Tuesday, August 14, 2007

காணவில்லை: சுதந்திரதேவி.

ச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
என முழங்கி வாங்கின சுதந்திரம்..
மிச்சமில்லை மிச்சமில்லை
மிச்சம் வைப்பதில்லையே
என கொள்ளை அடிக்குது ஒரு கூட்டம்..

கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தமொன்றில் கிடைத்தது
கத்தி கதறி ரத்தம் சிந்தி
அர்த்த நெறியில் கிடக்குது

நாட்டு கொடியை
மறந்து விட்டு
கட்சிக் கொடிகள்
பறக்க..
தேசப்பாடல் பாடக்கூட
மதங்கள் தடை செய்ய..

காந்தி வாங்கி கொடுத்ததாம்
சுதந்திர நாள் மட்டும்..
சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்..

தனிமனித சுதந்திரம்
தனியே சென்று விட
பொது மனித அங்கீகாரம்
போதை ஏறி நடக்குது...

ஜாதியென்ன மதமென்ன
பண்பாடென்ன மொழியென்ன
ஆண்னென்ன பெண்னென்ன
எதில் பிடித்தாலும் வெறி தான்..

காதலர் பேச கூட
தாய் மொழியில் பேச கூட
தடை விதிக்கும்
கூட்டத்தில் காணாமல் போன சுதந்திரம்..

நம் கைக்கு எட்டிய சுதந்திரம்
போனது யார் வாய்க்கோ?


ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி.

30 மறுமொழிகள்:

G3 said...

//ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி. //

motha kavidhaiyaiyum indha varigal vizhungivittana..

Dreamzz said...

//motha kavidhaiyaiyum indha varigal vizhungivittana.. //
நன்றி g3.

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//கிடைப்பாளா மீண்டும்?//

நிஜத்தில் இப்படித் தான் கேக்கத் தோனுதப்பா?

நல்ல கவிதை.

Sumathi. said...

//நாட்டு கொடியை
மறந்து விட்டு
கட்சிக் கொடிகள்
பறக்க..//

இது தான் இப்போதைய சுதந்திரம்...

Dreamzz said...

@@சுமதி
//இது தான் இப்போதைய சுதந்திரம்... //
ஆமாக்கா! என்ன பன்ன?

k4karthik said...

டெக்கினிக்கலா நான் மூணாவது....

k4karthik said...

கவிதை சும்மா கொதிக்குதுல்ல....!!

k4karthik said...

சீரியஸாவே நல்லா இருக்குப்பா...

k4karthik said...

//சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்..//

ஆமா, அங்க தான் சந்திரமுகி 804 நாள் ஓடுச்சி...

k4karthik said...

//தாய் மொழியில் பேச கூட
தடை விதிக்கும்//

தாய் மொழில பேச யாருப்பா தடை விதிச்சா!??

k4karthik said...

//காணவில்லை: சுதந்திரதேவி. //

:((

k4karthik said...

புரட்சிரமா, உணர்ச்சிகரமா கவிதை, கதை சொல்றதுனால இனி தம்பியை இந்த ப்ளாக் உலகம் செல்லமாக RED என்று அழைக்கும்....

அதுதுதுதுது........

k4karthik said...

இது ஒருத்தனுக்கு டெடிக்கேஷன்.. ஆனா, யாருனு சொல்லமாட்டேன்....

Dreamzz said...

@k4k
//புரட்சிரமா, உணர்ச்சிகரமா கவிதை, கதை சொல்றதுனால இனி தம்பியை இந்த ப்ளாக் உலகம் செல்லமாக RED என்று அழைக்கும்....

அதுதுதுதுது........

8/14/2007 9:33 AM
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!

Dreamzz said...

@k4k
// k4karthik said...
இது ஒருத்தனுக்கு டெடிக்கேஷன்.. ஆனா, யாருனு சொல்லமாட்டேன்....

8/14/2007 9:34 AM
//
sila vishayam sollamaley theiryum!

CVR said...

very nicely written!! :-)

Arunkumar said...

அருமை கவிதை..

//
நம் கைக்கு எட்டிய சுதந்திரம்
போனது யார் வாய்க்கோ?
//

நச்சுனு எழுதியிருக்கீங்க..

Sudha said...

Romba Nalla erukku.What u are saying is right to a certain extent.Now we are in a changing times.So tomorrow's status ,Only time will tell.

Sudha said...

Anyway Sudandira Thina Vazhtukkal.
KCS

ambi said...

நிதர்சனத்தை ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

Anonymous said...

Dreamzz, Kavithai super!!!.

Thirumbavum.. Bharathiyar nyabagam :)

My days(Gops) said...

நல்ல கவிதை டீரிம்ஸ்...

My days(Gops) said...

quarter adichikiren.

சுப.செந்தில் said...

நிதர்சனமான உண்மைங்க!தொலைச்சதே நாமதான கண்டும் பிடிப்போம்!!!

Harish said...

"காந்தி வாங்கி கொடுத்ததாம்
சுதந்திர நாள் மட்டும்..
சாந்தி தியேட்டரில் கூட்டம்
கொடி கட்டி பறக்குமாம்.."

Arumai nanba :(

Anonymous said...

Hi Dreamzz!

Good. Keep it up. ennaiyum unga unionla sethukongappa! Naanum konjam kavithai ezhuthuvaen.

But I am new to blogging.

Unknown said...

nalla arumaiyaana kavidhai. :)

Adiya said...

ethu thaan Bharathi Inside innu solluratha.. :) grt8. :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

Excellent dreamzz !
unarchi poorvama ezhudhi irukeenga.

First time oru ponna varnikkama freedom pathi ezhudhinadhu super :) LOL

//ஒட்டுங்கப்பா போஸ்டர..
கிடைத்தற்றிந்த அந்நாளே
அரசியலில் தொலைந்தவள்
மத ஜாதி சண்டைகளில்
வீழ்ந்து போய் மறந்தவள்
நம் வாழ்க்கை சோம்பலில்
மறந்து போய் கரைந்தவள்..
கிடைப்பாளா மீண்டும்?
காணவில்லை: சுதந்திரதேவி. //

Finally (sudhandhiradevi nnu) oru girl pathi ezhudhiteenga. (:-)
-K mami
hah just kidding, these lines were really superb.

cdk said...

என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று குறையும் எங்கள் அடிமையின் மோகம்?

தாகம் தணிஞ்ச மாதிரியும் தெரியலை!
மோகம் குறைஞ்ச மாதிரியும் தெரியலை!

நல்லா எழுதிறிக்கீங்க பாஸ்!