தேவதை பிரிவு
இதற்கு முந்தைய தேவதை தொடர்களுடன் கூடிய முழு கவிதை வரிசை.
1. தேவதை ஊர்வலம்
2.தேவதை கனவுகள்
3.தேவதை தரிசனம்
4.தேவதை யாசகன்
5. தேவதை பருவம்
6. தேவதை பொய்கள்
7. தேவதை பிரிவு
நிஜம் தான் போலும்..
வதை செய்ய வந்ததால் தான்
தேவதை ஆனாயோ நீ?
எல்லா கேள்விக்கும்
பதில் நீதான்..
சொல்லிய பின்னும்
கேள்விகுறியாய் நிற்பது
நீ மட்டும்..
கதவை திறந்ததும்
பறந்து போனது பட்டாம்பூச்சி..
சரிதான்..
அதன் சிறகில் சிக்கி கொண்ட
என் இதயத்தை
நான்
திரும்ப பெறுவது எப்பொழுது?
உன் உதட்டசைவில்
தொலைந்து போன இதயத்தை
உன் உதட்டசைவிலேயே
உடைக்கவும் செய்கின்றாய்..
அழகழகாய்
குட்டி குட்டி
வர்ண குமிழிகளாய்
என் காதலை சொல்லி கொண்டு இருக்கின்றேன்..
நீயோ
அழகழகாய்
உன் விரல் தொட்டு
உடைத்து கொண்டிருக்கின்றாய்
அதை...ரசித்து கொண்டே..
நீ என்னை விட்டு
விலக விலக
உனற்கான என் காதல் மட்டும்
வளர்ந்து கொண்டே இருந்தது..
என்றேனும் ஒரு நாள்
உன்னை பிடித்து விடும் எண்ணத்தில்..
மெதுவாக தான் புரிந்தது
எவ்வளவு நீளமாய் வளர்ந்தாலும்
நிழல்கள்...
சூரியனை தொட இயலாத
நிதர்சனம்.
---------------------------------------------------------------------------
பி.கு:
இதற்கு முந்தைய தேவதை தொடர்களுடன் கூடிய முழு கவிதை வரிசை.
1. தேவதை ஊர்வலம்
2.தேவதை கனவுகள்
3.தேவதை தரிசனம்
4.தேவதை யாசகன்
5. தேவதை பருவம்
6. தேவதை பொய்கள்
7. தேவதை பிரிவு
எனக்கு பிடித்த எண் 7 என்பதால், இத்துடன் தேவதை கவிதை தொடர் நிறைவு பெறும் என அறிவித்து கொள்கிறேன்.
அட நானும் எத்தனை கவிதை தான் தேவதைனு சொல்லியே எழுதுவேன். புது வருஷம். புதுசா வேற ஆரம்பிப்போம். ;)
30 மறுமொழிகள்:
Reserved for my sis :)
//கதவை திறந்ததும்
பறந்து போனது பட்டாம்பூச்சி..
சரிதான்..
அதன் சிறகில் சிக்கி கொண்ட
என் இதயத்தை
நான்
திரும்ப பெறுவது எப்பொழுது?//
அடடா படிக்கும்போதே மனம் பட படவென்று அடித்துக் கொள்கிறது.பின்னாலே போய் எப்பிடிப் பிடிக்கப் போறீங்க???? மனசை?
அன்புடன் அருணா
@Aruna
//அடடா படிக்கும்போதே மனம் பட படவென்று அடித்துக் கொள்கிறது.பின்னாலே போய் எப்பிடிப் பிடிக்கப் போறீங்க???? மனசை?
அன்புடன் அருணா//
அதெல்லாம் தெரிஞ்சா இன்னுமா கவிதை எழுதிட்டு இருப்பேன்.. உங்களை மாதிரி பெரியவங்க ஏதேனும் ஐடியா சொன்னாதேன் உண்டு :)
தேவதை கண்ணை விட்டு பிரிஞ்சாலும் நினைவை விட்டு பிரியாது!! கவிதை பிரமாதம்!! என்னை இந்த அற்புதமான பதிவுலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும்,எனக்காக இந்த பின்னூட்டப்பெட்டியில் சிறப்பு இடம் அளித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அடடா!!
எப்பவும் போல அழகான கவிதை!!
அநியாயத்துக்கு பீல் பண்ணி எழுதிருக்க போல!!!
ஒவ்வொரு வரியும் அழகான சிந்தனை மற்றும் வார்த்தைகளின் சேர்க்கை!!
வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்!! :-)
@shalini
//எனக்காக இந்த பின்னூட்டப்பெட்டியில் சிறப்பு இடம் அளித்ததற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//
உங்களுக்கு இல்லாமலா சிஸ்டர் :)
ஹிஹி. நன்றி ஹை.
@c.v.r
//ஒவ்வொரு வரியும் அழகான சிந்தனை மற்றும் வார்த்தைகளின் சேர்க்கை!!
வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்!! :-)//
நன்றி தல :)
//நிஜம் தான் போலும்..
