hmm....காதலெனும் நட்பு!
உங்க கிட்ட ஒரு கவிதையே கவிதை கேட்டா என்ன செய்வீங்க? என் உயிர் தோழிக்கு... கவிதை(க்கு) சமர்ப்பணம்
நீ நாம்
என்பதில்
தொடங்கிய கவிதை இது
நான் எழுதிய கவிதைகளை விட
நான் படித்த கவிதைகள் அழகு
நான் படித்த கவிதைகளை விட
நான் பார்த்த கவிதைகள் அழகு
நான் பார்த்த கவிதைகளில்
நீயே முதல் அழகு!
தேவதை கதைகளை
உன்னால் நம்ப தொடங்கினேன
நெல் விதைத்து
கோதுமை அறுவடை தருமா?
காதல் விதைத்து
நட்பு அறுவடை செய்தவர் நாம்
நம் தேடல்களில்
தொடங்கி
நம் துயரங்களில்
வளர்ந்தது..நட்பு
யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது என்றேன்
தோழி, நீ அழைக்கும் தொலைபேசி
மணி ஓசை கேட்கும் வரை..
இடியும் மின்னலும்
மலர்வதற்கான
இடை மௌனத்தில்
பூக்கும் கனவு
காதலெனும் நட்பு