Monday, January 28, 2008

தவறும்.. சரியும்...

இந்த பதிவை முதல்ல படிங்க. அப்புறம் நம்ம அண்ணன், இந்த தொடர விட்டாச்சு.





ஹ்ம்ம்.. அட இது தவறு.. சரினு நியாயபடுத்தல நான்.. பொய் சொல்லுவது தப்பு தான்.. Obviously. ஆனா, நாம எல்லாருமே ஏதேனும்மொரு சமயத்தில் பொய் சொல்லி தானே ஆகிறோம்..

There Is evil.. And there is necessary evil. அதாவது, சமூகத்தின் சீரான செயல்பாட்டை காப்பாற்றும் தவறுகள். அளவுக்கு மிஞ்சினால் எப்படி அமுதம் நஞ்சாகுதோ.. அதே மாதிரி சில நேரம், கொஞ்சம் குறைந்த அளவு நஞ்சு, மருந்தாகும்.

முதல்ல போதை மருந்து. அமெரிக்காவில் ஒரு ஆய்வில், ஒரு பெரிய நகரத்தில், போதை மருந்துகளை முற்றிலுமாக ஒடுக்க முயற்சித்தால், Robbery, assault, aggressive behaviour கூடுவதாக கண்டுபிடித்து இருக்கின்றார்கள். ஏனா, இவங்க வயலன்ஸ்க்கு ஒரு வடிகாலாய் இருந்த போதை மருந்துகள் கிடைக்கல. அதுனால தான் இதுன்னு கண்டுபிடிச்சாங்க.

இதே மாதிரி தான் Prostituion. As they closed this industry, they found the incidence of sexual assaults went up in that city.

இது மாதிரி.. நம்ம சமுதாய அமைப்பினால, சில பல தவறுகள் வெளிப்படையாக அங்ககரீக்க படவில்லை என்றாலும்.. நமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் Foundation ஐ மாற்றும் வரை.. தேவையான ஒன்றாகவும்.. ஓரளவில்.. கட்டுபடுத்தபட்ட.. necessary evil என்றாகவும் ஆகின்றது..

(இவ்ளோ ஏன், தீபாவளி முடிஞ்சா நம்ம ஊர்ல வெட்டு குத்து கம்மியாகும் சில மாதங்களுக்கு.. ஏன் தெரியுமா? ஏனா, பட்டாசு கூட நமக்குள்ள இருக்கும் வன்முறையை கொளுத்தும் ஒரு வடிகால் தான்.)

சரி.. நம்ம லெவலுக்கு வருவோம்..

அட உங்கள்ல எத்தன பேருப்பா இந்தியாவில் உங்க டிரைவிங் லைசன்ஸ்க்கு ரூபாய் வைக்காமல் வாங்கனிங்க? இல்ல எத்தன பேரு Police clearance certificate வாங்கும் போது போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு பேப்பர் கட்டு கூட அழாம வாங்கனீங்க? போஸ்ட்மேனுக்கு 5ஓ 10ஓ வெட்டாம இருந்தீங்க? Until we fundamentally change.. இதெல்லாம் நடக்க தான் செய்யும்.

ஒரு வேலைல Interviewer ஆ இருந்தால், வெள்ளை காரனை விட நம்ம ஊர்க்கரன் வர மாட்டானானு மனசு சொல்லும். இந்திய ஆட்களிலே, தமிழன் இருக்கமாட்டானானு ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கும். It is impossible to be fair always. நாம அப்படி இருக்க emotions இல்லாத இயந்திரங்கள் கிடையாது.

(என்ன சொல்ல வந்து என்ன சொல்லிட்டு இருக்க?? ஹிஹி)

சில தவறுகள் தெரிந்தே செய்து தான் போகின்றோம்.. ஆனால் சமுதாயத்தாலும், காலத்தினாலும் நிர்பந்தத்தாலும் என்று நான் இவைகளை நியாயபடுத்தல. but this is reality.கண்ணை மூடிக்கிட்டு, இதெல்லாம் எதுவுமே இல்லைனு சொல்லிகிட்டு இருக்கலாம். இதை பத்தி பேசினா இதை அங்கீகாரம் செய்வதா அர்த்தம் இல்ல. ஏனா நாம அங்கீகாரம் பன்னாலும் பன்னலனாலும், தப்பு செய்யறவன் செஞ்சுட்டே தான் இருப்பான். Donot Share the needles, புள்ளிராஜாவிற்கு எய்ட்ஸ் வருமா - விளம்பரங்கள் தவறை அங்கீகரிப்பதில்லை. நிதர்சனத்தை சொல்கின்றன.. அதில் கவனம் தேவைனு சொல்கின்றன.. Mistakes are unjustifiable. agreed. but sometimes they are also inevitable.

ஓரினச்சேர்க்கை (Lesbians and Gays) நம்ம ஊரில் சட்டப்படி குற்றம். North Americaவில் சட்டப்படி நியாயம். இதுல எது சரி? எது தவறு? I donot believe this makes Indians Morally superior or too narrow minded. It is as it is.

