Monday, July 30, 2007

விழியோரமாய்

உலகின் காதெலெல்லாம்
பெண்ணாகி
உருக்கி எடுத்து
வானவில்லெல்லாம்
வளைத்து ஒடித்து
வண்ணம் கொடுத்து
பிரம்மன் செய்தானும் போல உனை!



தாயை கண்ட
குழந்தையாக
உனை கண்டதும்
என் மனது
உன்னில் மறந்தது..



இமைகளுக்கு காத்திருக்கும்
விழி தானடி நான்..
உனக்காக காத்திருந்து
காயப்படுகின்றேன்..

நட்சத்திரக்கூட்டம் எல்லாம்
உனை காண
இறக்குதடி
விண்மீனாய்..



கடலில் அலைக்காக
பொறுத்திருந்தவன்
அலையில் இறந்தது போல்
என்னவளுக்காக காத்திருந்து
உன்னில் கலைந்து போனேன்..

விட்டு சென்ற
வீதியெல்லாம்
விழாகோலம் பூணுதடி..
தொட்டு சென்ற
என் இதயம்
உன் தீண்டலில் துடிக்குதடி..



கிழக்கில் சூரியன் உதிப்பதெல்லாம்
கட்டுக்கதை
உன் விழிக்கீற்றில் விடியுதடி
என் உலகம்..

வீதியெல்லாம் நீ நடந்தால்
தேவதை ஊர்வலம்..
என் இதயத்தில் நீ நடந்ததில்
வானவில் ஆயிரம்..



உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்...

Monday, July 23, 2007

படம் பாத்து பிறந்தநாள் கொண்டாடுவோம்!

இத பாருங்க!



இன்னும் புரியலயா? இத பாருங்க.
























இன்னும் புரியலையா? வானத்தின் மிக வெளிச்சமான நட்சத்திரம்.. எனது பதிவுலகு குரு!





இவரோட பிறந்தநாள். (ஜீலை 25). நம்ம தான் முதல்ல சொல்லனும்னு ஒரு நாள் முன்னாடியே இந்த பதிவு! தல! பிறந்த நாள் வாழ்த்துக்குள்! எல்லாரும் எப்படியும் கேக் குடுப்பாங்க. அதுனால அது வேண்டாம்! உங்களுக்கு இந்தாங்க. என்ஜாய்!


Friday, July 20, 2007

விடியாத இரவெல்லாம்..

உலகின் அழகெல்லாம்
உதிர்த்து விட்டு
வெண் மேக வர்ணங்களாய்
வந்து போவாள் மழை தேவதை..


வரண்டு போன இதயமெல்லாம்
கருணை கொண்டு ஈரமாக்க
கருமேக கூட்டத்தில்
கொண்டு வருவாள் உயிர் நீர்..


காத்திருந்த எதிர்பார்ப்பும்
சுயசமாதான ஏமாற்றமும்
தொலைந்து போன நட்பில் கூடி
மறந்து போய் நாட்கள் சாகும்..


கிழிக்கப்படும் நாட்களிலே
கிழிந்துபோகும் இதயமும் சேர்ந்து
மறக்கின்ற பொழுதினிலே
மனிதனுக்கு இறைமை கூடும்..

நிலவை காண வேண்டி
பகலெல்லாம் காத்திருப்பு
நட்பில் காதலை
தொலைத்த கதை மறந்து போகும்..


திறக்காத மின்அஞ்சலில்
பிறக்காத மழலைகளாய்
காதலில் நட்பும்
கிடைத்தறியா கானலாகும்..


பெண்ணெல்லாம் சிலையாகி
கல்நெஞ்சின் வடிவாக
ஆணெல்லாம் கல்லாகி
சிதைந்து போன சிற்பமாகும்..


புரியாத காரணத்தில்
தெரியாமல் தொலைகையிலே
முடியாத கனவெல்லாம்
கனியாத மரமாகும்...


கண்ணொற்றி வந்த காதல்
கண்ணீரில் வழிந்தோட
வரண்டு போன சிகப்பு மட்டும்
காதலியாய் உடனிருக்கும்..

அவள் பொய்யில்
உண்மை இருக்கும்
அவன் மெய்யில்
உறுதி தொலையும்..


எழுதிய கவிதையினில்
எழுதாத உண்மை தூங்க
புரியாத வரிகளுள்
புதைந்து போகும் நட்பின் ஆழம்...

உதிரமாய் உயிர்த்தது தான்
குருதியாய் பிரிந்துபோக
புருவ நெரிசலின் கேள்வியிலே
உண்மைகள் நெளிந்து போகும்..


விடியாத இரவெல்லாம்
முடிவதற்கு காத்திருந்து
சூரியன் வருவது
உறக்கத்தில் மறந்துபோகும்..


பி.கு: இந்த கவிதை யாருக்காச்சும் புரிந்தா, அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ பார்சல்!

