Tuesday, December 25, 2007

உன்னை நினைக்கவில்லை..



சூரிய கதிர்கள் தீண்டுகையில்
விழிகள் அறியா தூரத்தில்
உன்னையும் சூரியன்
தொட்டு எழுப்பி இருப்பான்
என நினைக்கவில்லை..

காலை எழுந்ததும் முதலில்
மனதில் உன்னை நினைக்கவில்லை..

உணவு சாப்பிட்டால்
நீ சாப்பிட்டு இருப்பாயா?
என தோன்றவில்லை..

வீட்டில் சிரித்து பேசினால்
உன் சிரிப்புகள்
ஏதும் நினைவு வரவில்லை..

ஏதேனும் வரி தொலைத்த
பாட்டை கேட்டால்..
உன் முகம் மனதில் நிற்கவில்லை..

அழகானவை எதுவுமே
உன்னை நியாபகபடுத்தவில்லை..

கனவினில் வந்து
காயங்களும் செய்யவில்லை..

நிலவின் வெப்பத்தில் கூட
நினைவுக்கு வரவில்லை நீ..

இந்த பாழாய் போன
இதயத்துடிப்புகள் மட்டும்
உன்னை நினைவூட்டாமல் இருந்திருந்தால்....

Sunday, December 23, 2007

சுப்புனி நான் பெங்களூர் பேசறேன் ராஜேஷ்ல இருந்து..



நம்ம வாழ்க்கையில தினமும் எத்தனையோ பேரை பார்க்கிறோம்.. சிலரிடம் சிரிச்சு பேசுவோம்.. சிலரை மறு நாள் மறந்து விடுவோம்.. சிலர் எவ்ளோ நாள் தெரிந்தவர்களாக இருந்தாலும் அன்னியவராகவே இருப்பார்கள்.. ஆனா திடீர்னு ஒருத்தங்க வருவாங்க.. நம்ம வாழ்கை ஸ்தம்பிச்சு நிற்கும்.. நம்ம வாழ்க்கையின் தடங்கள் மாறும்.. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பின் பிரதிபலிப்பு தான் இந்த வீடியோ.. தலைப்பு.. ஏனோ தெரியல திடீர்னு பிடிச்சு போச்சு.. அதான்!

Short post தான்! Wish you all a Merry Christmas!

Thursday, December 20, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்



அதிகம் பேசுவதில்லை மலர்கள்..
அதில் மௌனங்கள் கூட
உறங்கித்தான் கிடக்கும்..

என்றேனும் ஒரு நாள்
எழுப்பி விடும் நம்பிக்கையில்...
தொடர்ந்து வீசும் தென்றல்....

தென்றலே
உண்மை தெரியுமா?

இதழ் திறந்து காத்து இருக்கையில்
மௌனங்கள் பலனில்லை மலர்க்கும்..
--------------------------------------------------------------------------



பூவே...

இடைவெளி இன்றி பேசி கொண்டிருந்தாய்..
பிடித்தது..
இதழ் தொட்டு பறித்து கொண்டேன்..

விரல் தீண்டியதில்
விழித்து கொண்டது
உறங்கி கொண்டிருந்த
உன் மௌனங்கள்..

இப்பொழுதோ
ஓயாமல் மௌனம் பேசுகின்றாய்..
என்ன சொல்லி தூங்க வைப்பேன்
விழித்து கொண்ட யாவையும்!

-------------------------------------------------------------------



வெற்று இதயங்கள்..
அர்த்தமில்லாத பேச்சுகள்..
காகித பூக்கள்..

பூக்களில்
உறங்கும் மௌனங்களை எழுப்ப முடியும்..
இதயங்களில்
உறங்குவதாய் நடிக்கும் மனங்களை?

--------------------------------------------------------------------


பி.கு: நச்சுன்னு ஒரு கவிதை போட்டிக்கான தலைப்பில் எழுதினது தான்.. :) இதில் முதல் கவிதையின் கடைசி இரெண்டு வரிகள் இதற்கு முன்பே நான் எழுதி இருந்தாலும்.. இங்க Conceptku நல்லா பொருந்துச்சு என்பதால்..


Wish you all a merry Christmas and a Happy New year folks!!!

Monday, December 17, 2007

மயிலிறகு காயங்கள்..



என்னை மட்டும் தான்
கொன்று செல்வதாய்
நினைத்து இருந்தேன்..
ஆனால்
என் கோபங்களையும்
சேர்த்து கொல்கின்றாய் நீ..

உன் பிடிவாதங்கள்
எல்லாம்
பிடித்து போனபின்
எங்கே செல்வேன் நான்
உன்னாலான காயங்கள் சொல்ல..

உன்னுடனான என் கோபங்கள்
இன்று அவள் வரட்டும்..
என காத்திருக்க...
உன் குரல் கேட்டதும்
எங்கே சென்று விடுகின்றன
என்னிடம் சொல்லாமல்?



நான் வெண்மேகம்
நீ நீர்த்துளி..
நீ சேர்வதில் கனமாகிறேன்..
நீ பிரிவதில் கலைந்து போகின்றேன்..

ஒரு நிமிடம்
என நீ மறைந்து போகின்றாய்..
நீ இல்லாத ஒரு முழு நிமிடத்தில்
துடிக்க மறுக்கும்
என் இதயத்தின்
வலிகள் புரியுமா உனக்கு?






எனற்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டி..
சிரிக்கின்றாய்..
உனற்கும் பிடித்திருக்கா?
இல்லை
பைத்தியம் என எண்ணியா?

உனற்கான காத்திருப்புகள்
காயங்கள் செய்யும்
என நினைத்து இருந்தேன்..
காதலிக்க சொல்லும்
என எவரும் சொல்லவில்லையே..




இடிகள் இன்றி
மழைகள் இல்லை..
ஊடல் இன்றி
உறவு ஏது?

உன் வார்த்தை வருடல்களில்
ஏற்படும்
மயிலிறகு காயங்களில்
தினமும்
செத்து எழுந்திடும்
ஓர் வரம் வேண்டும்..

Friday, December 14, 2007

புது வருட தீர்மானங்கள் -AND- கலாய்த்தல் திணை!

Tagged by Sudhakar :) பாசமா ...கொலை வெறியா?

எனக்கு விவரம் தெரிஞ்சு நான் எடுத்த முதல் தீர்மானம் வாழ்கையில தீர்மானம் எல்லாம் எடுத்து நேரத்த வீணடிக்க கூடாது! தோணினா செய்யணும்! தேவை பட்டா செய்யணும்! நாலு பேருக்கு நல்லதுனா செய்யணும்!(அந்த நாலு பேருல நான் ஒருத்தனா இருக்க வேண்டியது முக்கியமான point!) அப்படின்னு தான்! அதுக்கு அப்புறம் எந்த தீர்மானமும் எடுத்தது இல்லை!

அதுனால நிஜமாவே ரொம்ப நேரம் யோசிச்சும் இதுக்க என்ன எழுதனு தெரியல!அதுக்காக விட முடியுமா? (டேய், இதெல்லாம் என்னடா அநியாயம்!). அதுனால நான் பதிவு உலகத்துக்கு வந்த பிறகு பல பேரு கிட்ட பேசி பழகி இருப்பதில் கிடைத்த சில adviceகளை பாப்போம்! கொடுத்தவங்க நியாபகம் இருந்த வீட்டுக்கு ஆள் ஆட்டோவிலோ, ஏரோபிளேநிலோ அனுப்பாம, சிரிச்சிட்டு மறந்திடனும்!

கலாய்த்தல் திணை! இனி ஆரம்பம்!

1. பொண்ணுங்கள சைட் அடிக்கலாம். ஆனா ஒரு முறை தான் பார்க்கலாமாம். இன்னொரு முறை பார்த்தா தப்பாம்! இத? (அதே பொண்ண திரும்ப வரும் போது பார்த்தா? அதுக்காக பாக்கிற பொண்ணுங்க கழுத்தில போர்டா மாட்ட முடியும்! ஒரு முறை பார்த்துட்டேன்னு? என்ன கொடும டா இது? மம்மி! என்னை அடிக்க வராங்க!)

2. தேவதை கவிதைகளில் நடிகைகள் படம் போட கூடாது. - இத? (அப்பறம் நம்ம படத்தயா போடறது? இல்ல தெரிஞ்சவங்க படத்த போட முடியுமா? பொதுவா ஒரு படத்த போட்டா கூட விடமாட்டாங்களே! நிறுத்தணும்! எல்லாத்தையும் நிறுத்தணும்!)

3. கவிதை போடரதையே நிறுத்தணும்! - இத? (தமிழ் சேவைல யாருப்பா கை வைக்கிறது? வளர்க்க விடமாட்டாங்களே!)

4. தலைப்புகேல்லாம் தமிழ்ல பேரு வைக்கணும்! இத? (ஆமா, ஏற்கனவே சினிமாக்கு எல்லாம் தமிழ்ல பேரு வைக்க சொல்லி மான்யம் கொடுத்து தமிழ் வளர்ப்பதற்கு நான்காவது சங்கத்த திறந்து இருக்காங்க! இது ஒன்னு தான் இப்ப பாக்கி! ஏன்டா, இதுக்கு வைக்கிற ஒத்தை பேருல தமிழ் வளர போகுதா? ஒரு வேளை இதுக்கும் பணம் கொடுப்பாங்களோ??... சின்ன பிள்ளை தனமால இருக்கு!)

5. tag போட்டா அதோட விதிமுறைகளை ஒழுங்கா கடைபிடிக்கணும்! இத? (டேய்!, நான் எல்லாம் நாலாவது வகுப்புல பிட் அடிச்சவேன்! என் கிட்ட இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசின கோபம் வரும்! நாம இங்க நடத்திற olympics க்கு இது ஒன்னு தான் இப்ப குறைச்சல்!)

6. எதையாச்சும் எழுதி இது கவிதை, இது கதை னு நானே சொல்லிக்க கூடாது! இத? (இதுக்காக தனிய ஆளா appoint பண்ண முடியும்? சொன்னாலே பலருக்கு புரியறது இல்லை! எங்கடா கதைன்னு கேட்கறீங்க ;))

7. பதிவ எழுதிட்டு போன பதிவுல இது இல்லைன்னு கவலை பட்டீங்க. அதுனால இத போட்டேன் அப்படின்னு பீலா விடாம, தோணுச்சு எழுதினேன்னு dejenta சொல்லணும்! இத? (ஏற்கனவே கல் எரியறது பத்தாது! இதுல சில பேரு மேல பாரங்கல்லு செங்கல்லு போடலாம்னு எல்லாம் கூட்டம் கூடி பேசறாங்க! இதுல இப்படி உண்மைய போட்டேன்! ஒருத்தன் நல்ல இருந்தா விட மாட்டேன்களே..)