கடைசியா ஒன்னு. தப்பு செய்யலாம். Please do not try to assert your moral superiority over others or Please do not try to justify your wrong action. பாவமே செய்யாதவன் எரியட்டும் முதல் கல்லை. There is no absolute wrong or right. And If you think you havent done any sin todate, either you are stupid enough to deceive yourself or your age is 1 :P

இது தான் சரி. இது தான் தவறு எனும் கருப்பு வெள்ளை உலகமில்லை இது. கண்ணை திறங்க. வெள்ளைக்கும் கருப்புக்கும் இடையில் எவ்வளவோ வர்ணங்கள் இருக்கு. I, do not happen to be colour blind. நீங்க எப்ப கலர் டிவிக்கு மாற போறீங்க..?

Monday, January 21, 2008

நட்சத்திர வாரமும்....அறிமுகமும்...




இது தொடர்பான தமிழ்மணம் லிங்க் இங்கன.
------------------------------------------------------------------------------

மு.கு: கவிதைக்கு போகும் முன், ஒரு சின்ன அறிமுகம். என் அன்பு தங்கை புதிதாக பதிவு தொடங்கி இருக்காங்க. இங்க. எல்லாரும் போய் அங்கயும் பார்சல் வாங்கிகொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றேன்..



------------------------------------------------------------------------------

இது போக






இது பதிவில்ல (அப்ப என்னனு உங்களால வழக்கம் போல கேள்வி கேட்க முடியாது ஹி ஹி). So, இங்கன நோ கமெண்ட்ஸ். அங்கன வைச்சுகலாம் கச்சேரிய...

Saturday, January 19, 2008

தேவதை பிரிவு

இதற்கு முந்தைய தேவதை தொடர்களுடன் கூடிய முழு கவிதை வரிசை.
1. தேவதை ஊர்வலம்
2.தேவதை கனவுகள்
3.தேவதை தரிசனம்
4.தேவதை யாசகன்
5. தேவதை பருவம்
6. தேவதை பொய்கள்
7. தேவதை பிரிவு























நிஜம் தான் போலும்..
வதை செய்ய வந்ததால் தான்
தேவதை ஆனாயோ நீ?

எல்லா கேள்விக்கும்
பதில் நீதான்..
சொல்லிய பின்னும்
கேள்விகுறியாய் நிற்பது
நீ மட்டும்..























கதவை திறந்ததும்
பறந்து போனது பட்டாம்பூச்சி..
சரிதான்..
அதன் சிறகில் சிக்கி கொண்ட
என் இதயத்தை
நான்
திரும்ப பெறுவது எப்பொழுது?

உன் உதட்டசைவில்
தொலைந்து போன இதயத்தை
உன் உதட்டசைவிலேயே
உடைக்கவும் செய்கின்றாய்..
















அழகழகாய்
குட்டி குட்டி
வர்ண குமிழிகளாய்
என் காதலை சொல்லி கொண்டு இருக்கின்றேன்..

நீயோ
அழகழகாய்
உன் விரல் தொட்டு
உடைத்து கொண்டிருக்கின்றாய்
அதை...ரசித்து கொண்டே..















நீ என்னை விட்டு
விலக விலக
உனற்கான என் காதல் மட்டும்
வளர்ந்து கொண்டே இருந்தது..
என்றேனும் ஒரு நாள்
உன்னை பிடித்து விடும் எண்ணத்தில்..

மெதுவாக தான் புரிந்தது
எவ்வளவு நீளமாய் வளர்ந்தாலும்
நிழல்கள்...
சூரியனை தொட இயலாத
நிதர்சனம்.
---------------------------------------------------------------------------
பி.கு:
இதற்கு முந்தைய தேவதை தொடர்களுடன் கூடிய முழு கவிதை வரிசை.
1. தேவதை ஊர்வலம்
2.தேவதை கனவுகள்
3.தேவதை தரிசனம்
4.தேவதை யாசகன்
5. தேவதை பருவம்
6. தேவதை பொய்கள்
7. தேவதை பிரிவு

எனக்கு பிடித்த எண் 7 என்பதால், இத்துடன் தேவதை கவிதை தொடர் நிறைவு பெறும் என அறிவித்து கொள்கிறேன்.

அட நானும் எத்தனை கவிதை தான் தேவதைனு சொல்லியே எழுதுவேன். புது வருஷம். புதுசா வேற ஆரம்பிப்போம். ;)

Thursday, January 17, 2008

என்னுடையதும்...

என்னடா எழுத அடுத்து அப்படினு யோசிச்சிட்டு இருந்தேன். நம்ம "காதல் டாக்டர்" "CVR" நம்மளை டேக் செய்ததும், என் "பாசமான" தோழர் சுதாகர், அவார்ட் கொடுத்ததும் நியாபகம் வந்தது.



முதல்ல முதல் டேக்.

