பொம்மை காதல்
மு.கு: கதை கொஞ்சம் நீளமா போயிடுச்சு.. அதுனால எக்ஸ்ட்ரா கல்லெல்லாம் எரியாதீங்க மக்கா!
---------------------------------------------------
இரகசிய கனவுகள் ..ஜல் ஜல்.. என் இமைகளை தழுவுது.. சொல் சொல்... நூறாவது நாளாக ஒரு நிமிஷம் முழுவதாய் பாடி முடித்தும் செல்பேசியை எடுக்கவில்லை அவள். இன்றோடு சரி. இனிமேல் அவளை அழைக்க போவதில்லை என முடிவு செய்தவனாக, மனசு சரியில்லாமல் 7த் கிராஸில் இருக்கும் பார் ஒன்றுக்கு நண்பனையும் வர சொல்லிவிட்டு கிளம்பினேன்.
வருகின்றேன் என சொன்னவனை தேடிக்கொண்டிருந்தன என் கண்கள். அப்பொழுது தான் அந்த சப்தம் கேட்டது.
'ஹார்ப் இருக்கா?'
அட, நமக்கு பிடிச்ச பிராண்ட் என திரும்பி பார்க்க, அவனும் திரும்பி பார்த்தான். 25 வயதுமிக்க இளைஞன். முழுக்கை சட்டை, டை என பக்காவாக உடை அணிந்து இருந்தான்.
ஒரு கணம் கண்கள் சந்தித்துக்கொண்டன.
'வாங்க சார், இந்த டேபிள்ல நான் மட்டும் தான இருக்கேன்.. நீங்களும் வாங்க'
சரி, வருவதாக சொன்னவனை தான் காணோம். 'பார்'இல் மட்டுமே பூக்கும் விநோத நட்பில் ஒன்றாக போகட்டும் என்று அவன் அருகில் சென்று அமர்ந்தேன்.
'ஹாய்.. ஐ ஆம் சூர்யா'
'நான் மதன் சார். ICICI பாங்கில் அக்கவுண்ட் மேனஜராக இருக்கின்றேன். cross cut ப்ராஞ்ச் தான். கண்ணன் டிபார்ட்மண்ட்டல் ஸ்டோர் எதிர்ல..' இப்படியாக அவன் முழு நீள பயோடேட்டாவை உள்ளே ஏத்தி இருந்த சரக்கு வெளியே கொண்டு வந்தது.
திடீரென கேட்டான்.
'காதலிச்சு இருக்கீங்களா சார்'
'ஹ்ம்ம்.. ஆமா...' அவள் என்னோடு பேசி கிட்டதட்ட மூன்று மாதம் ஆகுது. அந்த சோகத்தில் தான் நான் இங்கே வந்திருப்பதை சொன்னேன்.
'என்ன சார் பிரச்சனை உங்களுக்குள்ள'
வெளியாளிடம் அதிகம் சொல்ல விரும்பாமல், சும்மா ஆரம்பித்த சண்டை, ஈகோவில் சிக்கி, காரணமில்லாமல் நீண்டு இப்பொழுது அவள் என்னோடு பேசாமல் இருப்பதும், இனி நானும் அப்படி தான் இருக்க போவதாக எடுத்த முடிவையும் சொன்னேன்.
'அப்படி எல்லாம் விடக்கூடாது சார்.. என்ன இருந்தாலும் அது நம்ம காதல்... நம்ம காதலை நம்மளும் கைவிட்டுட்டா அது அநாதை ஆயிடும்ல..'
'...'
'காதல் கூட குழந்தை மாதிரி தான் சார்.. அது பிறந்து கொஞ்ச காலம், நாம தான் அத கவனமா பார்த்து வளர்க்கனும். விட்டுடோம்னா, அது செத்துடும்.. இல்லை அநாதை ஆயிடும்.. அதே காதல், கொஞ்ச நாள் கழிச்சு, அதை வளர்த்த உங்களையும் உங்க காதலியையும் கையை கெட்டியமா பிடிச்சு சேர்த்து நடக்க வைக்கும்.. ஆனா அதுக்கு நிறைய நாள் ஆகும்...அவ விட்டுட்டு போயிட்டாள் என்று நிங்களும் போயிட்டா?'