8. தத்துவம் சொல்லறதை நிறுத்தனும்! இத? (G3 சுடுவத நிறுத்தட்டும், வேதா கவிதைய நிறுத்தட்டும்,CVR போட்டோ பிடிக்கறதை நிறுத்தட்டும், கோப்ஸ் ஆங்கிலத்தில் தமிழை நிறுத்தட்டும்,புலி உறுமுவதை நிறுத்தட்டும், ரசிகன் ஆப்பு வைக்கிறதை நிறுத்தட்டும், மத்தாப்பு திவ்யா ஐடியா கொடுக்கிறதை நிறுத்தட்டும்... அப்புறம் நாம யோசிக்கலாம் )

9. அடுத்தவங்களை அதிகமா கலாய்க்க கூடாது! இத? (நானா கலாய்கிறதா? அப்படினா என்ன? ஒண்ணுமே புரியல!)



சரி கடைசியா மேட்டருக்கு வருவோம்! (அடப்பாவி! அப்போ மேல சொன்னதெல்லாம்?) பொதுவா நாம யாரையும் tag எல்லாம் பண்ணுவது இல்லை! ஆனா இந்த முறை! இவங்களுக்கு எல்லாம் ஆப்..ஐ மீன் taggu..!
1. வேதா
2. CVR

3. Divya
4. G3
5. Rasigan


எதோ நான் தான் இப்படி போட்டு ஏமாத்திட்டேன்.. நீங்களாச்சும், முன்னால link எல்லாம் பார்த்து ஒழுங்கா போடுங்கப்பு!.. (ஹேய் யாருப்பா, சொல்லிட்டு ஆரம்பிக்கணும்! பேசிகிட்டு இருக்கும் போதே கல்லு எரியற?).

Monday, December 10, 2007

இன்னமொரு காதலி கவிதை!

மு.கு: போன கவிதைல சோகம் இல்லைன்னு கவலை பட்ட நண்பர்களுக்கு,

மெலிதான சிரிப்புடன்
மெதுவாக வெட்டுகிறாள்..
நீங்கியதும்
உதட்டில் சிரிப்பு
மனதில் வலி..


என்னை பார்த்து
சிரிப்பது புரிந்தது..
எகைப்பா
நகைப்பா
நீ தான் சொல்ல வேண்டும்..


அணு அணுவாய்
கொன்று விட்டு
நாளை வருகின்றேன்
என்கிறாய்..
மீண்டும் கொல்லவா?
மீட்டு செல்லவா?


தோல்வி பயத்தில்
தோழமை என்கிறாய்
காத்திருக்கும் தைரியத்தில்
காதல் என்கிறேன்..


சுட்டெரித்த பூக்களின்
எண்ணிக்கை தெரியுமா
சூரியனுக்கு?

காதலி
காத்திருக்கும் வலி..



பி.கு: இவங்க பதிவு தான் இந்த கவிதைக்கு Inspiration. மிக மிக ஆழமான கவிதைகள். இவங்க கவிதை பத்தி இந்த வார இறுதியில் ஒரு பதிவு காத்திருக்கு!

Sunday, December 09, 2007

தேவதை பொய்கள்



எனற்கு நானே சிறைசாலையா?
அப்படிதான் சொல்லுகின்றது
என் இதயம்
உனை கண்ட பின்..

சில கேள்விகளுக்கு
மௌனம் பதில்
சில கேள்விகளுக்கு
கண்ணீர் பதில்
என் எல்லா கேள்விகளுக்கும்
நீயே பதில்..



எல்லா நாளும்
உன் விழி விடியல் கொடு
இல்லை ஒரே நாள்
உன் விழி மடியல் கொடு..

அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!



உன் கூந்தல் வழி நிலவு
உன் கொலுசொலியில் கலையும் உறக்கம்
உன் நககீறல் தழும்பு
ஒரு முறையேனும் இறப்பதற்குள்..

இமை மூடியதும்
வந்து நிற்கும் நீ..
இமை திறந்ததும்
மறைந்து போகும்
மாயம் சொல்லி கொடு எனக்கும்..



உனற்கென எழுதியது
என நானும்
எனற்கென பிடித்தது
என நீயும்
சொல்கையில்
எது பொய்? எது மெய்?

விழி பேச்சு வேறாகவும்
மொழி பேச்சு வேறாகவும்
தேவதையும் பொய்கள் சொல்லும்..

Thursday, December 06, 2007

மீண்டும் ஒரு அழகான "அவன் அவள்" குட்டி கதை..

"என்ன ஆசைடா உனக்கு? சொல்லு" கொஞ்சுவதாய் அவள்.
"அழகான குட்டி வீடு.. ரெண்டு குழந்தைகள்.. போதுமான அளவு பணம்.. ஓரளவு நல்ல வேலை ... அப்புறம் நிம்மதி.." அவன்.
"அப்ப உனக்கு நான் வேணாமா?" கொஞ்சம் செல்ல கோபமாய் அவள்.
"நீ இல்லாம நிம்மதியா எனக்கு?" பதிலுக்கு அவன்.
"அப்ப நான் இல்லைனா நிம்மதியா இருக்க மாட்டியா?" கேள்விகள் அவளது.
"கொஞ்ச நாள் கவலை படுவேன் அப்பறம் வேற figure பிக் அப் பண்ணிப்பேன்" நக்கலாய் அவன்.
"நீ பண்ணாலும் பன்னுவடா.. seriousa சொல்லு.. என்ன பண்ணுவ.. நான் இல்லைனா?"
அவள்.
"ம்ம்ம்.. நீ இல்லனா.. கொஞ்ச நாள் கவலை படுவேன்.. அப்புறம் அம்மா சொல்லற பொண்ண பாத்து கட்டிபேன்..!" அவன்.
"அடப்பாவி.. போடா. பேசாத.." அவள்.
"இத பாருமா.. நம்ம காதல் உண்மைனா கண்டிப்பா அந்த காதல் நம்மல
சேர்த்து வைக்கும்.. எனக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல.. நாம பிரிந்தால் என்ன அர்த்தம் .. உன்னை விட நான் வேற எதையோ ஒன்றையும்.. என்னை விட நீ எதையோ ஒன்றையும் ஆசை படுற னு தான.. அது career, Money, Family இப்படி எது வேணும்னாலும் இருக்கலாம்.." அவன்.
"அப்ப உன்னை காதலிச்சா வேற எது மேலயும் ஆசை படாம உன் கூட வரணுமாக்கும்?" அவள்.
"இல்ல.. காதல் நம்ம வாழ்க்கைக்கு வலிமை சேர்க்க கூடியதா இருக்கும்.. அது புரியர மன பக்குவம் உனக்கோ எனக்கோ இல்லாம போச்சுனா நமக்குள்ள வந்த காதலே ஒரு கேள்வி குறி.. I am not meaning we should love as per our convenience. But I am meaning True Love has no hindrance. என்னை கல்யாணம் பண்ணிக்கணும் என்பது மாற்ற முடியாத கருத்தா ஆயிட்ட.. you will make the others bend to this. இல்லனா நம்ம காதல தான் அதுங்களுக்கு விட்டு தரனும்.. தரலாம் தப்பில்லை.. ஆனால் அது போல ஓர் காதலில் எனக்கு நம்பிக்கை இல்லை.." அவன்.
"போடா என்னமோ சொல்லி குழப்பற..எனக்கு ஏற்கனவே காதல் மேலேயே நம்பிக்கை இல்லை.." அவள்.
"ஹேய் இது என்ன புதுசா.. என்ன காதலிக்கிற தான?" அவன்.
"என்னப்பா விளையாடுற.. சும்மா விளையாட்டுக்கு தானா அப்படி பேசினோம்.. I donot believe in லவ்.. நண்பர்களாய் பழகினோம்.. பேசினோம்.. அப்படியே பிரிவோமே.." அவள்.
"ஹேய் என்ன சொல்லற..
---------------------------------------------------
"டேய் உன்னை எவ்ளோ நேரம்டா எழுப்புவேன்.. சீக்கிரம் எழுந்து கிளம்புடா.. என் ஆபிசுக்கும் நேரம் ஆச்சுல.. இன்னைக்கு night வேற படத்துக்கு போலாம்னு சொன்ன.. சீக்கிரம் போனா தாண்டா ஏதாச்சும் காரணம் சொல்லி சீக்கிரம் வர முடியும்.." அவள்.
"அப்ப என்ன நிஜமா காதலிக்கிற ஹையா!" அவன்.
"ஆமா.. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆச்சாகும் உனக்கு தெரிய.. இந்த லட்சணத்துல லவ் marriage வேற நமது.." அவள்.

கனவுகள் பொய் ஆகலாம்.. நிஜங்களும் ஆகாத வரை..
பி.கு: ஆமா, இது குட்டி கதை( ok.. அது என்ன அழகான கதை? அதாவது, கதைல வர அவள் அழகா இருப்பானு ஒரு நம்பிக்கை தான்! :D

ithukku munthaiya soga version padichanvanga atha ellam manasula vechukaatheengappa! post pathividugayil manasu sariilla. but konja nerathula thelivaitomla! :D nammala kulappa ellam inime thaan piranthu varanum ;)

Thursday, November 29, 2007

கவிதையே சொல்லவா...

மு.கு: இந்த முறை நிஜமாவே எனக்கும் அவளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது! சும்மா சின்னதா ஒரு கதையும் கவிதையும் கலந்து! ("கலந்ததால ரெண்டுமே இல்லாம போச்சு!" அப்படின்னு எல்லாம் சொல்ல கூடாது!)



அவள்: உன் வருங்கால மனைவி கிட்ட இருந்து என்னடா எதிர்பாக்கின்ற?
அவன்: (இப்படி கேட்டதுக்கு இவ feel பண்ணனும்.. எடுத்து விடுடா!)

அழகில் வடித்தெடுத்த தேவதை தேவை இல்லை
காலை விழி பார்க்கும் முகதாட்சண்யம் போதும்

உயிரை உருக்கும் தமிழ் பேச தேவை இல்லை
மனதை மருகவைக்கும் உரையாடல் போதும்

இன்னொரு தாயாய் எனக்கு இருக்க தேவை இல்லை
என் தாய்க்கு இன்னொரு மகளாய் இருத்தல் போதும்..

ஒத்த மனக்கருத்து உடையவள் தேவை இல்லை
மற்ற கருத்தை மதிக்க தெரிந்தால் போதும்..

இதில் எதுவுமே தேவை இல்லையடி
என்னை நீயும் ..உன்னை நானும்
முழுமுதலாய் காதல் செய்வதாய் ஆனால்..

