Monday, December 17, 2007

மயிலிறகு காயங்கள்..



என்னை மட்டும் தான்
கொன்று செல்வதாய்
நினைத்து இருந்தேன்..
ஆனால்
என் கோபங்களையும்
சேர்த்து கொல்கின்றாய் நீ..

உன் பிடிவாதங்கள்
எல்லாம்
பிடித்து போனபின்
எங்கே செல்வேன் நான்
உன்னாலான காயங்கள் சொல்ல..

உன்னுடனான என் கோபங்கள்
இன்று அவள் வரட்டும்..
என காத்திருக்க...
உன் குரல் கேட்டதும்
எங்கே சென்று விடுகின்றன
என்னிடம் சொல்லாமல்?



நான் வெண்மேகம்
நீ நீர்த்துளி..
நீ சேர்வதில் கனமாகிறேன்..
நீ பிரிவதில் கலைந்து போகின்றேன்..

ஒரு நிமிடம்
என நீ மறைந்து போகின்றாய்..
நீ இல்லாத ஒரு முழு நிமிடத்தில்
துடிக்க மறுக்கும்
என் இதயத்தின்
வலிகள் புரியுமா உனக்கு?






எனற்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி..
சிரிக்கின்றாய்..
உனற்கும் பிடித்திருக்கா?
இல்லை
பைத்தியம் என எண்ணியா?

உனற்கான காத்திருப்புகள்
காயங்கள் செய்யும்
என நினைத்து இருந்தேன்..
காதலிக்க சொல்லும்
என எவரும் சொல்லவில்லையே..




இடிகள் இன்றி
மழைகள் இல்லை..
ஊடல் இன்றி
உறவு ஏது?

உன் வார்த்தை வருடல்களில்
ஏற்படும்
மயிலிறகு காயங்களில்
தினமும்
செத்து எழுந்திடும்
ஓர் வரம் வேண்டும்..

30 மறுமொழிகள்:

Dreamzz said...

@வேதா
அடக்கம் அமரருள் உய்க்கும்..
எனக்கு மனிதர்களோட வாழ்ந்தால் போதுமாக்கும்!

Dreamzz said...

@Veda
மனிதர்களில் தேவதைகள் உண்டுல.. :D

Dreamzz said...

@Veda
//இப்டியும் ஒரு வரமா?..
நீ செத்து விழுந்திடும்
ஓவ்வொரு வினாடியும்
அவளுக்கு சாபமல்லவா?
//
இல்லையே... :P

Dreamzz said...

@Veda
//தெளிவா தான் இருக்க!!!//
இல்லனா தாக்கு பிடிக்க முடியுமா..

Dreamzz said...

@வேதா
//இல்லைன்னு உனக்கு எப்டி தெரியும்?!! :D//
அதெல்லாம் ரகசியம்... சொல்லமாட்டேன்ல ...

ஆமா, உண்டுன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?

Dreamzz said...

@Veda
More Over
அது செத்து விழும் வரம் இல்லை.. செத்து எழும் வரம் :P

Priya said...

Nice words Dreamzz. All I can say, in winter you can write more romanctic poems:)

CVR said...

aniyaathukku mutthi poyirucchu pola!! :-S

ரசிகன் said...

// ஒரு நிமிடம்
என நீ மறைந்து போகின்றாய்..
நீ இல்லாத ஒரு முழு நிமிடத்தில்
துடிக்க மறுக்கும்
என் இதயத்தின்
வலிகள் புரியுமா உனக்கு?//


ரொம்பவே அருமையா இருக்கு..

ரசிகன் said...

சைடுல (?) படங்களும் ரொம்பவே சூப்பரு..(ஹிஹி..)

நாகை சிவா said...

//என்னை மட்டும் தான்
கொன்று செல்வதாய்
நினைத்து இருந்தேன்..
ஆனால்
என் கோபங்களையும்
சேர்த்து கொல்கின்றாய் நீ..//

எங்களை என்று பன்மையில் போட்டு இருக்கலாம்.... :)

//தினமும்
செத்து எழுந்திடும்
ஓர் வரம் வேண்டும்..//

இது ரொம்ப ஆபத்தான விளையாட்ட இருக்கே...

k4karthik said...

ராசா... ஒரு போஸ்ட்க்கு ஒரு பேராகிராப் போதும்பா.... ஓவர் டோஸா இருக்கு எனக்கு..

ambi said...

//உனற்கும் பிடித்திருக்கா?
//

உனக்கும் தானே கேள்விபட்ருக்கேன். சரி இந்த கவலையேல்லாம் நமக்கெதுக்கு? வழக்கம் போல கவிதைகள் எல்லாம் சூப்பரோ சூப்பர். :))

சத்யமா நான் நீ எழுதிய வரிகளை தான் சொன்னேன். :p

ஹிஹி, அப்படியே, குட்டி படங்களின் கீழே பெயரும் போட்டா பக்த கேடிகள் (அவங்க அவங்க)கன்னத்துல போட்டுப்பாங்க. :)

குட்டி படங்கள்னு நான் சொன்னது நீ போட்டிருக்ற சின்ன சின்ன படங்களை தான்! :))

ambi said...

