாள்.
அப்பா, உயர் பதவியில் இருப்பவர், பயப்படுகிறார்..விஷயம் Police கு போன பின் தான் பொண்ணு மெதுவா..அப்பா இது கண்ணன -aaga இருக்குமோ என்று சொல்லுகிறாள்...
உடன கண்ணன் parents ஐ அவர் கேட்க..அந்த result..
(இது தான் நடந்தது என்று கண்ணன் guess. ஏன்னா அதுககப்பறம் அந்த பொண்ணு onlinela வருவதில்லா)
பாட்டு மட்டும் மறுக்க முடியாத நிஜமாம்.

Date: Oct 21 2006. Time: 05:00 PM EST.
இதுக்கு முன்பே சில "anonynous" persons அவன் yahoo messengerla பேசுறாங்கா..
He has no idea who they are.

இது அவனுக்கு வந்த offline message:
Messenger name: Maya Khan
"kannan, software engineer from chennai. It has been noted that you are involved with a pornographic ring in chennai, and a lot of Indian girls have lodged complaints against you. This could lead to $3000 fine and/or five years imprisonment.
We advise you not to continue such actions further as it would ruin your future. Compliance with US police officals is essential...so and so"
பயதில்ல அவனுக்கு படிச்சத்து மறந்திடுச்சு.. so this is what i could get..

இது அவன் மாமா செய்த சதியா?
இல்லை யாராவது சும்மா மிரட்டு கின்றார்களா
இல்ல serious matter அ?
அந்த சம்பவத்துக்கும் இந்த message க்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?
இல்ல யாராவது சும்மா பணம் பறிக்க பார்க்கிண்றார்களா?
இல்ல இது இன்னொரு friend ஓட prank-a?

Officially: அவன் ரொம்ப நல்ல பையன். அவனுக்கு அந்த மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது/தெரியாது என்னோட நெடுநாள் ஸ்னேகிதன்

பொருத்திருந்து பார்ப்போம்.. நான் தைரியம் சொல்லி இருக்கேன்..
இனி??

Wednesday, October 11, 2006

நட்பு,காதல்,...மழை

மூன்றுக்கும் என்ன சம்பந்தம்?
இருக்கு ஆனா இல்லை :)
ம்ம்...

மனதில் ஒரு மழைக்காலம்... கொஞ்சம் blade but நல்ல கதை. யதார்த்த(மில்லாத??) கதை (Atleast for me)

ஒரு ஆணும் பெண்ணும் எந்த வித உள் நோக்கமும் இல்லாம பழக முடியுமா?
ஆண் பெண் நட்பு நிஜமா? நாடகமா?
ஆண் பெண் ஈர்ப்பு மறுக்க முடியாத உண்மை.
But, அதுக்காக எல்லா உறவும் ஆத்னால தான் என்று இருக்குமா?

My take on this:
ஆண் பெண் நட்பு சாததியமில்லை என்று உறுதியா நேனைததிருந்தேன்
அதை தவறென்று prove பண்றதுகென்றே collegela ஒரு very close girl - friend.

சில சமயம் இது சாத்தியமே இல்ல அப்படினு நாம ஒன்றை நெனைப்போம். ஆனா அது நடக்கும். அதிர்ச்சியில் இருப்போம். அது முடிஞ்ச பிறகு, அது எப்படி நடந்தது என்று நமக்கே தெரியாது
என் friendship அந்த வகையறா!

ஒரு சாதாரண குடும்பத்தில், பொதுவா பையன்களுக்கு அம்மாவை பிடிக்கும், பொண்ணுங்களுக்கு அப்பாவை பிடிக்கும். காரணம், freudian theory.
அப்படி இருக்கும் பொழுது, ஒரு ஆண் பெண் நட்பில அந்த ஈர்ப்பு இல்லாம இருக்குமா?
இருக்கும். ஆனா, அதுக்காக பாத்து பேசற எல்லா பொண்ணுங்க மேலயும் ஈர்ப்பு வருமா? வராது... அதுவும் நெறையா நாள் பழகிய பின், அந்த ஈர்ப்பு சக்தி தெரியாது

எல்லா ஆண் பெண் உறவுக்கும் அந்த ஈர்ப்பு ஒரு முக்கிய சக்தி. But it is NOT everything.

