Thursday, February 22, 2007

மறந்து போ என் மனமே...

மு.கு: மக்களே.. எச்சரிக்கை. இன்னைக்கு நான் ரொம்ப யோசிச்சிட்டு இருக்கேன்.. சில நாளுல, நமக்குள்ள இருக்கும் சின்ன சின்ன வலிகள்.. நம்ம இதுவரை மறைத்து வைத்தது வெளிய ஒரேயடியா வந்து நம்மளா தொல்லை பண்ணும்.. அப்படி ஒரு நாளில எழுதறேன்..

நம்ம சமுதாயத்தில, ஜெயித்த காதல விட, தோற்ற காதலுக்கு அதிக மரியாதை செய்யறோம்! காதலர் சின்னமா நம்ம கருதுவது ஒரு கல்லறைய.. காதலர்கள் என்று சொன்னவுடன் நமக்கு நியாபகம் வருவது romeo&juliet மற்றும் பலர் - காதல்ல தோற்று(?) உயிர விட்டவங்க.. காதல்ல தோற்றவங்க சிலர் ஒரு பக்கம் தங்க வலிய மறக்க காதலை குற்றப்படுத்தி, இன்னும் சிலர் காதலை மறுத்து,சிலர் அதை கொச்சை படுத்தி, சிலர் காதலை "உடல் அழிகின்ற காதல் அழிவதில்லை" என்று வாழ்க்கையை முடித்து காதலை ஜெயிக்க வைக்க முட்டாள்தனமான முடிவுகள் எடுத்து அழித்து கொண்டு.... ஏன் இப்படி?

வாழ்க்கை காதலை விழுங்கி விடுதோ?

உண்மையில காதலுக்காக உயிர விடுபவர்கள் என்று பார்த்தீங்கனா,அதுல நிறைய பேரு சுயநலத்துக்காக செய்பவர்கள்.. வாழ்க்கையின் எதிர்ப்புகளை சமாளிக்க தெரியாதவர்கள்..
வாழத் தெரியாதவர்கள். ஆனா இன்னும் சிலர்.. காதலை ஒரு ideal ஆ வெச்சு, அதுக்காக உயிர விடுவாங்களா! என்னால நம்ப முடியல! நம்ம எல்லாம் அப்படி ஒரு வேளை வந்தா ஒரு நாலு பேரை போட்டு வேணா தள்ளுவோம் ;)

என்னோட பெரியப்பா பையன், தன்னோட காதலிய வீட்டுல ஜாதி பார்த்து (மற்றும் பல காரணங்கள்) ஒதுக்கியத எதிர்க்காம, அம்மாபிள்ளையா வேற ஒருவரை கல்யாணம் செய்தான் என்று அன்னையில் இருந்து அவனிடம் பேசுவதில்லை நான்! இப்ப நம்ம நிலைமையே அப்படி ஆயிடுச்சு! (இனிமே தனியா நம்ம கிட்டயே பேசக் கூடாதுல! எழுதி காமிக்கணும் :D)

எனக்கு தெரிஞ்சு காதல் அழகா ஜெயிக்கும் ஒரே இடம் .. சினிமா தான்! அங்க மட்டும் நம்மாளுங்க hero வும், heroine உம் சேரணும் என்று நினைப்பாங்க போல! நிஜத்தில பன்னு!

உண்மையில காதல்னா என்னங்க? இருவர் சேர்ந்து வாழ்வதா? அது கல்யாணமில்ல? ஒரு தலை காதல்.. காதலா? இல்ல ஒருத்தருக்காக நம்ம உயிர கொடுப்பதா? அது தியாகம் தான!
சேர்ந்து வாழ்வதால ஒரு காதல் ஜெயிக்குமா? முதல்ல காதல் என்ன விளையாட்டா? ஜெயிக்க.. தோற்க்க? யாரையாச்சும் "நீ அன்புல தோத்துட்ட" அப்படினு சொல்லுவோமா? அப்புறம் காதலுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கேள்வி?

காதல் என்பது தெய்வீக உணர்வு என்று கதை எல்லாம் நான் சொல்ல வரலை! (அப்ப என்ன தாண்டா சொல்ல வர? என்று நீங்க உறுமுவது எனக்கு கேட்குது.. தெரிஞ்சா சொல்லிட மாட்டேனா!)