Wednesday, July 18, 2007

மின்சார பரிசுகள்!



மின்சார பூக்கள்..
உன் உதட்டு வெடிப்பில்
மலர்ந்து வரும்..
என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..


கவிதை சும்மா! ஆக்ஷ்வல் டாபிக் வேற. இது மருதம் மேடம் சொன்ன டேக். அவார்டு கொடுக்கனும்.

பரணி - இவருக்கு தான் முதல் பரிசு. "தன் துணையை தானே தேடும் தைரியம் உள்ளவர்களுக்கு" அப்படினு இவர் எழுதினது தான் நான், பதிவுலகத்தில் கால் வைக்க தூண்டிய வரிகள்.
"இரும்பு இதயம் எனது
காந்த விழிகள் உனது
"
அப்படினு கவிதை எழுதி அசத்துபவர். இவருக்கு இரும்பு பாவனா சிலை ஒன்றை கொடுப்போம்!

If someone knows metallurgy, pls make a metal model and give it to him on my behalf!

பொற்கொடி - என் தங்கை கொடி! இவங்க பாய்ண்டர்ஸ் படிப்பதில் இருந்து, படம் லிஸ்ட் போடுவது வரை கில்லாடி. சமையல் கூட சூப்பரா பன்னுவாங்கன்னு கேள்வி ;)
"ஆணும் பெண்ணும் நட்பா இருக்க முடியும், காதல் தான்னு அவசியமில்லனு சொல்றோம். ஆனா இது தான் பல குழப்பங்களுக்கு வழி வகுக்குது. " இப்படி அப்பப்ப ஆழமா யோசிக்கறவங்க. இவங்களுக்கு இதோ ஒரு ரெசிப்பி பரிசு!



செய்து அசத்துங்க!

ஸ்யாம் - "நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல..." அப்படினு பிட்ட போடுவாரு! அப்பறம் தங்கமணி பூரிகட்டையில அமெரிக்கா பூரா துறத்துவாங்கா!

காதல் பிரச்சனைனு வந்தா, "இது வரைக்கும் 5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்". இப்படி எல்லாம் காமெடி பண்ணி சமாதான(??) படுத்துபவர்.

தமிழ் பதிவு உலகத்தின் ஒரே ஆஸ்தான நாட்டாமை! இதோ இவருக்கு செம்பு பரிசு!

நாட்டாமை, தீர்ப்ப மாத்தீ சொல்லாதீங்க!

மு.கார்த்தி - இவர் தமிழ், கொஞ்சும் தமிழ். இவர் எழுதும் உரைநடை, தமிழின் வீர நடை. சினிமா, அரசியல், வாழ்க்கை என்று அசத்துபவர். சிட்டுக்குருவியின் ஆஸ்தான நண்பர். இவரு பிறந்த நாளுக்கு, பொறுமையா அபிஷேகம் வாங்கினவர்.
"தேன்கூட்டில் ஒரு சுள்ளெறும்பு" போன்று தலைப்ப கூட கவிதைதனமா கலக்குபவர்.

இந்த தலைப்புக்கு காரணமும் இவரே. எனக்கு மின்சார துறை கொடுத்தவர் இவர்!

"காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்
" அப்படினு பீல் பண்ணதால, இதோ அவருக்கு...

தல! கண்டுகாதீங்க ;)

K4k & Arun - பதிவுலகத்தில் எனக்கு கிடைத்த இரெட்டை அண்ணன்கள்.

K4K - கேட்டா, K for Karthick என்பதற்கு சுருக்கம் என்பார்!
"காதலும், வெங்காயமும் ஒன்னு...
உரிக்க உரிக்க கண்ணுல தண்ணி வரும்...
உரிச்சா உள்ள ஒன்னும் இருக்காது
..." அப்படினு தத்துவம் சொல்லி, நான் "கா.." அப்படினு ஆரம்பிச்சா, ஓடி போயிடிவார்! ;)

"""Desktopல My Computer இருக்கா? இல்ல My Computer உள்ள Desktop இருக்கா?? " என்பதை "படுத்துட்டு யோசிச்சேன்..
நின்னுட்டு யோசிச்சேன்..
ஓடிட்டே யோசிச்சேன்..
" இப்படி பலவாறு யோசித்தவர்! இவருக்கு காமெடி அருமையா வரும். கமெண்ட்களை அபரிதமா அள்ளி தரும் உத்தமர்!

அருண் - "இப்படி அமெரிக்க மாப்பிள்ளைக்கு மட்டும் எப்பவும் பன்னா?" என்று அமெரிக்கா வந்த இந்திய இளைஞர்கள் அத்தணை பேர் சார்பாகவும் பொங்கி எழுந்தவர்.
"கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து
" அப்படினு, தான் செய்த சமையலுக்கு கவிதை போட்டவர்!

அண்ணாஸ், இது உங்களுக்கு!

