தேவதை யாசகன்..
ஆண் பெண் சமம்
என தான் நானும் சொல்லிவந்தேன்
உனை பார்த்ததும் தான் தெரிந்தது
பெண் ஆணினும் மேல் என்று...
ம்ம் என்னும்
ஒற்றை தலை அசைப்பில்
எனற்கான எத்தனை வாழ்க்கைகளை
படைக்கிறாய் நீ..
மண் மழையில் நினைந்து
வரும் மண்வாசனை
விண் மழையில் நினைந்து
வரும் பலவர்ண வானவில்
நீ மழையில் நினைகையில்
மட்டும்
ஏனடி எனக்கு காய்ச்சல்..
நீ என்ன
மின்னலில் இறங்கிய தேவதையா?
உன் ஓரச்சிரிப்பில்
என் எல்லா எண்ணங்களையும்
எரித்து கருக்கி விட்டு
நீ மட்டும் நிற்கின்றாய்
தனியாய் முழுதாய்..
எத்தணை கூட்டத்திலும்
உனை கண்டதும்
தாயை கண்ட குழந்தையாய்
அதிவேக துடிப்புகளை
தொடங்குகின்றது என் இதயம்
காற்றின் மீது பொறாமை வருமா?
பறக்கும் உன் முடிக்கற்றை
இறக்கும் என் இதயம்..
எனற்கான உன் சிரிப்பையும்
உனற்கான என் உலகத்தையும்
தொலைத்து வந்தேன்
உனற்கான உன் சிரிப்பிற்க்கு..
முழுமதி ஆகும் முன்னமே
தேய்பிறை ஆவதேன்
நமக்கான எல்லாமும்
நட்சத்திரத்தை தொட முயன்ற
மேகமானது என் கனவுகள்
காற்றோடு கரைவது
மேகம் மட்டும் இல்லை
காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்...
23 மறுமொழிகள்:
கட்சீல வெச்ச பாரு ஒரு நச்!!
//
காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்...///
சூப்பரு!!
;-D
//எனற்கான உன் சிரிப்பையும்
உனற்கான என் உலகத்தையும்
தொலைத்து வந்தேன்
உனற்கான உன் சிரிப்பிற்க்கு..
Romba feel panreenga nu mattum Puriyuthu .. Aana antha feelings than enna nu Puriya mattenguthu ..
Ennakku mattum than puriya mattengutha .. illa Ellarukkum appadi thaana
ஹாய் ட்ரீம்ஸ்,
//காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்...//
அட, அனுபவம் இந்த அளவுக்கு பேசுதா....
ஹாய்,
//உனை பார்த்ததும் தான் தெரிந்தது
பெண் ஆணினும் மேல் என்று...//
ஓஹோ... இதெல்லாம் வேறயா?
Awesome asusual Dreamzz:)
"உன் ஓரச்சிரிப்பில்
என் எல்லா எண்ணங்களையும்
எரித்து கருக்கி விட்டு
நீ மட்டும் நிற்கின்றாய்
தனியாய் முழுதாய்.."
"எனற்கான உன் சிரிப்பையும்
உனற்கான என் உலகத்தையும்
தொலைத்து வந்தேன்
உனற்கான உன் சிரிப்பிற்க்கு.."
****காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்...****
எப்பவும் போலவே கவிதை அருமை
ஒரு சின்ன suggestion
கவிதைக்கு ஏத்த படம்(photo ) போட்டால் இன்னும் அருமையாகிப் போகும்.
//பெண் ஆணினும் மேல் என்று//
அப்போ பீமேல் இல்லையா அவங்க? :P
சரி சரி கல்லை கீழே போடுங்க..
//நீ மழையில் நினைகையில்
மட்டும்
ஏனடி எனக்கு காய்ச்சல்..//
அடடா, நீங்க அவங்க காய்ச்சலுக்கு மருந்தா இருப்பீங்க'னு பார்த்தா இப்படி சொல்லிட்டீங்க... ஒகே ஒகே.... ஆமா, ஒருவேளை அவங்க தண்ணில குதிச்சா, நீங்க என்னவா இருப்பீங்க?
//நீ என்ன
மின்னலில் இறங்கிய தேவதையா?
உன் ஓரச்சிரிப்பில்
என் எல்லா எண்ணங்களையும்
எரித்து கருக்கி விட்டு
நீ மட்டும் நிற்கின்றாய்
தனியாய் முழுதாய்..//
எனக்கு என்னமோ ஹை வாட்ஸ் டிரான்ஸ்பார்மர் மாதிரி தான் தெரியுது..
//எத்தணை கூட்டத்திலும்
உனை கண்டதும்//
ஏன் அவ்வளவு அடிக்கிற கலர்'ல டிரஸ் போட்டு இருபாங்களா?
கட் ஸூ வாங்குங்கோ
கட் ஸூ வாங்குங்கோ
//காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்... //
ஒருதலையா காதல் பண்ணுனா இப்படி தான் இருக்கும்..புலம்ப விட்டுறும்.. புரிய மாட்டேங்குது நிறைய பேருக்கு..
டீரிம்ஸ் உங்க கதாநாயகனை எழுப்பிவிடுங்க.........
தமிழ் சினிமா பாருங்கப்பா
தமழி சினிமா எங்கப்பா?
13 போட்டாச்சி.....
/மண் மழையில் நினைந்து
வரும் மண்வாசனை
விண் மழையில் நினைந்து
வரும் பலவர்ண வானவில்
நீ மழையில் நினைகையில்
மட்டும்
ஏனடி எனக்கு காய்ச்சல்../
நான் ரசித்த வரிகள் இருந்தாலும் மொத்தம் அருமை
Nanna erukku dreamzz -Anal Morale of the story...Edo konjam purikira madiri erukku.Enakku purinjadu correct tana nu ne than sollanum.
KCS
urugaraangayya urugaraanga :))
Kavithai kalakkals.. eppavum pola asathiteenga :)
Devadhaigalukku panjam vandhuducha enna? oorvalathula kammiyaana makkalsa irukaanga?
மக்களே, கொஞ்சம் ஆணி அதுகம், so pls forgive not writing back for every comment, and be assured i do read them all :)
Thanks for all who enjoyed the poem :)
Kadaisi lines sema touching nga Dreamzzz
superb Dreamz ! kavidhai na kekanuma adhuvum pengal pathina kavidhai na ungala adikka aale illai.
ada!ada!adadaa! kavidhaiyai sollalai.Nijamavae photo(the first one is cute) nalla iruku nu solla vandhaen.JK. Kavidhaiyum super.:D
Romba naalaikkapram indha pakkam vandhen..
Kavidhai.. supero super!! Keep it up!
//
காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்...///
experience pesudhu polarukku!!!
pull arikuthupa.... chance'e illai...
Nayan boto potu irukeenga... ippadi natamaikku dimiki kodukureengale :)
கலக்கிட்டீங்க ட்ரீம்ஸ்... நீண்ட நாட்களுக்குப்பின் திரும்பவும் தமிழ் பதிவுலகம் பக்கம் திரும்பியபின் படித்த முதல் கவிதை...மிகவும் ரசித்தேன்... எப்படி இவ்வளவு எளிதா எழுதுறீங்க?? :)))
Post a Comment