தன் காதலுக்காக உயிரை விட்ட காதல், காதலுக்காக பெற்றோரை துறந்த காதல், காதலிக்காக காதலையே தியாகம் செய்த காதல், காதலுக்காக இறுதி வரை கல்யாணம் செய்துக்காத காதல், சந்தர்ப்ப சூழ்நிலகளால் சொல்லாத காதல் என் பல! இதில் எதுங்க பெரிய காதல்? காதலில் பெரிய காதல், சிறிய காதல் உண்டா? Is it a Quantifiable emotion?

I had the feeling of invinvcibility that every youth has. ஒரு நாள் மஹாபாரதம் புரட்டிட்டு இருந்தேன்.. அப்போ அதுல ஒரு இடத்துல... கடசில.. கிருஷ்ணர் இறந்து போகும் போது, அர்ஜுனன் அவர் ஊருக்கு போய் அங்குள்ள பெண்களை, குழந்தைகளை அவரு ஊருக்கு கூட்டிட்டு போவாரு.. (கிருஷ்ணர் ஊரு தண்ணில முங்கும்ல.. அதனால).. அப்படி போகும் போது எதிர்ல திடீர்னு வழிக்கொள்ளையர்கள் வருவாங்க! இவ்வளவு பேருக்கும் ஒரே ஆள் காவலுக்கு வ்ந்தத பாத்து சிரிப்பாங்க. அர்ஜுனன் கோபமா அவ்ரோட காண்டீபத்த (அவரு வில்லு பேரு) தொடுக்க பார்த்தா அவரால முடியாது (வயசு ஆகி)
This was the first thing that shook my feelings of invincibility.

அப்புறம் எங்க பாட்டி இறந்தது. அதுவரை சாவுக்கு பயப்படாதவன், அதன்பிறகு பயந்தேன்.. என் சாவுக்கு அல்ல.. என்னை சுற்றி உள்ளவர்களைப் பற்றி. It makes me treasure every single second i spend with them. எவ்ளோ நாளா கூட இருந்தவங்களை எவ்ளோ எளிதா கொண்டுட்டு போயிடுது... அதையும் மறந்து நாம காலத்தின் கோலத்தில் எவ்ளோ சீக்கிரம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பாக்கின்றோம்!

And then things like this ... they shake my foundation of invincibility a little bit.. slowly..

சரிங்க! இதோட நிறுத்திக்கிறேன்! நான் ஏதொ சொல்ல போறேன் என நினைத்தவர்கள் மன்னிக்க! எல்லா கேள்விகளுக்கும் எனக்கு விடை தெரியாது.. எல்லா பதிவுகளுக்கும் எனக்கு முடிவு தெரியாது!

காத்திருக்க வைக்குதடி
காதல் செய்ய சொல்லுதடி
கனவாக போன பின்னே
கண் திறக்க பண்ணுதடி
காலம் அதன் பெயராம்
காயம் பல பொய்யாம்
வாழ்க்கையும் கவிதகளாம்
விளங்கவில்லை கண்மணியே.....

Thursday, February 15, 2007

Caught in a Tag!

A English post after a long...long time!I was tagged to this by the "ever-questioning-my-comments" pria! For everyones sake, I have "shrinked" it according to my own judgement.கவல படாதீங்க! தமிழ்ல நான் சொல்லுறேன்..

Favorite Colors: Red. சிகப்பு பிடித்தவங்க "Want to live Life to its max"
Favorite Food: அம்மா சமையல்! இதுக்கு ஆங்கிலம் தேவையில்லை!
Favorite Month: என் தாய் நாடு சுதந்திரம் அடைந்த மாதம்
Favorite Songs: மூடுக்கு தகுந்து! இப்போதைக்கு மனதில் ஓடும் வரிகள் "சிரித்தாய் இசை அறிந்தேன்... நடந்தாய் திசை அறிந்தேன்..." பாடல்!
Favorite Movie: பம்பாய்.. அதுல மனிஷாவ அவ்ளோ பிடிக்கும் எனக்கு! பொதுவா மண்ரத்னம் படம்னா பிடிக்கும்..
Favorite Sport: விளையாட Chess, Cricket வேடிக்கை பார்க்க: Cricket
Favorite Season: நம்மூரில் மழைகாலம்.. இங்கே, பனி உருகி புல் தழைக்கும் காலம்..

8 CURRENTS
Current Mood:
கடுப்பு (இத எழுத இல்ல.. வேற..), தவிப்பு..நம்ம மூட் சரியில்லை!
Current Taste: சாப்பிட்ட வாழைபழம்!
Current Clothes: நான் clothes க்கு எல்லாம் current கொடுப்பதில்லை ;)
Current Desktop: A Beheaded knight..
Current Toe nail Color: சீ சீ.. இது என்ன சின்ன புள்ளதனமா!
Current Time: எனக்கு எப்பவும் நல்ல நேரம்தான்!
Current Surroundings: தனிமை.. கணினி..கடவுள்
Current Thoughts: நம்ம வேற ஏதோ எழுத ஆரம்பிச்சு, இது நியாபகம் வந்து இத எழுதறோமே, அத எப்ப போடுவோம்!