எது யாருக்கு, என நாட்டாமை தீர்ப்பு சொல்லுவார்!

G3 காயத்ரி -எனக்கு பதிவுலகத்தில் கிடைத்த அக்கா. என்ன சொன்னாலும் பொறுமையா கெட்பாங்க. ரொம்ப நல்லவங்க! எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது அப்படினு பொய் சொல்லிட்டு,

"உன் விரல் பிடித்து
நடைபயில ஆசைதான்
என்ன செய்ய?
உன்னை காணும் முன்னே
நடைபழகி விட்டேனே!
" இப்படி போட்டு, (அத G3 பண்ணது வேற விஷயம்) அசத்தறவங்க!
"என்னை சுற்றி உள்ள நல்ல நண்பர்களைத் தேடி ஆர்வமாய் ஓர் பயணம்"
அப்படினு சொன்னதால,




இந்த பயணத்திற்கு துணையா வர்ற மாதிரி இந்த பரிசு! I really hope someone gets you the car!

Adiya & CVR - என் சிந்தனை தோழர்கள்!
Adiya - "Did somebody verified rama , sita horoscope?
Did vishamitra bhrama rishi knows this fact already ?
Being a god why his mission statement miserably failed to man kind?
Are we eligiable to comment on these aspects
?
" அப்படினு தைரியமா கேள்வி கேட்பவர்! நான் ஹெவி டூடி பதிவு போட்டா, அத முழுசா படிக்கிறவங்களில் ஒருவர்!

CVR - போட்டோகிராபி, Aliens , Death, Love என்று சகல விதமான பதிவுகளும் போட்டுட்டு, கேட்டா "எல்லாம் அவன் செயல்" அப்படினு சொல்றவர்!
கொஞ்ச காலமா தான் தெரியும் என்றாலும், எங்கள் நட்பு, பல நாள் பழகிய நட்பு!

நண்பர்களுக்கெல்லாம் இது தான் பரிசு!

என்ஜாய்!

கோப்ஸ் - நகைச்சுவை நாயகர்! இவரு அடிக்கிற நக்கலு இருக்கே! அதுக்கு இவரே தான் போட்டி!
"thaaana kidaikira comment thaan permanent'u
katchi moolama kidaikiradhu verum pepperment'nu "

அப்படினு ஆரம்பிச்சு, காபி வித் கோப்ஸ் அப்படினு சொல்லி கலாய்ச்சு,
"என்னுயிர் காதலி,
நீ சிரிச்சா கன்னதுல விழும் குழி..
வாரத்துல ஒரு நாளாச்சும் தலைக்கு நீ குளி.
அதுக்கு அப்புறம் தலை'ல நீ வை மல்லி
"
அப்படினு கவிதை பேர சொல்லி..... ஹிஹி!
இதோ உங்களுக்கு...

இசை தெரிஞ்சவன் எல்லாம் இளையராஜாவும் இல்ல
கோப்ஸ் சொன்ன பிளேடுக்கு சிரிக்காதவன் எல்லாம் சீரியஸும் இல்ல.
(அர்த்தமா? அப்படினா?)

Kittu m&M - (யாரு கேப்ஸ், யாரு ஸ்மால் என தெரிஞ்சிருக்குமே ;) )
அடாது மழை பெய்தாலும்,
"களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் வலிமையும்
காதலியின் பார்வையில் அடங்கிவிடும்
" அப்படினு விடாமல் குறள் சொல்லும், மாடர்ன் வள்ளுவர்!

மாமாவும் மாமியும், சூப்பரா பாடுவாங்க! Bharani சொன்னாப்ல, "Made for each other"
இதோ இது குட்டி பாப்பாவுக்கு, என் சார்பா!

நான் அமெரிக்க வருகையில், நிஜத்தில் கண்டிப்பா வாங்கி தருவேன்!


Priya - காதல் யானை "ப்ரியா"
ஒத்தை கதை எழுதி, ஓவர் நைட்ல பேமஸ் ஆனவங்க! அவங்க கதைகளுக்கு நடுவில்
"ஒரு பொண்ணுக்கு கல்யாணம் தான் வாழ்க்கையேனு யார் சொன்னது? வாழ்க்கைனா எவ்வளவோ இருக்கு.. அதுல கல்யாணம் ஒரு பகுதி தான். எனக்கு மத்த எல்லாம் அருமையா அமைஞ்சிருக்கே" அப்படினு கருத்து சொல்லறவங்க!
உங்களுக்கு

ப்ரியா, பேசி தீத்துகிடலாம்!

வேதா - கவிதாயினி வேதா!
இவங்க எழுதும் கவிதை மனதை உருக்கும்.

"தேங்கி நிற்கும் உண்மைகளை
வழிய விட்டால்
கன்னத்து கோடுகளும் சாட்சியாகிவிடுமென
நீ
கண்களை மூடியதை
என் கண்கள் கண்டுக்கொண்டன;

கண்களில் தெரியும் ஏதோ ஒன்று
காட்டி கொடுத்துவிடுகிறது
உண்மையின் உண்மையை
."
உங்களுக்கு பரிசா இதோ என் கவிதை.

