Sunday, January 13, 2008

Californiaவில் காந்தியும் நானும்

மூன்று நாள் இருந்தேன். சில சுவாரஸ்யமான விஷயங்கள் மட்டும் இங்கே.
Conference முடிஞ்ச அன்று (நேற்று இரவு) we had a party to the host on behalf of our company. அது ஒரு லோக்கல் ரெஸ்டாரண்ட்&பார்ல. பிக் அப் – அப்படிங்கிறத கேள்வி பட்டு இருக்கோம். நான் நேர்ல அன்னைக்கு தான் பார்த்தேன். (நான் வெறும் கோக் மட்டும் தான் குடிச்சேன் என்பத இங்கே திட்டவட்டமா தெரிவிச்சுக்கிறேன்..) மணி 12:00 வரை எல்லாம் நார்மலா தான் இருந்துச்சு. திடீர்னு முழிச்சு பாக்கிறேன், எவனையும் காணோம். எங்கடா சுத்தி இருந்த என் வெள்ளைகார பயலுக எல்லாம் காணொம்னு கீழ எட்டி பார்த்தேன். (Private Party was happening upstairs - எங்கள்து). பாத்த கீழ அப்பதான் ஒரு 10 பிகர்ங்க. எல்லாவனும் கீழ ஓடிட்டான் அதுனால தான். அப்புறமா நடந்தது எல்லாம் உங்க மனச கெடுக்க வேணாம்னு சென்ஸார்டு! (இங்க சொல்லிக்கிற இன்னொரு விஷயம், நான் அப்ப S ஆகி என் ஹோட்டலுக்கு போய் தூங்கிட்டேன் என்பது..)

கடைசு நாள் தமாசு!

அட, எதிர்பார்ப்பது நடக்காம, எதிர்பார்க்காதது நடப்பது தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம். என்ன நடந்ததுனு சொல்லறேன் கேளுங்க.

நம்ம நண்பன் ஒருவன் SanFrancisco அருகில் இருக்கிறான். சரி பார்க்க போலாம்னு நினைச்சேன். கிறுஸ்துவ பையன் என்பதால், Sunday கண்டிப்பா சர்ச் போவேன் என்று சொல்லிடான். சரி. அங்கேயே நானும் வந்து பார்க்கிறேன் என்றேன். அன்று காலையில் போன் செய்து கன்பர்ம் பன்னறேன்னு சொன்னான். நான் வெய்ட் செய்து, பொறுக்காம, ரூமை காலி செய்துட்டு கிளம்பிட்டேன் 10 மணிக்கு. நானும் சரி பக்கத்துல தான் இருக்கும்னு நினைச்சு டாக்ஸி பிடிச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அங்க போக $150- ஆகும்னு. சரி, வந்தது வந்தாச்சு… போயிடலாம்னு ஓகேனுட்டேன். அங்க 10:40 க்கு போய் சேர்ந்தேன். ஓரளவு பெரிய சர்ச் தான். இதுக்கு முன் சர்சுக்கெல்லாம் போய் பழக்கம் கிடையாது. போய் பேபே னு முழிச்சிட்டு இருந்தேன். கோவிலுக்கு போனாவே, எனக்கு எப்பவும் 30 நிமிஷத்துக்கு மேல தாக்கு பிடிக்காது. சரி பரவாயில்லை, அவன் வருவான் அப்படினு எப்பவும் போல கடைசி ரோவில்உட்கார்ந்தேன்.

எனக்கு எப்புவுமே Mass ஜெபங்கள், பஜனைகள் பிடிக்காது. Spirituality doesn’t come to me when I am in midst of 500 people. சரி, ஆரம்பத்தில் பையன் வந்தா தெரிஞ்சிடும்னு ஒரு நம்பிக்கையில் இருந்தேன். அப்ப சுமார் 50 பேர் இருந்தாங்க அங்க. கொஞ்ச நேரத்துல, அது 500 பேரா மாறிடுச்சு. (இந்த லட்சணுத்துல அவன்கிட்ட மொபைல் வேற இல்ல. ரூமுக்கு அடிச்சா யாரும் இல்ல) ஆஹா தாங்காதுடானு நான் வெளியில வாசலுக்கு ஓடி வந்துட்டேன். அங்க காத்திருந்து கால் வலிச்சது தான் மிச்சம். வழிப்பாடு இடம் என்பதால் சைட் கூட அடிக்க மனசு வரல (அட நிஜமா!). சரி இது சரிபடாது, டாக்ஸி பிடிச்சு கிளம்புவோம்னு முடிவ பன்னப்ப மணி 12:30.