2007ல நான் எழுதின பதிவு எண்ணிக்கை.. 66. இதுல எது எனக்கு ரொம்ப பிடிச்சதுனு சொல்லனுமாம். (இதெல்லாம் எழுதறது ஈஸி..சொல்லறது கஷ்டம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்). ஒன்னு இரெண்டுனு எல்லாம் எனக்கு வகை படுத்த தெரியாது.. எனக்கு எல்லாமே பிடிக்கும் அப்படினு டயலாக் எல்லாம் அடிக்காம, எனக்க பிடிச்ச டாப் 3.
1. தேவதை கவிதை தொடர் (தேவதை பொய்கள் ,அதற்கு முந்தியவை)
2. மறந்து போ என் மனமே (ரொம்ப feel பன்னி எழுதினது .. அதுனால.. அப்ப மற்றதுக்கு மட்டும் கம்மியாவ பீல் பன்னற ..அப்படினு கேட்க கூடாது)
3. நட்பெனும் காதல் (பொதுவா ஒரு பதிவுக்கு background இருக்கும். ஒரு background ஏ பதிவானா ;) எப்படி நம்ம பில்ட அப்)


அடுத்த மேட்டர். அவார்ட் மேட்டர்.
சுதாகர், எனக்கு இந்த அவார்ட் கொடுத்து பாசமழைல நினைச்சுட்டீங்க. மிக்க நன்றி :)

சரி.. இப்ப நம்ம யாருக்கு கொடுக்கலாம்னு யோசிச்சேன். இது மேல செய்தத விட கஷ்டமான விஷயம். I mean not like, I feel I will hurt someone by not giving them the award, but because there is a lot of new talents out there this year.
அதுனால, இத இப்போதைக்கு யார்க்கும் கொடுப்பதில்லை. போன வருஷம் போட்ட ப்ளாகர்ஸ் அவார்ட் தொடர்ச்சி, இந்த வருஷம், சீக்கிரம் போட படும். (அட, நிஜமா! ஹிஹி) அப்ப கொடுத்துக்கிறேன்.

சரி கடைசியா குட்டி கவிதை :)

உன்னை தான் நம்பி வந்தேன்..
நீயோ
உன் விழிச்சிறைகளுக்குள்
அடைத்து விட்டாய்...
இங்கே
கதவுகள் இல்லாவிட்டாலும்
அடைந்து கிடக்கத் தோணுதே..

இப்போதைக்கு அவ்ளோ தான். வர்ட்டா. (யாருப்பா அது வேணாம்னு சொன்னது)

Sunday, January 13, 2008

Californiaவில் காந்தியும் நானும்

மூன்று நாள் இருந்தேன். சில சுவாரஸ்யமான விஷயங்கள் மட்டும் இங்கே.
Conference முடிஞ்ச அன்று (நேற்று இரவு) we had a party to the host on behalf of our company. அது ஒரு லோக்கல் ரெஸ்டாரண்ட்&பார்ல. பிக் அப் – அப்படிங்கிறத கேள்வி பட்டு இருக்கோம். நான் நேர்ல அன்னைக்கு தான் பார்த்தேன். (நான் வெறும் கோக் மட்டும் தான் குடிச்சேன் என்பத இங்கே திட்டவட்டமா தெரிவிச்சுக்கிறேன்..) மணி 12:00 வரை எல்லாம் நார்மலா தான் இருந்துச்சு. திடீர்னு முழிச்சு பாக்கிறேன், எவனையும் காணோம். எங்கடா சுத்தி இருந்த என் வெள்ளைகார பயலுக எல்லாம் காணொம்னு கீழ எட்டி பார்த்தேன். (Private Party was happening upstairs - எங்கள்து). பாத்த கீழ அப்பதான் ஒரு 10 பிகர்ங்க. எல்லாவனும் கீழ ஓடிட்டான் அதுனால தான். அப்புறமா நடந்தது எல்லாம் உங்க மனச கெடுக்க வேணாம்னு சென்ஸார்டு! (இங்க சொல்லிக்கிற இன்னொரு விஷயம், நான் அப்ப S ஆகி என் ஹோட்டலுக்கு போய் தூங்கிட்டேன் என்பது..)

கடைசு நாள் தமாசு!

அட, எதிர்பார்ப்பது நடக்காம, எதிர்பார்க்காதது நடப்பது தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம். என்ன நடந்ததுனு சொல்லறேன் கேளுங்க.

நம்ம நண்பன் ஒருவன் SanFrancisco அருகில் இருக்கிறான். சரி பார்க்க போலாம்னு நினைச்சேன். கிறுஸ்துவ பையன் என்பதால், Sunday கண்டிப்பா சர்ச் போவேன் என்று சொல்லிடான். சரி. அங்கேயே நானும் வந்து பார்க்கிறேன் என்றேன். அன்று காலையில் போன் செய்து கன்பர்ம் பன்னறேன்னு சொன்னான். நான் வெய்ட் செய்து, பொறுக்காம, ரூமை காலி செய்துட்டு கிளம்பிட்டேன் 10 மணிக்கு. நானும் சரி பக்கத்துல தான் இருக்கும்னு நினைச்சு டாக்ஸி பிடிச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அங்க போக $150- ஆகும்னு. சரி, வந்தது வந்தாச்சு… போயிடலாம்னு ஓகேனுட்டேன். அங்க 10:40 க்கு போய் சேர்ந்தேன். ஓரளவு பெரிய சர்ச் தான். இதுக்கு முன் சர்சுக்கெல்லாம் போய் பழக்கம் கிடையாது. போய் பேபே னு முழிச்சிட்டு இருந்தேன். கோவிலுக்கு போனாவே, எனக்கு எப்பவும் 30 நிமிஷத்துக்கு மேல தாக்கு பிடிக்காது. சரி பரவாயில்லை, அவன் வருவான் அப்படினு எப்பவும் போல கடைசி ரோவில்உட்கார்ந்தேன்.