"முடியாத இரவுக்கெல்லாம்
விடியல் உண்டு காத்திருந்தால்..
எழுதாத தமிழுக்கெல்லாம்
தவங்கள் உண்டு நீ எழுத
.."

வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.


இத தவிற, (என்னை டேக் செய்த) "பாடும் குயில்" மருதம், மை பிரண்ட், துர்கா, ராஜி, கோல்மால் கோப்ஸ், அம்பி, 'ப்ளாக் யூனியன் தலைவி" டிடிஅக்கா மற்றும் புதுசா வந்த சிங்கம்ல ஏஸ், செந்தில், சூர்யகுமாரி போன்றவர்கள் அடுத்த வருடம் பேசப்படுவார்கள்!
அதுவரை உங்களுக்கான மலர்கொத்து! (உங்க பேர மறந்து விட்டு இருந்தா கூட, உங்களுக்கும் தான்!)



******************************************************

டேக்கா? ரூல்ஸா? சொல்லுங்கப்பா நம்மளை பத்தி!


Friday, July 13, 2007

மீண்டும் ஒரு காதல் (மட்டும் இருக்கும்!) கதை!

பரணியில் பிறந்து, ப்ரியமாய் வளர்ந்து, முல்லை கொடியாய் படர்ந்து, அருணாச்சலத்தை பார்த்து (ஹிஹி..ரஜினி படம்), அன்னியம் ஒழித்த அம்பியாய் சிறந்து, எல்லோர்க்கும் உற்ற நண்பனாய் மாறி (மை பிரண்ட்!), கோப்ஸிடம் கேப் கிடைக்காமல் மாட்டி, நம்ம கிட்ட வந்திருச்சு!

பதிவு கொஞ்சம் ஆழமா இருக்கும். மூழ்கிடாதீங்க!

காதல் கதை.. காதல் இல்லாம இருக்கலாமா? இதுக்கு முன்னால எழுதின மக்களுக்கு காதல் மேல அப்படி என்ன கோபமோ தெரியல.. ;) நம்ம கிட்ட வந்திடுச்சுல! இனி பாருங்க!

இனி கதை தொடர்ச்சி!
இடம்: கனடா - சந்தியாவின் வீடு
வெண் மேகம் மேலும் சேர்ந்தாலும், அழகில் குறையா ஒரு வெளுமையான காலை பொழுது... உலகனைத்தும் கட்டி அணைத்திருந்தாள் பனிப்பெண்..(உலகாசையை அவளே துறக்காத பொழுது, மானிடர்கள், நாமா துறக்க போகின்றோம்?) வெள்ளை போர்வை போர்த்திய அந்த காலைப் பொழுதில்..

சந்தியா வீட்டில்..
சந்தியா: வாங்க கார்த்தி எப்படி இருக்கீங்க?
கார்த்தி: நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.
சந்தியா: நான் இருக்கிறது இருக்கட்டும். உங்களை லன்சுக்கு வர சொன்னா, காலையில எட்டு மணிக்கே வந்து நிக்கறீங்க?
கார்த்தி: இப்போ வேற எங்கயாச்சும் மதிய நேரமா இருக்கும்ல. மதியம் வர சொன்னீங்க. யார் நேரப்படினு சொல்லல!
சந்தியா: நீங்க இன்னும் திருந்தவே இல்லையா! சரி உள்ள வாங்க.
.........
"நிலவை பார்த்தவன் எல்லாம்
நிலவில் தொலையவில்லை..
உன்னை பார்த்ததில் நான் மட்டும்
தொலைந்த நியாயம் என்னதோ?"

