முதல் கனவு - பாகம் IV - முடிவு
மு.கு: முதல்ல நான் போடுற blade அ படிச்சு, அதுவும் நல்லா இருக்குனு பொய்யா commentஅர நல்ல உள்ளங்களுக்கு ஒரு நன்றி! (படிக்கறீங்கள்ள?) இந்த பாகத்தோட முடிக்கறேன்.
இதுக்கு முந்தைய பாகங்கள் 1 2 3
அழகான ராட்சஷி
"கடைவிழி பார்வையில் படைத்திடும் பிரம்மம்
கரம் காட்டி பெயர் சொல்லி காத்தருளும் வைஷ்ணவம்
அசைந்திடும் அழகில் அழித்திடும் சிவம்
அவள் காதல் சொல்லி கொலை செய்யும்
அழகான இம்சைக்காரி"
(The contents here were deleted. Sorry for the inconvenience - Dreamz)
விட்டு விட்டு தனியே
"விடை சொல்லிவிட்டு போகவந்த நாளில்
பல மணி நேரம் நீ பேசிய வார்த்தைகளை விட
இறுதியாய் பார்த்த மௌனப் பார்வையில்
புரிந்தது அதிகம்"
2004:
வாங்க! அவளை கூப்பிட தோன்றிய எனக்கு, அதை செய்யும் தைரியமும், சந்தர்ப்பமும் இல்லாமல் போனது. இந்த வருடம் காலேஜ் முடித்து வேலைக்கு போறேன். 3 மாதம் சென்னையில். பின், US. ஓ, சொல்ல மறந்துடேனே.. அனன்யா சென்னையில் தான் இருக்கா! அவளை ஒரு முறையாவது பார்க்கனும்.
சிங்கார சென்னைனு சொல்றாங்க! பார்த்தா தெரியல! இன்னைக்கு அனன்யா வீட்டுக்கு மீண்டும் சென்று வந்தேன். ஒன்னும் சொல்ல தோனல. நான் US போறேன் என்று அவள் இதுக்கு முன்ன அழுந்ததும், இன்னைக்கு சோகமாய் இருந்ததும் மனதில் நிற்கின்றது.
Early 2006:
மறக்க முடியாத வருடங்க இது! அனன்யாவுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காம். அடுத்த aprilல. பேசும் போது சொல்லுறா. என்ன சொல்லுவேன் நான் அதுக்கு? சந்தோஷ படனுமா? கோப படனுமா? இல்ல துக்க படனுமா?
Nov 2006:
அவ கூட தான் பேசிட்டு இருக்கேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.
"சூர்யா.."
"ஹேய் எதுக்கு சோகமா பேசுற? என்னடா ஆச்சு?"
"ஒன்னும் இல்ல. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்"
"அது தெரிஞ்சது தானே.. பிடிக்காம இவ்வளவு நாள் பேசுவியா?"
"அது இல்லடா.. நான் உன்னை love செய்யறேன் என்று தோணுது"
(இதயம் சில வினாடிகள் நின்னுட்டு துடிக்குமா? எனக்கு துடிக்குது)
"என்னடி சொல்லற?"
ஹ்ம்ம்.. இது தாங்க மேட்டர். என்னை காதலிப்பதை கல்யாணம் கல்யாண மண்டபம் எல்லாம் முடிவு செய்த பின் தான் உணர்ந்தாலாம். சினிமாவா இருந்தா, ரெண்டு பேரும் சேர்ந்துடாங்க என்று சொல்லி சுபம் போட்டு முடிக்கலாம். வாழ்க்கையில? எங்க அம்மா அப்பா கூட ஒத்துப்பாங்க. அவங்க வீட்டுல? என்னென்னமோ சொல்லி பார்த்துட்டேன். ஆனா வீட்டை விட்டு எல்லாம் வரமுடியாதுனு சொல்லிட்டா. அவங்க வீட்டுல கேட்குற மாதிரி நிலைமை இல்ல. இரெண்டு மனங்கள் இணைவது தான் காதல். என் காதலுக்கு சீக்கிரம் இறக்க போறோம் என தெரிந்து இருக்கும் கொடுமை.
காதல் ஒரு முழுமை உணர்வு. அதோட பார்த்தா மத்த எல்லாமே வெறுமை தான். அது இருக்கும் வரை உலகை அழகாக்கும். இறக்கும் போது உலகின் அழகுகள் அதோட கூட்டிட்டு போயிடும் போல. வீட்டுல இரெண்டு நோட்டு நிரம்ப கவிதை எழுதி இருக்கேன். அதுல ஒன்னு கூட காதல் பத்தி எழுதினது கிடையாது. ஆனா இப்ப, அத தவிற, அவளை தவிற எதுவும் எழுத முடியல. இத தான் வெற்றியிலும் தோல்வி என்று சொல்லுவாங்க போல! காதல் முழுமை அடைந்து விட்டது.. ஆனா அதுக்கு ஆயுசு?
தப்பு நடக்குது என்று தெரியுது. ஆனா யார் மேல குற்றம் என தெரியல.
-தொடர் முற்றும்.. வாழ்க்கை தொடரும்.
"காதல் விண்நட்சத்திரம்
வாழ்க்கை வானம்
நட்சத்திரம் வானத்திற்க்கு
அழகு சேர்க்கும்...
இருப்பது பிடித்தது..
ஆனால் வீழ்ந்து விட்ட
வின்மீனுக்காக என்றும்
உடையாது வானம்"