அவள்: அழக இருக்க வேணாமா? அழகா இல்லன பசங்க sight கூட அடிக்க மாட்டீங்க! எங்கன காதலிக்க போறீங்க?
அவன்: காதலுக்கு மனசுக்கு பிடிக்கணும்! கண்ணுக்கு இல்ல! உண்மை தான், அழகு பாப்போம், ஆனா அது just oru first impression. அதுக்கு மேல எத்தனயோ இருக்கு!
அவள்: like?
அவன்: you!
அவள்: ஆஹா! எனக்கேவா!
அவள்: அப்பறம் தமிழ்ல கவிதை எல்லாம் எழுதற! தமிழ் பேசும் பொண்ணு வேணாமா?
அவன்: மொழிகள் முக்கியமில்லை! மனதின் புரிதல்கள் அவசியம்.. மனசே புரிஞ்சதுனா கவிதை எல்லாம் எதுக்கு சொல்லு!
அவள்: அப்புறம் குழந்தை தேவை இல்லையா? தாய் வேணாம்னு சொன்ன!
அவன்: அப்படி சொல்லல! எனக்கு ஏற்கனவே ஒரு தாய் இருக்காள். இன்னும் ஒரு தாய் தேவை இல்லை! ஆனால் என் தாய்க்கு மகள் வேணும்னு சொல்ல வந்தேன்..
அவள்: அப்புறம் அது என்ன முழுமுதல் காதல்? கேள்வி பட்டது இல்லையே..
அவன்: எந்த ஒரு மனிதனும் குறைகள் இல்லாம இல்லை. அந்த குறைகளோட சேர்த்து நேசிப்பதாக இருக்கணும் காதல். நிறைகளை மட்டும் நம்பி வர கூடாது! அப்புறம் ராமர் மாதிரி மக்களுக்காக மனைவியை எரித்தால் அதுல முதல் காதல் மக்கள்! மனைவி இல்லை. அது மாதிரி இல்லாம வாழ்வின் முதல் காதலா இருக்கணும்! அது தான் மொத்தமா - முழுமுதல் காதல்!

அவளும் அவனுமாய் பேசி அவர்களாய் பிரிந்து சென்றார்கள்..வீட்டுக்கு.

பி.கு: அட பல நாள் கழிச்சு சந்தோஷமான முடிவா? சில பிரிவில் கூட சந்தோஷம் இருக்குங்க!

Wednesday, November 28, 2007

நட்பெனும் காதல்....

**UPDATE - Must read post! check this out!


மு.கு: "லூசாடா நீ" அப்படின்னு கேட்கும் அளவு உரிமையுள்ள அன்பு அக்கா G3, அப்புறம் "நான்" ( ;) )அப்படின்ற ஒரு கதா பாத்திரமும் பேசும் நிஜம்.. உங்கள் கருத்து சொல்லுங்கப்பா கமெண்ட்ல!


Gayathri: சரி உன்னை கேக்கணும்னு நினைத்தேன்.. அது என்ன கமெண்டு வேதா போஸ்ட்ல? பையனும் பொண்ணும் நெருங்கி பழகினா நட்பா இருக்கவே முடியாதா?
நான்: அதுக்கு உன்மையில பதில் எனக்கு தெரியாது. I cant logically comprehend .. ஆனா எனக்கு நெருங்கிய தோழிகள் இருக்காங்க and i dont love them but என்ன சொல்ல? எல்லாமே ஒரு அளவுக்கு தான் என நினைக்கிறேன். மிகவும் நெருக்கமான ஒரு ஆண் பெண் நட்பின் அடுத்த படி காதல் என்பது என் கருத்து.
Gayathri: லூசாப்பா நீ? இவ்ளோ தெளிவா confuse பண்ணற?
நான்: ஹிஹி thanks
Gayathri: அப்போ ஒரே பொண்ணு 4 பசங்களோட closea பழகினா அதுல யார் propose பண்ணாலும் ஒத்துகனுமா? என்ன கொடும இது?
நான்:ஒரு பொண்ணு 4 பசங்களோட close ஆ பழகலாம் but if she ever gets a lover that circle of closeness is closer than what she had with those 4 இல்லையா?
Gayathri: obviously
நான்: அந்த level of closeness க்கு only one தான் போக முடியும். அது இந்த நாலு பேருல ஒருத்தரா இருக்கலாம் இல்லாம போகலாம்.. உண்மைய சொல்லனும்னா எனக்கும் புரியல..
Gayathri: hmm.. அந்த நாலு பேருல யாருக்காவது அந்த level தோன்றி இவளுக்கு தோனல என்பது தான் வேதா சொல்ல வந்தது.
//உண்மைய சொல்லனும்னா எனக்கும் புரியல..// - LOL :)
நான்: yeah but அது தான் ஏன்னு கேட்கிறேன்? why do girls think some ppl are good enough to be frnds but not good enough to be lovers. Friendship என்பது ஒரு உயிருள்ள ஜீவன் மாதிரி.. பிறக்கும், வளரும், ஒரு நாள் கொஞ்சம் கொஞ்சமா குறையும், தேயும்..
Gayathri: lover and frnds are completely diff angles. friendshipku தகுதின்னு நினைக்கிற எல்லாரையும் காதலிக்க முடியாது!
நான்: see நீங்க தகுதின்னு word use பண்ணறீங்க. So அத தான் நானும் சொல்லறேன். she thinks அவனுக்கு நண்பனா இருக்க தகுதி இருக்கு, ஆனா காதலனா இருக்க இல்லைன்னு ?
Gayathri: obviously. not that everyones minsdset gets well with everyone. சிலருக்கு அவங்க partner ரொம்ப matureda இருக்கனும்.. சிலருக்கு innocenta இருக்கணும்.. but friendshipku அவ்ளோ perfect qualifications தேவை இல்லை
நான்: accepted agreed.. அதே தான் நானும் சொல்ல வந்தேன்.. friendhsip தான் உயர்ந்தது nee friendshipku துரோகம் பண்ணிட்ட..
Gayathri: u accept the person as they are.
நான்: ....அப்படின்னு ஏன் சொல்லணும்?
accept and tell the truth that u do not consider him to have the quality u expect in ur partner..
Gayathri: hehe.. இதுல i accept to ur point.. friendship is not higher than love
நான்: அப்பறம் அடுத்த விஷயம் girls expect the friendship to continue .. i mean this is the most ridiculous thing.. first they hurt the guy by rejecting the love but then they still want to have the "normal" happiness of friendship :P
Gayathri: அது கொஞ்சம் லூசு தனம் தான்.. i too accept அது ரொம்ப கஷ்டம் .. its better to part after that
நான்: i think it is selfishness
Gayathri: hmm.. என் கதையில் நான் அதனால் தான் அதுக்கப்புறம் 1st லவர் character பத்தியே சொல்லி இருக்கமாட்டேன் .. its actually tough to be on that side
நான்: எல்லாமே ஒத்துகிட்ட நீங்க என் கட்சி தான!
Gayathri: எனக்கு அந்த ஒரு பாயிண்ட் தான் உதச்சிது.. good enough to be a friend and not enough for a lover னு சொன்னியே . .அதான் கேட்க வந்தேன். .அப்போ யார் love propose பண்ணாலும் ஒத்துகனுமா?
நான்: அப்படி கிடையாது but stop being close to a guy if you wouldnot accept him. donot let his friendship to grow.. Unless it is obvious he is in love with someone else.. why do you wait until it reaches the critical part .. where he expects it to grow and u expect it to stagnate because u r selfish
and dont want to lose the intermediary happiness?
Gayathri: அந்த level தெரியாதது தானே problem. யாரும் அவனுக்கு இப்போ இப்படி தொனலாம்னு guess பண்ணிட்டு உட்கார்ந்து இருப்பதில்லையே
நான்: ஒரு பையன பாத்து அப்பப்ப hi சொன்னா ஓகே.. எல்லா weekendum
அந்த பையனோட சுத்திட்டு அப்பறம் சொன்னாக்க? பசங்க அப்படி இல்ல if we consider someone as a potential we make it clear in the beginning we dont make friends unnecessarily or let them get too close so engalku இவ்ளோ closea பழகினா..
Gayathri: nyayamaana kelvi. every weekend ஒருத்தரோட சுத்தின இந்த problem genuine தான்.. naan generalla group friendship pathi pesinen.. nee thaniya 2 per mattum பழகுவத பத்தி சொல்ற
நான்: we think it is ok nu
Gayathri: ஆஹா.. இவ்ளோ preplanneda லான் relationa start பன்னா அது normala இருக்கும்னு நினைக்கியா
நான்: இது preplanned இல்ல this is normal for guys
we dont unnecessarily get closer to each and everyone நல்லா யோசிச்சு பாருங்க எப்போவுமே ஒரு பொண்ணுக்கு அதே levela clossea நாலஞ்சு பசங்க friendsa இருப்பாங்க
ஆனா அந்த பசங்களுக்கு ஒரு பொண்ணு தான் இருப்ப மத்தவங்க இருந்தாலும்
they wont be of the same level
Gayathri: accepted
நான்: ஹிஹி இதை சொன்னா பொண்ணுங்க லேசுல ஒத்துக்க மாட்டாங்க :D
Gayathri: aaha.. இது வேறயா ? எனக்கு correctunu தோணுச்சு ஒத்துக்கிட்டேன் :)
நான்: ஹிஹி நானும் யோசிச்சு பாத்து இருக்கேன்
எனக்கும் அது தான் தோணுச்சு
so unless i am presented with logical
arguments to the contrary
i will go with this
:D
Gayathri: aaha.. தெளிவா தான் இருக்க. இரு proofoda யாரவது வருவாங்க :)
நான்: :P
logicala ஒத்து போகணும்
there is a certain level of attraction in any male female relation
enbathu freudian truth
that cannot be denied
so, சிலர் அவங்களையே decieve ..
Gayathri: fraudian trutha :P
நான்: ;)
lol
Gayathri: :))
நான்: hehe
next postuku matter கிடைச்சுச்சு
இத copy paste பண்ணிடலாம்
:D
Gayathri: aaha.. தத்துவம்னு sonna அதுக்குள்ள topic மாறிடுச்சா ?
நான்: hehe இது தான் போட்டு வாங்கிறது
Gayathri: என்னத்த வாங்கின ? எல்லாத்தையும் நீ தான் போட்ட :P
நான்: hehe நீங்க ஒத்துகிடீங்கள்ள so பெண்கள் rep ஆ g3ye ஒத்துகிட்டாங்க அப்படின்னு ad போட்டுட மாட்டோம் :D

பி.கு: பொதுவா ஆண் பெண் என பேசினாலும், இரு பாலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

Friday, November 16, 2007

தேவதை பருவம்

மு.கு:: இதற்கு முந்தைய தேவதை தொடர்கள்..
1. தேவதை ஊர்வலம் 2.தேவதை கனவுகள்
3.தேவதை தரிசனம்
4.தேவதை யாசகன்

காணல் பருவம்
வெறும் சிரிப்பென
நினைத்து விதைத்தது தான்..
இன்று பரந்து விரிந்து
மனமெங்கும்
காடாய் நிறைந்து நிற்கின்றாய்
நீ..