ஆனா ஒரு பொண்ணோட அந்த படத்தில வர அளவு closeஅ பழகி, ஒரு possessiveness வராம இருக்குமா? I dont think so.

So my 2 cents,
சாதாரணமான பழக்த்தில் அந்த ஈர்ப்பு இருந்தாலும், ஆணும் பெண்ணும் நண்பர்களா இருக்கலாம்.
But, அவ்ளோ close அ பழகின-a ஒரு possessiveness - கண்டிப்பா வரும்.
அது காதல இல்லையா? எனக்கு தெரியாது
அவ்வளோவு close அ பழகி, அந்த பொன்னோ/பையனோ தான் நம்ம கூடவே இருக்கணும்னு நினைத்தால் அது காதல் இல்லையா?

என்னை பொருத்த வரை நட்பு காதலின் "caterpillar" . சில பேருக்கு பட்டாம்பூச்சி அழகா தெரியும் ..சில பேருக்கு "caterpillar" தான் அழகா இருக்கும்.

But again, எல்லாத்துக்குமே exceptions undu ...
நீங்க என்ன சொல்றீங்க?

Friday, October 06, 2006

Aryans, Dravidians

This is a very short blog on the "actual" definiton of the two terms.

Aryans: The word 'Aryan' literally means 'noble born'. It was a form of respect practiced among the people settled in and around the Gangetic plain. (Vedic people)
Even today in Iran, a person proudly calls himself an "Aryan" - and it has nothing to do with race.
The word itself has similar roots to the word "Ayya" in tamil -which is also an form or respect. (Again, the brahmin caste - 'ayyar' was based on this word)
So saying that there was an Aryan invasion in India is as ridiculous as saying medieval England was invaded by a race of people called "sirs", just because all the important and respected people of that time were knighted with a "sir" title.
That is the case my friends, of how we practice a ridiculous history imposed upon us by our colonists and continued by todays "indian" historians too.

Dravidians: The word Dravidian is a derivation of the word "tamil". The greeks mispronounced the common word "tamilar" (தமிழர்) as "tramilar" --> "tramidar" --> "dravidar"
In time, it came to represent all the people who speak Tamil and its derivatives.

Thursday, October 05, 2006

கதை கேட்போம் வாங்க..Story Time

சின்ன வயசில் இருந்தே எனக்கு புத்தகம் என்றாள் உயிர். ஏகப்பட்ட கதைகள் படிச்சிருக்கேன்.
ஆனா என் வாழ்க்கையை ஒரு impact செஞ்ச கதைகள் கொஞ்சம் இருக்கு...
அதில் மூன்று...

கதை 1:இது ஒரு English கதை "Winners/successfull men(?) dont do Different things , They do Things differently" என்ற bookல இருந்தது
ஒரு ஆள் , மற்றும் அவன் நண்பன் இருவரும் கடற்கரை ஓரமாக walking போறாங்க. முந்தாநாள் வந்த Tide ல நெறைய ஸ்டர்பிஷ் கரை ஓரமாக கிடக்கு. அதுல நெறைய உயிரோட இருக்கு. But வெயில் அதிகமானாதும் dry ஆகி செத்து விடும். அந்த ஆள் அங்கொன்றுமா இங்கொன்றுமா உயிரோட இருந்த சில starfish இ கடல் ல எடுத்து வீசினார்.
அதை பார்த்த நண்பர் , இவ்வளோவு starfish இருக்கே? உன்னால எல்லாத்தையும் காப்பாற்ற முடியாது எதுக்கு time waste பண்ற? நீ செய்யறதது எதையும் மற்ற போவதில்லை என்று சொன்னார். அதற்கு அந்த ஆள், "What I did, May not change the World for you and me, But i am pretty sure it just changed for the Starfish'னு சொன்னார்.
இந்த கதையோட அர்த்தம் ரொம்ப ஆழமானது. நம்மள முடிஞ்சா உதவிகள்..எவலோவு சின்னத நமக்கு தெரிஞ்ச கூட, அது இன்னொருத்தர்-ஓட உலகத்தையே மாற்றும் தன்மை உண்டு... So Help Others..