எனக்கு எப்புவுமே Mass ஜெபங்கள், பஜனைகள் பிடிக்காது. Spirituality doesn’t come to me when I am in midst of 500 people. சரி, ஆரம்பத்தில் பையன் வந்தா தெரிஞ்சிடும்னு ஒரு நம்பிக்கையில் இருந்தேன். அப்ப சுமார் 50 பேர் இருந்தாங்க அங்க. கொஞ்ச நேரத்துல, அது 500 பேரா மாறிடுச்சு. (இந்த லட்சணுத்துல அவன்கிட்ட மொபைல் வேற இல்ல. ரூமுக்கு அடிச்சா யாரும் இல்ல) ஆஹா தாங்காதுடானு நான் வெளியில வாசலுக்கு ஓடி வந்துட்டேன். அங்க காத்திருந்து கால் வலிச்சது தான் மிச்சம். வழிப்பாடு இடம் என்பதால் சைட் கூட அடிக்க மனசு வரல (அட நிஜமா!). சரி இது சரிபடாது, டாக்ஸி பிடிச்சு கிளம்புவோம்னு முடிவ பன்னப்ப மணி 12:30.

அப்பதான் கவனிச்சேன், சுத்திமுற்றி எதுவுமே இல்ல, இங்க கண்டிப்பா டாக்ஸி எல்லாம் கிடைக்காதுனு. அப்புறம் சரி வசமா சிக்கினோம் அப்படினு நினைச்ச நேரம், அவர பார்த்தேன். சரி பார்க்க தமிழ் ஆள் மாதிரி இருக்கார்னு, தமிழானு கேட்டேன். ஆமா, அப்படினு நாங்க பேச ஆரம்பிச்சு, அப்புறம் அவங்க கூடவே அவங்க வீட்டுக்கு போயாச்சு.
அவரும் அவர் மனைவியும் நல்லா பேசினாங்க. விருந்தோம்பல் - தமிழன் எங்கு போனாலும் மறப்பதில்லை என்பதை உணர்த்தினாங்க. அவங்க விட்டுக்கு போய் முதல்ல சாப்பட சொல்லிடாங்க. சாப்பிட்டு இருக்கும் போதுதான் அத கேட்டாங்க. “தம்பி, ரெகுலரா சர்ச்சுக்கு போவீங்களோ?” அப்படினு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அங்கிள் நான் ஹிந்து, “ஆனா கடந்த மூன்று வருஷமா சர்ச்க்கு போறேன்னு” கொஞ்சம் அள்ளி விட்டேன். (அப்புறம், நான் காலையில் இருந்து சாப்பிடாம அப்ப தான் சாப்பிட ஆரம்பிச்சேன். சரி எதுக்கு வம்புனு ஒரு safetyக்கு தான்). அப்புறம் பார்த்தா அவங்க நம்ம ஊர்ல வருமே கிறிஸ்துவ ஜெப சேனல்கள், அதுக்கு எல்லாம் ப்ரோகிராம் பன்னி தரவங்க. அடுத்த 2 மணி நேரம்… அந்த சிடி, டிவிவி எல்லாம் பாக்க வைச்சுட்டாங்க. (அதுவும் என்ன போய்! ). நல்ல வேளை, கடைசியா ஒரு வெள்ளை பிகர் பக்தி பாடல் பாட, சூப்பரா இருக்கும் பாருனு கேட்க விட்டுடாங்க. அவ்வளவு நேரம் பாத்த மூஞ்சிக்கு, இது எவ்வளவோ தேவலடா சாமினு, (என்னமா closeup ல காமிக்கிறான். ஹிஹி), “அங்கிள் எனக்கும் Chirstmas Carol Songs ரொம்ப பிடிக்கும்னு” அடிச்சு விட்டு.... பாட்ட ரசிச்சேன் .


எனக்கு ப்ளைட் இரவு 11:00க்கு. தெரியாம அத இவங்க கிட்ட முதலயே சொல்லிட்டேன். சரி அதுவரை இருந்தா கொஞ்ச நஞ்சத்தையும் குழப்பி விட்டுவிடுவாங்கடா அப்படினு,ஒரு 3:30 மணிக்கு நான் Early Flight பிடிக்க போறேன்னு ஒரு கப்ஸா விட (இரவு 11:00 மணி ப்ளைட் தான் மதியத்துக்கு மேல அன்றைக்கு ஒரே பிளைட்), சரிப்பானு சொல்லி எனக்காக Cab எல்லாம் கூப்பிட்டாங்க. (ரொம்ப நல்லவங்க….. வாழ்க தமிழன். வாழ்க மீன் குழம்பு.. வாழ்க விருந்தோம்பல்). அங்க நம்ம குஜராத்தி டிரைவர் ஒருத்தர் வந்தார். திரும்ப ஏர்போர்ட் போற 1 மணி நேரம் விடாம பேசி கழுத்தருத்தார் (அதெல்லாம் கேட்டதுக்கு அவன் எனக்கு $120 கொடுத்து இருக்கனும்). And he also assumed the couple to be my parents. நாம தான் ரொம்ப நல்லவங்களாச்சே, அவரோட நினைப்ப ஏன் கெடுக்கனும்னு அப்படியே விட்டுட்டேன். பார்த்தா, கொஞ்ச நேரம் கழிச்சு வழி கேட்கிறான் என்கிட்ட போற எடுத்துக்கு…. கொடுக்கனும்னு முடிவு செய்தா ஆண்டவன் கொட்டி தான்யா கொடுக்கிறான்! எப்படியோ தப்பிச்சு, SanFrancisco Downtown வந்தேன். அங்க பார்த்தது தான் இவர.