"நான் எழுதும் யாவும்
வெறும் எழுத்தாகத்தான் இருந்தது..
அது கவிதையானது எல்லாம்
நீ படித்ததில் தான்.."

என கவிதை சொன்னதும்
"அழகா கவிதை சொல்றடா,
என்னடா வேணும் உனக்கு" என்கிறாய்....
தேவதையிடம் வரம் கேட்கலாம்..
தேவதையையே கேட்டால்?


தீண்டல் பருவம்

சின்ன வயதின்
நிலவை தொடும்
ஆசையெல்லாம்..
ஏனோ நினைவூட்டுது
நம் முதல் தீண்டல்.

மூங்கிலாய் கிடந்தேன்..
உன் விரல் பட்டதும்
புல்லாங்குழல் ஆனேன்..
உன் இதழ் பட்டால்?


ஊடல் பருவம்

"உன் மனசுல என்ன நினைச்சுகிட்டிருக்க?"
பதிலையே கேள்வியாக கேட்க
உன்னால் மட்டுமே முடியும்..
தலையசைக்கும் நான்.

தன் கோபத்தில்
பாதி உலகை
அழித்தானாம் சிவன்..
உன் கோபத்தில்
எனை முற்றிலுமாய்
எரித்தாய் நீ..


பிரிதல் பருவம்

கல்லாகி காத்திருக்கவும்
செய்வேன்..
சிற்பியாக நீ
செதுக்க வருவதானால்..
நீயோ
உன் இதயத்தை கல்லாக்கி
நம் காதலை
செதுக்கி போகின்றாய்..


உனற்கான என் கவிதையாவும்
பிரிதலில் முடிந்தாலும்
உனற்கான என் காதல் மட்டும்
பிரிந்தாலும் முடியாதது..

Sunday, November 11, 2007

அழகிய தமிழ் பொய்கள்..

என்னென்னவோ சொல்லறோம்... இத சொல்ல மாட்டோமா?
மு.கு: There are no spoilers!

இந்த ஊர்ல வந்ததுல உருப்படியா நடக்கும் ஒரு விஷயம், முதல் வாரமே டிக்கட் ஈஸியா கிடைப்பது தான்! படத்தின் பலம்.. விஜய். விஜய்யை மட்டுமே நம்பி படம் எடுத்துள்ளார் டைரக்டர். விஜய் பிடிக்காதவங்க - நம்ம ஷ்ரேயா அக்கா முழுசா நல்ல துணி வாங்க கூட காசில்லாம ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சு இருக்காங்க... - அவங்களுக்காகவாச்சும் பாருங்கப்பு! இரெண்டுமே பிடிக்காதவங்க, இந்த படம் எப்படிடா ஓடுது அப்படினு தெரிஞ்சிக்க பார்க்கலாம்
(படத்துக்கு எததனை காலுனு எல்லாம் கேட்க கூடாது .. சொல்லிட்டேன்)

சரி படம் மேட்டர் அவ்வளவே...

தலைப்புக்கு வருவோம்.. திரும்ப தலைப்பு குடுத்து கவிதை எழுத சொன்னா கொல விழும்னு தெரியும்! அதனால அதையும் நம்மளே எழுதுவோம்...



காதல்
சாதலில் பாதி
என விலகி இருந்தேன்
வாழ்தல்-இலும் பாதி
என புரியவைத்தாய்..

காதலை சொல்கையில்
மறுத்து பேசும்
உன் உதடுகளில் உதிர்வது
அழகிய தமிழ் பொய்கள்..

கல்லாய் கடவுளும்
காதலி உன் இதயமும்..
கலியுக கொடுமை!

பி.கு: போட்டோல ஷ்ரேயா நல்லா இருக்கோ இல்லையோ, அந்த கலர் ட்ரஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதனால போட்டது!

அப்புறம் நம்ம பதிவ படிச்சு...
உன் கிண்டல் பேச்சு
ஒரு போலிக்கோபம்
அதில் எந்தன் மூச்சு
கொஞ்சம் நின்று போகும்

நம் காதல் கணங்கள்
உந்தன் குறும்பு சினங்கள்
விளையாடும் நம் இரு மனங்கள்
காரணம் சில அழகிய தமிழ் பொய்கள்..


-இதை எழுதியது நம்ம C.V.R

Wednesday, November 07, 2007

தீபாவளி.....நியூயார்க்கில்..

முதல்ல தீபாவளி வாழ்த்துக்கள் மக்களே!


நியூரார்க் - ஜொலிக்கும் நகைகள் அணிந்த பூமகள்.. இருட்டாத பகல்கள்.. Unruly Pedestrians and Drivers!

இதோ கொஞ்சம் படங்கள்...







Friday, November 02, 2007

நியூயார்க் நகரம்... உறங்கும் நேரம்

மக்களே, யாராச்சும் அடுத்த வாரம் 6,7,8 அங்கன இருப்பீங்களா?
நான் வரேன்...............................!

Wednesday, October 31, 2007

கவிதை M.A

எங்கடா பரிசு அப்படினு எல்லாரும் துரத்தி விரட்டி.. இப்ப இங்க... இப்படி...

மதித்து கவிதை எழுதின எல்லார்க்கும் நன்றி. கவிதைகள் குழந்தைகள் மாதிரி. 5 குழந்தைல, இது தான் ரொம்ப நல்ல குழந்தைனு எப்படி சொல்லுவேன்? ஒவ்வொன்றும் ஒரு விதம்...

மு.கு:: ஆக்சுவல் பரிசுகள் என்னுடைய 75வது பதிவில் கொடுக்கப்படும்.
அட நிஜமாங்க!


//சப்தமில்லாமல் அசைவது சலனமாமில்ல - ரசிகன்//
இந்த வரிகள் அசத்தல்...

//நொடிகள்புரண்டும் நிறுத்தமறுக்கும்
உன் விழிப்பட்ட சலனமட்டும்... - ஜி//
நச் வரிகள்...

//கல்லெறிந்தவனின் குற்றமோ
அனுமதித்த உன் குற்றமோ - வேதா
..// என மொத்த கவிதையிலும் ஆழ கருத்துக்கள்..
அருமை...

//மனதுக்கு இனியவள்!
அருகில் அம்சமாய் நான்
மரிக் கொழுந்தாய் மச்சினி! - அம்பி//
ROFL! கவிதையில் நகைச்சுவை தூவி..

//என் தனிமையின் முகவரி
தேடிப்பிடித்து என் முன் வந்தாள் - C.V.R
// சீக்கிரம் வருவாங்க! வாழ்த்துக்கள். உங்களுக்காக ஒருத்தி எங்கேனும் பிறந்து வளர்ந்து காத்திருக்கின்றாள். தேடினாலும், தேடானாலும், பார்த்தாலும், இல்லாலும், கிடைப்பாள்.. கிடைக்கும்.



சரி, சமாளிச்சாச்சு. இனி மேட்டர்க்கு. போன வாரம் மட்டும் 78 மணி நேரம் வேலை பார்த்தேன்.. இந்த வாரம் கொஞ்சம் பரவாயில்லை. வேலை கொஞ்சம் கம்மி..

ம்ம்..இன்னைக்கு தான் தமிழ் M.A படம் பார்த்தேன்... எல்லா படமும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்த படம் மனதில் உறங்கி இருக்கும் பழைய நினைவுகளை தட்டி எழுப்புகின்றது. எவ்வளவு சின்ன முடிவுகள்... எவ்வளவு எளிதாய் உலகம் மாறுது!

சின்ன வயசுல என்ன ஆகனும்னு கேட்டப்ப, தமிழ் வாத்தியார்னு சொன்னவன் நான். தமிழ்னா உயிர். ஆனா தமிழ், 12வதோட போச்சு. தமிழ் படிச்சு இருந்தா இப்படி தான், 2000 ரூபாய் சம்பளத்துக்கு இருந்திருப்பேனோ? தமிழ் இனி மெல்ல சாகும் னு சொன்னாங்க. நாமளே கொல்லுவோம் என்பதை மறைப்பதேன்...?

கற்றது தமிழ்..... அழகு. அழகு எப்போதும் மகிழ்ச்சியை தருவதில்லை. உண்மைகள் இனிப்பதில்லை.

இந்த உலகத்தில் பொய் மட்டும் இல்லனா... அழகு ஏது? அதிசயம் ஏது? ....

love marriage னா, பொருள் வராது.. பொண்ணு வரும்..Arranged marriage னா பொருள் வரும்.. பொண்ணு?(ணோட மனசு) வருமா.... ? படத்தின் நச் வசனங்கள்..

"Unbutton me", "Touch me here If you Dare" போன்ற வசனம் எழுதி, பாரதி கண்ட புதுமைப்பெண், ஆண் வர்க்கத்தின் egoism அதை தவறாக பார்ப்பதாக சொல்கின்றாள். பெண்ணாக இருக்கனும் என்பது என் கருத்து. (இது பெண்களிம் சுய உரிமையை மறுக்கும் கருத்தல்ல. ஆண் பெண் சமம் என்பது முட்டாள்தனம். இருபாலர்க்கும் சில ஏற்றத்தாழ்வுகள் உண்டு. they compliment each other. Trying to be masculine doesnt make feminine equal to it.. nor greater... nor lesser... How can Yin and Yang be equal or one better than the other? But yes they are opposing forces of the same balance. என்பது என் மனப்பான்மை. தவறாயிருக்கலாம்)

வண்டியில் போகும் போது காதலி தோளில் சாய்வாள் பாருங்க. ஒரு நிமிஷம் இதயம் நிற்கும். எப்பவாச்சும் உங்களுக்கு இந்த நிமிஷத்தோட செத்திடனும்னு தோன்றி இருக்கா?
5 வருஷமா பழகி காதலிச்ச பொண்ணு தோளில் சாய்ந்தால் கண்டிப்பா தோணும்..
ஆணும் பெண்ணும் தொட்டுப் பேசறது இப்போ சாதாரணமாயிருக்கலாம். ஆனாலும் கூட...
ம்ம்ம்ம்... என்ன சொல்ல... சில விஷயங்களை விளக்க முடியாது.. உணர வேண்டும்..
உண்மையின் பிரதிபலிப்புக்கள்... சினிமாவிலும்.

தைரியமாக படம் எடுத்த டைரக்டருக்கும், producerக்கும், நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கின்றது தமிழுலகம். இப்படி பட்ட படங்களை ஊக்குவித்தால் தான், தமிழ் பட கலாச்சாரம் கொஞ்சமாச்சும் மாறும். (எங்க வீட்டுல என்னை தவிற யாருக்கும் பிடிக்கல என்பது வேற மேட்டர்!).. நடிகரின் நடிப்பு ... 10/10. அப்புறம் யாருப்பா அந்த பொண்ணு. So cute!