கதை 2:ஒருவன் Oak மரத்தின் அடியில் படுத்து தூங்குகிறான். தாகமாக இருக்கு அவனுக்கு. அப்போ எதிரில் உள்ள தென்னை மரத்தை பார்க்கின்றான். ஏகப்பட்ட காய்கள் அதில். அது எட்டாத உயரத்தில்.. Oak- இல் இருக்கும் பழத்தை பார்க்கின்றான். மிகவும் சிறியது அது (like a cashew nut but not edible). உடனே யோசிகின்றான், "கடவுள் ஏன் இவ்வாறு பொருதமில்லாம செய்யராரு, அந்த இளனி இந்த மரத்துல இருந்த-a எவ்வளவு நல்லா இருக்கும். Oak மரம் நிழல் மட்டும் கொடுக்காம அதில் களைப்பாருபவர்களுக்கு தாகத்தையும் போக்க usefull அ இருக்கும்" அப்படினு.
அப்போ அவன் தலையில் ஒரு OAK CORN வந்து விழுது.
இந்த கதையோட அர்த்தம் - Sometimes things happen beyond our comprehension for apparently no valid reason. It may even be bad for us. But, We with our short sights are not the right judges.

கதை 3:ஒருவன் வெள்ளத்தில் மாட்டி கொள்கிறான். இரவு முழுக்க கடவுளிடம் விடாமல் வேண்டுகிறான். கடவுளும் மனமிரங்கி, அவனிடம் காலையில் உன்னை காப்பாற்ருகின்றேன் அப்படினு சொல்றாரு. சரி னு wait பண்றான். காலையில் , அந்த பக்கம் ஒரு கட்டை மிதந்து வருது. அவன் நாம் என் கட்டையை பிடித்து போக வேண்டும் , நம்மை தான் கடவுள் காப்பாற்றுவதாக சொன்னாரே என்று எதுவும் செய்வதில்லை. கட்டை வெள்ளத்தில் விலகி போய் விடுகின்றது. சற்று நேரம் கழித்து அந்த பக்கம் ஒரு Boat வருது - Rescue Boat. அதில் உள்ளவர்கள் இவனை வர சொல்கிறார்கள். இவனோ, கடவுள் என்னை காப்பாற்றுவார் என்று எதுவும் செய்வதில்லை. இன்னும் சற்று நேரம் கழித்து Rescue Helicopter வரய்ததூ. நம்மாளு அதிலும் போவதில்லை. (அதான் கடவுள் காப்பாற்றுவாரே)
அப்பறம் அவன் வேழத்தில் இறந்து போகிறான். சோ சொர்க்கத்தில கடவுளிடம் கேட்கிறான்.. என்னை காப்பாற்றுவேன் என்று சொல்லி விட்டு இப்படி ஏமாற்றிவிட்டாயே என்று. கடவுள் அவனிடம், மூன்று முறை நான் வந்தேன்...நீ தான் உன்னையே ஏமாற்றிக்கொண்டாய் அப்படினு சொன்னாரு.


ம்ம்...நம்ம வாழ்க்கை நம்ம கையிலே..

Tuesday, October 03, 2006

நான் ரசித்த பாடல் வரிகள்..

எல்லாருக்கும் music பிடிக்கும். எனக்கு lyrics பிடிசா தான் pattu பிடிக்கும்.
பாம்பின் கால் பாம்பரியும் னு ஒரு பழமொழி இருக்கு
so Only a Poet can comprehend another poem.. is my belief.. maybe maybe not..

I just love these line..
இதுக்குணே உட்கார்ந்து யோசிப்பங்கலோ?

"ஒற்றை காலில பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்று- ஆட தான்" - Jeans


"வானத்து நிலவை தண்நீரிலே
சிறை வைத்த கதை தான் உன் கதையெ.." - some old film

"மார்புக்கு திரை இட்டு மறைக்கும் பெண்ணே
மனசையும் மறைக்காதே.." - Parthen rasithen

"கண்கள் பேசும் பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை.." - Nilave vaa

"பால் போல தேகம் தானே உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விளக்கேன்.." -Anniyan

"இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான்
அதில் தேட தேட தேடும் பொருளும் தொலைகின்றதே.." - Vijay 'n simran film

"சூரியன் வந்து வா என்னும் போது..
என்ன செய்யும் பனியின் துளி..
மனத்தை தழுவும் ஒரு அம்பானாய்.. மனதை தழுவும் ஒரு அம்பு ஆனாய்.. " - Sangamam

"மூடி மூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணில்
முட்டி முட்டி வளர்வது உயிரின் சாட்சி..
ஓடி ஓடி ஒளியாதே ஊமை பெண்ணே..
நாம் உயிரோடு இருப்பது காதல் சாட்சி.." - Amarkalam.

