இருப்பதுவும் இல்லாததுவும்..
First Happy New Year Everyone! நினைப்பது கிடைக்கட்டும். அப்படி கிடைக்கலனா கிடைச்சது பிடிக்கட்டும். அப்படி பிடிக்கலனா நினைப்பது கிடைக்கட்டும்!
வருஷத்துக்கு ஒரு முறை உருப்படியான பதிவ போடணும் அப்படிங்கிற உயர்ந்த கொள்கைய நாம follow பண்ணறதால இது. போன வருஷத்து உருப்படி பதிவு எங்க அப்படின்னு எல்லாம் கேள்வி கேட்காம படிங்க..
இது நான் படித்தது, சிந்தித்தது அப்படி கலந்து நான் எழுதுவது.
சரி நாம ரிலேடிவிடி (relativity), மல்டி வெர்ஸ் (Multi Verse) பத்தி பேசுவோம். இதுக்கெல்லாம் தமிழ் வார்த்தை இருந்தா சொல்லுங்க..
எல்லாருக்கும் universe அதாவது அண்டம் தெரியும். அதென்ன multi-verse? அதாவது பல அண்டங்கள் இருக்கு என்பது சிலரின் கருத்து. அதுவும் அவை நம்மள சுத்தியே இருக்கு என்பதுவும் அவர்களின் வாதம்.
If you ignore time as a dimension, and consider spatial dimensions alone, நாம மூன்று கோண உலகில் வாழறோம். (3 dimensional world - Height , Width and Depth). ஒரு பொருள் இருக்கும் இடமும், அதில் இருந்து இன்னொரு பொருளுக்கு இந்த மூன்று தூரங்களும் தெரிந்தால் அந்த பொருளை நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.
இப்போ ஒரே dimension உலகில் இருந்தோம்னு வெச்சா அந்த அண்டம் ஒரு கோடு மாதிரி நீலமா இருக்கும். அதுல வாழும் ஒருவருக்கு அவருக்கும் முன் செல்பவரையும், பின் செல்பரையும் மட்டுமே நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.
அவர்களின் உருவம் புள்ளியாகவோ, இல்லை கோடாகவோ மட்டுமே இருக்கலாம்.
அப்படியே இரெண்டு dimension அண்டம் பார்த்தோம் என்றால், அதில் உள்ளவர்கள் Squares, rectangles, circles இப்படி பல மாதிரி இருப்பாங்க. அதில் வாழும் ஒருவருக்கு இன்னொருவரை பார்த்தால் அவர்களின் உள் இருப்பது தெரியாது. வெளி கோடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு உயரம் என்னும் அமைப்பே தெரியாது. ஏன் அவர்களால் அதை சிந்திக்க கூட முடியாது. 3 Dimensional அண்டங்களில் வாழும் நம்மை போன்றவர்கள் அவர்கள் அண்டத்தில் எட்டி பார்த்தால், (if we enter their world from the height dimension, entering from other dimensions will destroy their (uni)verse! ) அதில் வாழும் ஒருவருடைய வெளி தோற்றம் மட்டும் இல்லாமல், அவர்கள் உறுப்புகளும் தெரியும். அவர்கள் உடம்பை தொடாமலே அவைகளுக்கு வைத்தியம் செய்யலாம், இல்லை உறுப்புகளை தொட்டு பார்க்கலாம்! அப்படி ஒரு அண்டத்தில் நாம் திடீர் என்று நுழைந்தோம் என்றால், அவர்களுக்கு நாம் மாயமாய் அங்க வந்ததாக தோன்றும்.
மேற்கொண்டு ஏதும் சொல்லும் முன் மேல சொன்னது புரியணும்.
அதாவது ஒரு பேப்பர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு square, rectange வரைங்க. இப்போ அந்த paper sheet ஒரு 2 dimensional world என்றும், அதில் வாழும் இருவர் நீங்கள் வரைந்தது என்றும், square வந்து males என்றும் rectangle எல்லாம் female என்றும் வைத்தால், இப்போ அந்த square, rectangle ஏ சைட் அடிச்சா எப்படி தெரியும்? அதால height ல இருந்து பாக்க முடியாது. அதுனால, rectangle ஏ முழுசா பாக்கணும் என்றாலே அது அதை ஒரு முறை சுத்தி வந்தா தான் பார்க்க முடியும். உண்மையில அதுக்கு அது ஆணா பெண்ணா (Square or Rectangle) என்பது தெரியவே அதை இரெண்டு angle ல பார்க்கணும்.... (ஆனா நமக்கு அப்படி இல்ல, ஒரு angle பார்த்தாலே சொல்லிடலாம் அது square ஆ rectangle ஆ என்று)
இப்போ அந்த squareக்கு ஏதோ ஆபரேஷன் செய்யணும். அந்த rectangle தான் டாக்டர் அப்படின்னு வைத்தால், rectangle, square ஏ வெட்டினா தான் உள் உறுப்புகளை தொட முடியும். நமக்கு அப்படி இல்ல. நாம நேரா அதோட இதயத்தை தொடலாம். மருத்துவ உதவி செய்யலாம். (நான் சொல்லல, காதலிகள் வேறு dimensionsla இருந்து வராய்ங்க :) ). இப்போ அந்த square கிட்ட, நாம பேச முடிஞ்சு நம்மளுடைய 3 dimensional உலகத்தை பற்றி சொன்ன அதுக்கு எவ்ளோ சொன்னாலும் புரியாது. ஏனா height என்னும் concept அதுக்கு விளங்கவே விளங்காது.