ஏப்பா, 2000 வருஷமா இருக்கும் மொழிப்பா.. அவ்வளவு லேசில் போகாது! அப்படினு வேதாந்தம் பேசாதீங்க. > 2000 வருஷமா இருந்த civilisation - Native Americans. ஒரு 200 வருஷத்தில், சுவடில்லாமல் அழியவில்லையா?

ஆரம்பம் ஆன எல்லாத்துக்கும் முடிவுண்டு. மறுப்பில்லை. எனக்கும், உங்களுக்கும்.. தமிழுக்கும். ஆனால் சில விஷயங்களுக்கு ஆரம்பமே இல்லை. தமிழை எப்ப நேசிக்க ஆரம்பிச்சேனு எனக்கு தெரியாது.

ஏனோ தெரியவில்லை
காதலுக்கான
அணைத்து முயற்ச்சியும்
விரிசலில்.. விலகலில்
(எழுத்து பிழைகளோடு)
முடிகின்றது.
இப்பதிவு
என் காதலுக்கான
கடைசி சந்தர்ப்பம்..
தங்குவாளா தமிழ்?

Wednesday, October 17, 2007

சலனம் பேசுகின்றேன்..

பிறப்புரிமையா? பிறவிக்குணமா? கண் கூசும் சூரியன் இருக்கும் போதும், கண் குளிரும் சந்திரன் இருக்கும் போதும், நட்சத்திரங்களை தேடச்சொல்லும் இந்த சின்ன குரல்...

சாமிக்கு படைக்கும் முன் எடுத்து சாப்பிடக்கூடாது எனும் அம்மாவின் அதட்டல்களையும் மீறி, கொஞ்சம் வாயில் போட்டு சாப்பிடுவதில் இருந்து... வெளியில் பொகும் போது, பார்க்கும் பிகரை நம்மையும் அறியாமல், ஒரு வினாடி ரசிப்பது வரை...

இதை ஏன் சலனம்னு சொல்லறோம்? அமைதியாக இருக்கும்ம் ஏரியில் கல்லை எரிந்தால் சல சல்னு தண்ணீர் சத்த்ம் போடுமாம். அதுனால சலனம். அதுமாதிரி அமைதியாக இருக்கும் மனதில் ஏற்படும் சலசலப்புகள்..
(நல்லா கேட்டுகோங்கப்பா.. கல்லு மேல தான் குத்தம்.. ஏரி என்ன பண்ணும்?.. அதே மாதிரி மனசு என்ன செய்யும், கொஞ்சம் அழகு கம்மியா படைக்க்க சொல்லி பிரம்மன் கிட்ட complaint பண்னுங்க..)

ஆமா நீ என்ன சொல்ல வர? ஹிஹி! என்ன எழுதலாம்னு யோசிச்ச பொழுது, இந்த தலைப்பு தோன்றியது... ஆனா மேட்டர் எதுவும் தோணல... அடப்பாவி.. அப்ப மொக்கையா??
சரி வந்தது வந்தீங்க ஒரு சின்ன போட்டி.

இந்த பதிவோட தலைப்புக்கு குட்டியா ஒரு கவிதை எழுதனும்.. எழுதினா என்ன தருவ? முதல்ல எழுதி கமெண்ட்டுங்க... அப்புறம் சொல்லுறேன்... கண்டிப்பா பரிசு உண்டு !

நட்சத்திரமும் அழகு தான்.. மறுக்க முடியாது..

Monday, October 08, 2007

காதல் தீ..

..

ழி தடுக்கி
விழுந்த போதெல்லாம்
எழுந்து போனேன்..
உன்
விழி தடுக்கி
விழுந்த போதுதான்
எரிந்து போனேன்...





தேனி

தழ் திறந்து
காத்திருக்கையில்
மௌனங்கள்
பலனில்லை
மலருக்கும்..





அம்மாவாசை


நிலவை காண
நீ காத்திருக்கையில்..
நீ இருக்கின்றாய்
என
நிலவின் விடுமுறை நாள்..



விலையேற்றம்



ன் அழகை
கூட்டாவிடினும்
தங்கம்
விலை கூடுதடி
உன் தீண்டலில்..

(ஹிஹி.. இது காதல் கவிதை மாதிரியும் எடுத்துக்கலாம் ... அதாவது பெண்கள் நகை அணிவதால் தான் நாளுக்கு நாள் தங்கம் விலை கூடிக்கொண்டே போகின்றது என இன்னொரு கருத்து.. அத சொல்ல வந்தேன்பா!)

Wednesday, October 03, 2007

விண்மீனாய்..

எப்போதும் போல ஒரே கவிதை எழுதாம, மூன்று குட்டி கவிதை..

விண்மீனாய்..


வாழ்க்கையெல்லாம்
இருட்டில் வாடி
வாழ்ந்து வந்தேன்..
வின்மீனாய் விழியிறங்கி
என் வழியெங்கும்
வெளிச்சமூட்டினாய் நீ...






ஒரு இதயம்




மனிதனுக்கு
ஒரு இதயம் போதுமாம்!
உன் இதயத்தை
இரவல் கொடு எனக்கு..
உனக்காக
நான் துடிக்கின்றேன்..





தீண்டாமை கொடுமை!




எங்கோ இருக்கும்
மேகத்தின் அழுகையெல்லாம்
கவனிக்க தெரிந்த உனற்கு..
அருகில் இருந்தே
அழுது கொண்டிருக்கும்
என் காதலின் அழுகை
கேட்காதது ஏனோ?

Tuesday, September 25, 2007

இராமரில் இருந்து கொலம்பியா வரை..

--மு.க:: அரசியல் பதிவு. சொந்த கருத்துக்கள். constructive arguments are welcome. If you belong to the category -- You do not agree and cannot comment constructively, please donot comment. Saves me the trouble of deleting them.

நிறைய பேர் ஏன் வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை என்று இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
நம்ம முதலமைச்சர் என்னவென்றால், இராமர் இல்லை என்று சொல்லுகின்றார். இதே மற்ற மதக்கடவுள் பத்தி பேச மாட்டார். பேசினா இருக்க மாட்டார்.
அவர் நிஜமான - நியாயமான - ஆத்திகவாதியா இருந்தால் "இயேசு இல்லை" அப்படினு அறிக்கை விடசொல்லுங்க! நீங்கள் மதங்களை பொய்யென்பதால், மக்களின் நம்பிக்கை பொய்யாகி விடாது!

சிலர் , சேது சமுத்திர திட்டத்தால் வரும் நன்மைகளை உணராமல் இது தான் சாக்கு என்று, மத பேத பிரச்சாரம் செய்து மத்தியில் ஆட்சிக்கு ஆப்பு வைக்க பார்க்கின்றார்கள்!

What is the extent of the damage done to the rock formation because of the project? Is it technically feasible to minimise it to acceptable amounts? இதெல்லாம் யாரும் யோசிப்பதில்லை. யோசிச்சா அதுனால ஓட்டு கிடைக்காதுல!

"நீ ஒரு கேவலமான அயோக்கியத்தனமான சர்வாதிகாரி" என ஒரு நாட்டின் பிரதமருக்கு அறிமுகம் கொடுக்கின்றார் ஒரு சிறிய, சாதாரண பல்கலைகழகத்தின் முதல்வர். அவரின் நாட்டின் முக்கிய "தீவிரவாதிகளின் எதிர்ப்பு கூட்டணி" பாகிஸ்தான். (Isnt this the biggest joke?). அவரின் நாட்டின் பிரதமர் பொய் பேசுபவர். ஊழல் செய்பவர். (தெரியாதவங்க Bush பற்றி வந்த Farenheit9/11 படம் பார்க்கவும்). ஒரு நாகரீக அறிமுகம் செய்ய கூடாதா? நமது ஜார்ஜ் Fernandes மத்தியில் அமைச்சாராய் இருந்த பொழுது அமெரிக்காவில் துகில் உரியப்பட்டு சோதனை செய்ய பட்டது நினைவுக்கு வருகின்றது. I mean i donot care about that guy, but being an Indian central minister (defence??) must mean something.. shouldnt it?

ஈரானின் பிரதமரா, Holocaust is a myth என்று புலம்பிட்டு இருக்கார். I mean come on, it happened 60 years ago. 1000's of people died. Is it a myth? If you want your arguments to be heard, you must argue reasonably!

இவனுங்களுக்கெல்லாம் நிஜமாவே அறிவு இல்லையா? இல்லை அரசியல் நாடகமா?

We donot want to chose between American Imperialism nor Islamic Fanaticism என்று ஒரு போர்டு வைத்திருந்தார்கள் இங்கு. அதை "We do not want to chose between capatalisst Imperialism nor Religious fundamentalissm" என்று மாற்றனும்!

சென்னையில் கூட "We do not want to choose between "Ridiculing a religion because we can get away with it" nor "Opposing everything because we are dumb and cannot think" " அப்படினு யாராச்சும் போர்டு வைங்கப்பா!

Friday, September 07, 2007

தேவதை யாசகன்..

ஆண் பெண் சமம்
என தான் நானும் சொல்லிவந்தேன்
உனை பார்த்ததும் தான் தெரிந்தது
பெண் ஆணினும் மேல் என்று...

ம்ம் என்னும்
ஒற்றை தலை அசைப்பில்
எனற்கான எத்தனை வாழ்க்கைகளை
படைக்கிறாய் நீ..





மண் மழையில் நினைந்து
வரும் மண்வாசனை
விண் மழையில் நினைந்து
வரும் பலவர்ண வானவில்
நீ மழையில் நினைகையில்
மட்டும்
ஏனடி எனக்கு காய்ச்சல்..

நீ என்ன
மின்னலில் இறங்கிய தேவதையா?
உன் ஓரச்சிரிப்பில்
என் எல்லா எண்ணங்களையும்
எரித்து கருக்கி விட்டு
நீ மட்டும் நிற்கின்றாய்
தனியாய் முழுதாய்..

எத்தணை கூட்டத்திலும்
உனை கண்டதும்
தாயை கண்ட குழந்தையாய்
அதிவேக துடிப்புகளை
தொடங்குகின்றது என் இதயம்





காற்றின் மீது பொறாமை வருமா?
பறக்கும் உன் முடிக்கற்றை
இறக்கும் என் இதயம்..











எனற்கான உன் சிரிப்பையும்
உனற்கான என் உலகத்தையும்
தொலைத்து வந்தேன்
உனற்கான உன் சிரிப்பிற்க்கு..

முழுமதி ஆகும் முன்னமே
தேய்பிறை ஆவதேன்
நமக்கான எல்லாமும்

நட்சத்திரத்தை தொட முயன்ற
மேகமானது என் கனவுகள்
காற்றோடு கரைவது
மேகம் மட்டும் இல்லை

காதலில் தான் புரிய ஆரம்பிக்கும்
கவிதைகளும் வலிகளும்...

Tuesday, September 04, 2007

வினையிதுவோ....சுதந்திரமோ..

