கவிதையே சொல்லவா...
மு.கு: இந்த முறை நிஜமாவே எனக்கும் அவளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! சும்மா சின்னதா ஒரு கதையும் கவிதையும் கலந்து! ("கலந்ததால ரெண்டுமே இல்லாம போச்சு!" அப்படின்னு எல்லாம் சொல்ல கூடாது!)
அவள்: உன் வருங்கால மனைவி கிட்ட இருந்து என்னடா எதிர்பாக்கின்ற?
அவன்: (இப்படி கேட்டதுக்கு இவ feel பண்ணனும்.. எடுத்து விடுடா!)
அழகில் வடித்தெடுத்த தேவதை தேவை இல்லை
காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம் போதும்
உயிரை உருக்கும் தமிழ் பேச தேவை இல்லை
மனதை மருகவைக்கும் உரையாடல் போதும்
இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..
ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..
இதில் எதுவுமே தேவை இல்லையடி
என்னை நீயும் ..உன்னை நானும்
முழுமுதலாய் காதல் செய்வதாய் ஆனால்..
அவள்: அழக இருக்க வேணாமா? அழகா இல்லன பசங்க sight கூட அடிக்க மாட்டீங்க! எங்கன காதலிக்க போறீங்க?
அவன்: காதலுக்கு மனசுக்கு பிடிக்கணும்! கண்ணுக்கு இல்ல! உண்மை தான், அழகு பாப்போம், ஆனா அது just oru first impression. அதுக்கு மேல எத்தனயோ இருக்கு!
அவள்: like?
அவன்: you!
அவள்: ஆஹா! எனக்கேவா!
அவள்: அப்பறம் தமிழ்ல கவிதை எல்லாம் எழுதற! தமிழ் பேசும் பொண்ணு வேணாமா?
அவன்: மொழிகள் முக்கியமில்லை! மனதின் புரிதல்கள் அவசியம்.. மனசே புரிஞ்சதுனா கவிதை எல்லாம் எதுக்கு சொல்லு!
அவள்: அப்புறம் குழந்தை தேவை இல்லையா? தாய் வேணாம்னு சொன்ன!
அவன்: அப்படி சொல்லல! எனக்கு ஏற்கனவே ஒரு தாய் இருக்காள். இன்னும் ஒரு தாய் தேவை இல்லை! ஆனால் என் தாய்க்கு மகள் வேணும்னு சொல்ல வந்தேன்..
அவள்: அப்புறம் அது என்ன முழுமுதல் காதல்? கேள்வி பட்டது இல்லையே..
அவன்: எந்த ஒரு மனிதனும் குறைகள் இல்லாம இல்லை. அந்த குறைகளோட சேர்த்து நேசிப்பதாக இருக்கணும் காதல். நிறைகளை மட்டும் நம்பி வர கூடாது! அப்புறம் ராமர் மாதிரி மக்களுக்காக மனைவியை எரித்தால் அதுல முதல் காதல் மக்கள்! மனைவி இல்லை. அது மாதிரி இல்லாம வாழ்வின் முதல் காதலா இருக்கணும்! அது தான் மொத்தமா - முழுமுதல் காதல்!
அவளும் அவனுமாய் பேசி அவர்களாய் பிரிந்து சென்றார்கள்..வீட்டுக்கு.
பி.கு: அட பல நாள் கழிச்சு சந்தோஷமான முடிவா? சில பிரிவில் கூட சந்தோஷம் இருக்குங்க!
39 மறுமொழிகள்:
:)))
புதிய முறை அருமை.... கவிதை... விளக்கம் கதையில்...
எப்பவும் போல கவிதை சூப்பரு!!
:-)
///இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..////
கவிதையில் என்னை கவர்ந்த வரிகள்!
:-)
me third !
send me a bird !
ada chumma rhymingkaga bird nu adichen, neenga patukku paravai curry edhanu anupidadheenga.
sooda oru hot&sour soup anuppi veinga.
-K mami
உயிரை உருக்கும் தமிழ் பேச தேவை இல்லை
மனதை மருகவைக்கும் உரையாடல் போதும்
adhu enna bashaingo ??