சந்தியா: என்னது, கம்மல் நல்லா இருக்கா? ரொம்ப நேரமா அதையே உத்து பாத்து கிட்டு இருக்கீங்க?
கார்த்தி: ஹி ஹி... இல்ல என்ன பேசனு தெரியல..
சந்தியா: இன்னும் என்ன காதலிக்கறீங்களா? எனக்கு காதல் மேல இருக்கிற நம்பிக்கையே போயிடுச்சு.நாம யாரையோ காதலிக்கிறோம்.. ஆனா அவங்களை கல்யாணம் பன்ன முடியாம போயிடுது.. ஐ திங்க் லவ் இஸ் அ ஹாக்வாஷ்.
கார்த்தி: ஒருத்தரை காதலிச்சு, அவங்களையே கல்யாணம் பன்னி வர்ற சந்தோஷம் மட்டும் காதல் இல்லைங்க.
சந்தியா: என்னமோ சொல்லறீங்க. எனக்கு என் காதல சொல்ல முடியாமலே போயிடுச்சு.. ஆல்ரவுண்டர் அம்பி, பதிவு எழுதியே, ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பன்னி செட்டில் ஆனது தான் தெரியும்...
கார்த்தி: பல பேரு ஒருதலை காதல் வந்து காதல் என்று நினைச்சிட்டு இருக்காங்க.. ஒருதலைக் காதலுக்கும், காதலுக்கும் இருக்கும் வித்தியாசம், மொட்டுக்கும், மலருக்கும் இருக்கிறது போல. சொன்னாதான் காதல். மலர்ந்தா தான் மலர்!
"சொல்லி பாருடா காதல்
எப்படியும் உண்டுடா சாதல்"
அப்படினு பெரியவங்க சும்மாவா சொல்லி இருகாங்க?
சந்தியா: அப்படினா?
கார்த்தி: இது தத்துவங்கா. இதுக்கெல்லாம் அர்த்தம் கேட்க கூடாது.
சந்தியா: அப்ப எதுக்கு அர்த்தம் கேட்கனும் கார்த்தி?
கார்த்தி: என் காதலுக்கு கேளுங்க..
சந்தியா: ம்ம்...
கார்த்தி: காதல் என்பது ஒரு உணர்வுங்க. அத லேசில அழிச்சிட முடியாது. ஜெயிச்சவங்க இருக்குனு சொல்லறதுக்கும், தோத்தவங்க பொய்னு சொல்றதுக்கும் இது என்ன விளையாட்டா?
சந்தியா: என்ன சொல்ல வறீங்க?
கார்த்தி: என்ன சொல்ல வறேன் என்பது முக்கியம் இல்லைங்க. என்ன சொல்லறேன் என்பது முக்கியம். இப்போ காதல ஏன் கடவுள் னு சொல்றாங்க தெரியுமா? பாய்ண்டு போட்டு சொல்லறேன் இருங்க
1. பிறக்கும் போது எல்லாரும் நம்புறது காதல், கடவுள்
2. வளரும் போது சிலருக்கு தொலையும் நம்பிக்கை - காதலிலும், கடவுளிலும்.
3. இரெண்டுக்குமே கண் தெரியாது. வெறியர்கள் உண்டு. பொய்னு சொல்லறவங்க உண்டு
4. இந்த இரெண்டு விஷயத்துக்காக தான், உலகத்திலேயே, அதிகமான யுத்தங்களும், உயிர் இழப்புக்களும் நடந்திருக்கு (WWI and II excempted)
5. கடவுள தொலைச்சவனுக்கும், காதல தொலைச்சவனுக்கும் நிம்மதியே இல்ல
6. இரெண்டுமே நிஜத்தில பார்த்தவர்கள் கம்மி
7. இது இல்லாம இருக்கலாம். ஆனா வாழ்க்கை முழுமை அடையாது
சந்தியா: ஆஹா! போதும் போதும்...
கார்த்தி: ....நீங்க பாட்டுக்கு முடியாதுனு சொல்லிட்டு வந்துடீங்க. நீங்க எங்க இருக்கீங்க என்று தேடி பார்த்தும் தெரியல. சரி. கொஞ்சம் இதெல்லாம் மறப்போம் அப்படினு இந்த பக்கம் வந்தேன்.
சந்தியா: என்னை மறந்துடீங்களா?
கார்த்தி: எழுதினது, பலகையா இருந்தா அழிச்சிடலாம். எழுதினது இதயம் ஆச்சே... காலம் தாங்க அழிக்கனும்..காதல் பத்தி, எப்போ, யார் பேசினாலும், எனக்குள்ள, ஒரு சின்ன குரல், உங்க பேர தாங்க சொல்லும். தேர் வில் பி ஆல்வேஸ் அ மீ தட் லவ்ஸ் யூ.. எவர். தப்பா எடுத்துகாதீங்க.
சந்தியா: என்ன அவ்ளோ ஆழமாவா லவ் பன்னீங்க?
கார்த்தி: முழ்கிட்டேன்னா பாத்துகோங்க! "சந்தியா, நீ கிடைக்கலனா, நான் நிற்பது தெரு சந்தியா? நீ இல்லாம எனக்கு புரியல, இது காலையா, சந்தியா(மாலையா?)" அப்படினு புலம்பிட்டு, தண்ணி அடிச்சிட்டு, மறந்திட்டு போக என்னால முடியாதுங்க. என் காதல் உண்மை. அது முடியாம போச்சு. அதற்காக, காதலையோ, என்னோட உணர்வுகளையோ கொச்சைபடுத்தி, என்னையே ஏமாத்திக்க என்னால முடியாது..
சந்தியா: ^^^^^^^^^^ (@@@@, ####, ****** எல்லாம் யூஸ் பன்னிட்டாங்கப்பா!)
கார்த்தி: யெஸ் சந்தியா.ஐ லவ் யூ ஸ்டில். நான் உங்கள மறுபடி கட்டாய படுத்தி உங்க முடிவ கேட்கறேன்னு நினைக்காதீங்க.. பட், ஐ வான்டட் டு டெல் யூ.
சந்தியா: தெரியல கார்த்தி.. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு
கார்த்தி: நான் உங்கள குர்மா குழம்பு வைக்க சொல்லி நீங்க குழம்பினா ஒரு நியாயம். உங்களுக்கு சுடு தண்ணிக்கே ரெசிப்பி வேணும்.. இதுக்கு கூடவா
சந்தியா: நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் கார்த்தி
கார்த்தி: நீங்க இரெண்டு கூட சொல்லலாம்! ஆமா நீங்க ஏதோ சொல்லனும்னு சொல்லி என்னை கூப்பிடீங்களே.. அது இது தானா?
சந்தியா: கொஞ்ச நாளா எனக்கும் உங்கள பத்தி தான் நினைப்பு. உங்களுக்கு தெரியாம உங்களை பத்தி விசாரிச்சேன். என்னை இன்னும் இவ்ளோ ஆழமா காதலிக்கறீங்க என்று உங்க நண்பர்கள் மூலம் தெரிஞ்சது. ஐ திங்க் ஐ டூ லவ் யூ!...
கார்த்தி: ^^^^^^^^^
கார்த்தி: வாவ்! சந்தியா... எனக்கு..
சந்தியா: இருங்க கார்த்தி,, முழுசா கேளுங்க. ஆனா, இது எனக்கு புரியும் முன்னே, எங்க வீட்டுல எனக்கு வேற ஒரு பையனுக்கு நிச்சியம் பன்னிட்டாங்க...
கார்த்தி: என்னது????? என்ன சொல்லறீங்க? யாரு அந்த பையன்..
சந்தியா: இந்தியால வேலை பார்க்கின்றார். பேரு ஹரி.
கார்த்தி போன் எடுக்கின்றார்...
சந்தியா: ஐயோ யாருக்கு போன் பன்ன்னறீங்க??
கார்த்தி: என் நண்பன் அருணுக்கு. அவனுக்கு மட்டும் இந்தியா மாப்பிள்ளைக்கு பன் கிடைக்க போதுன்னு தெரிஞ்சா எவ்ளோ சந்தோஷ படுவான் தெரியுமா?
சந்தியா: இது விளையாடுற நேரமில்ல. சீரியஸா சொல்லுங்கா?
கார்த்தி: இது என்ன ஆஸ்பத்திரியா?
சந்தியா முறைக்க..
கார்த்தி: சரி சரி..இருங்க யோசிக்கிறேன்... யா! எனக்கு தெரியும்! நம்ம கனடா தமிழன் (ஹி ஹி), என்கிட்ட நேத்து ஒரு பேப்பர் கொடுத்து, ஏதாச்சும் சிக்கல் வந்து காதல் கஷ்டத்துல வந்தா, இத திறந்து பாருன்னாரு. இருங்க பாப்போம்...



