Friday, February 01, 2008

(அழகிய கவிதை - 1) விழியெழுத்து

மு.கு: சொன்ன மாதிரி புதிய கவிதை தொடர். 'அழகிய கவிதை" அப்படினு தொடருக்கு பெயர் வைக்கலாம்னு இருக்கேன்.. என்ன சொல்லறீங்க?



நீ அழைப்பதற்காகவே
தவம் கிடப்பது
நானும் என் தொலைபேசியும்..
யாரை அழைக்க போகின்றாய் முதலில்?

பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..





நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..



தேவன்
நம் தலையில் எழுதுவது
தலையெழுத்து..
தேவதை நீ
உன் விழியில் எழுதியது
விழியெழுத்து..

உன் செல்ல கோபங்களில்
கறையாத
என் பிடிவாதங்களை தேடி
முடிவில்லா
ஒரு பயணத்தில் நான்..



எந்த கவிதை அழகென்று
என்னை கேட்கின்றாய்..
உன் விழிக்கவிதையா
உன் இதழ்க்கவிதையா...
ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்.

விட்டுக்கொடுக்க சொல்கின்றாய்..
நானும் அதை தானடி செய்கின்றேன்..
என்னை விட்டு.. உன்னிடம் கொடுக்கின்றேன்..

78 மறுமொழிகள்:

Divya said...

azhagiya kavithai romba romba.......azhaga irukku dreamzz

Divya said...

puthu kavithai thodara???? supoora irukku arambamey.......thodarattum ungal azhagiya kavithai thodar!!

Divya said...

first comment potathuku oru 'chicken alferedo' togo panidunga!!!

Divya said...

\\பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..\\

kaadhalukum peyerellam vaipangaala??? puthusa irukuthey karpanai!!

Divya said...

\\எந்த கவிதை அழகென்று
என்னை கேட்கின்றாய்..
உன் விழிக்கவிதையா
உன் இதழ்க்கவிதையா...
ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்.\\

nalla than rasikiraru naduvar!!

Dreamzz said...

@Divya
//azhagiya kavithai romba romba.......azhaga irukku dreamzz//
nanringa Divya :) appo peru oknu sollareengala master?

Dreamzz said...

@Divya
//first comment potathuku oru 'chicken alferedo' togo panidunga!!!//
chicken sari.. alfredo yaarunga?

CVR said...

//பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..///
அட அட!!
திவ்யா மேடம்!!

"காதல் என்று பெயரிடப்படாத நமது காதலை பற்றிய நினைவு வருகிறது" அப்படின்னு சொல்லுறாருன்னு நெனைக்கறேன்!!

ஒவ்வொரு பத்தியும் அல்டிமேட்-பா!!
கலக்கற போ!!

அதுவும்
///நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..////

சூப்பரு!! :-D

Divya said...

\\ Dreamzz said...
@Divya
//first comment potathuku oru 'chicken alferedo' togo panidunga!!!//
chicken sari.. alfredo yaarunga?\\

chicken alferedo -> pasta, Italian rest'nt la togo panunga.

Divya said...

hello, evlo naalu than dormant blog lists la enoda blog aa potu vaipeenga,
nan than ippo olunga regular aa post podureuney??

Dreamzz said...

@CVR
//"காதல் என்று பெயரிடப்படாத நமது காதலை பற்றிய நினைவு வருகிறது" அப்படின்னு சொல்லுறாருன்னு நெனைக்கறேன்!!//
CVR.. eppadi ippadi ellam :)
kalakareenga.. ada namma kavidhaiyum puriyuthuppa mathavangalukku :D

//ஒவ்வொரு பத்தியும் அல்டிமேட்-பா!!
கலக்கற போ!!//
nanri thala :)

Dreamzz said...

@Divya
//hello, evlo naalu than dormant blog lists la enoda blog aa potu vaipeenga,
nan than ippo olunga regular aa post podureuney??//
sorry divya. konjam busy.. athaan. maathidaren..