---------------------
ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..
idhu super
--------------------
usualla unga kavidhai siladhu puriyama muzhipen.
but this time, superaa kavidhai and story mix panni kalakiteenga.
அழகில் வடித்தெடுத்த தேவதை தேவை இல்லை
காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம் போதும்
mugadhatchenyam na enna ????
\\வாழ்வின் முதல் காதலா இருக்கணும்! அது தான் மொத்தமா - முழுமுதல் காதல்!\\
முழுமுதல் காதல் -> விளக்கம் அருமை!
\\அவள்: அழக இருக்க வேணாமா? அழகா இல்லன பசங்க sight கூட அடிக்க மாட்டீங்க! எங்கன காதலிக்க போறீங்க?
அவன்: காதலுக்கு மனசுக்கு பிடிக்கணும்! கண்ணுக்கு இல்ல! உண்மை தான், அழகு பாப்போம், ஆனா அது just oru first impression.\\
First Impression is the best impression!!!
\\உயிரை உருக்கும் தமிழ் பேச தேவை இல்லை
மனதை மருகவைக்கும் உரையாடல் போதும்\\
தாய் மொழியில் பேசினாலே ஒத்து போகாமல் சண்டை வருது, இதுல வேற மொழி பேசினா??????
\\ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..\\
நல்ல எதிர்பார்ப்பு !
\\அழகில் வடித்தெடுத்த தேவதை தேவை இல்லை
காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம் போதும்\\
காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம்னா......குனிந்த தலை நிமிராமல், பவ்யமான பெண்ணா??
புரியலியே!!
@ji
//
புதிய முறை அருமை.... கவிதை... விளக்கம் கதையில்...//
நன்றி ஜி!
@CVR
//எப்பவும் போல கவிதை சூப்பரு!!//
:)thanks தல!
//கவிதையில் என்னை கவர்ந்த வரிகள்!
:-)//
எனதும்!
@kittu maami
//ada chumma rhymingkaga bird nu adichen, neenga patukku paravai curry edhanu anupidadheenga.
sooda oru hot&sour soup anuppi veinga.//
நீங்க சொல்லி கேட்காம இருப்பேனா! இதோ !
@kittu
//adhu enna bashaingo ??//
lol! aduthavangalukku puriyum entha baashaiyum!
@kittu
//usualla unga kavidhai siladhu puriyama muzhipen.
but this time, superaa kavidhai and story mix panni kalakiteenga.//
adhuku thaana kadhaiyaa vilakkam!
@kittu, Divya
//காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம்னா......//
காலை எழுந்ததும் அவள் முகம் பார்க்கணும் போல இருக்கணும்! எல்லார்க்கும் அது மாறி முகம் அமையாது! அது தான் முக தாட்சண்யம் .. it is different from traditional beauty.. this includes personality... aura..love etc; ok a?
and Divya...
தலை குனிந்து எல்லாம் வர வேண்டாம்! நம்ம தலைல குட்டாம இருந்தா போதும்!
@Divya
First Impression is the best impression!!!//
Again, maybe not. At any point in time, your beauty buys you only 15 mts of time! after that you are on ur wits and personality and attitude!
@Divya
//தாய் மொழியில் பேசினாலே ஒத்து போகாமல் சண்டை வருது, இதுல வேற மொழி பேசினா??????//
lol! sandai varalana thaan prichanai! only if you care for someone, ithellam varum! illana poda/pod nu poite irupaanga!
ofcourse, apparama samadhaanam ayidanum. இதற்கு தான் தமிழ்ல அழகான வார்த்தை இருக்கே .. ஊடல்
இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..
ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..
-Excellent!!.I relly like these lines.
Eppadi eppadi ellam thonudu?!!!!!
super.
//அட பல நாள் கழிச்சு சந்தோஷமான முடிவா? சில பிரிவில் கூட சந்தோஷம் இருக்குங்க!
//
எங்களுக்கும் தான்,
எல்லா வரிகளுமே நல்லா இருக்கு. அது முக தீட்சண்யமா இருக்கலாம் தானே?
அது என்ன முகதாட்சண்யம்?