'ஹ்ம்ம்..மதன்.. தூங்கிறவங்களை தான் எழுப்ப முடியும்.. தூங்கிறவங்களை போல நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது.. காலம் ஆற்ற முடியாது காயம் எதுவும் இல்ல மதன்.. கொஞ்ச நாளுல சரியாகி விடுவேன்..'
'அப்படி இல்லை சூர்யா. இப்போ அப்பா, அம்மா, குழந்தைனு 3 பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில், குழந்தை இறந்திட்டா, ஒரு 5 வருஷம் கழிச்சு அந்த குடும்பத்தை பார்த்தால், இன்னொரு குழந்தை இருக்கலாம். சிரிச்சிட்டு கூட இருக்கலாம். ஆனா, இழந்த அந்த குழந்தைய நினைச்சு வேதனை அவங்களுக்கு இல்லை. மறந்துட்டாங்கனு சொல்லறது எப்படி மடத்தடமோ, அது தான் காதலுக்கும்... புதைக்கலாம்.. ஆனா அந்த வலி கண்டிப்பா இருக்கும்.. ........நீங்க இன்னும் முயற்சி செய்யனும் சார்'
'அதுவும் சரி தான்'
'....'
சில நிமிட மௌனங்களில் இன்னொரு கிளாஸ் காலி செய்தான்.
'நானும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் சார்'
'அப்படியா? ம்ம்ம் ....உன் கதைய சொல்லு'
'பேர் தெரியாது சார். அவ என் கூட இதுவரை பேசினதே இல்லை'
புருவம் உயர்த்தினேன்..
'ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் ஆகுது..'
'ஹ்ம்ம்... அப்' இடையில் செல்பேசி அடிக்க ஆரம்பித்தது. நண்பன் தான். என்னை அவசரமாய் வெளியே வர சொன்னான். மதனிடம் சொல்லிவிட்டு, என் செல் நம்பரும், காசும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.
'டேய், கடைக்கு வந்துட்டு ஏன்டா வெளிய நின்னுட்டு இருக்க'
'அது சரி.. நீ முதல்ல ஏன் அந்த லூசு டேபிள்ல உட்கார்ந்துகிட்டு இருக்கனு சொல்லு?'
'லூசா???'
'ஆமாம்டா.. அரை பைத்தியம். பாங்கில் வேலை செய்யறான். ஆனா, வேலைக்கு போகும் முன், தினமும் காலையில் பக்கத்தில் இருக்கும் ஆலூக்காஸ் ஜெவல்லரி டிஸ்ப்ளேவில் இருக்கும் மாடல் பொம்மைக்கு ரோஜாப்பூ வைப்பான். ஐ லவ் யூ சொல்லுவான்.... சாயங்காலமும் செய்வான்.. கேட்டால் அது தான் என் காதலினு சொல்லுவான்! லோக்கல் நியூஸ்ல கூட கொஞ்ச நாள் முன்னாடி வந்துச்சேடா. ஒன்றரை வருஷமா இதே அலப்பரை தான்..'
என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றேன்..
'இதுக்கே திகைச்சிட்டியே.. இவன் போன வேலன்டைன்ஸ் டேக்கு என்ன செய்தான் தெரியுமா..' என கதை பேச ஆரம்பிக்க, அப்படியே கிளம்பினோம்..
மறுநாளில் இருந்து முடிவெடுத்தப்படி , நானும் அவளை அழைக்கவில்லை.
சில மாதங்கள் கழித்து
இன்னமும் அவள் வந்து பேசவில்லை. நானும் அவளை மறக்க பல முயற்சிகள் எடுத்து தினமும் தோற்றுக்கொண்டிருந்தேன்.
அன்று அதே பாருக்கு அதே நண்பனை வரச்சொல்லி இருந்தேன். அங்கே சென்றதும், சென்ற முறை அவன் அமர்ந்திருந்த டேபிளில் அவனை கண்கள் தேடின. காணவில்லை.