"தெரு முனையை தாண்டும் வரை நான்
வெரும் நாள் தான் என்றிருந்தேன்..
தேவதை யை பார்த்ததும் இன்று திரு நாள் என்கின்றேன்.." - Sachin

"தாஜ் மஹால் தேவை இல்லை அண்னமே அண்னமே..
காடு மழை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே.." - ajith film

ம்ம்.. எல்லாருக்குமே பார்த்தீன்கன-a ஒரு fav song னு ஒன்ணு இருக்கும் (அல்லது நெறைய இருக்கும்). Mostly, அது அவங்க 16-20 age ல இருந்தப்போ வந்த பாடல் ஆ அது இருக்கும். ஏன்னா அப்ப தானே அவங்க sight அடிச்சு , pattu பாடி enjoy பண்ணி இருப்பாங்க. So they would be able to much easily compare and accomodate with.

So..Listen and Enjoy.

Friday, September 29, 2006

captain உடன் ஒரு கற்பனை interview

முன் குறிப்பு: நான் எந்த உள் நோக்கமும் இல்லாமல் இந்த interview நடத்துரேன்
நான் - N
Captain - C
Please imagine captains tone and voice for the dialogues. Else it is not so fun!
Anything in Bracket -is inside my head.


N: Good morning sir
C: அட.. இதெல்லாம் எதுகுப்பா உட்காரு
நீ என்ன software ல வேலை பார்க்கிறையா?
N:(நம்ம தான கேள்வி கேட்கணும்??) ஆமாங்கC: ம்ம்.. உலகத்தில இருக்கிற software company எண்ணிக்கை 1987653. அதுள நம்ம நாடுள்ள மட்டும் 67589.
அதுள நம்ம தமிழ் நாடுள்ள இருக்கிற software companynga 7004. அதுள்ள வேலை பாகிரவங்க எண்ணிக்கை
56789. அதுள்ள ஒருததனுக்கு சராசரி மாத சம்பலம் Rs.9000
N: (நம்ம இதெல்லாம் கேட்கவே இல்லையே??) சார் நீங்க ஏன் ரஜினி சார் ஆதரவை உங்க கட்சிக்கு கேட்க கூடாது?
C: என்ன தம்பி என்ன கேள்வி கேட்குற?
எனக்கென் captain னு பேர் வந்தது தெரியுமா?
என்னைகாசும் ஒரு நாள் இந்த நாட்டுக்கே captain அ வருவென்னு தான் நான் பிறக்கும் போதே எனக்கு captain னு பேர் வேச்சாங்க.
N:(confused) சார், உங்க படம் பேரரசு climax ஒரு logic ஏ இல்லாம இருந்ததே?
C: தம்பி இது வரைக்கும் நான் நடிசச படங்களோட எண்ணிக்கை ணூத்துக்கும் மேல
அதுளே ஏதாவது ஒரு படுத்துள logic இருந்த கூட நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன்...
English ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை logic.
N: (tensed..ரொம்ப பேசறாரு.. இவரை மடககனும்)
சார், ஆரம்பத்தில software பத்தி பேசினீங்களே.. உங்களுக்கு Java தெரியுமா?

C: எனக்கு java தெரியரது இருக்கட்டும்.. நீ software engineer தான..
உன்னால Windows Mediaplayer ல type பண்ண முடியுமா?
N: (எவன்டா ரமனா director.. மவனே...)
வருங்கால முதலமைச்சர் எங்கள் CAPTAIN...


பின் குறிப்பு: விஜயகாந்த் அரசியல்ல வந்தது தமிழகத்துக்கு ஒரு நல்ல மாற்றம் னு நெனைக்கிறேன்... பார்க்கலாம்.

Thursday, September 28, 2006

காதல் பற்றி...

"நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலை aaTuven.."
"காதல் என்பது தூங்கும் மிருகம்.. மனசுக்குள்.."
"என்னை ஏதோ செய்கிறாள்.. நெஞ்சை ஏனோ கொய்கிறாள்"
" காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடு இருந்தால் வருகிறேன்.."
"என் காதலே என் காதலை இன்னும் என்ன செய்ய போகிறாய்.."
WOW ... i write poems for..like >7 years..and i wrote like..3 or 4 love poems..at the most (a lotta haikus..but poems..rarely are abt love for me)


நான் முதல் முதலா கவிதை எழுத ஆரம்பிச்சது 11த் std ல.
Maths tution- க்கு வரும் ஒரு தேவதை. பேர் வேண்டாம். Muslim பொண்ணு.
அவளை தொலைத்த நாள் ல என்னோட ஒரு பகுதியும்....
It is just not the same again.. after ur first love.
கவிதை கூட குழந்தை மாதிரித்தான். ஆனா என்ன.. நம்ம தான் பிரசிவிக்க்ணும்.
அவளுக்காக பிறந்தது என்றாலும், அவள் போன பின்னும் நம்மோடு இருக்கும்.
அதுக்கப்புறம், வாடகை தாய் தான்.

12த் ல மறுபடி Maths tutionla ஒரு பொண்ணு.
proposal !
அதுகாப்பறம் BEST friends. இன்னைக்கு வரைக்கும்.
வர்ற januaryla கல்யாணம் அவளுக்கு.

என்னோமோ தெரியல 12த் ல பார்க்க ரொம்ப அழகா இருந்ததா ஞாபகம்
அதுகுப்பரம், 3 வருஷம் கழித்து அவள் வீட்டுக்கு போனேன்.
(நடுவிழ telephone friend weekly பல மணி நேரம் பேசுவோம்)
அடையலாமே தெரியல.
இவலா அது???? அப்படினு.. நம்ப முடியல.
வீட்டில அவளுக்கு நெறைய problems. She made my Mom and Dad look liberal.
Gods grace, இப்போ எல்லாம் ok அ இருக்கு.

apartment கீழ ஒரு பொண்ணு.
பேரு Aishwarya. அந்த பேரு வெச்சா எல்லாருமே (எனக்கு தெரிஞ்சு)
அவ்ளோ அழகு. (what is there in Name?? may be there is..)
Palakadu Brahmin.
கயல் விழிகள் நா என்ன னு அவளை பார்த்து தான் தெரியும்.
she has the most beautiful eyes on earth among the ones i saw.
தினமும் sight அடிப்பேன்.
அவளுக்கும் தெரியும்.
வீட்டுக்கு முன்னாடி வந்து kutties ஓட விலையாடுவா.
தினமும் school விட்டு வரும் போது (அவ) எங்க வீடு balconya பாத்துக்கிட்டே போவா..
எதுர்க்கா போன, என்னையெ பார்பா..
ம்ம்...
But at that time, 12th tension, and i was too hurt too recently to think of anything..
அதனால sight அடிக்கிரதோட சரி.. God knows where she is now..

சரி.. college பத்தி இன்னொரு நாள்.

About Me.. என்னை பற்றி

என் வாழ்க்கையின் goal - எப்பொழுதும் மகிழ்ச்சியாய், peacefull- அ இருப்பது - but not at others expense.
I am far from an ideal person.

But என்னால எதுவும் முடியும் என்று நினைக்கிற type. தலை கணம் பிடிச்சவன் என்று கிடையாது.. cause யாராலையும் எதுவும் சாதிக்க முடியும்னு நம்புபவன் நான்

strict-அ அம்மா ,அப்பா .. செல்ல தம்பி .. ரொம்ப யோசிக்கிர நான் - அப்படினு close- அ வளர்ந்தவன் .. அப்பாவுக்கு அடிக்கடி transfer -bank வேலை.
ஒவ்வொரு ஸ்சூல் -லையும் ஒவ்வொரு முகம் எனக்கு.