6 FIRSTS
First Best Friend:
ஆண்களில் Malik, பெண்களில் அம்மா.
First Screen Name: AresLordofWar -- Ares நிஜமாவே யுத்த தேவதை!
First Pet: அழகான வெள்ளை நிற "ராஜபாளையம்" வேட்டை நாய் ஒன்று!
First Piercing: நினைவில்லை! நினைவிற்கு பின், அதுவுமில்லை!
First Album: அப்படினா?
First Movie: மக்கள் நலம் கருதி நான் ஒத்துக்கவில்லை!

6 LASTS
Last Cigarette: நண்பர்களோடு பாண்டிச்சேரியில்..
Last Drink: Lemon Tea! என்னோட favorite!
Last Car Ride: யார் கூட?
Last Movie Seen: பொய்
Last Phone Call: தெலுங்கு பேசும் தோழி ஒருத்தியோடு!
Last Book Read: R.A.Salvatore's "Forgotten Realms" series

Have You Ever Broken the Law: அது முக்கியமில்லை! இது வரை மாட்டியதில்லை! அது தான் மேட்டர்!
Have You Ever Been Arrested: பார்க்கும் பார்வையில் என்னை பாதாளத்தில் சிறை வைத்த பாதகி பத்தி சொல்லவா.. இல்ல சிரித்த சிரிப்பில் என்னை சிறையிலடைத்த செய்திய சொல்லவா!
Have You Ever Been on TV: இது ஒரு கேள்வியா? ஏறி நின்னா உடையாது!
Have You Ever Lied: இல்லை! :P
Have You Ever Kissed Someone You Didn't Know: சொன்னா அடிவிழும்!

5 THINGS
Thing You're Wearing: நக்கல்! எப்பவும் கூட இருக்கும்!
Thing You've Done Today: இந்த பதிவு!
Thing You Can Hear Right Now: "கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா...... உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்றேன்..."
Thing You Can't Live Without: எதுவுமில்ல!
Thing You Do When You're Bored: கவித ... பதிவு...

3 PEOPLE YOU CAN TELL ANYTHING TOநான், நான், நான்

1 THING YOU WANT TO DO BEFORE YOU DIEஇத படிச்ச உங்களுக்கு நன்றி சொல்லுவது!

---------------------------------------
இத யாருக்காச்சும் Tag செய்யவா? பாவம் வேணாமோ? சரி freeya விடு!

Saturday, February 10, 2007

மௌனமெல்லாம் உண்மையல்ல..

இது யாருக்கு என்று எல்லாருக்கும் தெரியும்.. இது அவுகளுக்கு தான்! காதலர் தின வாரம் இது. நாமளோ நிறைய நாளா காதல பத்தி பதிவு போட்டே ஓட்டிட்டோம். இத காதல் பத்தி போடுவோமா, இல்ல காமெடி ஏதாவது போடுவோமா இல்ல கவிதை போடுவோமா என்று ஒரே யோசனை. சரி, வித்தியாசமா கவிதை போடுவோம்... ஆனா காதலில்லாத கவிதைகள்.

"காதலில்லாத கவிதைகள்
நீயில்லாத நான்
வெறுமை.. ஆனால்
உண்மையான வெறுமை"

;) இது கணக்குல கிடையாது.

கரு: நம்ம எல்லாருக்கும் seven sins தெரியும். அதே மாதிரி seven virtues இருக்கு. நான் அது கூட சில நேரத்துல வேண்டாம் என்று சொல்ல போகின்றேன்.

தன்னடக்கம்
பலனை எதிர்பாக்காமல்
உழைத்திட வேண்டுமாம்..
இவர்கள் பலனை எதிர்பார்க்காமல்
உறங்கிடுவார்களாம்..
ஆனால் உழைத்த பயன் இவர்களதாம்!

தவிப்பிற்கும் உழைப்பிற்கும்
செவி சாய்க்காத தரணியில்
தன்னடக்கமும் தடம் மாறலாம்
தவறில்லை!

தானம்
தானம் கொடுத்து வாழ்ந்தவன்
தன் புகழ் பறப்பினான்
தானம் பெற்று வாழ்ந்தவன்
தரணியில் ஜெயித்தது என்று?

