உன்னை நினைக்கவில்லை..
சூரிய கதிர்கள் தீண்டுகையில்
விழிகள் அறியா தூரத்தில்
உன்னையும் சூரியன்
தொட்டு எழுப்பி இருப்பான்
என நினைக்கவில்லை..
காலை எழுந்ததும் முதலில்
மனதில் உன்னை நினைக்கவில்லை..
உணவு சாப்பிட்டால்
நீ சாப்பிட்டு இருப்பாயா?
என தோன்றவில்லை..
வீட்டில் சிரித்து பேசினால்
உன் சிரிப்புகள்
ஏதும் நினைவு வரவில்லை..
ஏதேனும் வரி தொலைத்த
பாட்டை கேட்டால்..
உன் முகம் மனதில் நிற்கவில்லை..
அழகானவை எதுவுமே
உன்னை நியாபகபடுத்தவில்லை..
கனவினில் வந்து
காயங்களும் செய்யவில்லை..
நிலவின் வெப்பத்தில் கூட
நினைவுக்கு வரவில்லை நீ..
இந்த பாழாய் போன
இதயத்துடிப்புகள் மட்டும்
உன்னை நினைவூட்டாமல் இருந்திருந்தால்....
28 மறுமொழிகள்:
:)))))))))))
Innikkum naanae pharshtu :D
Ippolaan kavithai prequency overa irukkae... vitta dhinam oru kavithai poduva pola :P
Seri edho nalladhu nadandha sandhoshamae :)) [Nalladhunnu sonnadhu nee oruthi kitta maati nalla avastha padaradha :P ]
@G3
//Innikkum naanae pharshtu :D//
Itho ungalku oru tea parcel!
//[Nalladhunnu sonnadhu nee oruthi kitta maati nalla avastha padaradha :P ]//
en indha maari vibareetha ennangal ungalku? avvvvvvvvvvvvvvvvvvvv...
// நிலவின் வெப்பத்தின்//
ஸப்பா! முடியல, சத்யமா என்னால முடியல. :))
புரியவில்லை
- அப்படின்னு சொல்ல முடியாம பண்ணிட்ட
நல்லா இருந்துச்சு
// சூரிய கதிர்கள் தீண்டுகையில்
விழிகள் அறியா தூரத்தில்
உன்னையும் சூரியன்
தொட்டு எழுப்பி இருப்பான்
என நினைக்கவில்லை../////
ஏனுங்க மாம்ஸ்..,டைம் சோன் மாறுபாடெல்லாம் கணக்குல எடுத்துக்க மாட்டிங்களோ?:P
// இந்த பாழாய் போன
இதயத்துடிப்புகள் மட்டும்
உன்னை நினைவூட்டாமல் இருந்திருந்தால்....//
இந்த வரிகளை ரொம்ப ரசித்தேன்.. அருமையா இருக்கு..கலக்குங்க...
[ அதானே அவளோட இதயம் தான இங்க இருக்கிறது.அதான் துடிப்புக்கள் அவளை மட்டும் நினைவுப்படுத்துன்னு நெனக்கிறேன்..:P ]
அந்தி முதல் சந்தி வரை உங்கள் நினைவுகளை முழுவதுமாக உங்கள் 'தேவதை' ஆக்ரமித்துவிட்டாள் போலிருக்கிறது????
\\இந்த பாழாய் போன
இதயத்துடிப்புகள் மட்டும்
உன்னை நினைவூட்டாமல் இருந்திருந்தால்....\\
கவிதையை மீண்டும் படிக்கத்தூண்டிய வரிகள்...மிக மிக ரசித்தேன்.
//இந்த பாழாய் போன
இதயத்துடிப்புகள் மட்டும்
உன்னை நினைவூட்டாமல் இருந்திருந்தால்....//
அழகான துடிப்புகள் இல்லையா ? :)) ரசித்தேன் மிகவும்...
ம்ம்...நல்லாயிருக்கு கவிதை.
@ambi
//ஸப்பா! முடியல, சத்யமா என்னால முடியல. :))//
ஹி ஹி :) இந்தாங்க பிடிங்க ஒரு கூல் டிரிங்க்
@k4k
//புரியவில்லை
- அப்படின்னு சொல்ல முடியாம பண்ணிட்ட
நல்லா இருந்துச்சு //
ஆஹா ஆஹா!
நன்றி அண்ணா!