இதுல கொடும என்னன்ன, பையன் இப்ப போன் செய்து, மச்சி, என் ஆளு இன்னைக்கு வர சொல்லிடாடா. அதாண்டா. உனக்கு சொல்லனும்னு நினைச்சேன். மறந்துட்டேன்னு சொல்லறான். சச்சின் கோப்ஸ் சொல்றாப்ல, ஆர்வம் எல்லார்க்கும் ஒரே மாதிரி இருப்பதில்ல!

யார பாக்கனும்னு இருக்கோ, அது தான் நடக்கும். சரி ஏர்போர்ட்ல வெட்டியா இருக்கிற நேரம், நீங்களும் கஷ்டபடுங்கனு இந்த மொக்கை!

Tuesday, January 08, 2008

காமத்துப்பாலும் காதலும்..

மு.கு: என்னடா தலைப்பு அப்படி இருக்குனு யோசிப்பவர்களுக்கு.நம்ம பதிவுக்கு வருபவர்களூக்கு எல்லாம் 18 வயதை தாண்டி விட்டது என தான் நினைக்கிறேன். அதை விட குட்டீஸ் யாரும் இருந்தா ப்ளீஸ் ஸ்கிப் திஸ் போஸ்ட். (Again, under your own discretion). மத்தவங்க படிக்கலாம்.



அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு

- அதாவது..தேவதையோ? ஆடும் மயிலோ நகை பூட்டிய இந்த மாதை என் மனதை கொல்ல வந்தவளோ -
என நம்ம வள்ளுவர் காமத்துபாலை ஆரம்பிக்கிறார். நமக்கு உடனே ஒரு சந்தேகம். அதென்ன காமத்துபால்? கொச்சையாக? காதல்னு சொல்ல வேண்டியது தான என்று. அதற்கான பதிலுக்கு சிறிது காலத்தில் பின் செல்லலாம். அந்த காலத்தில் ஆண் பெண் நட்பு என்பது எல்லாம் கிடையாது. அதுவும் காதலில் முடியும் நட்பெல்லாம் சுத்தமா கிடையாது. ஒரு ஆண் பெண் கல்யாணம், சாந்தி முகூர்த்தம் என எல்லாமே நேரம் பாத்து ஜோசியத்தின் படி செய்தனர். அதுல எங்கன காதல் வரும்? கல்யாணம் அன்று முதல் முறை பார்க்கும் ஒருவனை, அன்று இரவே காதலி என யாரும் சொல்லுவார்களா?

ஒரு விதத்தில அப்ப விட, இப்ப தான் நாம காமத்த கொச்சை படுத்தி, Demonise செஞ்சுட்டோம். காதலையே பாதி பேர் அப்படி தான் நினைக்கறாங்க நம்ம ஊர்ல!
எப்படி நட்புக்கும் காதலுக்கும் சில ஒற்றுமைகள் இருக்க்கோ, அதே மாதிரி காமத்துக்கும், காதலுக்கும் உண்டு. ஒரு விதத்தில சொல்லனும்னா, நட்பும், காமமும் இரு கோடுகள் என்றால் அவை சந்திக்கும் அந்த புள்ளி தான் காதல். இரெண்டுமெ தனி தனி வழிகளில் அழகுதான். ஆனல் சேர்ந்தால் தனி அழகு.

அது போக, பார்த்தீங்கனா, வள்ளுவர், களவியலை வந்து, கற்பியல்க்கு முன்னாடி சொல்லறார். ஏன்னு யோசிச்சோம்னா, இப்ப எப்படி நம்ம முதல்ல காதல், அப்புறம் கல்யாணம்னு சொல்றோமே, அதையே தான் அவரும் சொல்லறார். அப்போ, ஆண் பெண் பழகி "காதலிக்கும்" வழக்கம் எல்லாம் இல்லை. காதல் என்பது, கல்யாணத்தின் பொழுது காமத்தில் ஆரம்பித்து, அப்புறம், உடன் வாழ்வதில், நட்பும் வளர்ந்து, அப்புறம் வரும்.

உண்மையில், ஒரே பெயர் சொல்லி அழைத்தாழும், அந்தந்த காலகட்டத்தில், காதல்னா என்னன்ன்னு சமுதாயம் எதை பெரும்பாலும் நினைக்கிறதோ, அது தானே எல்லார் மனதிலும் பதிகின்றது. The collective consciousness of a society and their beliefs acts as a feedback system, reinforcing its own belief again and again.