பிகு: மக்களே, யாருக்கு டேக் என்று தெரிஞ்சு இருக்கும். G3, நியாபகமா டேக்க சீக்கிரம் போடுங்க! ரூல்ஸ் எல்லாம் இதுக்கு முன்ன போட்டவங்க பதிவுல இருக்கு. நான் வேணும்னா எக்ஸ்ட்ரா ஆட் பன்னறேன்
4. இந்த கதை முடிவு, திரு. பில்லு பரணி இடம் கொடுக்க பட வேண்டும் ப்ளீஸ்.

Monday, July 09, 2007

என் எண்ணங்கள்...போட்டோவாய்!

போன முறை போட்ட போட்டோக்கே பல பேரு உதைச்சாங்க. இதுக்கு எத்தணை பேரோ!

CVR, இது யாரு கேட்டு நான் செய்தேன் என்று உங்களுக்கே தெரியும்.


Recenta, இவரும், இயக்கனுர் ஷங்கர பத்தியும் செய்திகள் வந்தன.. இங்கே..

நம்ம தல CVR, போட்டோகிராபி பத்தி பல பதிவு போட்டு தாக்குப்பவர். so அவருக்கு பரிசா...







டிஸ்கி: இது கிராபிக்ஸ் வாரம்.

டிஸ்கி 2: இதுக்கு ஏற்ப ஒரு தத்துவம் போடலாஅனு இருந்தேன்.. அப்புறம், நிறைய பேரு கொல வெறியோட சுத்திகிட்டு இருப்பதால, போடல.

Thursday, July 05, 2007

கனேடிய கனவுகள்....

ர் ல்ராய்......





போட்டோ எடுத்த இடம்: Ottawa
போட்டோ எடுத்த நாள் : Caanda Day (அப்படினு நினைக்கிறேன்.. லீவ் உட்டாங்க) - July 1


பி.கு: CVR அண்ணாத்த, போட்டோ எடுக்க என்னன்னவோ ஐடியா எல்லாம் குடுத்தீங்க.. இத உட்டுடீங்களே.. ஒரு பிகர்...நாம எடுக்கிற போட்டோல இருந்தா...