@veds
//ஒரு அழுத்தமான விஷயத்தை ரொம்ப மென்மையா அழகா சொல்லியிருக்க :)//
நன்றி ஹை
//காயத்ரி அதெல்லாம் அப்டி தான், ஒரு முடிவு பண்ணிடா தினமென்ன தினம் நிமிடத்துக்கு ஒரு கவிதை வரும் இல்லையா தினேஷ்? //
சொந்த அனுபவத்தில இருந்து தான சொல்றீங்க வேதாக்க? ;)
@Rasigan
//ஏனுங்க மாம்ஸ்..,டைம் சோன் மாறுபாடெல்லாம் கணக்குல எடுத்துக்க மாட்டிங்களோ?:P//
good question! டைம் zone வேறானாலும் அதே நேரத்துக்கு தான் உதிக்கும்! ;)
//இந்த வரிகளை ரொம்ப ரசித்தேன்.. அருமையா இருக்கு..கலக்குங்க...//
நன்றி !
//[ அதானே அவளோட இதயம் தான இங்க இருக்கிறது.அதான் துடிப்புக்கள் அவளை மட்டும் நினைவுப்படுத்துன்னு நெனக்கிறேன்..:P ]//
அப்படி சொள்ளரீன்களோ! அது கூட நல்லா தான் இருக்கு
@rasiga
//அந்தி முதல் சந்தி வரை உங்கள் நினைவுகளை முழுவதுமாக உங்கள் 'தேவதை' ஆக்ரமித்துவிட்டாள் போலிருக்கிறது????//
அப்படியா? :D
//கவிதையை மீண்டும் படிக்கத்தூண்டிய வரிகள்...மிக மிக ரசித்தேன்.//
நன்றி ரசிகா
@
/அழகான துடிப்புகள் இல்லையா ? :)) ரசித்தேன் மிகவும்...//
அதே அதே! நன்றி நவீன்!
துடிப்புகளை விட நினைவுகள் அழகு.. நினைவுகளை விட நிஜங்கள் அழகு.. நிஜத்தை விட நம்பிக்கை அழகு.. நம்பிக்கையை விட வேறென்ன அழகு?
@anony
//ம்ம்...நல்லாயிருக்கு கவிதை//
நன்றிங்க அனானி!
Hi Dreamzz,
என்னாச்சு? கவிதை எல்லாம் தூள் பறக்குது???
நல்லாயிருக்குதுங்கோவ் கவிதை!!
லேட் வருகை உங்க கவிதைக்கு, ஸோ ஒரு போனஸ் கமெண்ட் !
\\நிலவின் வெப்பத்தில் கூட
நினைவுக்கு வரவில்லை நீ..\\
நிலவொளி குளிரும்னு தான சொல்லுவாங்க,
அதென்ன கவிஞர்களுக்கு மட்டும் வெப்பமாயிருக்கு????
\\
உணவு சாப்பிட்டால்
நீ சாப்பிட்டு இருப்பாயா?
என தோன்றவில்லை..\\
என்னா ஒரு கரிசனை ஃபீலிங்க்ஸ்...அட அட!!!
\\ஏதேனும் வரி தொலைத்த
பாட்டை கேட்டால்..
உன் முகம் மனதில் நிற்கவில்லை..\\\
வரி தொலையாத பாட்டு கேட்டுப்பாருங்க, ஒருவேளை முகம் தெரியுமாயிருக்கும்!
\\அழகானவை எதுவுமே
உன்னை நியாபகபடுத்தவில்லை..\\
அஹா ......அஹா.....இதெல்லாம் ஒவரு ஃபிலீங்க்ஸ்! தாங்கல!
\\கனவினில் வந்து
காயங்களும் செய்யவில்லை..\\
எப்படிதான் இப்படி எல்லாம் வரிகள் எழுத வருதோ?
ஒன்னுமே புரியல!
\\இந்த பாழாய் போன
இதயத்துடிப்புகள் மட்டும்
உன்னை நினைவூட்டாமல் இருந்திருந்தால்....\\
Ultimate ...இந்த லைன்தான்,
சும்மா நச்சு நச்சுன்னு கவிதையை அழகு படுத்துகிறது இந்த வரிகள்
[ஒருவழியா 25வது கமெண்ட் போட்டாச்சு!!
கொத்துப் பரோட்டா பார்ஸல் ப்ளீஸ்!!]
Pona postum indha postum cherthu partha .Yaradhunu kekka thonudhu?
//உன்னையும் சூரியன்
தொட்டு எழுப்பி இருப்பான்
என நினைக்கவில்லை..//
ANTARTICA la irundhaaley ippadi thaan pola :p
That was a lovely poem Dreamzz.Wishing you a very Happy New Year.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்...
Post a Comment