பொய்யாய் சிரிக்கின்றாய்...Love
சில குழந்தைகள் இறந்தே தான் பிறக்கும்...
காதலும் குழந்தை மாதிரி தான் ..
"இதுக்கு மேல..இதுக்கு மேல எனக்கு எதுவும் தோனல .. " அப்படினு பாடிட்டு போக வேண்டியது தான்....
The eyes see the truth. The Truth makes us angry. Anger leads to hate. Hate leads to destruction. ஆதலினால் கண்களை மூடி கொள்ளுங்கள்....
சில குழந்தைகள் இறந்தே தான் பிறக்கும்...
காதலும் குழந்தை மாதிரி தான் ..
"இதுக்கு மேல..இதுக்கு மேல எனக்கு எதுவும் தோனல .. " அப்படினு பாடிட்டு போக வேண்டியது தான்....
கண்டது -
Dreamzz
at
11/29/2006 10:10:00 AM
உங்க கிட்ட ஒரு கவிதையே கவிதை கேட்டா என்ன செய்வீங்க? என் உயிர் தோழிக்கு... கவிதை(க்கு) சமர்ப்பணம்
நீ நாம்
என்பதில்
தொடங்கிய கவிதை இது
நான் எழுதிய கவிதைகளை விட
நான் படித்த கவிதைகள் அழகு
நான் படித்த கவிதைகளை விட
நான் பார்த்த கவிதைகள் அழகு
நான் பார்த்த கவிதைகளில்
நீயே முதல் அழகு!
தேவதை கதைகளை
உன்னால் நம்ப தொடங்கினேன
நெல் விதைத்து
கோதுமை அறுவடை தருமா?
காதல் விதைத்து
நட்பு அறுவடை செய்தவர் நாம்
நம் தேடல்களில்
தொடங்கி
நம் துயரங்களில்
வளர்ந்தது..நட்பு
யாழினிது குழழினிது
மழலை சொல் இனிது என்றேன்
தோழி, நீ அழைக்கும் தொலைபேசி
மணி ஓசை கேட்கும் வரை..
இடியும் மின்னலும்
மலர்வதற்கான
இடை மௌனத்தில்
பூக்கும் கனவு
காதலெனும் நட்பு
கண்டது -
Dreamzz
at
11/24/2006 03:48:00 PM
நம்ம சின்ன வயசுல கண்டிப்பா யாராவது "ஆள் மட்டும் வளந்தா பத்தாது அறிவும் வளரனும்" அப்படினு சொல்லி கேட்டு இருப்பீங்க.. அதே கொஞ்சம் நாள் கழிச்சு "அவன் ரொம்ப immatured-அ நடந்துகிறான்" அப்படினு சொல்லி கேட்டு இருப்பீங்க.
நான் 12த் படிக்கும் போது எங்க classல ஒரு பையன். எல்லாரையும் பயங்கரமாக கிண்டல், கேலி பண்ணுவான். யார் சொன்னாலும் கேட்கவே மாட்டான்.ஆனா அவனுக்கு அம்மா இல்ல. அதுனால அவன் என்ன செஞ்சாலும் நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். கொஞ்ச நாள் கழிச்சு அவன் என்கிட்டே எதுவுமே செய்ய மாட்டான் மத்தவங்க எல்லாம் ஏன்டா அவன மட்டும் ஒண்ணும் கிண்டல் செய்யல என்று கேட்டபோது "தெரியல" அப்படினு சொல்லுவன்.
(ம்ம்..ஒரு காலத்தில எவலோவு நல்லவன இருந்திருக்கோம்!!)
ஆனா, இப்பெல்லாம் அந்த பொறுமை இல்ல. எப்போ தொலைசேன் என்று தெரியல. ஒரு நாள் சும்மா யோசிக்கும் போது இது தோணுச்சு.