Tuesday, July 03, 2007

ஜாதிகள் இல்லையடி பாப்பா..

"சாதி இரெண்டொழிய வேறில்லை
இட்டார் பெரியார் இடாதார் சிறியார்
பட்டாங்கில் உள்ள படி.."


இது எல்லாம் நாம குழந்தையிலே படித்திருக்கோம்! ஆனா ஜாதி தான் ஒழிஞ்சாப்ல இல்லை. ஏன்? எதுக்கு இன்னும் இட ஒதுக்கீடு? அதனால இன்னும் பயன் இருக்கா? இதுக்கெல்லாம் முடிவு தான் என்ன? ஏன் ஜாதி அரசியல்? பிராமிண துவேஷம் (முக்கியமா தமிழில்) ஏன்? ஜாதிகள் இன்னுமா இருக்கு? எப்படி ஜாதி வந்துச்சு?இப்படி பல கேள்விகள். அலசுவோம்.

ஜாதிகள் தோன்றியது எப்படி?
பகவத் கீதையின் படி, பிராமிணர்கள் தலையில் இருந்தும், க்ஷ்த்ரியர்கள் தோளில் இருந்தும், வைஷ்யர்கள் வயிற்றில் இருந்தும், க்ஷுத்திரர்கள் காலில் இருந்தும் தோன்றினார்கள் - இப்படி படித்து இருப்பீங்க. கொஞ்சம் அறிவு பூர்வமா யோசித்து பார்த்தா,
ஒரு சமுதாயத்தின் ஆணி வேர்கள் - விவசாயம், துணி நெய்தல் போன்றவை. அடுத்த படியா தேவை - வியாபாரம். இதைஎல்லாம் கட்டி காட்க வேண்டியவை ஆட்பலம். அதிகாரம். அப்புறம் சமூகம் முன்னேற - தேவை - படிப்பாளிகள். இத தான் பகவத் கீதயில சூசகமா சொல்லி இருக்காங்க. இது இந்தியாவில் மட்டும் இல்ல, எல்லா சமூகத்திலும் இருக்கும். இப்ப கூட உண்டு. நம்ம பண்ண தப்பு, இத பிறப்பு வழி உரிமை என்று ஆக்கியது தான்.

அப்ப இந்த நாடார், கௌண்டர், செட்டியார் இவங்க எல்லாம் யாருங்க? இந்த குட்டி பிரிவெல்லாம் முன்னே சொன்ன 4 பெரிய பிரிவில் இருந்து தோன்றியவை. எப்படி ஆங்கிலேயர்களில் - Smiths, xaviers என்று பரம்பரை பெயர் இருந்ததோ.. அதே மாதிரி தான்..

எங்க தப்பு நடக்க ஆரம்பிச்சது?
மனு ஸ்மிரிதி அப்படினு - மஹாபாரத - அர்ஜுனன் வழி - வந்த மன்னன் மனு. இவன் கதை சுவாரசியமானது. கிறிஸ்துவத்தில் நோவா கப்பல் கட்டி காப்பாத்தினது மாதிரி, இவர் இந்திய மக்களை காப்பாத்தியதா கதை. இவர் எழுதியது தான் மனு ஸ்மிரிதி. இதுல "க்ஷூத்திரர்கள் தவறு செய்தால் காதில் ஈயம் ஊற்றனும்" என்பது போல பல கொடுமையான தண்டனைகள் சொல்ல பட்டு உள்ளன.

அவசரப்பட்டு, நம் முன்னோர்களை தவறாக நினைக்கும் முன்.. ஒரு நிமிடம். சுமார் 100 வருஷம் முன் வரை இன்றைய "Land of Freedom"ஆக கருதப்படும் அமெரிக்காவில், கருப்பர்களின் நிலை இது தான். அதனால, நம்ம முன்னோர்கள் பன்ன தவறு நியாயம் ஆயிடுமா? ஆகாது. ஆனா, generational gap நிறைய இருக்கு. அப்ப பார்வை வேற. இப்ப வேற. என் அப்பா காலத்தில், பொண்ணுங்கள தொட்டு எல்லாம் பேச மாட்டாங்க. நான் பேசி இருக்கேன். ஒரு 30 வருஷ இடைவேளையில் சமூக கண்ணோட்டத்தில் எவ்வளவு மாற்றம்.
இத நியாபகம் வைத்து கொள்ளுங்க. Before you judge the past, remember you dont have the perspective.

இன்னமுமா ஜாதி இருக்கு?