அப்பதான் கவனிச்சேன், சுத்திமுற்றி எதுவுமே இல்ல, இங்க கண்டிப்பா டாக்ஸி எல்லாம் கிடைக்காதுனு. அப்புறம் சரி வசமா சிக்கினோம் அப்படினு நினைச்ச நேரம், அவர பார்த்தேன். சரி பார்க்க தமிழ் ஆள் மாதிரி இருக்கார்னு, தமிழானு கேட்டேன். ஆமா, அப்படினு நாங்க பேச ஆரம்பிச்சு, அப்புறம் அவங்க கூடவே அவங்க வீட்டுக்கு போயாச்சு.
அவரும் அவர் மனைவியும் நல்லா பேசினாங்க. விருந்தோம்பல் - தமிழன் எங்கு போனாலும் மறப்பதில்லை என்பதை உணர்த்தினாங்க. அவங்க விட்டுக்கு போய் முதல்ல சாப்பட சொல்லிடாங்க. சாப்பிட்டு இருக்கும் போதுதான் அத கேட்டாங்க. “தம்பி, ரெகுலரா சர்ச்சுக்கு போவீங்களோ?” அப்படினு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அங்கிள் நான் ஹிந்து, “ஆனா கடந்த மூன்று வருஷமா சர்ச்க்கு போறேன்னு” கொஞ்சம் அள்ளி விட்டேன். (அப்புறம், நான் காலையில் இருந்து சாப்பிடாம அப்ப தான் சாப்பிட ஆரம்பிச்சேன். சரி எதுக்கு வம்புனு ஒரு safetyக்கு தான்). அப்புறம் பார்த்தா அவங்க நம்ம ஊர்ல வருமே கிறிஸ்துவ ஜெப சேனல்கள், அதுக்கு எல்லாம் ப்ரோகிராம் பன்னி தரவங்க. அடுத்த 2 மணி நேரம்… அந்த சிடி, டிவிவி எல்லாம் பாக்க வைச்சுட்டாங்க. (அதுவும் என்ன போய்! ). நல்ல வேளை, கடைசியா ஒரு வெள்ளை பிகர் பக்தி பாடல் பாட, சூப்பரா இருக்கும் பாருனு கேட்க விட்டுடாங்க. அவ்வளவு நேரம் பாத்த மூஞ்சிக்கு, இது எவ்வளவோ தேவலடா சாமினு, (என்னமா closeup ல காமிக்கிறான். ஹிஹி), “அங்கிள் எனக்கும் Chirstmas Carol Songs ரொம்ப பிடிக்கும்னு” அடிச்சு விட்டு.... பாட்ட ரசிச்சேன் .


எனக்கு ப்ளைட் இரவு 11:00க்கு. தெரியாம அத இவங்க கிட்ட முதலயே சொல்லிட்டேன். சரி அதுவரை இருந்தா கொஞ்ச நஞ்சத்தையும் குழப்பி விட்டுவிடுவாங்கடா அப்படினு,ஒரு 3:30 மணிக்கு நான் Early Flight பிடிக்க போறேன்னு ஒரு கப்ஸா விட (இரவு 11:00 மணி ப்ளைட் தான் மதியத்துக்கு மேல அன்றைக்கு ஒரே பிளைட்), சரிப்பானு சொல்லி எனக்காக Cab எல்லாம் கூப்பிட்டாங்க. (ரொம்ப நல்லவங்க….. வாழ்க தமிழன். வாழ்க மீன் குழம்பு.. வாழ்க விருந்தோம்பல்). அங்க நம்ம குஜராத்தி டிரைவர் ஒருத்தர் வந்தார். திரும்ப ஏர்போர்ட் போற 1 மணி நேரம் விடாம பேசி கழுத்தருத்தார் (அதெல்லாம் கேட்டதுக்கு அவன் எனக்கு $120 கொடுத்து இருக்கனும்). And he also assumed the couple to be my parents. நாம தான் ரொம்ப நல்லவங்களாச்சே, அவரோட நினைப்ப ஏன் கெடுக்கனும்னு அப்படியே விட்டுட்டேன். பார்த்தா, கொஞ்ச நேரம் கழிச்சு வழி கேட்கிறான் என்கிட்ட போற எடுத்துக்கு…. கொடுக்கனும்னு முடிவு செய்தா ஆண்டவன் கொட்டி தான்யா கொடுக்கிறான்! எப்படியோ தப்பிச்சு, SanFrancisco Downtown வந்தேன். அங்க பார்த்தது தான் இவர.




இதுல கொடும என்னன்ன, பையன் இப்ப போன் செய்து, மச்சி, என் ஆளு இன்னைக்கு வர சொல்லிடாடா. அதாண்டா. உனக்கு சொல்லனும்னு நினைச்சேன். மறந்துட்டேன்னு சொல்லறான். சச்சின் கோப்ஸ் சொல்றாப்ல, ஆர்வம் எல்லார்க்கும் ஒரே மாதிரி இருப்பதில்ல!