எங்க classla ஒரு பையன் இருந்தான் ரொம்ப நல்லவன். அநியாயத்துக்கு நல்லவன்! நாமெல்லாம் யாராவது சும்மா கீழ விழுந்த, கேலி யா சிரிப்போம்.. ஆனா, அவன் உடனே ஓடி போய் "டேய், எதுவும் ஆகலையே என்று " கேட்பான்...நமக்கெல்லாம் அந்த அளவு "நல்லவன்" எப்பவும் வரமாட்டான்!
சரி topic வறேன் maturity என்றால் என்ன --என்ன பொருத்த வரைக்கும், maturity என்றால், முகமூடி! ஒரு குழந்தை இருக்கு. table மேல chocolate ஒன்றை பார்க்குது. அதோட மனசுக்கு "ஹை அந்த chocolate வேணும்" அப்படினு தோணுச்சு என்றால், உடனே ஓடி போய் எடுத்துக்கும்.அதே நானோ, நீங்களோ பார்த்தால், நம்ம மனசுக்கும் அது வேணும் அன்று தோணும். ஆனால் நம்ம அது யவருடையது , சுத்தி யார் இருக்காங்க அப்படினு எல்லாம் "extra" யோசனை செய்வோம்! ஆனா, நமக்கும் அந்த குழந்தை மாதிரி basic அ "அந்த chocolate வேணும்"... நம்ம உணர்வா நாம் திரைகள் போட்டு மறைத்து விடுகின்றோம்..
நல்ல நடிப்பீங்களா? you are a matured person!
சரி serious matter விடுங்க...
நம்ம தீபா போட்டோ போட்டது பயங்கர popular ஆயிடுத்து!
நம்ம தபூ ஷங்கர் ஓட சில வரிகள்
"எல்லா நாட்களும் வருத்ப்படுகின்றன
உன் பிறந்த நாளாய் பிறந்திருக்க கூடாதா என்று"
"எதை கேட்டாலும்
வெட்கத்தை தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்"
- Dreams!
கண்டது -
Dreamzz
at
11/20/2006 01:40:00 PM
15
மறுமொழிகள்
நெறைய பேரு விசாரிச்சதனால அவங்க பேரும் கொஞ்சம் போட்டோ - உம்
பி.கு :: ரொம்ப வழிய வேண்டாம் !!!
எல்லாரும் ஒரு முறை சாமி பேரு சொல்லி கன்னத்தில போட்டுக்கொள்ளுங்க
கண்டது -
Dreamzz
at
11/10/2006 09:06:00 AM
45
மறுமொழிகள்
நிஜமாவே கடவுள் என்று ஒருவர் நம்மை பார்த்து கொண்டு இருந்தால், அவருக்கு ரொம்ப லொள்ளுங்க!
நான் 10த் படிக்கும் போது class -ல ஒரு discussion. வெளிநாட்டுக்கு போய் வேலை பார்ப்பது சரிய தவறா? என்று. class-ல நான் ஒருத்தான் தான் அது சரியில்லை என்று சொன்னேன். மற்றவங்க எல்லாரும் அது சரி தானு என்று சொல்ல ஒரே சண்டை . கடைசி வரைக்கும் நான் ஒத்துககவே இல்லை.
ஆனா, Engg. முடித்து ரெண்டாவது மாதம் அமெரிக்க வந்தவன். இன்னும் இந்தியா ஒரு முறை கூட திரும்ப வரலை. ரெண்டு வருஷம் ஆகுது
ரொம்ப நாளா பசி என்றால் என்னவென்று எனக்கு தெரியாது ..எனக்கு ஒரு 12 வயசு இருக்கும். ஒரு நாள் busstand ல நிற்கும் போது ஒருவன் road இல் படுத்து அழுது உருண்டு கொண்டு இருந்தான். யாராவது ரெண்டு ரூபா கொடுங்க..சாப்பிட்டு 5 நாளாச்சு அப்படினு .. அப்பா அவன் act பண்ணானா இல்ல நிஜமாவே பசிச்சுதா அப்படினு எல்லாம் எனக்கு தெரியாது ஆனா அவன் முக்ம, அந்த அலறல், நான் சாப்பிடும் போது எல்லாம் ஞாபகம் வரும்.. அதனால தானோ என்னவோ, யாராவது பிச்சை கேட்டா என்னால அவங்க சும்மா ஏமாததுராங்களா அப்படினு எல்லாம் யோசிக்க தோன்றாது.. 12த் ல bus ஒன்றில், கால் ஊனம் போல் வந்த பிச்சை காரன் bus start ஆனதும் , இறங்கி ஓடினது பார்த்து மாதவங்கெல்லாம் திட்டின கூட எனக்கு திட்ட தோன்றவில்லை ...
மற்ற ஒரு சம்பவம்.. கவிதையா..
கையில் குழந்தையுடன்
பத்து வயது பென்..
அவளுக்கு தாய்
இட்ட பெயர் நான் அறியேன்
ஆனால்
சமூகம் இட்ட பெயர்
பிச்சைகாரி..
பசிக்கும் பொழுது
அவளும் அழுவாளா
அவள் கையில் இருக்கும்
குழந்தையை போல..
அவளுக்கு கடவுள் நம்பிக்கை
இருக்குமா?
எது அவள் கடவுள்?
ராமரா ஏசுவா அன்றி அல்லாவா?..
பெரியவள் ஆனதும்
என்னவாக வேண்டும்
என அவள்
கனவு காண்பாள்..
அவளை கண்டதும் தான்
எனக்கு
என் உடைகளும்
சுமைகள் ஆகின..
அவள் கிழிந்த உடையில் தெரிவது
அவள் தேகம் அல்ல
நமது தேசம்..
சற்று முன் நீ
நடந்து போன தடயம் எதுவும் இன்றி
அமைதியாக கிடக்கிறது வீதி
எனினும்
அதிவேக ரயில் கடந்த போன தண்டவாளம் போல
இன்னும் அதிர்கின்றது
என் இதயம்
கண்டது -
Dreamzz
at
11/09/2006 01:18:00 PM
12
மறுமொழிகள்
ஹ்ம்ம்.. US ல இருக்கிறதுல ஒரே ஆறுதல்.. மூன்று படம் பார்த்துட்டேன் .. (இந்த படமெல்லாம் பார்ப்பது ஆறுதலா? என்று படம் பார்த்தவர்கள் கேட்பது தெரியுது..)
தர்மபுரி- என்னோட அம்மா வழி சொந்த ஊர். நம்ம Gaptain படத்தில ஒரு முறை கூட காட்டலை.. எதுக்கு அந்த பேர்னு யாரை கேட்பது? படம் முழுக்க Gaptain தான்.. No Logic
வரலாறு- நம்ம விவெக் styleல "அட பாவிக்ளா.. இதுக்காடா இந்த Build up கொடுத்தீங்க?..இது "History of godfather" (படத்தோட Caption) இல்லடா இது "History of "censored" " என்று சொல்லலாம். எனக்கு என்னமோ அஜீத் மீசை இல்லாம, நீளமான முடியோட..கொஞ்ஜம் overஆகவே roleக்கு பொறுத்தமா இருக்காரோ என்று ஒரு doubt. படத்துக்கு ஒரு 9 மார்க் போடலாம் (நூத்துக்கு) (ROFL)
வட்டாரம்- முதல் இரெண்டு படத்தொட compare பன்னா எவ்வளவோ பரவாயில்லை. But Still, கடைசியில Heroine தன் அப்பா,அண்ணன்களை, கொலை செய்த Hero வோடு "naive" அ ஒட்டிகிராங்கா..
கண்டது -
Dreamzz
at
11/02/2006 09:00:00 AM
12
மறுமொழிகள்