பூக்களில் உறங்கும் மௌனங்கள்
அதிகம் பேசுவதில்லை மலர்கள்..
அதில் மௌனங்கள் கூட
உறங்கித்தான் கிடக்கும்..
என்றேனும் ஒரு நாள்
எழுப்பி விடும் நம்பிக்கையில்...
தொடர்ந்து வீசும் தென்றல்....
தென்றலே
உண்மை தெரியுமா?
இதழ் திறந்து காத்து இருக்கையில்
மௌனங்கள் பலனில்லை மலர்க்கும்..
--------------------------------------------------------------------------
பூவே...
இடைவெளி இன்றி பேசி கொண்டிருந்தாய்..
பிடித்தது..
இதழ் தொட்டு பறித்து கொண்டேன்..
விரல் தீண்டியதில்
விழித்து கொண்டது
உறங்கி கொண்டிருந்த
உன் மௌனங்கள்..
இப்பொழுதோ
ஓயாமல் மௌனம் பேசுகின்றாய்..
என்ன சொல்லி தூங்க வைப்பேன்
விழித்து கொண்ட யாவையும்!
-------------------------------------------------------------------
வெற்று இதயங்கள்..
அர்த்தமில்லாத பேச்சுகள்..
காகித பூக்கள்..
பூக்களில்
உறங்கும் மௌனங்களை எழுப்ப முடியும்..
இதயங்களில்
உறங்குவதாய் நடிக்கும் மனங்களை?
--------------------------------------------------------------------
பி.கு: நச்சுன்னு ஒரு கவிதை போட்டிக்கான தலைப்பில் எழுதினது தான்.. :) இதில் முதல் கவிதையின் கடைசி இரெண்டு வரிகள் இதற்கு முன்பே நான் எழுதி இருந்தாலும்.. இங்க Conceptku நல்லா பொருந்துச்சு என்பதால்..
Wish you all a merry Christmas and a Happy New year folks!!!
20 மறுமொழிகள்:
En vote 2nd kavithaikku dhaan :))))
Supera irukku :D
இரண்டாவது கவிதை சும்மா 'நச்சுன்னு' இருக்குதுங்க கவிஞரே!!
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் டிரீம்ஸ்!!
போட்டிக்கு வாழ்த்துக்கள் :)
வழக்கமான படங்கள் இல்லாததை வன்மையாக கண்டிக்குறேன்
//இப்பொழுதோ
ஓயாமல் மௌனம் பேசுகின்றாய்..
என்ன சொல்லி தூங்க வைப்பேன்
விழித்து கொண்ட யாவையும்//
ஹப்பா!! ரொம்ப நல்லா இருக்கு டீரீம்ஸ்!
@g3
//En vote 2nd kavithaikku dhaan :))))
Supera irukku :D//
nanri hai :) appo kavidhai pidichathunu othukareenga! athu :D
@Divya
//இரண்டாவது கவிதை சும்மா 'நச்சுன்னு' இருக்குதுங்க கவிஞரே!!//
நன்றி திவ்யா..
//
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் டிரீம்ஸ்!!//
வெற்றி பெற தேவை இல்லை. கவிதை எழுதினதே போதும் நமக்கெல்லாம்..
ஆனாலும் இன்னமொரு நன்றி..
@Nagai Siva
//போட்டிக்கு வாழ்த்துக்கள் :)
வழக்கமான படங்கள் இல்லாததை வன்மையாக கண்டிக்குறேன்//
Puli, Thanks
sambandham ulla padangal thaana poda mudiyum! devadhai kavidhaigalil thaan devadhaigal varum :D
D
@gayathri
//ஹப்பா!! ரொம்ப நல்லா இருக்கு டீரீம்ஸ்!//
ஹப்பா கடைசியா கமெண்ட் எல்லாம் போடறீங்க..
@வேதா
//முதல் கவிதை சூப்பரா இருக்கு :)
/இதழ் திறந்து காத்து இருக்கையில்
மௌனங்கள் பலனில்லை மலர்க்கும்../
அதானே பார்த்தேன் எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு, இதை படிச்சுட்டு உன் கிட்ட சந்தேகமும் கேட்டேன் பாரு :D//
நன்றி வேதா...
ஹி ஹி! நிறைய பேருக்கு இதோட அர்த்தம் புரியாது. அது வரை எனக்கு நல்லது :D
//வழக்கம் போல கலக்கிட்ட வாழ்த்துக்கள் :)//
நான் என்ன கரண்டி ஏ?
Good ones. Thanks for getting inspired.
:)
தென்றலே
உண்மை தெரியுமா?
இதழ் திறந்து காத்து இருக்கையில்
மௌனங்கள் பலனில்லை மலர்க்கும்..
சூப்பர்.. மாமே..
இப்பொழுதோ
ஓயாமல் மௌனம் பேசுகின்றாய்..
என்ன சொல்லி தூங்க வைப்பேன்
விழித்து கொண்ட யாவையும்!
ஆஹா.. இது தான் குழந்தையை கிள்ளி விட்டுட்டு ......
மெளனத்தை உறக்கமாக கேள்விப்பட்டிருக்கிறேன்
அதனை விழிப்பாக.. வித்தியாசமா நல்லாத்தேன் இருக்கு..
// பூக்களில்
உறங்கும் மௌனங்களை எழுப்ப முடியும்..
இதயங்களில்
உறங்குவதாய் நடிக்கும் மனங்களை?
//
நியாயமான கேள்வி.. சொம்மா நச்சுன்னு இருக்கு..
படங்களும் நல்லாயிருக்கு..கவிதைக்கு ஏத்த மாதிரி
கடைசி படம் காகிதபூவா போட்டதிலிருந்து
பொருத்தமான படங்களுக்குகாக நீங்க கவனம் செலுத்துவது
புரியுது.வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
@Siril Alex
Thanks buddy! :)
@Rasigan
Nanri Rasigan!
//ஆஹா.. இது தான் குழந்தையை கிள்ளி விட்டுட்டு ......//
heh! athe athe!
//மெளனத்தை உறக்கமாக கேள்விப்பட்டிருக்கிறேன்
அதனை விழிப்பாக.. வித்தியாசமா நல்லாத்தேன் இருக்கு..//
innoru nanri :)
Pottikku vazhthukkal.Nalla kavidaikal.
எப்படியப்பா இப்படி எல்லாம்?
//ஓயாமல் மௌனம் பேசுகின்றாய்..
என்ன சொல்லி தூங்க வைப்பேன்
விழித்து கொண்ட யாவையும்!//
சான்சே இல்லை... அசத்தல்'ஸ்....
வெற்றி பெற வாழ்த்துக்கள் தல..
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் டிரீம்ஸ்!
என்னை கவர்ந்த வரிகள்
/பூக்களில்
உறங்கும் மௌனங்களை எழுப்ப முடியும்..
இதயங்களில்
உறங்குவதாய் நடிக்கும் மனங்களை? /
Post a Comment