உழைக்கத் தூண்டுமெனில்
தானத்தையும் தடை செய்வோம்

மன்னிப்பு
வாய் அசைப்புகளில்
வரும் ஓசை
செய்த கொடுஞ்செயல்களை
மறக்கடிக்குமா?

கோழைகளின் வார்த்தை..
தண்டனைக்கு பயந்து தன் மானம் விற்கலாமா?

தவறுக்கு முன் தேவைபடாதது
தவறுக்கு பின் ஏனெதற்கு?

கருணை
கொடியவனிடம் கருணை
கடல்களில் தொலைந்த நதி
அத்தணை நதிகள் உண்டாலும்
குறையாது அதன் உப்பு

கயவனை காத்தருளும் கருணை
கொலைக்கு சமம்

விடாமுயற்சி
அறியாதவனின் விடாமுயற்சி
அறியாதவிடம் விடாமுயற்சி
ஆத்திரத்தில் தொடங்கி
அழித்தலில் முடியும்

சில பெயரின் விடாமுயற்சி தான்
அணுகுண்டும் உலக யுத்தங்களும்..

தூய்மை
வாழ்க்கையில் பிழைக்கத் தெரியாதவனின்
வீம்பு பேச்சு
ஜாதி சொல்லி அடக்கி வைப்பவரின்
ஆணவப் பேச்சு

தூய்மையான தங்கமும்
தூசு படிந்து போகும்

அளவுக்கு அதிகமானால்
தூய்மையும் துயரம் தான்

புலனடக்கம்
உன் வீரச்செயலில்
உலகம் வாழுமானால்
தேவையில்லை உன் கைகளுக்கு
உன் பேச்சுத் திறனில்
பாதை மாறுமானால்
தேவையில்லை உன் நாக்குக்கு
தீயதை பார்த்து
சுட்டு எறிக்குமானால்
தேவையில்லை உன் கண்களுக்கு

உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
உலகம் சிரித்திடும்
உள் உடைந்திடும் நேரத்தில்
யாருக்கு வேண்டும் புலனடக்கம்?



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஆண்டவன் சொன்னதாய்
புத்தகங்கள் சோல்வதை
கேட்கும் முன்
யோசி...
அநியாயமெனில் ஆண்டவனையும் எதிர்க்கலாம்.
அதர்மமெனில் அகிலத்தையும் அழிக்கலாம்
தட்டிக்கேட்க அந்த கடவுளே வரட்டும்
அது வரை
உன் வாழ்க்கை உனது மட்டும்..
*************

Tuesday, February 06, 2007

Photo Blog

மு.கு: இதுக்கு நம்ம priablog-ப்ரியா வும், ராஜியும், கிட்டுவும், adiyaவும், நாட்டாமையும், 'ஜி'யும் , முதல் முறை visit அடித்த kkயும் எழுதிய கதைய comment section ல பாருங்க! அப்புறம் நம்ம வேதா ஒரு அழகான கவிதையே எழுதீருக்காங்க அதையும் பாருங்க - in Comment section-----------------------------------------**
சும்மா! இப்போதைக்கு! படத்துல கதை சொல்ல முடுயுமா? இத பாருங்க!
படம் பார்த்து கதை சொல்க! நான் அப்புறமா கடசில சொல்லறேன்.












பி.கு: mostly புரிந்து இருக்கும். மிச்ச விளக்கம்- கிருஷ்ணர் படம் - அந்த குழந்தை அழகை பார்த்து வரைந்தது. இராவணன் படம் - குடிச்சு தாடி வைத்த பின், அவன் முகத்துக்கு பொருந்தியது. கடவுளும் அரக்கமும் நமக்குள் தான்!

Sunday, February 04, 2007

முதல் கனவு - பாகம் IV - முடிவு

மு.கு: முதல்ல நான் போடுற blade அ படிச்சு, அதுவும் நல்லா இருக்குனு பொய்யா commentஅர நல்ல உள்ளங்களுக்கு ஒரு நன்றி! (படிக்கறீங்கள்ள?) இந்த பாகத்தோட முடிக்கறேன்.
இதுக்கு முந்தைய பாகங்கள் 1 2 3


அழகான ராட்சஷி
"கடைவிழி பார்வையில் படைத்திடும் பிரம்மம்
கரம் காட்டி பெயர் சொல்லி காத்தருளும் வைஷ்ணவம்
அசைந்திடும் அழகில் அழித்திடும் சிவம்
அவள் காதல் சொல்லி கொலை செய்யும்
அழகான இம்சைக்காரி"