மேலும் சில குறள்களை பார்த்தோம் என்றால்.. வள்ளுவர், எப்படி காமத்துப்பால் என்று காதலையும் அழைக்கின்றார் என புரியும்..

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

- அதாவது இவன் நோக்கும் போது, அவள் நிலத்தையும், இவன் பார்க்காத பொழுது அவள் அவனை பார்த்தி மெலிதாய் சிரிப்பதுமாய் -
என்பது அர்த்தம். அட, நம்மூர்ல காதலை சொல்லாதவர்கள் இன்னைக்கு கூட இப்படி தானப்பா செய்யறாங்க! இதுக்கு அப்புறம், வள்ளுவர் காமம் பற்றி சொன்னாலும், அவர், அவர் வாழ்ந்த காலத்தைய காமத்ததை சொல்கிறார். திருக்குறள் அர்த்தம் தெரிந்து படிக்கும் எவர்க்கும் தெரியும், அதில் காதலும் கலந்து இருப்பது.

நம்ம காலத்து முட்டாள்தனத்தில் விழாமல், காமத்தை, காதலுடன் இணைத்து எழுதி, காமத்தை நட்பிற்கு இணையாக சொல்லி விடுகின்றார். நட்பை விட காதல் பெரியது. காமத்தை விட காதல் பெரியது. நட்பிற்கும், காதலுக்கும் வித்தியாசம், காமம் நட்பில் இல்லை. அதாவது , X < Z, Y < Z. Z - X = Y. அப்படினா, X + Y = Z. நட்பு மனம் சேர்வது. காமம் மெய் சேர்வது. காதல் இரெண்டுமே சேர்வது.

நம்ம கோவில்களில் கூட வெளிபுறம் சிலைகளில் 'அந்த' மாதிரி சிற்பங்கள் இருக்கும். அதற்கு இரெண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம். Practicality. அந்த காலத்து நபர்களுக்கு இப்பொழுது மாதிரி டிவி, இண்டர்நெட் வசதிகள் கிடையாது. பெரியவர்களும் கத்துகொடுத்துகிட்டு இருக்க முடியாது. அதுனால இது போன்ற இலைமறைவு காய் மறைவு விஷயங்களை கலை எனும் ஆடை அணிந்து, பொது இடங்களில் வைச்சிருந்தாங்க.
இரெண்டாம் காரணம். கோவில்கள் மனதின் பிரதிபலிப்பு. வெளியில் இது போன்ற விஷயங்கள் இருந்தாலும், மனதின் ஆழத்தில் கடவுள் இருக்க வேண்டும் எனும் கருத்திற்கு.

இறுதியா இன்னொரு குறளோட முடிச்சுப்போம்.

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

- அதாவது - நிஜத்தில் நேரில காணாதவரை கனவினிலாவது காண்போம் என என் உயிர் இன்னும் தங்கி இருக்கு - அப்படினு காதலி சொல்லறா.

Saturday, January 05, 2008

உனக்கு என்ன பிடிக்கும்?

மு.கு: மீண்டும் ஒரு அழகான அவன் அவள் கற்பனை குட்டி கதை. (அம்பி.. "குட்டி" இல்ல. சின்ன கதை என்பத அப்படி சொன்னேன்!) அப்புறம் ஏன் அழகான எனும் அடைமொழி அப்படினு எல்லாம் கிளறாம கதைய படிங்கப்பா! வழக்கம் போல அவனுக்கும் அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

அவன்: ஹேய், என்ன இவ்ளோ லேட்?
அவள்: ஆமா. அப்படி வந்தாலாச்சும் உன்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சேன். நீ எங்க விடற..
அவன்: வந்த உடனே ஆரம்பிச்சுட்டியா.. அடங்கு தாயே. உட்காரு. ஏதும் வேணுமா?
அவள்: ஒரு 1 கோடி ரூபாய் கடன் வேணும். தரியா? வாங்கி தரும் ஒரு காபிக்கு இத்தன பிட்டா? அதுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நான் Pay செய்யறேன்.
அவன்: அவ்வ்வ்வ்வ்வ்! தெரியாம கேட்டுட்டேன்.. இரு ஆர்டர் பன்னிட்டு வரேன்.
....