'என்ன சார்.. மதன் சாரை பார்க்கறீங்களா' பார் செர்வர்.
'ஆமாம்பா'
'அவர் யோக காரர் சார்.. பைத்தியம் கணக்கா பொம்மையை டாவடிச்சிட்டு இருந்தாரு. கடசில நிஜத்தில அந்த பொம்மைக்கு போஸ் கொடுத்த மாடல் பொண்ணுக்கு விஷயம் தெரிந்து, வந்து பார்த்து, லவ்ஸ் ஆகி, கல்யாணம் செய்துகிட்டு.... இப்போ சென்னையில் இருப்பதாக கேள்வி சார்'
கேட்டதும், என்னையும் அறியாமல் சிரித்தேன்.. ஏனோ அழ தோன்றியது. அதனால் சிரித்தேன்.
போதுமான காதல் இருந்தால், தூங்குவது போல் நடிப்பவர்களை மட்டும் அல்ல, இறந்து போனவர்களையும், உயிரற்ற பொம்மையையும் கூட உயிரூட்டி எழுப்பி விடலாம் என அவன் சொல்லாமல் சொல்லி சென்றதாக பட்டது.
உடனே அவள் செல்பேசிக்கு அழைப்பதென முடிவு செய்தேன்.. இன்னமும் அதே ரிங்டோன் பாடல் வைத்திருந்தாள்... ஒலிக்க தொடங்கியது...
இரகசிய கனவுகள் ஜல் ஜ
'ம்ம்ம்' பதில் எதிர்முனையில்.
அந்த விநாடி, மகரத்தை இதை விட அழகாய இசைக்க கூடியவர் எவரும் இல்லாமல் போனார்கள். என் மனதையும் தான்!
அந்த அதிர்ச்சியில் சட்டென்று முழிப்பு வந்தது. கனவு மட்டுமே தரும் ஏமாற்றம் மனதில் மெதுவாக படர தொடங்கியது. என்றைக்கோ பாரில் பார்த்தவன் மதன். அவனுக்கு கல்யாணம் ஆச்சு என்றெல்லாம் கனவு வருதே என சிரித்துக்கொண்டேன். என்னவள் குரல் பல நாட்கள் கழித்து கனவிலாவது கேட்டது, மனதை மெதுவாக குளிர செய்தது.
விடியக்காலை கண்ட கனவு பலிக்கும் என்பார்களே.. அதனால், பல மாதம் கழித்து அன்று அவள் செல்பேசிக்கு அழைத்துப்பார்த்தேன். 'தாங்கள் அழைத்த தொலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை' பதிலாய் கிடைத்தது!
அதன் பின் என் நண்பனை அழைத்து மதனை பற்றி விசாரித்தேன்.
'ஓ அந்த பைத்தியமா, அவனை சிகிச்சைக்கு கேரளாவிற்கு அவன் பெற்றோர் அழைச்சிட்டு போயிருக்காங்கடா.. போய் ஒரு இரெண்டு மாதம் ஆகும்.. ஏன் கேட்கிற' என்றான்.
என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. சிரிக்க தான் தோன்றியது. அதனால் அழுதேன்.
19 மறுமொழிகள்:
ஹா ஹா ஐ ஆம் தி பஸ்ட்டு :) படிச்சிட்டு வரேன்
வேணாம் ட்ரீம்ஸ் நான் மோசமானவன் கெட்டவன். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சிவப்பு நிறம் பத்தியோடு கதையை முடிக்காமல் என்ன பைனல் டச் வேண்டி கெடக்கு? நல்லா இருப்பா. நல்லா இரு. நல்ல மனசு வாழ்த்த மட்டும் தான் தெரியும்.
Hai Dinesh,
காதலை பல பரிமானங்களில் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்க நீங்களும் உங்கள்
காதலும்.
//கதை கொஞ்சம் நீளமா போயிடுச்சு.. அதுனால எக்ஸ்ட்ரா கல்லெல்லாம் எரியாதீங்க மக்கா!//
இதுக்கெல்லாம் கல்லெறிவாங்களா?ஆட்டோ தான் சரி.....
