காமத்துப்பாலும் காதலும்..
மு.கு: என்னடா தலைப்பு அப்படி இருக்குனு யோசிப்பவர்களுக்கு.நம்ம பதிவுக்கு வருபவர்களூக்கு எல்லாம் 18 வயதை தாண்டி விட்டது என தான் நினைக்கிறேன். அதை விட குட்டீஸ் யாரும் இருந்தா ப்ளீஸ் ஸ்கிப் திஸ் போஸ்ட். (Again, under your own discretion). மத்தவங்க படிக்கலாம்.
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு
- அதாவது..தேவதையோ? ஆடும் மயிலோ நகை பூட்டிய இந்த மாதை என் மனதை கொல்ல வந்தவளோ -
என நம்ம வள்ளுவர் காமத்துபாலை ஆரம்பிக்கிறார். நமக்கு உடனே ஒரு சந்தேகம். அதென்ன காமத்துபால்? கொச்சையாக? காதல்னு சொல்ல வேண்டியது தான என்று. அதற்கான பதிலுக்கு சிறிது காலத்தில் பின் செல்லலாம். அந்த காலத்தில் ஆண் பெண் நட்பு என்பது எல்லாம் கிடையாது. அதுவும் காதலில் முடியும் நட்பெல்லாம் சுத்தமா கிடையாது. ஒரு ஆண் பெண் கல்யாணம், சாந்தி முகூர்த்தம் என எல்லாமே நேரம் பாத்து ஜோசியத்தின் படி செய்தனர். அதுல எங்கன காதல் வரும்? கல்யாணம் அன்று முதல் முறை பார்க்கும் ஒருவனை, அன்று இரவே காதலி என யாரும் சொல்லுவார்களா?
ஒரு விதத்தில அப்ப விட, இப்ப தான் நாம காமத்த கொச்சை படுத்தி, Demonise செஞ்சுட்டோம். காதலையே பாதி பேர் அப்படி தான் நினைக்கறாங்க நம்ம ஊர்ல!
எப்படி நட்புக்கும் காதலுக்கும் சில ஒற்றுமைகள் இருக்க்கோ, அதே மாதிரி காமத்துக்கும், காதலுக்கும் உண்டு. ஒரு விதத்தில சொல்லனும்னா, நட்பும், காமமும் இரு கோடுகள் என்றால் அவை சந்திக்கும் அந்த புள்ளி தான் காதல். இரெண்டுமெ தனி தனி வழிகளில் அழகுதான். ஆனல் சேர்ந்தால் தனி அழகு.
அது போக, பார்த்தீங்கனா, வள்ளுவர், களவியலை வந்து, கற்பியல்க்கு முன்னாடி சொல்லறார். ஏன்னு யோசிச்சோம்னா, இப்ப எப்படி நம்ம முதல்ல காதல், அப்புறம் கல்யாணம்னு சொல்றோமே, அதையே தான் அவரும் சொல்லறார். அப்போ, ஆண் பெண் பழகி "காதலிக்கும்" வழக்கம் எல்லாம் இல்லை. காதல் என்பது, கல்யாணத்தின் பொழுது காமத்தில் ஆரம்பித்து, அப்புறம், உடன் வாழ்வதில், நட்பும் வளர்ந்து, அப்புறம் வரும்.
உண்மையில், ஒரே பெயர் சொல்லி அழைத்தாழும், அந்தந்த காலகட்டத்தில், காதல்னா என்னன்ன்னு சமுதாயம் எதை பெரும்பாலும் நினைக்கிறதோ, அது தானே எல்லார் மனதிலும் பதிகின்றது. The collective consciousness of a society and their beliefs acts as a feedback system, reinforcing its own belief again and again.
மேலும் சில குறள்களை பார்த்தோம் என்றால்.. வள்ளுவர், எப்படி காமத்துப்பால் என்று காதலையும் அழைக்கின்றார் என புரியும்..
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
- அதாவது இவன் நோக்கும் போது, அவள் நிலத்தையும், இவன் பார்க்காத பொழுது அவள் அவனை பார்த்தி மெலிதாய் சிரிப்பதுமாய் -
என்பது அர்த்தம். அட, நம்மூர்ல காதலை சொல்லாதவர்கள் இன்னைக்கு கூட இப்படி தானப்பா செய்யறாங்க! இதுக்கு அப்புறம், வள்ளுவர் காமம் பற்றி சொன்னாலும், அவர், அவர் வாழ்ந்த காலத்தைய காமத்ததை சொல்கிறார். திருக்குறள் அர்த்தம் தெரிந்து படிக்கும் எவர்க்கும் தெரியும், அதில் காதலும் கலந்து இருப்பது.
