Monday, December 10, 2007

இன்னமொரு காதலி கவிதை!

மு.கு: போன கவிதைல சோகம் இல்லைன்னு கவலை பட்ட நண்பர்களுக்கு,

மெலிதான சிரிப்புடன்
மெதுவாக வெட்டுகிறாள்..
நீங்கியதும்
உதட்டில் சிரிப்பு
மனதில் வலி..


என்னை பார்த்து
சிரிப்பது புரிந்தது..
எகைப்பா
நகைப்பா
நீ தான் சொல்ல வேண்டும்..


அணு அணுவாய்
கொன்று விட்டு
நாளை வருகின்றேன்
என்கிறாய்..
மீண்டும் கொல்லவா?
மீட்டு செல்லவா?


தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..


சுட்டெரித்த பூக்களின்
எண்ணிக்கை தெரியுமா
சூரியனுக்கு?

காதலி
காத்திருக்கும் வலி..



பி.கு: இவங்க பதிவு தான் இந்த கவிதைக்கு Inspiration. மிக மிக ஆழமான கவிதைகள். இவங்க கவிதை பத்தி இந்த வார இறுதியில் ஒரு பதிவு காத்திருக்கு!

27 மறுமொழிகள்:

Divya said...

me the firstuuuuu

Divya said...

கவிதை ரொம்ப சோகமாயிருக்கு .......ஏன் அப்படி?
ஆனா நல்லா இருக்கு கவிதை!
பாராட்டுக்கள்!

Divya said...

\\என்னை பார்த்து
சிரிப்பது புரிந்தது..
எகைப்பா
நகைப்பா
நீ தான் சொல்ல வேண்டும்..\

உங்களை பார்த்து சிரிக்கிறதே பெரிய விஷயம்,
அது நகைப்பாயிருந்தா என்ன?
எகைப்பாயிருந்தா என்ன?

ஒரு பொண்ணு நம்மளையும் பார்த்து
சிரிக்கிறாளேன்னு சந்தோஷப்படுறத விட்டுட்டு, இதென்ன கேள்வி????

Divya said...

\\தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..\\

இந்த வரிகள் மிகவும் அருமை, பாராட்டுக்கள் Dreamzz!!

Divya said...

நித்தியாவின் கவிதைகளுக்கு லிங்க் கொடுத்ததிற்கு நன்றி,
நித்தியாவின் வலைத்தளத்தில்,அவரது குரலில் கவிதைகள் இன்னும் அழகாக இருக்கிறது.

G3 said...

//போன கவிதைல சோகம் இல்லைன்னு கவலை பட்ட நண்பர்களுக்கு//

indha kodumai veraya??? :((((

நவீன் ப்ரகாஷ் said...

\\தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..\\

நிதர்சனமான உண்மை :)))

கவிதைகள் அருமை
ட்ரீம்ஸ் :))))

தினேஷ் said...

உங்கள் கவிதைகள் நன்றாக மிகவும் அழகாக இருக்கின்றன, நடிகர் நடிகைளின் படங்களை போட்டு அழகுப்படுத்த தேவையில்லை தவிர்க்கலாம்...

வாழ்த்துக்கள்!

தினேஷ்

ambi said...

//எகைப்பா//

தமிழில் இப்படி ஒரு வரி உண்டா?
யாரேனும் இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.

வரிகள் எல்லாம் ரொம்ப ஷார்ப்பா இருக்கு. kudos! :)

CVR said...

//போன கவிதைல சோகம் இல்லைன்னு கவலை பட்ட நண்பர்களுக்கு,
////

இது மாதிரி எல்லாம் கூட கவலை படறாங்களா இப்போ எல்லாம்???
ஏதோ கவுஜை எழுதினேன்,போட்டேன்னு சொல்லேன்,எதுக்கு நண்பர்களை குறை சொல்லுற?? :-P


//தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..

சுட்டெரித்த பூக்களின்
எண்ணிக்கை தெரியுமா
சூரியனுக்கு?

காதலி
காத்திருக்கும் வலி..////

எப்படி???
எப்படி இப்படியெல்லாம்????

பின்ற போ!!!
கலக்கல்ஸ் ஆஃப் கானடா!! B-)

My days(Gops) said...

13 la starting [:D]

Dreamzz said...