Divya said...
This comment has been removed by a blog administrator.
vivid dreamer said...
This comment has been removed by the author.
Divya said...

\\ Dreamzz said...
@Divya
//hello, evlo naalu than dormant blog lists la enoda blog aa potu vaipeenga,
nan than ippo olunga regular aa post podureuney??//
sorry divya. konjam busy.. athaan. maathidaren..\\

your apology accepted !!

Dreamzz said...
This comment has been removed by the author.
ஷாலினி said...

//நீ அழைப்பதற்காகவே
தவம் கிடப்பது
நானும் என் தொலைபேசியும்..
யாரை அழைக்க போகின்றாய் முதலில்?//

அழைக்காட்டியும் அலைய வைக்காம இருந்தா சரி :P

CVR said...
This comment has been removed by a blog administrator.
Dreamzz said...

@CVற்
//நான் அப்படி நெனைக்கல!!
அது காதல் என்று அறியப்படாத காதலாக இருக்கலாம்!!
நம்மால் புரிந்துக்கொள்ள முடியாததால் ஒன்று இல்லையென்று ஆகி விடாது.//
அட.. ரோஜா என்று அழைக்கா விட்டாலும்.. ரோஜா ரோஜா தான் :)
அழைக்கும் அவசியமும் ரோஜாவுக்கும் இல்லை.. நமக்கும் இல்லை :)

Dreamzz said...

@Shalini
//அழைக்காட்டியும் அலைய வைக்காம இருந்தா சரி :P//
அலைய வைப்பதும்.. அழைத்து வைப்பதும்.. பூமி பிறந்ததில் இருந்து நடந்து கொண்டு தானே இருக்கு... கரைக்கும்.. கடலுக்கும்.. இதில் தவறென்ன சரியென்ன?

ஷாலினி said...

//பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது//
சொன்ன காதல், சொல்லாத காதல், பொய் காதல் , உண்மை காதல் , தெய்வீக காதல் , ஆன்லைன் காதல் , போன் காதல் , time pass காதல் ....போதுமா பேரு.... சீக்கிரம் செலக்ட் பண்ணுங்க

ஷாலினி said...

//நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்//

fantastic !!! ennoda annan matum than ithu maari kalaka mudiyum :)

Priya said...

These are my favorite lines:

பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..

Dreamzz said...

@Pria
//These are my favorite lines:

பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..//
lol.. unga profile picla ullathu enna poo'nga?

கோபிநாத் said...

கவிதை தொடரில் எல்லா கவிதையும் நல்லா இருக்கு ;)


\\நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..\\

இது சூப்பர் ;))

Arunkumar said...

as usual super duper kavidhais...
eppidi dreamz.. kalakkureeenga ponga

//நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்//

chance-ae illa

நிவிஷா..... said...

//
நீ அழைப்பதற்காகவே
தவம் கிடப்பது
நானும் என் தொலைபேசியும்..
யாரை அழைக்க போகின்றாய் முதலில்?//
koopita sari nu sollareengo?

kavidhai ellam arumai dreamz.

natpodu
nivisha

G3 said...

Yaaravadhu konjam vandhu indha bloga clean pannungappa.. Dreamz kavidhaya vutta jollelalm oru kulamavae thengi nikkudhu :P

G3 said...

Kavithai ellam summa nachunu supera irukku :)

Title - Naan un kitta irundhu innum bettera edhirpaakaren :)

G3 said...

Rounda oru 30 :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

அருமையா எழுதுறிங்க Dreamzz!!

k4karthik said...

//'அழகிய கவிதை" அப்படினு தொடருக்கு பெயர் வைக்கலாம்னு இருக்கேன்.. என்ன சொல்லறீங்க?//

உன் கவிதை எல்லாமே அழகு தான்.. இதுல அழகிய கவிதை னு டைட்டில் வேணுமா?

//Title - Naan un kitta irundhu innum bettera edhirpaakaren :)//

அக்காவும் சொல்லிருக்காங்களே..

k4karthik said...

//நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..//

அல்டீமேட் வரி..