நம்ம காலத்து முட்டாள்தனத்தில் விழாமல், காமத்தை, காதலுடன் இணைத்து எழுதி, காமத்தை நட்பிற்கு இணையாக சொல்லி விடுகின்றார். நட்பை விட காதல் பெரியது. காமத்தை விட காதல் பெரியது. நட்பிற்கும், காதலுக்கும் வித்தியாசம், காமம் நட்பில் இல்லை. அதாவது , X < Z, Y < Z. Z - X = Y. அப்படினா, X + Y = Z. நட்பு மனம் சேர்வது. காமம் மெய் சேர்வது. காதல் இரெண்டுமே சேர்வது.
நம்ம கோவில்களில் கூட வெளிபுறம் சிலைகளில் 'அந்த' மாதிரி சிற்பங்கள் இருக்கும். அதற்கு இரெண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம். Practicality. அந்த காலத்து நபர்களுக்கு இப்பொழுது மாதிரி டிவி, இண்டர்நெட் வசதிகள் கிடையாது. பெரியவர்களும் கத்துகொடுத்துகிட்டு இருக்க முடியாது. அதுனால இது போன்ற இலைமறைவு காய் மறைவு விஷயங்களை கலை எனும் ஆடை அணிந்து, பொது இடங்களில் வைச்சிருந்தாங்க.
இரெண்டாம் காரணம். கோவில்கள் மனதின் பிரதிபலிப்பு. வெளியில் இது போன்ற விஷயங்கள் இருந்தாலும், மனதின் ஆழத்தில் கடவுள் இருக்க வேண்டும் எனும் கருத்திற்கு.
இறுதியா இன்னொரு குறளோட முடிச்சுப்போம்.
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
- அதாவது - நிஜத்தில் நேரில காணாதவரை கனவினிலாவது காண்போம் என என் உயிர் இன்னும் தங்கி இருக்கு - அப்படினு காதலி சொல்லறா.
27 மறுமொழிகள்:
//மு.கு: என்னடா தலைப்பு அப்படி இருக்குனு யோசிப்பவர்களுக்கு.நம்ம பதிவுக்கு வருபவர்களூக்கு எல்லாம் 18 வயதை தாண்டி விட்டது என தான் நினைக்கிறேன். அதை விட குட்டீஸ் யாரும் இருந்தா ப்ளீஸ் ஸ்கிப் திஸ் போஸ்ட்.//
அப்போ அடுத்த பதிவுக்கு வாரேன்.. இப்போதைஇக்கு டாட்டா பை பை.. :-)
அட.. மீ தி ஃபர்ஸ்ட்டூ.. எத்தனை நாள் கழிச்சு.. :-)
As a maths student I strongly disagree to ur equation.
X > Z, Y > Z. Z - X = Y அப்படினா, X + Y = Z
Idhu mutrilum thappu.
5 > 3, 7 > 3 appadina 3 - 5 = 7?? and 5 + 7 = 3???
Enna kodumai saravana idhu? unakku yaaruppa maths solli kuduthadhu?
//ஒரு விதத்தில சொல்லனும்னா, நட்பும், காமமும் இரு கோடுகள் என்றால் அவை சந்திக்கும் அந்த புள்ளி தான் காதல். இரெண்டுமெ தனி தனி வழிகளில் அழகுதான். //
idhu rombavum rasichen :) nalla yosikkara :D
ஹாய் டிரீம்ஸ்,
//அதாவது - நிஜத்தில் நேரில காணாதவரை கனவினிலாவது காண்போம் என என் உயிர் இன்னும் தங்கி இருக்கு - அப்படினு காதலி சொல்லறா.//
சரி எந்த காதலி? யாரோட காதலி இப்படி சொல்றா?
This is one of ur best post I have ever read when you talk about society or in general.
-pria
@மை பிரண்ட்
//அப்போ அடுத்த பதிவுக்கு வாரேன்.. இப்போதைஇக்கு டாட்டா பை பை.. :-)//
ஹா ஹா! சரிங்க மேடம் :)
@வேதா
//நட்பு வேணா கம்மியா இருந்திருக்கலாம் ஆனா காதல் திருமணமெல்லாம் இருந்திருக்குப்பா, ஏன் காந்தர்வ விவாகமே இருந்திருக்கு :)//
உண்மை தான். ஆனால் அவை கூட நட்பினால் உருவான காதல் என சொல்ல முடியாது. அடுத்த வகை தானே?
@G3
//X > Z, Y > Z. Z - X = Y அப்படினா, X + Y = Z
//
என் தப்பு தான். I corrected it now.
should be
x < Z, y < Z, Z - X = y okngala :)
@சுமதியக்கோவ்
//சரி எந்த காதலி? யாரோட காதலி இப்படி சொல்றா?/
வள்ளுவர் காலத்தில யாரோ ஒருத்தி!
@Pria
//This is one of ur best post I have ever read when you talk about society or in general.
-pria//
Glad u likes it :)
D
:-S
ஏன்??
எதுக்கு??
எதனால???
எப்படி??
இப்படி!!
வார்த்தையே வரல பா!!
:-ஸ்
//ஒரு விதத்தில சொல்லனும்னா, நட்பும், காமமும் இரு கோடுகள் என்றால் அவை சந்திக்கும் அந்த புள்ளி தான் காதல்//
superruu Dina.. ithu puriyaama than neraya peru kaadhala natpa nu kozhapikuraanga... nalla vilakkam :)
@CVR
//:-S
ஏன்??
எதுக்கு??
எதனால???
எப்படி??
இப்படி!!
வார்த்தையே வரல பா!!
:-ஸ்//
LOL hehe :) no emotions. relax thala!
@priya ram a.k.a vivid dreamer
//superruu Dina.. ithu puriyaama than neraya peru kaadhala natpa nu kozhapikuraanga... nalla vilakkam :)//
hah :) athu ennamo sari!
ஆய்வும், விளக்கமும் அருமை!
//ஒரு விதத்தில சொல்லனும்னா, நட்பும், காமமும் இரு கோடுகள் என்றால் அவை சந்திக்கும் அந்த புள்ளி தான் காதல். இரெண்டுமெ தனி தனி வழிகளில் அழகுதான். ஆனல் சேர்ந்தால் தனி அழகு.//
//நட்பு மனம் சேர்வது. காமம் மெய் சேர்வது. காதல் இரெண்டுமே சேர்வது.
நட்புக்கும் காதலுக்கும் ஆனா உங்கள் விளக்கமும் அழகு. :-)
நன்று.
காலத்தால் தான் வள்ளுவர் நமக்கெல்லாம் தாத்தா.
காதலில் அவர் இன்றும் இளமையோடு தான் இருக்கிறார் :)
ஹ்ம்ம்ம்... பிரீச்சு மேயறீங்க... ;)))
கிறுக்கல்கள்ல கூட பார்த்திபன் நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம் ரொம்ப அழகா சொல்லியிருப்பார். வரிகள் ஞாபகம் இல்ல :(
//பதிவுக்கு வருபவர்களூக்கு எல்லாம் 18 வயதை தாண்டி விட்டது என தான் நினைக்கிறேன்.//
ஏன் இப்படி எல்லாம் போட்டு என் வயித்து எரிச்சலா கிளப்புற?
// நட்பும், காமமும் இரு கோடுகள் என்றால் அவை சந்திக்கும் அந்த புள்ளி தான் காதல். இரெண்டுமெ தனி தனி வழிகளில் அழகுதான். ஆனல் சேர்ந்தால் தனி அழகு.//
சூப்பரா சொல்லிருக்க.. அதுவும் எனக்கு புரியுற மாதிரி....
Thirukkuralodu,maths(X+Y=Z) combine panni ,adthodu cojam physiology & Psycology combine panni,konjam chemistry chertha inda post vandudum nu nenaikiren.Eppadi en analysis.
மாம்ஸ்.. அவ்வ்வ்வ்... நீங்க மேஜர்தான் ஒத்துக்குறேன்..:)))))
கொஞ்சம் நாளாவே பாக்கறென்.. மாம்ஸே.. லைஃப இப்படி கான்ஸ்டண்ட் ஃபார்முலாவுல அடக்கிட முடியாதுங்கோ...
அப்படி இதுவந்தா,முடிவு இது தான் வரும்ன்னு ஒரு வரையறைக்குல்ல.. அடக்க முடியுமின்னா வாழ்க்கையில தோல்விகளே வராதுங்க..
தப்பா கணக்கு பண்ணிறாதிங்க..
(நாங்களும் குழப்புவோம்ல்ல..:P :))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
என்னவோ புத்திசாலி பெரியவங்கள்ளாம், ஏதேதோ சொல்லறிங்க.. நமக்குத்தான் ஒன்னுமே புரியலை.. என்ன பண்ணறது ஹெட் லெட்டர் அப்படி. வர்ட்டா..ஹிஹி..:)))
(ஆனாலும் மாம்ஸ்.. உங்க ஆய்வும் அதை வகைப் படுத்தி கோர்வையா சொல்லிய விதமும்,சிந்தனையும் ரொம்பவே நல்லாயிருக்கு..:) )
//அதாவது இவன் நோக்கும் போது, அவள் நிலத்தையும், இவன் பார்க்காத பொழுது அவள் அவனை பார்த்தி மெலிதாய் சிரிப்பதுமாய் //
இப்படி எல்லாம் நடந்தா நல்லாதான் இருக்கும்:(((
ஆனா இப்ப எங்க அப்படி?
மிக அருமையான பதிவு!!!
/.நம்ம பதிவுக்கு வருபவர்களூக்கு எல்லாம் 18 வயதை தாண்டி விட்டது என தான் நினைக்கிறேன். அதை விட குட்டீஸ் யாரும் இருந்தா ப்ளீஸ் ஸ்கிப் திஸ் போஸ்ட்.//
appeeatu... :)
thala dreamzz....
kadandha 4,5 post'um konjam mandai ah suthura maaadhiri thaaan iruku...:(.
indha thambi (naaan thaaaan) nalla batting pannura maaadhiri oru post pottah thaaan ennnavaam? :P
Post a Comment