யார பாக்கனும்னு இருக்கோ, அது தான் நடக்கும். சரி ஏர்போர்ட்ல வெட்டியா இருக்கிற நேரம், நீங்களும் கஷ்டபடுங்கனு இந்த மொக்கை!

12 மறுமொழிகள்:

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//நான் அப்ப S ஆகி என் ஹோட்டலுக்கு போய் தூங்கிட்டேன் என்பது..)//

ஆஹா.. எம்பூட்டு நல்லவன் நீ...

Sumathi. said...

ஹாய்,

//அட, எதிர்பார்ப்பது நடக்காம, எதிர்பார்க்காதது நடப்பது தான் வாழ்க்கையில் சுவாரஸ்யம்.//

அட உனக்கு கூட மச்சம் இருக்குனு சொல்லு. மொத்தத்துல மீன் குழம்பு நல்லா இருந்ததா?

G3 said...

theriyaadha oorla puriyaadha edathula unna kootitu poi saapadu potaru paaru.. andha magaraasana sollanum :P

CVR said...

///(நான் வெறும் கோக் மட்டும் தான் குடிச்சேன் என்பத இங்கே திட்டவட்டமா தெரிவிச்சுக்கிறேன்..)////

யாருக்கு தெரிவிச்சுக்கற????

///(இங்க சொல்லிக்கிற இன்னொரு விஷயம், நான் அப்ப S ஆகி என் ஹோட்டலுக்கு போய் தூங்கிட்டேன் என்பது..)////

யாருக்கு சொல்லிக்கற???
எங்களுக்கு தான் நீ சொல்லாமயே என்ன பண்ணியிருப்பேன்னு தெரியுமே!! :-P


//
நம்ம நண்பன் ஒருவன் SanFrancisco அருகில் இருக்கிறான். சரி பார்க்க போலாம்னு நினைச்சேன். கிறுஸ்துவ பையன் என்பதால், Sunday கண்டிப்பா சர்ச் போவேன் என்று சொல்லிடான்.///
நண்பன்???
பையன்???????

ஹ்ம்ம்ம்
நம்பிட்டேன்!!


////நான் ஹிந்து, “ஆனா கடந்த மூன்று வருஷமா சர்ச்க்கு போறேன்னு”/////
மூனு வருஷமாகவே போக ஆரம்பிச்சிட்டியா??
யாருக்காகன்னும் சொல்லிட்டா வாழ்த்து சொல்ல வசதியா இருக்கும்!! :-P

//எப்படியோ தப்பிச்சு, SanFrancisco Downtown வந்தேன். அங்க பார்த்தது தான் இவர.///
என்ன கொடுமை ட்ரீம்ஸ் இது??

Dreamzz said...

@சுமதி
//ஆஹா.. எம்பூட்டு நல்லவன் நீ...//
இதுல ஏதும் உள்குத்து இல்லயே?

Dreamzz said...

@சுமதி
//அட உனக்கு கூட மச்சம் இருக்குனு சொல்லு. மொத்தத்துல மீன் குழம்பு நல்லா இருந்ததா?//
அதெல்லாம் இருந்து இருந்தா, அவங்களுக்கு ஒரு அழகான பொண்ணு இருந்திருக்கும் :P

Dreamzz said...

@G3
//theriyaadha oorla puriyaadha edathula unna kootitu poi saapadu potaru paaru.. andha magaraasana sollanum :P//
இல்லயே.. எனக்கு அங்க போனா கூட கண்ணு தெரியுமே... ;)

ரொம்ப நல்லவங்க தான் ஆனாக்க..

Dreamzz said...

@CVR
//யாருக்கு சொல்லிக்கற???
எங்களுக்கு தான் நீ சொல்லாமயே என்ன பண்ணியிருப்பேன்னு தெரியுமே!! :-P//
ஒரு முடிவோட இறங்கி இருக்கீங்களோ?

//என்ன கொடுமை ட்ரீம்ஸ் இது??//
ரிப்பீட்டு!

Unknown said...

obama'va? yeah.. he has charisma.. which others don't.

ambi said...

நான் சொல்ல வந்ததை எல்லாம் அருமைதம்பி சிவீஆர் முன்கூட்டியே கமண்டாக போட்டதை நான் அன்போடு கண்டிக்கிறேன். :)

ambi said...

என்ன தம்பி தீடிர்னு கமண்ட் மாட்ரேஷன் எல்லாம் பண்ணி இருக்க?
வீட்டுக்கு ஆட்டோ அனுப்பினாங்களா? :p

Sudha said...

Hey First time road meetingle vettukku koopittu chappadu pottangala!!Adisayama irukku.