....
அவன்: ம்ம்.. அப்புறம் காதல் பத்தி என்ன நினைக்கிற?
அவள்: ஏன் நீ காய வைச்சு தர போறியா?
அவன்: ஹேய்.. சீரியஸா கேட்கிறேன்..
அவள்: டேய்.. அதெல்லாம் நீ தான் சொல்லனும். என் கிட்ட கேட்டா. எனக்கும் காதலுக்கும் பல மைல் தூரம்.நான் கல்யாணமே வேண்டாம்னு இருக்கேன். ஆமா என்ன திடீர்னு?
அவன்: சரி.. ஒருத்தர் மேல காதலானு எப்படி கண்டு பிடிக்க? ஐ மீன் இது காதலானு?
அவள்: ம்ம்ம்.... லைப் புல்லா கூடவே இருக்கனும்னு தோணுமாக்கும்...
அவன்: நாம ஒருத்தர் கூட நட்பா ஜாலிய பழகி பேசி.. அவங்க கூட அப்படி தோணுச்சுனா?
அவள்: தோணுச்சுனா சொல்லு. பிடிச்சு இருந்தா, அல்லது அவங்களுக்கும் அப்படி உன்கிட்ட தோணுச்சுனா , வெல் அண்ட் குட்!
அவன்: ம்ம்ம்ம்....
அவள்: இதப்பாரு. ஒருத்தர காதலிக்க ஒரே ஒரு கண்டிஷன் தான். அவங்கிளக்கு வேற யார் மேலயும் காதல் இருக்க கூடாது. அது ஓகேனா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்!
அவன்: அது என்னமோ சரி. வொர்க் ஆகுதோ இல்லயோ.. அவுட் நல்லா ஆகுது!
அவள்: என்னடா மூட் அவுட் ஆகிற. ஆமா, என்ன திடீர்னு. யாரையும் லவ் செய்யறியோ?
அவன்: நான் ஒன்னு சொல்லலாமா?
அவள்: எனக்கு ஏற்கனவே ஒன்னு, இரெண்டு, மூனு தெரியும்.. ஹிஹி.. சரி சரி.. சீரியஸா ஏதோ பேசற.. சொல்லு சொல்லு..
அவன்: அது....வந்து...
அவள்: அதான் வந்துடேனே.. சொல்லுடா கண்ணா..
அவன்: எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்...
அவள்: ஓஹோ..
ஒரு சில நிமிட கனமான மௌனத்திற்கு பின்..
அவன்: காபி குடிச்சுடியா?
அவள்: ஆமாடா. நீ குடிச்சு முடி..
அவன்: சரி.. நீ சீரியஸ் ஆகாத இப்ப. இப்ப வந்த பெப்ஸி ஆட் பார்த்தியா. சூப்பர் கான்செப்ட் ல.
அவள்: ஆமாடா பார்த்தேன். எனக்கு ஒன்னும் பிடிக்கல.
அவன்: ஓஹோ...... உனக்கு என்ன பிடிக்கும்?
அவள்: ம்ம்...
அவன்: ம்ம் னா? என்ன?
அவள்: அதுதாண்டா பதில் லூசு பையா. நான் கிளம்பறேன்.. பை.. நாளை பார்ப்போம்..

-----------------------------------------------------------
பி.கு: கதை புரியாதவர்களுக்கு.. அப்படியே இருங்க! அப்புறம், இந்த கதைலயே blade போட்டுடதால, இதையே நம்ம ரசிகன் சொன்ன மொக்கை டேக்காகவும் ஏத்துக்கனும்! அதுக்கு ரூல்ஸ் எல்லாம் நீங்களே போய் பார்த்துக்க்கோங்க. மொக்கை போடுறவங்க, புதுசா காரணம் வெணும்னா, நான் உங்கள டேக் பன்னிட்டேன்னு சொல்லிகோங்க!

Tuesday, January 01, 2008

இருப்பதுவும் இல்லாததுவும்..

First Happy New Year Everyone! நினைப்பது கிடைக்கட்டும். அப்படி கிடைக்கலனா கிடைச்சது பிடிக்கட்டும். அப்படி பிடிக்கலனா நினைப்பது கிடைக்கட்டும்!

வருஷத்துக்கு ஒரு முறை உருப்படியான பதிவ போடணும் அப்படிங்கிற உயர்ந்த கொள்கைய நாம follow பண்ணறதால இது. போன வருஷத்து உருப்படி பதிவு எங்க அப்படின்னு எல்லாம் கேள்வி கேட்காம படிங்க..

இது நான் படித்தது, சிந்தித்தது அப்படி கலந்து நான் எழுதுவது.

சரி நாம ரிலேடிவிடி (relativity), மல்டி வெர்ஸ் (Multi Verse) பத்தி பேசுவோம். இதுக்கெல்லாம் தமிழ் வார்த்தை இருந்தா சொல்லுங்க..

எல்லாருக்கும் universe அதாவது அண்டம் தெரியும். அதென்ன multi-verse? அதாவது பல அண்டங்கள் இருக்கு என்பது சிலரின் கருத்து. அதுவும் அவை நம்மள சுத்தியே இருக்கு என்பதுவும் அவர்களின் வாதம்.

If you ignore time as a dimension, and consider spatial dimensions alone, நாம மூன்று கோண உலகில் வாழறோம். (3 dimensional world - Height , Width and Depth). ஒரு பொருள் இருக்கும் இடமும், அதில் இருந்து இன்னொரு பொருளுக்கு இந்த மூன்று தூரங்களும் தெரிந்தால் அந்த பொருளை நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.

இப்போ ஒரே dimension உலகில் இருந்தோம்னு வெச்சா அந்த அண்டம் ஒரு கோடு மாதிரி நீலமா இருக்கும். அதுல வாழும் ஒருவருக்கு அவருக்கும் முன் செல்பவரையும், பின் செல்பரையும் மட்டுமே நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
அவர்களின் உருவம் புள்ளியாகவோ, இல்லை கோடாகவோ மட்டுமே இருக்கலாம்.