(The contents here were deleted. Sorry for the inconvenience - Dreamz)

விட்டு விட்டு தனியே
"விடை சொல்லிவிட்டு போகவந்த நாளில்
பல மணி நேரம் நீ பேசிய வார்த்தைகளை விட
இறுதியாய் பார்த்த மௌனப் பார்வையில்
புரிந்தது அதிகம்"


2004:
வாங்க! அவளை கூப்பிட தோன்றிய எனக்கு, அதை செய்யும் தைரியமும், சந்தர்ப்பமும் இல்லாமல் போனது. இந்த வருடம் காலேஜ் முடித்து வேலைக்கு போறேன். 3 மாதம் சென்னையில். பின், US. ஓ, சொல்ல மறந்துடேனே.. அனன்யா சென்னையில் தான் இருக்கா! அவளை ஒரு முறையாவது பார்க்கனும்.

சிங்கார சென்னைனு சொல்றாங்க! பார்த்தா தெரியல! இன்னைக்கு அனன்யா வீட்டுக்கு மீண்டும் சென்று வந்தேன். ஒன்னும் சொல்ல தோனல. நான் US போறேன் என்று அவள் இதுக்கு முன்ன அழுந்ததும், இன்னைக்கு சோகமாய் இருந்ததும் மனதில் நிற்கின்றது.

Early 2006:
மறக்க முடியாத வருடங்க இது! அனன்யாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம். அடுத்த aprilல. பேசும் போது சொல்லுறா. என்ன சொல்லுவேன் நான் அதுக்கு? சந்தோஷ படனுமா? கோப படனுமா? இல்ல துக்க படனுமா?

Nov 2006:
அவ கூட தான் பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
"சூர்யா.."
"ஹேய் எதுக்கு சோகமா பேசுற? என்னடா ஆச்சு?"
"ஒன்னும் இல்ல. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்"
"அது தெரிஞ்சது தானே.. பிடிக்காம இவ்வளவு நாள் பேசுவியா?"
"அது இல்லடா.. நான் உன்னை love செய்யறேன் என்று தோணுது"
(இதயம் சில வினாடிகள் நின்னுட்டு துடிக்குமா? எனக்கு துடிக்குது)
"என்னடி சொல்லற?"

ஹ்ம்ம்.. இது தாங்க மேட்டர். என்னை காதலிப்பதை கல்யாணம் கல்யாண மண்டபம் எல்லாம் முடிவு செய்த பின் தான் உணர்ந்தாலாம். சினிமாவா இருந்தா, ரெண்டு பேரும் சேர்ந்துடாங்க என்று சொல்லி சுபம் போட்டு முடிக்கலாம். வாழ்க்கையில? எங்க அம்மா அப்பா கூட ஒத்துப்பாங்க. அவங்க வீட்டுல? என்னென்னமோ சொல்லி பார்த்துட்டேன். ஆனா வீட்டை விட்டு எல்லாம் வரமுடியாதுனு சொல்லிட்டா. அவங்க வீட்டுல கேட்குற மாதிரி நிலைமை இல்ல. இரெண்டு மனங்கள் இணைவது தான் காதல். என் காதலுக்கு சீக்கிரம் இறக்க போறோம் என தெரிந்து இருக்கும் கொடுமை.

காதல் ஒரு முழுமை உணர்வு. அதோட பார்த்தா மத்த எல்லாமே வெறுமை தான். அது இருக்கும் வரை உலகை அழகாக்கும். இறக்கும் போது உலகின் அழகுகள் அதோட கூட்டிட்டு போயிடும் போல. வீட்டுல இரெண்டு நோட்டு நிரம்ப கவிதை எழுதி இருக்கேன். அதுல ஒன்னு கூட காதல் பத்தி எழுதினது கிடையாது. ஆனா இப்ப, அத தவிற, அவளை தவிற எதுவும் எழுத முடியல. இத தான் வெற்றியிலும் தோல்வி என்று சொல்லுவாங்க போல! காதல் முழுமை அடைந்து விட்டது.. ஆனா அதுக்கு ஆயுசு?

தப்பு நடக்குது என்று தெரியுது. ஆனா யார் மேல குற்றம் என தெரியல.

-தொடர் முற்றும்.. வாழ்க்கை தொடரும்.


"காதல் விண்நட்சத்திரம்
வாழ்க்கை வானம்
நட்சத்திரம் வானத்திற்க்கு
அழகு சேர்க்கும்...
இருப்பது பிடித்தது..
ஆனால் வீழ்ந்து விட்ட
வின்மீனுக்காக என்றும்
உடையாது வானம்"