@Divya
//me the firstuuuuu//
thanks! inthaanga tea!

//கவிதை ரொம்ப சோகமாயிருக்கு .......ஏன் அப்படி?//

பொதுவா சோக கவிதைகள் அப்படி இருப்பதா ஒரு பேச்சு! நீங்க என்ன நினைகறீங்க? :D

//ஒரு பொண்ணு நம்மளையும் பார்த்து
சிரிக்கிறாளேன்னு சந்தோஷப்படுறத விட்டுட்டு, இதென்ன கேள்வி????//
கண்ணாடி முன்ன போய் நின்னு தேவையாட இது உனக்கு னு கேட்கிறேன்! ஏன் இந்த கோல வெறி?

//நித்தியாவின் கவிதைகளுக்கு லிங்க் கொடுத்ததிற்கு நன்றி,
நித்தியாவின் வலைத்தளத்தில்,அவரது குரலில் கவிதைகள் இன்னும் அழகாக இருக்கிறது.//
கவிதைகள் அங்க மிக அருமை..

Dreamzz said...

@G3
//indha kodumai veraya??? :((((//
ippadi ellam ulkuthu irukku koodathu katchikulla!

My days(Gops) said...

//சுட்டெரித்த பூக்களின்
எண்ணிக்கை தெரியுமா
சூரியனுக்கு?

காதலி
காத்திருக்கும் வலி..//

touching touching :(

My days(Gops) said...

@ambi :- ////எகைப்பா//

தமிழில் இப்படி ஒரு வரி உண்டா? //

oru velai egathaaalamah irukumoh?

Dreamzz said...

@Vedha
//அருமையான வார்த்தை ப்ரயோகம் :)//
நன்றி ஹை!

//எகைப்பு? எள்ளல் என்று சொல்ல வரியா? ஆனா அந்த வார்த்தை சரியான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.//
அதே அதே! புரிஞ்சிடுசுல! அது போதும்! இருந்தாலும் இதற்கு வேறு வார்த்தை தோன்றினால் சொல்லுங்க!

Dreamzz said...

@நவீன் பிரகாஷ்
//கவிதைகள் அருமை
ட்ரீம்ஸ் :)))//
Thanks Naveen!

Priya said...

Is it too much depression in winter...

Beautifully writen.

நாகை சிவா said...

படங்கள் இல்லையா?

//தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..//

ஏதோக்கோ பதில் சொல்வது போல் இருந்தாலும் சூப்பர் பஞ்ச் இது தான்.

காதலி - வலி - நச்னு இருக்கு

Rasiga said...

\\அணு அணுவாய்
கொன்று விட்டு
நாளை வருகின்றேன்
என்கிறாய்..
மீண்டும் கொல்லவா?
மீட்டு செல்லவா?\\

காதலுக்காக காதலியின் கையினால் எத்தனை முறை வேண்டுமானாலும் கொல்லப்படலாம்.

\\காதலி
காத்திருக்கும் வலி..\

அது ஒரு சுகமான வலி.

அழகிற்கு அழகு சேர்க்க தேவையில்லை, அதுபோல உங்கள் கவிதைகளுக்கு படங்களும் அவசியமில்லை.
படங்கள் இல்லாத உங்கள் கவிதை நல்லாயிருக்கு.

Itz me!!! said...

//தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்//

romba nallaa irundudunga..enjoyed a lot...I really hope these are not your personal experiences :-)

ரசிகன் said...

மாம்ஸ் என்னோட பின்னூட்டங்கள் எங்க?

ரசிகன் said...

// நாளை வருகின்றேன்
என்கிறாய்..
மீண்டும் கொல்லவா?
மீட்டு செல்லவா?///
சூப்பர்...

ரசிகன் said...

// தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..//
இந்த வரிகளை
ரொம்பவே ரசிச்சேன்.
யதார்த்தமும் கூட..
அருமையா இருக்கு மாம்ஸ்..
ஹாட்ஸ் ஆஃப்..

யாத்ரீகன் said...

>>>> தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன் <<<

அட்டகாசம் !!!!!

Sudha said...

You have been tagged by me .(new year resolutions) .Check for details.

LakshmanaRaja said...

//தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..
//
மிக அழகான எதார்தமான வரிகள்.வாழ்த்துக்கள்