பொம்பள சிரிச்சா போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க!! ஹீ ஹீ

k4karthik said...

//உன் விழிக்கவிதையா
உன் இதழ்க்கவிதையா...
ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்.//

அவ்வ்வ்வ்.. இத தானே பழங்காலமா செஞ்சிட்டு இருக்கோம்..

k4karthik said...

உன் கவிதையே என்னை சொக்க வைக்குதே..

k4karthik said...

@g3
//Rounda oru 30 :))//

எங்க அக்காவே இங்க தான் பார்க்கமுடியுது...
நல்லா இருக்கீங்களா?

k4karthik said...

@g3
//Yaaravadhu konjam vandhu indha bloga clean pannungappa.. Dreamz kavidhaya vutta jollelalm oru kulamavae thengi nikkudhu :P//

யக்காவ்.. இங்க குளம் வேட்டுனதே எங்க ஜொள்ளை விடுறதுக்கு தான்..

k4karthik said...

அந்த கடைசி போட்டோ ஸூப்பருப்பா...

k4karthik said...

தொடரட்டும் உன் கவிச்சேவை...!

CVR said...

//Blogger k4karthik said...

அந்த கடைசி போட்டோ ஸூப்பருப்பா... ////
இருங்க அண்ணி கிட்ட சொல்றேன்! :-P

k4karthik said...


ரவுண்டா
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!
நாப்பது!!







k4karthik said...

//இருங்க அண்ணி கிட்ட சொல்றேன்! :-P//

அண்ணி மாதிரி அழகா இருக்கான்னு சொல்லவந்தேன்... அதுக்குள்ள....

CVR said...

//Blogger k4karthik said...

//இருங்க அண்ணி கிட்ட சொல்றேன்! :-P//

அண்ணி மாதிரி அழகா இருக்கான்னு சொல்லவந்தேன்... அதுக்குள்ள../////

அட அட அட!!
பூரிக்கட்டை கிட்ட இருந்து தப்பிக்கறது எப்படின்னு உங்க கிட்ட இருந்துதான் கத்துக்கனும் அண்ணாச்சி!! :-D

Sudha said...

Nice poem.Inda thadavayum Trisha photova mudalla pottu kalakkitenga.

சாம் தாத்தா said...

வாலு... ஒரு வாரம் உடம்பு சரியில்லாம்ப் படுத்திருந்தா...

அதுக்குள்ள இத்தினி பதிவா..?

ஆமா.. எப்படிரா பேராண்டி உனக்கு இத்தனை பெரிய ரசிகர் கூட்டம்.?

எனக்கு ஒரு ஈ.., காக்கா வரல.?

இத்தினி நாள் வந்தவங்க கூட உன் Blog-ல் இருந்து திருப்பி விடப்படவங்கதான்.

(இதுகூட புரியாத ஒரு மக்கா நான் இருந்திருக்கன் பாரு. என்னமோ என் எழுத்துக்குத்தான் இத்தினி மரியாதைன்னு, நினைச்சு கொஞ்சம் ஆணவம் கூட வந்துச்சுப்பா.)

மனசு தளராம முயற்சி பண்ணப் போறேன்.

என்னை அறிமுகப்படுத்தியதுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

நீ நல்லா இருக்கணும்.

இனிமே நானேத் தட்டுத் தடுமாறி நடக்க ஆரம்பிச்சுடுவேன்.

சரியா?

உன்கிட்ட இருந்து நான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டிருக்கேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்//

:-)
இந்த நடுவருங்க எப்படி எல்லாம் பேசி எஸ்கேப்பு ஆவுறாங்கப்பா!

//என்னை விட்டு.. உன்னிடம் கொடுக்கின்றேன்..//

நச்!
விழியெழுத்து-ன்னாலே நச்-னு தானே இருக்கும்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Dreamzz தல
//அட.. ரோஜா என்று அழைக்கா விட்டாலும்.. ரோஜா ரோஜா தான் :)
அழைக்கும் அவசியமும் ரோஜாவுக்கும் இல்லை.. நமக்கும் இல்லை :)//

கவிதை-ன்னா நீங்க பதிவில் மட்டும் தான் சொல்லனும்!
பின்னூட்டத்திலும் நீங்களே கவுஜ சொல்லி ஆக்ரமிச்சிகிட்டா எப்படி?

வேண்டாம் இந்த அராஜகம்!
உங்க கவுஜ ரசிகர்களும் கவுஜ சொல்ல கொஞ்சம் வழி விடுங்க! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..//

//kaadhalukum peyerellam vaipangaala??? puthusa irukuthey karpanai!!//

//"காதல் என்று பெயரிடப்படாத நமது காதலை பற்றிய நினைவு வருகிறது" அப்படின்னு சொல்லுறாருன்னு நெனைக்கறேன்!!//

பூக்கள் - பிடிச்சிருக்கு!
ஆனாச் சொல்லிக் கூப்பிட
அதன் பேர் தெரியலை!!

காதல் - பிடிச்சிருக்கு!
ஆனாச் சொல்லிக் களித்திட
ஒரு வழி தெரியலை!!

உன் கள்ளப் பூனைக்குக் கள்ளீ என்று பெயர் வைக்கிறாயே!
என் உள்ளத்தில் உள்ளதற்கும் நீயே ஒரு பேர் வைத்து விடு, அன்பே!

என்ன கனவுக் கவிஞரே! இதையும் தானே சொல்ல வந்தீக? :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனி "அழகிய கவிதைப்" பதிவில், பின்னூட்டங்களைக் கூட கவிதையாகத் தான் போடனும் என்று காதல் தேச அரசாங்கம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சற்று முன் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன! :-)

Dreamzz said...

@KRS
//இனி "அழகிய கவிதைப்" பதிவில், பின்னூட்டங்களைக் கூட கவிதையாகத் தான் போடனும் என்று காதல் தேச அரசாங்கம் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சற்று முன் வந்த செய்திகள் தெரிவிக்கின்றன! :-)//
ஏன்னா? என்ன இங்க தனியாவே கும்மி அடிக்கறீங்க ;)

இந்த சட்டமெல்லாம் வேறயா..
என்ன பாசம் உங்களுக்கு :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

50!

இது கவிதையான்னு கேக்காதீங்க! :-)
எங்கே இதையும் கவிதை ஆக்குங்க பார்க்கலாம்! :-)

Dreamzz said...

@KRS
//பூக்கள் - பிடிச்சிருக்கு!
ஆனாச் சொல்லிக் கூப்பிட
அதன் பேர் தெரியலை!!

காதல் - பிடிச்சிருக்கு!
ஆனாச் சொல்லிக் களித்திட
ஒரு வழி தெரியலை!!//

கவித கவித
(இரெண்டு பாரா சொல்லி இருக்கீங்கள்ள)

Dreamzz said...

//50!

இது கவிதையான்னு கேக்காதீங்க! :-)
எங்கே இதையும் கவிதை ஆக்குங்க பார்க்கலாம்! :-)//
இது வேறயா..

இது கவிதையா
என்று கேட்டுவிட்டு
கவிதை ஆக்க சொல்கிறாய்..
கவிஞன் தான்
கவிதை ஆக்க வேண்டும்..
கவிதை சொல்வதெல்லாமே
கவிதை தானே

ஹிஹி.... ஓகேயா?

Dreamzz said...

@KRS
And krs anna, thavari.. unga 50 naan adichutten ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவித கவித
(இரெண்டு பாரா சொல்லி இருக்கீங்கள்ள)//

அடப் பாவி...அடுத்த வரிகள் தான் கவுஜயே! ஓ...அத பத்தியா பத்தியாப் பிரிச்சிப் போடலையா? :-)

உன் கள்ளப் பூனைக்கு - கள்ளீ
என்று பெயர் வைக்கிறாயே!

என் உள்ளத்து உள்ளதற்கும் - காதல்
என்று நீயே பேர் வைத்து விடு,அன்பே!

இதைத் தான் "பெயர் வைக்காத
நம் காதல்" ன்னு நம்ம கனவுக் கவிஞர் Dreamzzz சொல்ல வந்தாரு திவ்யா! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

/இது கவிதையா
என்று கேட்டுவிட்டு
கவிதை ஆக்க சொல்கிறாய்..
கவிஞன் தான்
கவிதை ஆக்க வேண்டும்..
கவிதை சொல்வதெல்லாமே
கவிதை தானே
ஹிஹி.... ஓகேயா?//

கனவுக் கவிஞரே!
ஒரு முடிவோடத் தான் இருக்கீங்க போல!
கொட்டட்டும் பூரிக் கட்டை...ச்சே கவிதை மழை! :-)

//Dreamzz said...
@KRS
And krs anna, thavari.. unga 50 naan adichutten ;)//

இதற்குத் தக்க சமயத்தில் பழி வாங்கப்படும்! :-))

Dreamzz said...

@KRS
//இதைத் தான் "பெயர் வைக்காத
நம் காதல்" ன்னு நம்ம கனவுக் கவிஞர் Dreamzzz சொல்ல வந்தாரு//

அடடா.. நான் சொல்லறேனோ இல்லையோ... மத்தவங்க எல்லாம் தெளிவா தான் இருக்கீங்க...

//அடப் பாவி...அடுத்த வரிகள் தான் கவுஜயே! ஓ...அத பத்தியா பத்தியாப் பிரிச்சிப் போடலையா? :-)//
ஆஹா ஆஹா! என்ன ஒரு வில்லத்தனம். சரி பிடிங்க.. இன்னும் ஒரு... கவித கவித :)

Dreamzz said...

@KRS
//இதற்குத் தக்க சமயத்தில் பழி வாங்கப்படும்! :-))//
இன்னுமும் மிச்சம் இருக்கா???????

My days(Gops) said...

//'அழகிய கவிதை" அப்படினு தொடருக்கு பெயர் வைக்கலாம்னு இருக்கேன்.. என்ன சொல்லறீங்க//

பொய்யான கவிதை'னு வைக்கலாமே for a change?

My days(Gops) said...

//நீ அழைப்பதற்காகவே
தவம் கிடப்பது
நானும் என் தொலைபேசியும்..
யாரை அழைக்க போகின்றாய் முதலில்?//

ம்ம்ம்ம் ஒருவேளை கஸ்டமர் சேவையை அழைப்பாங்களோ?

My days(Gops) said...

//பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது//

ஏன் நீங்க காலிப்பளவர்'ய பார்த்தீங்களா?

My days(Gops) said...

//உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்//

பரிசா, வரட்டி எதும் தட்ட சொல்ல'லையே?

My days(Gops) said...

//தேவன்
நம் தலையில் எழுதுவது
தலையெழுத்து..
தேவதை நீ
உன் விழியில் எழுதியது
விழியெழுத்து..//

தமிழில் நாம் எழுதுவது உயிரெழுத்து, மெய்யெழுத்து,

ஆபிஸ்'ல நாம் போடனும் கையெழுத்து

கல்யாண வீட்டுக்கு போன மொய் எழுது...

இத விட்டுடீங்க தல....

My days(Gops) said...

//உன் செல்ல கோபங்களில்
கறையாத
என் பிடிவாதங்களை தேடி
முடிவில்லா
ஒரு பயணத்தில் நான்//

டிக்கெட் எடுத்தீங்களா இல்லையா அந்த பயணத்துக்கு?

My days(Gops) said...

//ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்//

நாட்டாமை தீர்ப்பை மாற்றுங்க....

My days(Gops) said...

//விட்டுக்கொடுக்க சொல்கின்றாய்..
நானும் அதை தானடி செய்கின்றேன்..
என்னை விட்டு.. உன்னிடம் கொடுக்கின்றேன்//

நல்லவேளை உங்கள புட்டு கொடுக்க சொல்லலை... :)

My days(Gops) said...