1ஸ்ட் - 3றட் std வரைக்கும் ரொம்ப நல்ல பையன்.
4த் 5த் 6த் ல என் கிட்ட classla அடி வாங்காத பையன் எவனும் இல்ல.. (நானும் வாங்கினேன்)
7த் 8த் 9த் 10த் ல என்னோட பழம் யாரும் கிடையாது..
11த் std - மறக்க முடியாத வருடம். முதல் காதல் முதல் கவிதை முதல் கத்தி முதல் அதிதடி முதல் accident

12த் - என் தொல்லை தாங்கமா அப்பா இன்னொரு transfer கேட்டு வாங்கினார். Hospitalised for first three months.
அப்பறம் அவசரமா படிச்சு கொஞ்சம் நல்ல மார்க்..
ஒரு நல்ல engg. college ல seat.
முதல் முதலா நாலு வருஷம் ஒரே இடத்துல - அங்க தான்.
மறக்க முடியாத friends, இடம், lessons (not class lessons)

அப்பறம், எல்லாரையும் போல software வேலை..
அவ்வளவுதாங்க...

என் கவிதைகள்



God..கடவுள் I

This blog attempts to answer the impossible
1.Who is GOD
2.Where is GOD
3.Why are there different GOD(s!)?
4.Which one is the True GOD? (and no this is not an evangelising mission)
5.How do i know all this is true?

lets first see what we all can agree upon with valid arguments

1. There is some god somewhere(hopefully i neednt provide arguments to support this)
2. He may have created the universe, or he along with the Universe might have existed from time immemorial or He is the Universe.

My guess, He is the Universe.Reason-If he created the universe, where was he before that?
Sounds childish, but think abt it.

Why would a GOD create a universe? what would the need be for him? because he was lonely? (may be u r lonely, but i have the opinion god doesnt get lonely)and the second option & third (which also indirectly means they existed all the time) is just incomprehensible for the human mind.. the second option is also not viable to me, cause if both existyed from time immemorial, there should be a force greater than the sum of those two... who was that? so it is 3rd for me

3. Holy books.
I can accept all the holy books were written by some kinds saint /priest /holy person /inspired by GOD (whatever that means) but to say a book was written by GOD is cheap. It is like taking a cinema now, and after a 1000 years saying GOD took it, just because it has "good theories" written/taken on it. (will be explained why soon)and then there is the Question of us having too many holy books..so which one is the real? the Gita? the Bible? the Koran? the book of Death and Life?there is 3 answers to this.
1. Only one of these
2. All of them
3.None of themAnswer

1 - CHEAP. Only self-absorbing prudish idiot will say this? WHY THE HELL WOULD GOD APPEAR TO ONE SMALL SECT OF PEOPLE AND TELL THEM THE TRUTH AND ASK THEM TO SPREAD IT ELSEWHERE? what makes him partial /or what makes that particular sect of people special/superior to everyone else? why cant he just as easily come to all human say on their 20th birthday dream and tell them the "TRUTH", after all he is the "almighty".why does he have to choose you, say a christian to spread the word of truth to the entitre world?? why cant he come and say to everyone? what is so special abt you? Nothing. so this cannot beI am ignoring Option 3 as it is irrelevant.Option 2 is more reasonable.Human beings as a race were developing their own culture wherever they were. there was little communication across groups. (atleast in the beginning). And ppl then , just like now, were afraid of the unknown (the dark, the phantoms, the ghosts....) so they had to form something that will give them moral inspiration..soon that "something" takes their won form of awe inspiring - demonic (not in the sense of "evil") - extra life - miraculous - kind hearted - warrior -etc; -ultimately bearing a character that forms the general populace uphelds.

So it is easy to form a logical conclusion that in different sects there were different godly persons who wrote the "holy books" so their ppl might act and live by them. -more disciplined the society -the more benefit to it.4. Who is the True GOD?just like the "holy book" explanation, I believe everyone worships their own for of "TRUE GODS". The chance of the GOD being Allah is as much a possible as he can be Krishna or whatever.Each person can have their own feeling of GOD.. and each person might worship their own version of it. It doesnt matter as ultimately it all goes to the same "GOD". the GOD , is not gonna reject you bcause you worshipped a "calf" shaped IDOL (yeah as in the "ten commandments") and punish you by floods? If he does, doesnt that debase the GOD like you and me? jealous, pridefull and possessive? Doesnt it make you think that maybe it was the act of such a person who wanted to have his society under his control (for good or bad, doesnt matter here) rather than a GOD?

If he is the TRUE GOD, then He is in all forms and substance. so worshipping anything -from a leaf to a rock to nothing to a idol is all possible and well and good.

Will continue...