வதை செய்ய வந்ததால் தான்
தேவதை ஆனாயோ நீ//
//எல்லா கேள்விக்கும்
பதில் நீதான்.
சொல்லிய பின்னும்
கேள்விகுறியாய் நிற்பது
நீ மட்டும்..//
//கதவை திறந்ததும்
பறந்து போனது பட்டாம்பூச்சி..
சரிதான்..
அதன் சிறகில் சிக்கி கொண்ட
என் இதயத்தை
நான்
திரும்ப பெறுவது எப்பொழுது?//
//அழகழகாய்
குட்டி குட்டி
வர்ண குமிழிகளாய்
என் காதலை சொல்லி கொண்டு இருக்கின்றேன்..
நீயோ
அழகழகாய்
உன் விரல் தொட்டு
உடைத்து கொண்டிருக்கின்றாய்
அதை...ரசித்து கொண்டே..//
//நீ என்னை விட்டு
விலக விலக
உனற்கான என் காதல் மட்டும்
வளர்ந்து கொண்டே இருந்தது..
என்றேனும் ஒரு நாள்
உன்னை பிடித்து விடும் எண்ணத்தில்..///
//உன் உதட்டசைவில்
தொலைந்து போன இதயத்தை
உன் உதட்டசைவிலேயே
உடைக்கவும் செய்கின்றாய்..//
மாம்ஸ் எந்த வரியை நான் அனுபவித்து ரசித்தேன்ன்னு யோசிச்சேன்.. அதான் என்னை கொள்ளை கொண்ட எல்லா வரிகளையும் எழுதிட்டேன்...
அருமை...
//மெதுவாக தான் புரிந்தது
எவ்வளவு நீளமாய் வளர்ந்தாலும்
நிழல்கள்...
சூரியனை தொட இயலாத
நிதர்சனம்.// இதில் தான் நான் முரண்படுகிறேன்.
பூமிக்கு (மனதால் ) இறங்கி வருவதால் தான் அவள் தேவதை..
சூரியன் கம்பாரிசன் முரடாய்/முரணாய் இருக்கு..:)
//எனக்கு பிடித்த எண் 7 என்பதால், இத்துடன் தேவதை கவிதை தொடர் நிறைவு பெறும் என அறிவித்து கொள்கிறேன்.//
ஏனுங்க மாம்ஸ் 777 கூட நல்ல எண் தானே?..:)
//அட நானும் எத்தனை கவிதை தான் தேவதைனு சொல்லியே எழுதுவேன். புது வருஷம். புதுசா வேற ஆரம்பிப்போம். ;)//
அதானே இனி ” ஏஞ்சல் “ன்னு சொல்லி எழுதலாம் மாம்ஸ்.. கலக்குங்க.. ஹிஹி..:)))))))))
@ரசிகன்
//மாம்ஸ் எந்த வரியை நான் அனுபவித்து ரசித்தேன்ன்னு யோசிச்சேன்.. அதான் என்னை கொள்ளை கொண்ட எல்லா வரிகளையும் எழுதிட்டேன்...
அருமை...//
ஆஹா! நன்றி நன்றி :)
//பூமிக்கு (மனதால் ) இறங்கி வருவதால் தான் அவள் தேவதை..
சூரியன் கம்பாரிசன் முரடாய்/முரணாய் இருக்கு..:)/
இறங்கி வந்துட்டு, திரும்ப எறிட்டா ;)ஹிஹி!
//அதானே இனி ” ஏஞ்சல் “ன்னு சொல்லி எழுதலாம் மாம்ஸ்.. கலக்குங்க.. ஹிஹி..:)))))))))//
இது கூட நல்ல ஐடியா தானுங்கோவ்!
/நிஜம் தான் போலும்..
வதை செய்ய வந்ததால் தான்
தேவதை ஆனாயோ நீ?
எல்லா கேள்விக்கும்
பதில் நீதான்..
சொல்லிய பின்னும்
கேள்விகுறியாய் நிற்பது
நீ மட்டும்../
என்னை கவர்ந்த வரிகள்
மெதுவாக தான் புரிந்தது
எவ்வளவு நீளமாய் வளர்ந்தாலும்
நிழல்கள்...
சூரியனை தொட இயலாத
நிதர்சனம்.
அடடா! மிகவும் அனுபவித்து எழுதியுருக்கின்றீர்! மிகவும் டச்சிங்காக இருந்தது! வாழ்த்துக்கள்!!
//வதை செய்ய வந்ததால் தான்
தேவதை ஆனாயோ நீ?//
நல்ல வேளை சிதை செய்ய வரலை :).. இல்லாட்டி சீதை'னு சொல்லி இருப்பீங்க போல :D
//எல்லா கேள்விக்கும்
பதில் நீதான்..
சொல்லிய பின்னும்
கேள்விகுறியாய் நிற்பது
நீ மட்டும்..//
எந்த பாடத்துக்கு டீச்சர் அவங்க? டியூசன் வச்சி இருக்கலாம்'ல ..