@dreamz, veda, பிளாக் எல்லாம் இப்ப யாகூ சாட், ஜிமெயில் சாட் ரேஞ்சுக்கு ஆக்கிடீங்க போல. :p

dubukudisciple said...

supera iruku kavidaigal

dubukudisciple said...

@dreamz, veda, பிளாக் எல்லாம் இப்ப யாகூ சாட், ஜிமெயில் சாட் ரேஞ்சுக்கு ஆக்கிடீங்க போல. :p//
aakarthu enna.. G3 akkakiternthu idu kooda kathukalena eppadi

G3 said...

//@வேதா
அடக்கம் அமரருள் உய்க்கும்..
எனக்கு மனிதர்களோட வாழ்ந்தால் போதுமாக்கும்!//

LOL :))) Naan veda kettadha dhaan repeatu podalaamnu nenachen.. un reply paathadhum gapchip :))

G3 said...

//உன்னுடனான என் கோபங்கள்
இன்று அவள் வரட்டும்..
என காத்திருக்க...
உன் குரல் கேட்டதும்
எங்கே சென்று விடுகின்றன
என்னிடம் சொல்லாமல்?//

:))) Ivlo peel panni ezhudhittu aanalum karpanainnu eppadi raasa unnala puzhuga mudiyudhu???

G3 said...

//G3 akkakiternthu idu kooda kathukalena eppadi//

@DD, avvvvvvvvv.. idhu veraya???? Nalla vishayam thaan kathukareenga :D

G3 said...

rounda oru 25 pottukaren :D

Sudha said...

As usual good.Meera jasmine photo is really a good combination:D

Itz me!!! said...

romba nalaa irukunga unga kavidhai..the flow is really good!!!!

Rasiga said...

\\உன்னுடனான என் கோபங்கள்
இன்று அவள் வரட்டும்..
என காத்திருக்க...
உன் குரல் கேட்டதும்
எங்கே சென்று விடுகின்றன
என்னிடம் சொல்லாமல்?\\

காதலியின் குரலுக்கு கோபம் கூட கரைந்து விட்டதோ??


\\நான் வெண்மேகம்
நீ நீர்த்துளி..
நீ சேர்வதில் கனமாகிறேன்..
நீ பிரிவதில் கலைந்து போகின்றேன்..\\

அழகானதொரு ஒப்பீடு! அருமை.

\\உனற்கான காத்திருப்புகள்
காயங்கள் செய்யும்
என நினைத்து இருந்தேன்..
காதலிக்க சொல்லும்
என எவரும் சொல்லவில்லையே..\\

பிரிவும், காத்திருப்பும் தான் 'காதலை' உணர்த்தும் முதல் படி.

மீண்டும் உங்கள் தேவதைகளின் படங்களோடு, அழகானதொரு கவிதை.

சிறில் அலெக்ஸ் said...

கவிதை போட்டி அறிவிப்பு

புகுந்து ஆட அழைக்கிறேன்.

MyFriend said...

//வேதா said...
நீ அடங்கவே மாட்டியா!!! :D
///

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்.... :-))))

Marutham said...

//வேதா said...

நீ அடங்கவே மாட்டியா!!! :D//

LOL :P

Marutham said...

Naan konjam late'nu nenachen ahdukula ithana posts :P AWWWWW

Btw oru post padangal ilama iruku :)

hmmm

Marutham said...

//என்னை மட்டும் தான்
கொன்று செல்வதாய்
நினைத்து இருந்தேன்..
ஆனால்
என் கோபங்களையும்
சேர்த்து கொல்கின்றாய் நீ..//

Bayangaramaana START :P

Divya said...

அழகாயிருக்குதுங்க கவிதை!

\\என்னை மட்டும் தான்
கொன்று செல்வதாய்
நினைத்து இருந்தேன்..
ஆனால்
என் கோபங்களையும்
சேர்த்து கொல்கின்றாய் நீ..\\

பெரிய கொலைகாரியா இருப்பா போலிருக்கு உங்க தேவதை!

\\ஒரு நிமிடம்
என நீ மறைந்து போகின்றாய்..
நீ இல்லாத ஒரு முழு நிமிடத்தில்
துடிக்க மறுக்கும்
என் இதயத்தின்
வலிகள் புரியுமா உனக்கு?\

ஒரு நிமிஷம் இதய துடிப்பு நின்னா ஒன்னும் ஆகாது, கவலை படாதீங்க டிரீம்ஸ்!

\\உன் வார்த்தை வருடல்களில்
ஏற்படும்
மயிலிறகு காயங்களில்
தினமும்
செத்து எழுந்திடும்
ஓர் வரம் வேண்டும்..\\

இப்படியெல்லாமா வரம் கேட்ப்பாங்க?? எல்லாம் வயசு கோளாறு, வெறென்ன சொல்றது!
ஓவர் ஃபீலிங்ஸ் நல்லதில்ல டிரீம்ஸ்!!

Anonymous said...

உனக்கு எப்போப்பா கல்யாணம்? கல்யாணம் ஆகலைன்னு நானே நினைச்சுட்டு தான் கேட்கிறேன்...ஆனப்புறமும் இதே மாதிரி கவிதைகளை எதிர்பார்க்கலாமா?
அருணா