ஆமாங்க. பிறப்பு சான்றிதழ் போல, இதையும் வாங்கனும். பள்ளிகூடத்தில , காலேஜ்ல சொல்லனும். இவ்வளவு என்ன? என் நெருங்கிய தோழி. பிராமிண வீடு. ஒரு நாள் பேச்சு வாக்குல், "எங்க அம்மா, வீட்டுக்கு பிற ஜாதி யாரும் வந்தாலும், அவங்க சாப்பிட்ட தட்டெல்லாம் பின்னால எடுத்திட்டு போய் கழுவிட்டு தான் வீட்டுக்குள்ள எடுத்திட்டு வருவாங்க" அப்படினு சொன்னா. ஹி ஹி! அவங்க வீட்டுக்கு நான் அதனாலவே போகவே இல்லை. இத விட மோசமான தீண்டாமை கொடுமை எல்லாம் இன்னும் கிராமங்கல்ல நடந்துட்டு தான் இருக்கு.

இது போக இட ஒதுக்கீடு வேற இருக்கு. அத பத்தி தனியா பேசுவோம்.

பிராமிண துவேஷம் (முக்கியமா தமிழில்) ஏன்?
இருக்காதா பின்ன. இவனுங்கள தான எல்லாம் தூக்கி தூக்கி எழுதி இருக்காங்க. அப்படினும் ஒருபக்க வாதம் இருந்தாலும் மறுக்க முடியாத சில உண்மைகள்.
1. இவங்க யாரும் பெரிசா பணம் சம்பாதிக்க முடியாது அப்போ. நிறைய கட்டுபாடுகள்.
2. இல்லாத ஆரிய-திராவிட Invasion இன்னமும் நம்ம பள்ளில சொல்லி தராங்க.
3. சில பிராமிணர்களின் வீம்பு Superiority complex.
4. இந்தியா இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு பெரும் தடையாக இருந்தது இவங்க தான். (ஏன்? ஒருத்தர மதம் மாற்ற பெரும் தடையாக இருப்பது அந்த மத Priests தான். - common logic - இதுனால தான் வெள்ளைகாரன், அமெரிக்காவில் எல்லா shamansஐயும் முதல்ல கொல்லுவான் - சிகப்பு இந்தியர்கள் கூட சண்டை போடும் போது)

பிரிட்டிஷ் காலத்தில் ஆரம்பித்து, இப்ப உள்ள அரசியல்வாதிகள் வரை எல்லாராலும் துவேஷிக்க படுவதற்கு காரணம் பல. தவறு அவங்கள்ல சில பேர் மேலயும் இருக்கு.

தனி திராவிடம் அப்படினு பிரிட்டிஷ் காரன் நம்ம பிரிக்க சொன்ன கூத்த இன்னமும் நம்பிகிட்டு திரியராங்க நம்ம ஆளுங்க.

என்ன பொருத்த வரை யாரோ சிலர் செய்யும் முட்டாள்தனத்துக்காக, ஒரு சமூகமே அவமானாபடுத்தப்படுவது, நியாயம் அல்ல. தவறான மனிதர்கள் இருக்கலாம். ஆனால் அதை generalise செய்வது...?

ஏன் ஜாதி அரசியல்
தயவு செஞ்சு ஜாதி பாத்து ஓட்டு போடாதீங்க. மனுஷன பாத்து போடுங்க. யாரும் பிடிக்கலன, அதை சொல்லி ஓட்டு போடலாம்.(நாங்க ஓட்டே போட மாட்டோம் அப்படினு யாரோ சொல்லறது கேட்குது)

ஜாதி அரசியல் கட்சி எல்லாம் outlaw செய்வோம்.

இட இதுக்கீடு
நல்ல திட்டம். சின்ன தப்பு. கால வரை இருக்கனும். இல்லனா, மேல இருக்கிறவன் ஏமாத்திகிட்டு போய்ட்டே இருப்பான். கீழ இருக்கிறவன் அம்போ. மாற்றம் வேண்டும். எப்படி? இப்படி
1.இனி பிறப்பு சான்றிதழோட, IT சான்றித்ழ் கொடுக்கனும். இந்த சான்றிதழ் பெற்றவர்கள் வருமானத்துக்கு ஏற்ப. இத பெற, அவங்க வருவாய், மற்றும் சொத்து விபரங்களை வைத்து கணக்கு செய்து ஒரு ரேங்க் கொடுக்கனும்
2. Bc, OBC, FC , SC என்பதை எல்லாம் தூக்கி வீசி விட்டு, இந்த ராங்க் படி தான் இட ஒதுக்கீடு. அதுவும் அடுத்த 20 வருஷத்துக்கு தான்
3. IT கட்ட தவறினா, எல்லாரும் Open catgory தான்
4. ஜாதி சான்றிதழ்களை ஒழிப்போம்
(ஹி ஹி... முதல்வன்ல கேட்ட மாதிரி இருக்கோ :P)


அட என்னப்பா.. இது எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கே... அப்படினு சொல்லறீங்களா.
ஈஸி வழி இருக்கு கேட்கறீங்களா? அப்பவே பாரதி சொல்லி இருக்கார்.
"ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே"