எட்டு... ஒன்பது.. பத்து!
ஆமாங்க. நம்ம C.V.R உம், பில்லு பரணியும் நம்மள மாட்டி விட்ட அதே எட்டு பதிவு தான்.
பதிவுலகின் எட்டு திக்கிலும் இப்ப உலா வரும் அதே எட்டு டேக் தான்..
அவங்களை பத்தி.. அவங்க வாழ்க்கை, நடந்தது, அனுபவம் என்று எல்லாரும் சொல்லிடாங்க. அதயே நாமளும் சொல்லவா? வேண்டாம்.
பதிலுக்கு ஒரு உண்மை கதை சொல்லறேன். இதிலே எட்டு வரும். (ஏதோ ரூல்ஸ் இருக்கே அது... ரூல்ஸ் ஆ? அப்படினா?)
அப்ப நான் 11th படிச்சிட்டு இருந்தேன். என் நண்பன். அவன் பேரு டேவிட். அவனோட புனைப்பேர் எட்டு. ஏன்? ஏனா, அவன் தன்கிட்ட எட்டு பொண்ணுங்க 'ஐ லவ் யூ' சொன்னதாக சொன்னான். எட்டும் அப்ப எங்க ஊருல பாபுலர் பிகர்ஸ்.
1. எங்க கிளாஸ் ஹேமா
2. 10த் twins இரெண்டு பேரு
3. 11B கிளாஸ்ல ஒரு பொண்ணு
4. Physics tuitionla, Ignatius convent பொண்ணு ஒன்னு.
5. chemistry tuitionla, Sarahtucker பொண்ணு ஒன்னு.
6. maths tuitionla ஒன்னு.
7. அவன் மாமா பொண்ணு ஒன்னு.
இவங்க எல்லாரும் இவன் ஆழகுல மயங்கி இவன் கிட்ட "ஐ லவ் யூ" சொன்னதாக சொல்லி இருந்தான். ஆனா, இவன் தான் வேண்டாம் என்று ஒதுங்கி ஒருப்பதாக சொன்னான். அந்த வயசுல, அந்த ஊருல பொண்ணுங்க கிட்ட எல்லாம் யாரும் பேச மாட்டோம். So, அவன் சொன்னத தான் எல்லாரும் நம்பீ இருந்தோம்.
அப்படி ஒரு நாள், என்னை, வாடா, என் ஆளுங்களை எல்லாம் காட்டுறேன் என்று கூட்டிட்டு போனான். சரினு கூட போனேன். பாத்தா எல்லாமே நல்ல பிகர். உடனே எனக்கு ஒரு சந்தேகம். அது எப்படி எல்லா நல்ல பிகரும் இவன் கிட்ட போய் சொல்லுச்சுனு.
ஒரு நாள் அவன் போற Maths tuitionக்கு போனேன். அந்த பொண்ணு பேரு Sathya Bama. நம்க்கு தான்.. பயம் என்பதையே அறியாத பழக்கமாச்சே (அட்ரா.. அட்ரா!). so, நேரா அவ கிட்ட போய் கேட்டுட்டேன். அவ என்கிட்ட "யாரு டேவிட்?" அப்படினு கேட்டுட்டா.
அப்புறம் பையனுக்கு பல நாள் தர்ம ஆப்புகளும், உதைகளும் தான்.
இதுல என்ன கொடும நா, பையன் காலேஜ் போன பின்னும் இந்த டகால்டி follow செய்து அங்கேயும் வாங்கி கட்டி கொண்டதாக கேள்வி.
.................
சரி. இதுக்கும் எட்டுக்கும் என்னப்பா சம்பந்தம் என்று இன்னும் புரியாதவர்களுக்கு தான் இது..
எட்டு தத்துவம் - நம்ம கோப்ஸ் பாணியில.
1. லைட்ட 'On' பண்ணா எரியும். Fan அ 'on' பண்ணா எரியுமா?
2. லாரி நமக்கு மேல போனா அம்பேல். ஆனா aeroplane நமக்கு மேல போனா ஆனந்தம் 3. கோவில்ல பார்க்கும் பிகர் எல்லாம் தேவதையும் இல்ல. தெருவில் பார்க்கும் பிகர் எல்லாம் திரும்பி பாக்கிறதும் இல்ல
4. Windows உள்ள My computer இருக்கும். ஆனா My computer உள்ள ஜன்னல் இருக்குமா?
5. T-shirt போட்டு வேலைக்கு போலாம். coffee-shirt போட்டுட்டும் வேலைக்கு போலாம்
6. சிங்கிலா தான் சிங்கம் வரும்.ஆனா சிங்கிலா வருவது எல்லாம் சிங்கம் ஆகுமா? (இத நம்ம பிளாக் யாஹூ chattingல உதிர்த்தது காயத்ரிG3)
7. கை கண்ண குத்தினாலும் கண் தான் வலிக்கும். கண் கைய குத்தினாலும் கண் தான் வலிக்கும்
8. எட்டு தத்துவம் எட்டு நிமிஷத்துல எழுதலாம். ஆனா எட்டுமே உருபடியா எழுதமுடியுமா?
பி.கு: ரூல்ஸ் எல்லாம் இதுக்கு முன்னாடி எழுதினவங்க பதிவுல படிச்சிக்கோங்க. அப்புறம் இந்த டேக் பண்ணாத எட்டு புண்ணியவான்கள்.. இத தாராளமா எழுதலாம். எட்டு பேர போட்டு, அத Hyperlink எல்லாம் என்னால பண்ண முடியாது.
இதுக்கு மேலயும் எதுக்கு waiting.. ம்ம்.. எஸ்கேப்பு..ஏல எவன்ல ஓடுறதுக்கு முன்னால கல் எறியறது?