மு.க: எப்பவும் போல கதை மையம் சூர்யா. நிஜத்துக்கும் கற்பனைக்கும் இடையேயான மெல்லிய கோடுகளை தழுவி.. ரொம்ப சின்ன கதை தான். (படிச்சிட்டு, கதைனு சொன்னியே எங்கனு யாரும் கேட்கபடாது சொல்லிட்டேன்!)

அன்று:
அவன் பேர் சூர்யா. காலேஜ் படிக்கிறான். சிக்கன், மீன் எல்லாம் ரொம்ப பிடிக்கும். கூட படிக்கும் பையன் கார்த்திக். பிராமிண பையன். அசைவம் எல்லாம் சாப்பிட மாட்டான்.
சூர்யா பல முறை அவனிடாம் ஏன் சாப்பிட மாட்ட என்று விவாத்தித்து பார்த்தான். ஒன்னும் நடக்கல. ஒரு முறை கார்த்திக் வீட்டுக்கு வந்த பொழுது கத்திரிக்காய் ப்ரை என்று சிக்கன் துண்டை கொடுத்து விட்டான். கார்த்திக்கும் சாப்பிட்டு விட்டான். அப்புறம் காலேஜில் அதை சொல்லி ஒரே சிரிப்பு.

இன்று:
சூர்யா. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் கம்பெணியில் வேலை செய்கின்றான். கூட வேலை ப்ர்ப்பவர்கள் வெள்ளைகாரர்கள். சாப்பிடும் பொழுது எல்லாரும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள்.
ஒரு நாள் Lasagne என்று ஏதோ ஒன்றை (It is something like pasta) கொண்டு வந்த பக்கத்து சீட்டு stephen, கொஞ்சம் சாப்பிட சொல்லி கொடுத்தான். சாப்பிட்டு பார்த்தான். நல்லா இருந்தது. கடைசில தான் தெரிஞ்சது அது Beef போட்டு செய்தது என்று.

என்றும்..
எது சாப்பிடலாம், எது சாப்பிடக்கூடாது என்பது விவாதமில்ல. விவாதங்களுக்கு முடிவு கிடையாது. The most important point is to have the choice. We donot want some one else deciding / arguing / compelling us what to eat and what not to eat - or anyother thing for that matter. இது தானங்க சுதந்திரம். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தில இருந்து ஆரம்பிக்கும். எது சரி எது தப்பு என்பது இல்லை. அதை செய்யாலாமா வேண்டாமா என்பது (அடுத்தவரை negative ஆக பாதிக்காத வரை) நம் முடிவாக இருக்க வேண்டும். அடுத்தவர் கட்டாய படுத்த கூடாது. அதுவே உண்மை சுதந்திரம்.

Thursday, August 30, 2007

பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3

(On Sept 1st)


என்னடா எல்லாரும் பிறந்த நாளுக்கு கேக் போடுவாங்க.. எதுக்கு ஆகாயம்?
உலகித்தின் எல்லா இடத்திலும் இருக்கும் ஆகாயம் போல்,
உங்கள் வாழ்க்கையின் எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் இருக்கனும் என்பதற்காக தான் :)



எப்பவும் எல்லார்க்காகவும் வாழ்த்து பதிவு போடுறது நீங்க! So , இந்த பதிவு உங்களுக்கே டெடிக்கேட்டட்!

(இனி பொது தத்துவம்)
அப்புறம் ஆகாயம் மேட்டர் இன்னும் முடியல. சில சமயம், நாமளே வீட்டுக்குள்ள அடைந்து கிடந்து, ஆகாயம் இல்லனு நினைப்போம்.. வெளியில வந்தா கண்டிப்பா ஆகாயம் இருக்கும்.
ஆக, எந்த தருணத்திலும், சந்தோஷம் நீங்கள் காண காத்து இருக்கு....
கதவை திறந்தால் காற்று வரும்..
மனதை திறந்தால் மகிழ்ச்சி வரும் அப்படினு சொல்லிட்டு, நான் அப்பீட்டு!


G3 க்கு இன்னொரு சல்யூட். Wish you a very Happy Birthday (Advanced)

Thursday, August 23, 2007

அன்னை தெரஸா - தெரிவது என்ன?

முழுசா படிக்காம என்னை குற்றம் சொல்லாதீங்கப்பா!



Article reference : http://www.time.com/time/world/article/0,8599,1655415,00.html

இந்திய பத்திரிக்கைகளில் வந்ததானு தெரியல. அன்னை தெரஸாவும், அவரின் சேவையும், கடவுள் பக்தியும் அறியாதவர்கள் இந்தியாவில் இருப்பது கடினம்.

கடவுள் இருக்காரா என்பது, நமக்கெல்லாம் எப்படி பெரிய புதிரா இருக்கோ (சரி, atleast எனக்கு), அதே மாதிரி தான் இவங்களுக்கும் இருந்திருக்கு! கடைசி வரைக்கும்!! தன் கடவுள் நம்பிக்கையின் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கிறார்கள்..

இதோ அவர் எழுதிய கடிதம்


"Lord, my God, who am I that You should forsake me? The Child of your Love — and now become as the most hated one — the one — You have thrown away as unwanted — unloved. I call, I cling, I want — and there is no One to answer — no One on Whom I can cling — no, No One. — Alone ... Where is my Faith — even deep down right in there is nothing, but emptiness & darkness — My God — how painful is this unknown pain — I have no Faith — I dare not utter the words & thoughts that crowd in my heart — & make me suffer untold agony.

So many unanswered questions live within me afraid to uncover them — because of the blasphemy — If there be God — please forgive me — When I try to raise my thoughts to Heaven — there is such convicting emptiness that those very thoughts return like sharp knives & hurt my very soul. — I am told God loves me — and yet the reality of darkness & coldness & emptiness is so great that nothing touches my soul. Did I make a mistake in surrendering blindly to the Call of the Sacred Heart?"


இது ஒரு சாம்பிள் கடிதம். இது போல தன் நம்பிக்கை பற்றி சந்தேகங்களை பல கடிதங்கள் எழுதியதாகவும், அதை வேளியே வெளியிடாமல், அழித்து விட வேண்டிக்கொண்டதாகவும் சொல்கின்றது அந்த article.


என்னடா இது? அப்படினு ஒரு நிமிஷம் முழிக்க தோணுது.
One Aggravated Assault every 34 seconds
One Property Crime every 3 seconds
One Violent Crime every 22 seconds
One Larceny Theft every 5 seconds
One Auto Theft every 27 seconds
One Burglary every 15 seconds
One Murder every 34 minutes
One Robbery every 1 minute
One Rape every 6 minutes
அப்படினு World Staatistics சொல்லுது. இதெல்லாம் நடக்கும் போது எங்கப்பா கடவுள்? ஏன் இவங்களை எல்லாம் காப்பாத்தல? (மேல உள்ளது சின்ன லிஸ்ட்.. இன்னும், பசினால சாகிறவங்க, suicide அப்படினு நிறைய இருக்குல!)

என்ன சொல்ல வர? கடவுள் இல்லைனா? அப்படினு கேட்கறீங்களா? அது தான் இல்லை!

காந்தி, நேரு முதல், அன்னை தெரஸா வரை, எல்லாரும் நம்மளை போன்ற சாதாரண மனிதர்கள் தான். இந்த மாதிரி சந்தேகங்கள் எல்லார்க்கும் எழும். அன்னைக்கு இவ்வளவு சந்தேகம் இருந்தாலும், ஏழைகளின் குரல்களுக்கு செவி கொடுத்து, அவர்களுக்காக பாடுபடாம இருந்தாங்களா? கடவுள் இருக்காரானு எனக்கே தெரியல, நாம எதுக்கு நல்லது செய்யனும்னா இருந்தாங்க? இல்லை. She at her core believed in goodness, believed in helping others. That makes her great. It is the perseverence, knowing the odds. It is the trait of not giving up.

கண்டிப்பா அவர்கள் canonize செய்யப்பட்டு, saint ஆக அங்கீகரீக்க படுவார்கள் என வேண்டிக்கொள்ளுவோம். எந்த கடவுள் கிட்ட வேண்டுகின்றோம் என்பது முக்கியமில்ல. நாம எவ்வளவு நம்பறோம்னு கூட முக்கியம் இல்லை! (சரி கொஞ்சம் hypocrisy என ஒத்துகிறேன், but, her acts win over her thoughts), என்ன செய்யறோம் என்பது தான் முக்கியம்.

And for the record, I am not a fan of religious conversions and personally consider them a killer of cultures. I am not in favour of preisthoods either, or foreign funded religious institutions or missionaries..But then, let us leave it fo a future post...

தினமும் பசியினால சாகிற ஏழைகள் மத்தியில், பதவிக்கும் பணத்துக்கும் அலையும் மற்றவர்கள் மத்தியில் வாழ்ந்த அன்னைக்கு இந்த சந்தேகங்கள் எதோ நியாபகப்படுத்துகின்றன. இதே போன்ற சந்தேகங்கள் இன்னொருத்தருக்கு வந்துச்சு. ஆனா அவர் ஞானம் பெற்று புத்தரானார்.

இதுல இன்னொரு பாடம், இதெல்லாம் பாத்தா, she is no different from one of us. Great People are not born! People raise to greatness by their actions. She rose and she deserves it.

அதே போல நம்மளாலும் முடியும். நன்முயற்சி மனிதரையும் தெய்வமாக்கும். இங்க இருந்து ஆரம்பிக்கலாமே..

Tuesday, August 14, 2007

காணவில்லை: சுதந்திரதேவி.

ச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
என முழங்கி வாங்கின சுதந்திரம்..
மிச்சமில்லை மிச்சமில்லை
மிச்சம் வைப்பதில்லையே
என கொள்ளை அடிக்குது ஒரு கூட்டம்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்றில் கிடைத்தது
கத்தி கதறி ரத்தம் சிந்தி
அர்த்த நெறியில் கிடக்குது

நாட்டு கொடியை
மறந்து விட்டு
கட்சிக் கொடிகள்
பறக்க..
தேசப்பாடல் பாடக்கூட
மதங்கள் தடை செய்ய..

காந்தி வாங்கி கொடுத்ததாம்
சுதந்திர நாள் மட்டும்..
சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்..

தனிமனித சுதந்திரம்
தனியே சென்று விட
பொது மனித அங்கீகாரம்
போதை ஏறி நடக்குது...

ஜாதியென்ன மதமென்ன
பண்பாடென்ன மொழியென்ன
ஆண்னென்ன பெண்னென்ன
எதில் பிடித்தாலும் வெறி தான்..

காதலர் பேச கூட
தாய் மொழியில் பேச கூட
தடை விதிக்கும்
கூட்டத்தில் காணாமல் போன சுதந்திரம்..

நம் கைக்கு எட்டிய சுதந்திரம்
போனது யார் வாய்க்கோ?


ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி.

Monday, August 06, 2007

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.. உறவுத்திணை

ரொம்ப நெருக்கமா பழகிட்டு, உங்க நண்பன் அல்லது நண்பி கிட்ட இருந்து பிரிந்து, அடுத்த 5 வருஷம் அவங்களை பாக்க மாட்டோம் என்று தெரிந்து பிரிந்தா, என்ன பேசுவீங்க? அந்த கடைசி நிமிஷம்? மௌனமா?

இதயங்கள் புரிந்து விட்டால், மொழிகள் தேவை இல்லை, வலிகள் எங்கும் இல்லை.

ல்லா உறவுகளுமே சந்தோஷம் மட்டும் கொடுப்பதில்லை. துக்கம், துயரம், ஏமாற்றம் என கலந்து தான் வரும். அது தான் மனிதா இயல்பு. 10 வருஷமா உயிருக்கு உயிராய் காதலிச்சு கல்யாணம் பன்னி, டைவார்ஸ் ஆனவர்களும் இருக்காங்க. கல்யாணத்தப்ப தான் தன் வாழ்க்கை துணையின் முகத்தை முழுமையா பார்த்து, சந்தோஷமா இருக்கும் குடும்பங்களும் உண்டு.

நாம் ஒன்று நினைக்க, விதி/இறைவன்/ஏதோ ஒன்று வேறு மாதிரி தான் நினைக்கும்! "நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், தெய்வம் ஏன் எதற்கு?" அப்படினு சும்மாவா பாடினாங்க.

ன் காதலிக்கனும்.. ஏன் மனசுடையனும்? ஏன பழகனும்.. ஏன் பிரியனும்? இப்படி நிறைய பேர் மனசுல லேசா பயம் இருக்கும். நம்மை முழுமையாக emotionally dependent ஆக்க விடாத இந்த பயம் ரொம்ப நிதர்சனமானது. This fear, always enables us to hold a little of us back, not surrender us ultimately to another... to help us recover, in case the relationship fails.

இது நல்லதா? கெட்டதா? எல்லாத்தையும் போல இரண்டும் இல்ல. தேவையான அளவில் இந்த பயம் நம் நல்லதற்கு தான். புயல் அடிச்சு, விதைச்ச பயிர் நாசமாயிடும் என விவசாயி விதைக்காமல், உழைக்காமல் இருப்பதில்லை. நம்ம மலர்ந்தா, தன்னை செடியில் இருந்து வெட்டி சூடிக்கொள்ளுவார்கள் என ரோஜாக்கள் பூக்காமல் இருப்பதில்லை. உறவுகளும் அது போல தான். பயந்து கொண்டே நாம் இருந்தால் நாம் அப்படியே இருக்க வேண்டியது தான். Yes you are emotionally safe. But I, as a person, would rather take the risk of succeeding (not that i did).

பிரிவுக்கு பயந்து, ஒதுங்கி விட்டால், நட்பால் கிடைக்கும் அந்த சில நாள் சந்தோஷமும் இல்லாமல் போய் விடும்.. உண்மை தான், கடசில மனசு கஷ்டப்படும், But for the happiness earlier, I think it is worth it.

அதே மாதிரி, காதல் வெறும் காயம் என்பதும் இல்ல. தோற்ற காதலிலும், ஒரு தலைக்காதலிலும் கூட ஒரு சுகமும் இருக்கு. ஒரு வாழ்க்கைக்கான பாடம் இருக்கு. வலிகள் இருப்பது நிஜம் தான். ஆனால், வழிகள் கிடைப்பதும் நிஜம்.

வலிக்கு பயந்து, வழியில் போகாமல் இருந்தால், எப்பவும் அப்படியே தான் இருப்போம். அப்போ நமக்கும், சந்தோசம் துக்கம் உணராமல் இருக்கும் மரத்துக்கும் என்ன வித்தியாசம்?

எல்லாவற்றிர்க்குமே ஒரு விலை உண்டு. ஏதேனும் ஒன்றை விட்டுக்கொடுத்தால் தான், மற்றொன்றை அடைய முடியும். வருங்காலத்தில் நிகழப்போவதை நினைத்து பயந்து செயலற்று இருந்தா எப்படி?

Having said this, It depends and differs from person to person. Some are more risk-willing than others ;). (And i think they are the ones who lose big time or win big time). If you never try, even the most feasible is impossible.

Moderation, is what life needs most.. of all qualities.

அளவுக்கு மின்ஞினால் அமிர்தமும் நஞ்சு. மிக குறைவான அளவில், நஞ்சும் உயிர் காக்கும்!
எது அமிர்தம், அது நஞ்சு என பிரித்தறிவது மிக சுலபமல்ல.. But then, if everything is clear cute, where is the challenge.. huh?

என்னடா சொல்ல வர்ற என நீங்க எப்பவும் போல கேட்பதும்,
"சொல்றது சிவன்னாலும்
செஞ்சது மனுஷப்பய தான்"
அப்படினு சொல்லிட்டு, நான் முடிச்சுக்கிறேன்!

Monday, July 30, 2007

விழியோரமாய்

உலகின் காதெலெல்லாம்
பெண்ணாகி
உருக்கி எடுத்து
வானவில்லெல்லாம்
வளைத்து ஒடித்து
வண்ணம் கொடுத்து
பிரம்மன் செய்தானும் போல உனை!



தாயை கண்ட
குழந்தையாக
உனை கண்டதும்
என் மனது
உன்னில் மறந்தது..



இமைகளுக்கு காத்திருக்கும்
விழி தானடி நான்..
உனக்காக காத்திருந்து
காயப்படுகின்றேன்..

நட்சத்திரக்கூட்டம் எல்லாம்
உனை காண
இறக்குதடி
விண்மீனாய்..



கடலில் அலைக்காக
பொறுத்திருந்தவன்
அலையில் இறந்தது போல்
என்னவளுக்காக காத்திருந்து
உன்னில் கலைந்து போனேன்..

விட்டு சென்ற
வீதியெல்லாம்
விழாகோலம் பூணுதடி..
தொட்டு சென்ற
என் இதயம்
உன் தீண்டலில் துடிக்குதடி..



கிழக்கில் சூரியன் உதிப்பதெல்லாம்
கட்டுக்கதை
உன் விழிக்கீற்றில் விடியுதடி
என் உலகம்..

வீதியெல்லாம் நீ நடந்தால்
தேவதை ஊர்வலம்..
என் இதயத்தில் நீ நடந்ததில்
வானவில் ஆயிரம்..



உன் விழியோரமாய்
விதைத்து விடு என்னை
உன் கண்ணீரிலாவது
கரை சேரட்டும்
நம் காதல்...

Monday, July 23, 2007

படம் பாத்து பிறந்தநாள் கொண்டாடுவோம்!

இத பாருங்க!



இன்னும் புரியலயா? இத பாருங்க.
























இன்னும் புரியலையா? வானத்தின் மிக வெளிச்சமான நட்சத்திரம்.. எனது பதிவுலகு குரு!





இவரோட பிறந்தநாள். (ஜீலை 25). நம்ம தான் முதல்ல சொல்லனும்னு ஒரு நாள் முன்னாடியே இந்த பதிவு! தல! பிறந்த நாள் வாழ்த்துக்குள்! எல்லாரும் எப்படியும் கேக் குடுப்பாங்க. அதுனால அது வேண்டாம்! உங்களுக்கு இந்தாங்க. என்ஜாய்!


Friday, July 20, 2007

விடியாத இரவெல்லாம்..

உலகின் அழகெல்லாம்
உதிர்த்து விட்டு
வெண் மேக வர்ணங்களாய்
வந்து போவாள் மழை தேவதை..


வரண்டு போன இதயமெல்லாம்
கருணை கொண்டு ஈரமாக்க
கருமேக கூட்டத்தில்
கொண்டு வருவாள் உயிர் நீர்..


காத்திருந்த எதிர்பார்ப்பும்
சுயசமாதான ஏமாற்றமும்
தொலைந்து போன நட்பில் கூடி
மறந்து போய் நாட்கள் சாகும்..


கிழிக்கப்படும் நாட்களிலே
கிழிந்துபோகும் இதயமும் சேர்ந்து
மறக்கின்ற பொழுதினிலே
மனிதனுக்கு இறைமை கூடும்..

நிலவை காண வேண்டி
பகலெல்லாம் காத்திருப்பு
நட்பில் காதலை
தொலைத்த கதை மறந்து போகும்..


திறக்காத மின்அஞ்சலில்
பிறக்காத மழலைகளாய்
காதலில் நட்பும்
கிடைத்தறியா கானலாகும்..


பெண்ணெல்லாம் சிலையாகி
கல்நெஞ்சின் வடிவாக
ஆணெல்லாம் கல்லாகி
சிதைந்து போன சிற்பமாகும்..


புரியாத காரணத்தில்
தெரியாமல் தொலைகையிலே
முடியாத கனவெல்லாம்
கனியாத மரமாகும்...


கண்ணொற்றி வந்த காதல்
கண்ணீரில் வழிந்தோட
வரண்டு போன சிகப்பு மட்டும்
காதலியாய் உடனிருக்கும்..

அவள் பொய்யில்
உண்மை இருக்கும்
அவன் மெய்யில்
உறுதி தொலையும்..


எழுதிய கவிதையினில்
எழுதாத உண்மை தூங்க
புரியாத வரிகளுள்
புதைந்து போகும் நட்பின் ஆழம்...

உதிரமாய் உயிர்த்தது தான்
குருதியாய் பிரிந்துபோக
புருவ நெரிசலின் கேள்வியிலே
உண்மைகள் நெளிந்து போகும்..


விடியாத இரவெல்லாம்
முடிவதற்கு காத்திருந்து
சூரியன் வருவது
உறக்கத்தில் மறந்துபோகும்..


பி.கு: இந்த கவிதை யாருக்காச்சும் புரிந்தா, அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டீ பார்சல்!

Wednesday, July 18, 2007

மின்சார பரிசுகள்!



மின்சார பூக்கள்..
உன் உதட்டு வெடிப்பில்
மலர்ந்து வரும்..
என் இருட்டு இதயத்தில்
வெளிச்சம் தரும்..


கவிதை சும்மா! ஆக்ஷ்வல் டாபிக் வேற. இது மருதம் மேடம் சொன்ன டேக். அவார்டு கொடுக்கனும்.

பரணி - இவருக்கு தான் முதல் பரிசு. "தன் துணையை தானே தேடும் தைரியம் உள்ளவர்களுக்கு" அப்படினு இவர் எழுதினது தான் நான், பதிவுலகத்தில் கால் வைக்க தூண்டிய வரிகள்.
"இரும்பு இதயம் எனது
காந்த விழிகள் உனது
"
அப்படினு கவிதை எழுதி அசத்துபவர். இவருக்கு இரும்பு பாவனா சிலை ஒன்றை கொடுப்போம்!