அப்படியே இரெண்டு dimension அண்டம் பார்த்தோம் என்றால், அதில் உள்ளவர்கள் Squares, rectangles, circles இப்படி பல மாதிரி இருப்பாங்க. அதில் வாழும் ஒருவருக்கு இன்னொருவரை பார்த்தால் அவர்களின் உள் இருப்பது தெரியாது. வெளி கோடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு உயரம் என்னும் அமைப்பே தெரியாது. ஏன் அவர்களால் அதை சிந்திக்க கூட முடியாது. 3 Dimensional அண்டங்களில் வாழும் நம்மை போன்றவர்கள் அவர்கள் அண்டத்தில் எட்டி பார்த்தால், (if we enter their world from the height dimension, entering from other dimensions will destroy their (uni)verse! ) அதில் வாழும் ஒருவருடைய வெளி தோற்றம் மட்டும் இல்லாமல், அவர்கள் உறுப்புகளும் தெரியும். அவர்கள் உடம்பை தொடாமலே அவைகளுக்கு வைத்தியம் செய்யலாம், இல்லை உறுப்புகளை தொட்டு பார்க்கலாம்! அப்படி ஒரு அண்டத்தில் நாம் திடீர் என்று நுழைந்தோம் என்றால், அவர்களுக்கு நாம் மாயமாய் அங்க வந்ததாக தோன்றும்.

மேற்கொண்டு ஏதும் சொல்லும் முன் மேல சொன்னது புரியணும்.


அதாவது ஒரு பேப்பர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு square, rectange வரைங்க. இப்போ அந்த paper sheet ஒரு 2 dimensional world என்றும், அதில் வாழும் இருவர் நீங்கள் வரைந்தது என்றும், square வந்து males என்றும் rectangle எல்லாம் female என்றும் வைத்தால், இப்போ அந்த square, rectangle ஏ சைட் அடிச்சா எப்படி தெரியும்? அதால height ல இருந்து பாக்க முடியாது. அதுனால, rectangle ஏ முழுசா பாக்கணும் என்றாலே அது அதை ஒரு முறை சுத்தி வந்தா தான் பார்க்க முடியும். உண்மையில அதுக்கு அது ஆணா பெண்ணா (Square or Rectangle) என்பது தெரியவே அதை இரெண்டு angle ல பார்க்கணும்.... (ஆனா நமக்கு அப்படி இல்ல, ஒரு angle பார்த்தாலே சொல்லிடலாம் அது square ஆ rectangle ஆ என்று)

இப்போ அந்த squareக்கு ஏதோ ஆபரேஷன் செய்யணும். அந்த rectangle தான் டாக்டர் அப்படின்னு வைத்தால், rectangle, square ஏ வெட்டினா தான் உள் உறுப்புகளை தொட முடியும். நமக்கு அப்படி இல்ல. நாம நேரா அதோட இதயத்தை தொடலாம். மருத்துவ உதவி செய்யலாம். (நான் சொல்லல, காதலிகள் வேறு dimensionsla இருந்து வராய்ங்க :) ). இப்போ அந்த square கிட்ட, நாம பேச முடிஞ்சு நம்மளுடைய 3 dimensional உலகத்தை பற்றி சொன்ன அதுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது. ஏனா height என்னும் concept அதுக்கு விளங்கவே விளங்காது.

இப்போ 4 dimensional அண்டம் பத்தி பார்ப்போம். எப்படி 2 dimensional உலகத்தில் வாழ்ந்தால், height புரியாதோ, யோசிக்க முடியாதோ, அதே மாறி நம்மலாளையும் 4th Dimension பற்றி யோசிக்க முடியாது. ஆனா அந்த dimesnsion ல வாழும் ஒருவர் நம்மை பார்த்தா எப்படி இருக்கும்? நமக்கும் நம்ம உலகத்தில் வாழும் ஒருவரை முழுசா பார்க்க ஒரு angle of view பத்தாது. உள் உறுப்புகளை தோலை வெட்டாமல் தொட முடியாது! நம்ம மேல கத்தி வைக்காமலே அறுவை சிகிச்சை செய்யலாம்!

Any conscious living being in a n-dimensional verse can only think and comprehend 1 to n dimensions. n+1th dimension will always be beyond comprehension. இது ஒரு Physics law.

நம்மளை சுத்தி பல dimensionsla உலகம் இருந்தாலும் நமக்கு விளங்காது தெரியாது.
ஆனா நாம, நம்மலே தெரியாம அப்படி பல அண்டங்களின் ஒரு சில dimensions ல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்மை விட குறைந்த dimensions கொண்ட அண்டங்களை அழிக்கும் சக்தியும் நம்ம கிட்ட இருக்கு.

மொத்தத்துல இது எல்லாம் தெரிஞ்சு நாங்க என்ன பண்ண போறோம்னு தான கேட்கறீங்க? எல்லாத்துக்கும் நானே பதில் சொல்ல முடியுமா ? :P

ஏதோ புது வருஷம் நல்லா இருந்தா சரி!!!

பி.கு: Post-dated Post!