இப்ப கிட்டு மாமா மாதிரி ரங்குகள் வீட்லயும் ஓடியாடி வேலை செஞ்சு களைப்பா இருக்க, அப்ப கிட்டு மாமி மாதிரி தங்கமணி முகத்துல வர கருணைய சொல்றீங்களா? :p
// அழகில் வடித்தெடுத்த தேவதை தேவை இல்லை
காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம் போதும்
உயிரை உருக்கும் தமிழ் பேச தேவை இல்லை
மனதை மருகவைக்கும் உரையாடல் போதும்
இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..
ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..
இதில் எதுவுமே தேவை இல்லையடி
என்னை நீயும் ..உன்னை நானும்
முழுமுதலாய் காதல் செய்வதாய் ஆனால்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
சூப்பர்ர்ர்ர்ர்ரு....மாமே...நம்ம கட்சி.ஹிஹி...
// Divya said...
தாய் மொழியில் பேசினாலே ஒத்து போகாமல் சண்டை வருது, இதுல வேற மொழி பேசினா??????//
சண்டை சரியாகிடுமுங்க்கோ...
என்னோட நண்பர் ,கூட பணிபுரிந்த வடநாட்டு பெண்ணையே கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு..பாஷை அம்புட்டு புரியாததால ..ரெண்டு பேரும் ஆங்கிலத்துலதேன் இப்பகூட பேசிக்கிறாய்ங்க.. அவிங்களுக்குள்ல ஒற்றுமையா இருக்காங்க..ஒருவேளை இவிருக்கு கோவம் வந்தாக்கா.. தமிழ்ல திட்டுவாரு.. அவிங்களுக்கு கோவம் வந்தாக்கா குஜராத்தில திட்டுவாய்ங்க.. திட்டி முடிச்சதும் ரெண்டு பேரும் சிரிச்சிடுவாய்ங்க..அவ்ளோதான்..
// ambi said...
இப்ப கிட்டு மாமா மாதிரி ரங்குகள் வீட்லயும் ஓடியாடி வேலை செஞ்சு களைப்பா இருக்க, அப்ப கிட்டு மாமி மாதிரி தங்கமணி முகத்துல வர கருணைய சொல்றீங்களா? :p //
அம்பியண்ணாவ்வ்வ்... அனுபவம் பேசுதோ?..ஹிஹி:D
// வேதா said...
அதானே தாட்சண்யம் என்றால் கருணை அப்டிங்கற பொருளில் வரும்.//
கவியரசியின் கருத்து சரின்னுதேன் தோனுது...:P
ராசா...எப்படியா இப்படி எல்லாம் :)
பொழுதன்னைக்கும் யோசிக்கிட்டே இருப்பீங்களா?
Same Wave Length than :)
சரி வர போற எப்படி இருக்கனும் என்று நீங்க நினைக்குறது இருக்கட்டும். அவங்க எப்படி நினைக்குறாங்க என்று தெரியுமா? தெரிஞ்சுக்க இங்க வாங்க
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..
So true Dreamz.. Many lack this these days.
//அப்பறம் தமிழ்ல கவிதை எல்லாம் எழுதற! தமிழ் பேசும் பொண்ணு வேணாமா?
//
Nee avanae dhaan :P
indha posta pathi commens preview paathappavae sollitadhaala inga repeatellam poda mudiyaadhu :P
Eppadiyum modhal comment naan dhaan sonnen.. so soodana tea enakku dhaan indha vaati :P
"இதில் எதுவுமே தேவை இல்லையடி
என்னை நீயும் ..உன்னை நானும்
முழுமுதலாய் காதல் செய்வதாய் ...."
kalakkal lines
nice explanation
Kavidhai super...
Vera photo iruke ajith'odadhu :P idha vida nalladha... Side'la edhuku andha attu figure? :P
en thaaiku magal dhaan venum..enaku oru thai irukaanga..arumai arumai! :)
Dreamzz,
Unga kitta dhan url change sonnen. How come u landed up again with old blog.
I know its snowing ther, but still its visible right. Profile check pannitu vanga.
Excellent Dreams !!
ennaku piditha varikal...
இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..
ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்...
Explanation superb :)
//
இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..
//
simple and superb
Post a Comment