அன்புடன் அருணா
ம்ம்ம்..
நல்ல கதை மாப்பி!!
சாதாரணமா நாம தெருவில் சந்திக்கவே முடியாத பல மனிதர்கள் பாருக்குள்ள தான் இருக்காங்க
இந்தக்க்கதைக்கு மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்ன்னு எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகனும்....
@ஸ்ரீ //
வேணாம் ட்ரீம்ஸ் நான் மோசமானவன் கெட்டவன். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சிவப்பு நிறம் பத்தியோடு கதையை முடிக்காமல் என்ன பைனல் டச் வேண்டி கெடக்கு? நல்லா இருப்பா. நல்லா இரு. நல்ல மனசு வாழ்த்த மட்டும் தான் தெரியும்.
//
ஹாஹா! உண்மைய சொன்னா உனக்கும் பிடிக்கறதுஇல்லையா! மாறுங்கப்பா! நீ இன்னமும் சேலை கொல்லி பொம்மைனு சுத்து. அதுவும் கொல்ல தான் செய்யும் :P
@ Sumathi.
//
காதலை பல பரிமானங்களில் சொல்லி இருக்கிறீர்கள். வாழ்க நீங்களும் உங்கள்
காதலும்.//
நன்றி அக்கா :)
@Aruna
//
இதுக்கெல்லாம் கல்லெறிவாங்களா?ஆட்டோ தான் சரி.....
அன்புடன் அருணா//
ஆட்டோல என்ன வரும் என்பதை பொறுத்து அட்ரெஸ் சொல்லுவேன் :P ;)
@கப்பி
//கப்பி பய said...
ம்ம்ம்..
நல்ல கதை மாப்பி!!
சாதாரணமா நாம தெருவில் சந்திக்கவே முடியாத பல மனிதர்கள் பாருக்குள்ள தான் இருக்காங்க
//
same blood :)
@CVR //
இந்தக்க்கதைக்கு மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்ன்னு எனக்கு இப்போ தெரிஞ்சே ஆகனும்....//
அது தான் சிகப்பு பத்திக்கு கீழ தெளிவா போட்டேனே தலை.காதல் கீதல்னு பைத்தியமா சுத்தலாம். இல்லைனா சிம்கார்ட மாத்திட்டு போய்ட்டே இருக்கலாம். :) வசதி எப்படி?
:@@@@
?????
!!!!!
:(((((
:)))))
\\ G3 said...
:@@@@
?????
!!!!!
:(((((
:)))))
\\
ரீப்பிட்டே ;)
//காதல் கூட குழந்தை மாதிரி தான் சார்.. அது பிறந்து கொஞ்ச காலம், நாம தான் அத கவனமா பார்த்து வளர்க்கனும். விட்டுடோம்னா, அது செத்துடும்.. இல்லை அநாதை ஆயிடும்.. அதே காதல், கொஞ்ச நாள் கழிச்சு, அதை வளர்த்த உங்களையும் உங்க காதலியையும் கையை கெட்டியமா பிடிச்சு சேர்த்து நடக்க வைக்கும்..//
அவ்வ்வ்வ்வ்வ்.....
தத்துவம்ல்லாம் பொழியுதே:P
//Aruna said...
//கதை கொஞ்சம் நீளமா போயிடுச்சு.. அதுனால எக்ஸ்ட்ரா கல்லெல்லாம் எரியாதீங்க மக்கா!//
இதுக்கெல்லாம் கல்லெறிவாங்களா?ஆட்டோ தான் சரி.....
அன்புடன் அருணா//
லாரிதான் பெஸ்ட் சாய்ஸ்ன்னு நான் நினைக்கறேன். அப்போ நீங்க:P
அடேய் பேராண்டி.
கதை சூப்பரு.
வழக்கமான பொண்ணுங்க படம் காணாமே?
தாத்தாவுக்கு ஜொள்ளு விடற பாக்கியத்தைப் பறிச்சுட்டியே?
போ! போ! நல்லாயிரு.
(இதை மனசு வெம்பி வேதனைல சொல்றேன்.)
Nalla kathai!!! Different approach!!!
Post a Comment