If someone knows metallurgy, pls make a metal model and give it to him on my behalf!

பொற்கொடி - என் தங்கை கொடி! இவங்க பாய்ண்டர்ஸ் படிப்பதில் இருந்து, படம் லிஸ்ட் போடுவது வரை கில்லாடி. சமையல் கூட சூப்பரா பன்னுவாங்கன்னு கேள்வி ;)
"ஆணும் பெண்ணும் நட்பா இருக்க முடியும், காதல் தான்னு அவசியமில்லனு சொல்றோம். ஆனா இது தான் பல குழப்பங்களுக்கு வழி வகுக்குது. " இப்படி அப்பப்ப ஆழமா யோசிக்கறவங்க. இவங்களுக்கு இதோ ஒரு ரெசிப்பி பரிசு!



செய்து அசத்துங்க!

ஸ்யாம் - "நாங்க ரெகுலரா சைட் அடிக்கர பிகர்ஸ்ல ஒரு பிகர் மட்டும் எங்கள மனுசனாவே மதிச்சது இல்ல..." அப்படினு பிட்ட போடுவாரு! அப்பறம் தங்கமணி பூரிகட்டையில அமெரிக்கா பூரா துறத்துவாங்கா!

காதல் பிரச்சனைனு வந்தா, "இது வரைக்கும் 5வதுல கூட படிச்ச பிகருல ஆரம்பிச்சு அம்பிகா,ராதா,நயன் தாரா வரைக்கும் லவ் பண்ணி இருக்கேன்...அது போக வருசத்துக்கு மினிமம் 4 ப்ரபோஸல்". இப்படி எல்லாம் காமெடி பண்ணி சமாதான(??) படுத்துபவர்.

தமிழ் பதிவு உலகத்தின் ஒரே ஆஸ்தான நாட்டாமை! இதோ இவருக்கு செம்பு பரிசு!

நாட்டாமை, தீர்ப்ப மாத்தீ சொல்லாதீங்க!

மு.கார்த்தி - இவர் தமிழ், கொஞ்சும் தமிழ். இவர் எழுதும் உரைநடை, தமிழின் வீர நடை. சினிமா, அரசியல், வாழ்க்கை என்று அசத்துபவர். சிட்டுக்குருவியின் ஆஸ்தான நண்பர். இவரு பிறந்த நாளுக்கு, பொறுமையா அபிஷேகம் வாங்கினவர்.
"தேன்கூட்டில் ஒரு சுள்ளெறும்பு" போன்று தலைப்ப கூட கவிதைதனமா கலக்குபவர்.

இந்த தலைப்புக்கு காரணமும் இவரே. எனக்கு மின்சார துறை கொடுத்தவர் இவர்!

"காதலிக்க
ஒரு தேவதை
அனுப்பச் சொல்லி
காதில்
சொல்லி வந்திருக்கிறேன்
" அப்படினு பீல் பண்ணதால, இதோ அவருக்கு...

தல! கண்டுகாதீங்க ;)

K4k & Arun - பதிவுலகத்தில் எனக்கு கிடைத்த இரெட்டை அண்ணன்கள்.

K4K - கேட்டா, K for Karthick என்பதற்கு சுருக்கம் என்பார்!
"காதலும், வெங்காயமும் ஒன்னு...
உரிக்க உரிக்க கண்ணுல தண்ணி வரும்...
உரிச்சா உள்ள ஒன்னும் இருக்காது
..." அப்படினு தத்துவம் சொல்லி, நான் "கா.." அப்படினு ஆரம்பிச்சா, ஓடி போயிடிவார்! ;)

"""Desktopல My Computer இருக்கா? இல்ல My Computer உள்ள Desktop இருக்கா?? " என்பதை "படுத்துட்டு யோசிச்சேன்..
நின்னுட்டு யோசிச்சேன்..
ஓடிட்டே யோசிச்சேன்..
" இப்படி பலவாறு யோசித்தவர்! இவருக்கு காமெடி அருமையா வரும். கமெண்ட்களை அபரிதமா அள்ளி தரும் உத்தமர்!

அருண் - "இப்படி அமெரிக்க மாப்பிள்ளைக்கு மட்டும் எப்பவும் பன்னா?" என்று அமெரிக்கா வந்த இந்திய இளைஞர்கள் அத்தணை பேர் சார்பாகவும் பொங்கி எழுந்தவர்.
"கத்திரிக்காய அறுத்து
கடாய்ல வறுத்து
கொஞ்ச நேரம் கழித்து
அதெல்லாம் கறுத்து
கத்துக்கிட்டேன் சமையல் கருத்து
" அப்படினு, தான் செய்த சமையலுக்கு கவிதை போட்டவர்!

அண்ணாஸ், இது உங்களுக்கு!

எது யாருக்கு, என நாட்டாமை தீர்ப்பு சொல்லுவார்!

G3 காயத்ரி -எனக்கு பதிவுலகத்தில் கிடைத்த அக்கா. என்ன சொன்னாலும் பொறுமையா கெட்பாங்க. ரொம்ப நல்லவங்க! எனக்கு கவிதை எல்லாம் எழுத தெரியாது அப்படினு பொய் சொல்லிட்டு,

"உன் விரல் பிடித்து
நடைபயில ஆசைதான்
என்ன செய்ய?
உன்னை காணும் முன்னே
நடைபழகி விட்டேனே!
" இப்படி போட்டு, (அத G3 பண்ணது வேற விஷயம்) அசத்தறவங்க!
"என்னை சுற்றி உள்ள நல்ல நண்பர்களைத் தேடி ஆர்வமாய் ஓர் பயணம்"
அப்படினு சொன்னதால,




இந்த பயணத்திற்கு துணையா வர்ற மாதிரி இந்த பரிசு! I really hope someone gets you the car!

Adiya & CVR - என் சிந்தனை தோழர்கள்!
Adiya - "Did somebody verified rama , sita horoscope?
Did vishamitra bhrama rishi knows this fact already ?
Being a god why his mission statement miserably failed to man kind?
Are we eligiable to comment on these aspects
?
" அப்படினு தைரியமா கேள்வி கேட்பவர்! நான் ஹெவி டூடி பதிவு போட்டா, அத முழுசா படிக்கிறவங்களில் ஒருவர்!

CVR - போட்டோகிராபி, Aliens , Death, Love என்று சகல விதமான பதிவுகளும் போட்டுட்டு, கேட்டா "எல்லாம் அவன் செயல்" அப்படினு சொல்றவர்!
கொஞ்ச காலமா தான் தெரியும் என்றாலும், எங்கள் நட்பு, பல நாள் பழகிய நட்பு!

நண்பர்களுக்கெல்லாம் இது தான் பரிசு!

என்ஜாய்!

கோப்ஸ் - நகைச்சுவை நாயகர்! இவரு அடிக்கிற நக்கலு இருக்கே! அதுக்கு இவரே தான் போட்டி!
"thaaana kidaikira comment thaan permanent'u
katchi moolama kidaikiradhu verum pepperment'nu "

அப்படினு ஆரம்பிச்சு, காபி வித் கோப்ஸ் அப்படினு சொல்லி கலாய்ச்சு,
"என்னுயிர் காதலி,
நீ சிரிச்சா கன்னதுல விழும் குழி..
வாரத்துல ஒரு நாளாச்சும் தலைக்கு நீ குளி.
அதுக்கு அப்புறம் தலை'ல நீ வை மல்லி
"
அப்படினு கவிதை பேர சொல்லி..... ஹிஹி!
இதோ உங்களுக்கு...

இசை தெரிஞ்சவன் எல்லாம் இளையராஜாவும் இல்ல
கோப்ஸ் சொன்ன பிளேடுக்கு சிரிக்காதவன் எல்லாம் சீரியஸும் இல்ல.
(அர்த்தமா? அப்படினா?)

Kittu m&M - (யாரு கேப்ஸ், யாரு ஸ்மால் என தெரிஞ்சிருக்குமே ;) )
அடாது மழை பெய்தாலும்,
"களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் வலிமையும்
காதலியின் பார்வையில் அடங்கிவிடும்
" அப்படினு விடாமல் குறள் சொல்லும், மாடர்ன் வள்ளுவர்!

மாமாவும் மாமியும், சூப்பரா பாடுவாங்க! Bharani சொன்னாப்ல, "Made for each other"
இதோ இது குட்டி பாப்பாவுக்கு, என் சார்பா!

நான் அமெரிக்க வருகையில், நிஜத்தில் கண்டிப்பா வாங்கி தருவேன்!


Priya - காதல் யானை "ப்ரியா"
ஒத்தை கதை எழுதி, ஓவர் நைட்ல பேமஸ் ஆனவங்க! அவங்க கதைகளுக்கு நடுவில்
"ஒரு பொண்ணுக்கு கல்யாணம் தான் வாழ்க்கையேனு யார் சொன்னது? வாழ்க்கைனா எவ்வளவோ இருக்கு.. அதுல கல்யாணம் ஒரு பகுதி தான். எனக்கு மத்த எல்லாம் அருமையா அமைஞ்சிருக்கே" அப்படினு கருத்து சொல்லறவங்க!
உங்களுக்கு

ப்ரியா, பேசி தீத்துகிடலாம்!

வேதா - கவிதாயினி வேதா!
இவங்க எழுதும் கவிதை மனதை உருக்கும்.

"தேங்கி நிற்கும் உண்மைகளை
வழிய விட்டால்
கன்னத்து கோடுகளும் சாட்சியாகிவிடுமென
நீ
கண்களை மூடியதை
என் கண்கள் கண்டுக்கொண்டன;

கண்களில் தெரியும் ஏதோ ஒன்று
காட்டி கொடுத்துவிடுகிறது
உண்மையின் உண்மையை
."
உங்களுக்கு பரிசா இதோ என் கவிதை.

"முடியாத இரவுக்கெல்லாம்
விடியல் உண்டு காத்திருந்தால்..
எழுதாத தமிழுக்கெல்லாம்
தவங்கள் உண்டு நீ எழுத
.."

வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.


இத தவிற, (என்னை டேக் செய்த) "பாடும் குயில்" மருதம், மை பிரண்ட், துர்கா, ராஜி, கோல்மால் கோப்ஸ், அம்பி, 'ப்ளாக் யூனியன் தலைவி" டிடிஅக்கா மற்றும் புதுசா வந்த சிங்கம்ல ஏஸ், செந்தில், சூர்யகுமாரி போன்றவர்கள் அடுத்த வருடம் பேசப்படுவார்கள்!
அதுவரை உங்களுக்கான மலர்கொத்து! (உங்க பேர மறந்து விட்டு இருந்தா கூட, உங்களுக்கும் தான்!)



******************************************************

டேக்கா? ரூல்ஸா? சொல்லுங்கப்பா நம்மளை பத்தி!