வழக்கம் போல சூப்பர் உங்க கவிதை...:)

//பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது//

காதலுக்கு பெயர் வைப்பாங்களா?




//நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..//


இது டாப்பு.....

ரசிகன் said...

//விட்டுக்கொடுக்க சொல்கின்றாய்..
நானும் அதை தானடி செய்கின்றேன்..
என்னை விட்டு.. உன்னிடம் கொடுக்கின்றேன்..
//

நச்சின்னு இருக்கு மாம்ஸ்...ரொம்பவே ரசித்தேன்.. இவ்வரிகளை...சூப்பரேய்..:)

ரசிகன் said...

//நீ அழைப்பதற்காகவே
தவம் கிடப்பது
நானும் என் தொலைபேசியும்..
யாரை அழைக்க போகின்றாய் முதலில்?//

//
நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..
//
இது டாப்பு... கலக்கலா இருக்குங்க மாம்ஸ்.. மலரட்டும் அழகிய கவிதை,...

ரசிகன் said...

//உன் செல்ல கோபங்களில்
கறையாத
என் பிடிவாதங்களை தேடி
முடிவில்லா
ஒரு பயணத்தில் நான்..//

அருமையான வரிகள்... வெரி நைஸ்...

Anonymous said...

//உன் செல்ல கோபங்களில்
கறையாத
என் பிடிவாதங்களை தேடி
முடிவில்லா
ஒரு பயணத்தில் நான்..//

me the last????
எனக்குப் பிடித்த வரிகள் இவைதான் dreamz!!!
நல்லா எழுதுறீங்க dreamz!!!
அன்புடன் அருணா

சாம் தாத்தா said...

இல்லை அருணா,
நான் தான் கடைசின்னு நினைக்க்கிறேன்.

சொல்ல முடியாது...!

இந்தத் திருட்டுப்பயல் எல்லாரையும் எழுத விட்டுட்டு,
கடைசியா...

ஹை... நான்தான்
கடைசின்னு போட்டாலும் போடுவான்.

பேராண்டி...!

ஏதோ ஒரு விவரிக்க முடியாத சோகம் உனக்குள்ள இருக்குன்னு நினைக்கிறேன்.

உன்னுடைய
பல கவிதைகளில்
அதை உண்ர்ந்திருக்கிறேன்.

அதை அப்படியே பத்திரமா...
வைச்சிரு.

உன் கவிதைக்கெல்லாம்
அதுதான் அக்ஷயப் பாத்திரம்.

பாசக்காரப் பயலே...

வாழ்த்துகிறேன் உன்னை..!

ஸ்ரீ said...

எல்லாக்கவிதையும் அழகென்றாலும்
“எந்த கவிதை அழகென்று
என்னை கேட்கின்றாய்..
உன் விழிக்கவிதையா
உன் இதழ்க்கவிதையா...
ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்.”
இது தான் பேரழகு. வாழ்த்துக்கள் அருமை.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

ரொம்ப உருகுற...உடம்புக்கு நல்லது இல்ல சொல்லிட்டேன்.ஆனா கவிதை சூப்பர் ;)
அனுபவம் பேசுற மாதிரியே இருந்தது.அவ்வளவு realistic ஆக இருந்ததுன்னு சொல்ல வந்தேன் ;)

Ammu said...

'azhagana'kavithai azhagu.

\\உன் செல்ல கோபங்களில்
கறையாத
என் பிடிவாதங்களை தேடி
முடிவில்லா
ஒரு பயணத்தில் நான்..\\

simply superb!

Li. said...

azhagiya kavithaigall..
(ungalodatha? nu oru kelvi kekanum nu thonudhu.. aanaa enakey theriyum inhdha kavithai ellam sathyama ungalodadhu thaan-nu..)

keep them coming...

p.s Naa kooda kavithai ellam ezhuthuvaen.. adhellam sathyama ennodathu thaan.. :-p

Shwetha Robert said...

'alagiya kavithai'series title is very captive:)

Nice lines:-)