//கதவை திறந்ததும்
பறந்து போனது பட்டாம்பூச்சி..
சரிதான்..
அதன் சிறகில் சிக்கி கொண்ட
என் இதயத்தை
நான்
திரும்ப பெறுவது எப்பொழுது?//
பிரதர் அது பட்டாம்பூச்சியா இல்லை டிராகன்'யா? இல்லை உங்க இதயம் சைஸ் தான் என்ன?
//உன் உதட்டசைவில்
தொலைந்து போன இதயத்தை
உன் உதட்டசைவிலேயே
உடைக்கவும் செய்கின்றாய்..
//
மெஷினரி factory வச்சி இருப்பாங்க போல :)
//விலக விலக
உனற்கான என் காதல் மட்டும்
வளர்ந்து கொண்டே இருந்தது..
என்றேனும் ஒரு நாள்
உன்னை பிடித்து விடும் எண்ணத்தில்//
கவ்வாங் கல் கைல இருக்கு தானே?
//எவ்வளவு நீளமாய் வளர்ந்தாலும்
நிழல்கள்...
சூரியனை தொட இயலாத
நிதர்சனம்.//
சூப்பர்..
//எனக்கு பிடித்த எண் 7 என்பதால், இத்துடன் தேவதை கவிதை தொடர் நிறைவு பெறும் என அறிவித்து கொள்கிறேன்.//
பிரதர்.. என் கமெண்ட் பிடிக்காம எதுவும் நிறுத்திவிடலையே நீங்க?
//புதுசா வேற ஆரம்பிப்போம். ;) //
இது மேட்டர்...
:)
//நிஜம் தான் போலும்..
வதை செய்ய வந்ததால் தான்
தேவதை ஆனாயோ நீ?//
:))) தேவதை விளக்கம் அழகோ அழகு !!
என் செல்லப் பேராண்டி,
ரொம்பவும் அருமையா எழுதியிருக்கேடா...
பாட்டிகிட்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போடச் சொல்லு...
ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகம் உன் கவிதைல தெரியுது...
நான் கூட இந்த வயசுலயும்.....
இது போலத் தவிக்கிறேண்டா கண்ணு....
என்னமோ போ...
விதி யாரை விட்டுருக்கு..
ம்ம்ம்ம்ம்....
எட்டாத கனவுக்குத்தான் கொட்டாவி விட வேண்டியிருக்கு.
நடு நடுவுல இந்த பொண்ணுங்க Photo வேற...
போட்டு ஜொள்ளு விட வைக்கிற...
என் பேரன் ரசிக்கிறதாச்சேன்னு... மனசை அடக்கிட்டேன்....
நீ இன்னும் நல்லா...
நிறைய எழுதி..
பேர் வாங்கணும்னு மனசார வாழ்த்தறேன்.
நான் உன் வலைப் பூவுக்கு பலமுறை வந்து படிச்சுட்டு போயிருக்கேன்.
Comment எழுதறது இதான் முதல் தடவை.
ஹாய் தினேஷ்,
//நீ என்னை விட்டு
விலக விலக
உனற்கான என் காதல் மட்டும்
வளர்ந்து கொண்டே இருந்தது..
என்றேனும் ஒரு நாள்
உன்னை பிடித்து விடும் எண்ணத்தில்..//
இது தான் எனக்கு ரொம்ம்ப பிடிச்ச வரிகள்.
ஹாய்,
//அட நானும் எத்தனை கவிதை தான் தேவதைனு சொல்லியே எழுதுவேன். புது வருஷம். புதுசா வேற ஆரம்பிப்போம். ;)//
ஓஹோ, அப்ப இந்த புது வருஷத்துல புது தேவதையா?
ம்ம்ம் நடத்துங்க...
\\நிஜம் தான் போலும்..
வதை செய்ய வந்ததால் தான்
தேவதை ஆனாயோ நீ?\\
ரொம்ப சித்திர'வதை' அனுபவிச்சிருப்பீங்க போலிருக்கு உங்க தேவதைகிட்ட??
புது 'தேவதை' வந்துவிட்டதால், பழைய தொடர் முடிவடைகிறதோ??
தேவதை' தொடரை நிறுத்திக்கொண்டாலும், தொடர்ந்து கவிதை எழுதுங்கள்!
Trisha padam pottu varavertadukku nanri.As usual Interesting pictures and good kavidais
NIce poems .Nice introduction of your sister's blog.Adu enna parandu parandu letters lam varadhu blogla.Kalakkarai.
ஏன் தேவதை தொடரை நிறுத்துகிறீர்கள்?
உங்கள் 'தேவதை' கவிதைகளின் ரசிகை நான்....தயவு செய்து தொடர்ந்து எழுதவும்.
Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க kavithai thodar is nice.
Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா
எல்லா கவிதைகளும் அருமை இந்த தொடரில் இன்னும் கொஞ்சம் தொடர்ந்திருக்கலாம் :)
Post a Comment