இப்போ 4 dimensional அண்டம் பத்தி பார்ப்போம். எப்படி 2 dimensional உலகத்தில் வாழ்ந்தால், height புரியாதோ, யோசிக்க முடியாதோ, அதே மாறி நம்மலாளையும் 4th Dimension பற்றி யோசிக்க முடியாது. ஆனா அந்த dimesnsion ல வாழும் ஒருவர் நம்மை பார்த்தா எப்படி இருக்கும்? நமக்கும் நம்ம உலகத்தில் வாழும் ஒருவரை முழுசா பார்க்க ஒரு angle of view பத்தாது. உள் உறுப்புகளை தோலை வெட்டாமல் தொட முடியாது! நம்ம மேல கத்தி வைக்காமலே அறுவை சிகிச்சை செய்யலாம்!
Any conscious living being in a n-dimensional verse can only think and comprehend 1 to n dimensions. n+1th dimension will always be beyond comprehension. இது ஒரு Physics law.
நம்மளை சுத்தி பல dimensionsla உலகம் இருந்தாலும் நமக்கு விளங்காது தெரியாது.
ஆனா நாம, நம்மலே தெரியாம அப்படி பல அண்டங்களின் ஒரு சில dimensions ல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம்மை விட குறைந்த dimensions கொண்ட அண்டங்களை அழிக்கும் சக்தியும் நம்ம கிட்ட இருக்கு.
மொத்தத்துல இது எல்லாம் தெரிஞ்சு நாங்க என்ன பண்ண போறோம்னு தான கேட்கறீங்க? எல்லாத்துக்கும் நானே பதில் சொல்ல முடியுமா ? :P
ஏதோ புது வருஷம் நல்லா இருந்தா சரி!!!
பி.கு: Post-dated Post!
13 மறுமொழிகள்:
வரும் அனைவருக்கும் என் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்துக்கள்!
நாம இருக்கறது 3dimensional world!
நம்மளால 3+ dimensions comprehend பண்ண முடியாது.
ஆனா 1 dimensional மற்றும் 2 dimensional world comprehend பண்ண முடியும் இல்லையா??
அப்படி 1 மற்றும் 2 dimensions worlds எங்க இருக்கு???
are we interacting with them??
where/what are they??
ஹாய் ட்ரீம்ஸ்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Nalla post.Enakku relativity theory patti muzhusa teriyavitallum oru post podalamnu irunden.Nee munditai.I bought a book recently talking about relativity theory,time space theory etc.
// நாம மூன்று கோண உலகில் வாழறோம். (3 dimensional world - Height , Width and Depth).
enaku therinjadhu ellam 3D animation, special effects dhan....
புத்தாண்டு நல்வாழ்துக்கள் Dreamzz !!
A u ( B n C ) = ( A u B ) n ( A u C ) :((
புத்தாண்டு வாழ்த்துக்கள் !
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்..
சிந்தனை தொடறட்டும்..
ஏதோ புது வருஷம் நல்லா இருந்தா சரி!!!
என்னமோ சொல்ல வாரீருங்கறது மட்டும் தெளிவா தெரியுது.. அது தான் என்னன்னு தெரியல. என்னமோ புது வருஷம் அதுவும் நல்லா இருங்க சாமி
Yedhuvume puriyala :(.... idhula comment la CVR vera kuzhappi irukaru :(
Yaedho sollureenganu puriyudhu Dreamsssssssss..
Happy new year:)
வரவேற்புத் தோரணத்துக்கு ரொம்ப..., ரொம்ப.., ரொம்ப.., நன்றி-டா கண்ணா.
இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
ஆமாம்! இந்தப் பதிவு "Quantom Physics"
சம்பந்தப்பட்டதுதானே?
எளிமையா சொல்ல முயற்சி பண்ணி இருக்கே...
என்னால ஓரளவுதான் புரிஞ்சுக்க முடிஞ்சுது.
இதை Copy பண்ணி வச்சிட்டு... திரும்பத் திரும்ப படிச்சு.... புரிஞ்சுக்கற வரைக்கும் விட மாட்டேன்.
Stephen Hawkins-ன் 'History of time"
படிச்சிருப்பேன்னு நினைக்கிறேன்.
Post a Comment