Wednesday, February 20, 2008

போகாதே.. (அழகிய கவிதை - III)



அழகிய விதை
சொல்லவிட்டு சென்றவளே..
மனதில் விதை
விதைத்த வெண்ணிலவே..
எனற்கு பிடித்த
மாதங்களில் தை
மரணங்களில் நீ..

சிகப்பு ரோஜா
மஞ்சள் வெயில்
நீல வானம்
எல்லாவற்றையும் விட..
அழகியது
உனற்கும் எனற்குமான
கருப்பு வெள்ளை நினைவுகள்..



இமை மூட
காத்திருக்கும் விழியானதடி
என் காதல்..
காத்திருப்பின் சிகப்பில் கூட
கண்ணீரில்லாமல்
காதல் தான் வழிகின்றது..

மழை பேசும்
மொழியெல்லாம்
எனற்கு புரியாது..
நான் குடையில்லா ரசிகன்..
என் காதலுக்கும்
நான் ரசிகன் தான்..



நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..

இரவெல்லாம்
பகல் வர காத்திருந்து
பகலெல்லாம்
இரவு வர காத்திருக்கும்
விந்தையின் பெயர் தான்
காதலோ?



ஆயிரம் நட்சத்திரம்
மின்னினாலும்
ஒற்றை சூரியனில் தான்
விடியலும் இருட்டலும்..

ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்..

31 மறுமொழிகள்:

Anonymous said...

//ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்..//

அழகான வரிகள் :).

dubukudisciple said...

idu enna taga??

dubukudisciple said...

ella varigalum azhaga irukunga

Sanjai Gandhi said...

//சிகப்பு ரோஜா
மஞ்சள் வெயில்
நீல வானம்
எல்லாவற்றையும் விட..
அழகியது
உனற்கும் எனற்குமான
....கருப்பு வெள்ளை நினைவுகள்....//

என்ன ட்ரீம்ஸ் தாத்தா.. பாட்டிய நெனச்சி கவிதையா? கலக்குங்க :P

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//உனற்கும் எனற்குமான
கருப்பு வெள்ளை நினைவுகள்..//

வாவ்... அருமை. ம்ம் ரொம்ப அனுபவமாத் தான் இருக்கு.

Sumathi. said...

ஹாய்,

//நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..//

ஓஓஒ... பொண்ணு வேர மொழியா? எது அவங்க பேசறதா இல்லை திட்டறதா? இல்ல உங்கலை வச்சு பண்ற காமடியா? எதுல சந்தேகம்?

Priya said...

மழை பேசும்
மொழியெல்லாம்
எனற்கு புரியாது..
நான் குடையில்லா ரசிகன்..
என் காதலுக்கும்
நான் ரசிகன் தான்..


-Quite romantic dreamzz. Kalakareenga asusual.

CVR said...

//இமை மூட
காத்திருக்கும் விழியானதடி
என் காதல்..
காத்திருப்பின் சிகப்பில் கூட
கண்ணீரில்லாமல்
காதல் தான் வழிகின்றது..
/////
அட்ரா அட்ரா!!
அநியாயத்துக்கு லவ்ஸ் உருகி வழியுது போல!

விழியானதடி
என் காதல்..
அப்படின்னு சொல்லுற! அப்புறம் உருகி வழியறதும் காதல்னு சொல்ற,அப்போ கண்ணே உருகி வழியுதோ?? ;)

/நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..////
அடப்பாவி!!!
கவிதையே புரியலன்ன அப்புறம் எப்படிடா பிடிக்குது!!!
உனக்கு பிடிச்சது கவிதையா,இல்லை கவிதை எழுதின பெண்ணையா?? :-P


//இரவெல்லாம்
பகல் வர காத்திருந்து
பகலெல்லாம்
இரவு வர காத்திருக்கும்
விந்தையின் பெயர் தான்
காதலோ?///
அட !! இது சூப்பரு!! B-)

//ஆயிரம் நட்சத்திரம்
மின்னினாலும்
ஒற்றை சூரியனில் தான்
விடியலும் இருட்டலும்../////
கொன்னுட்ட போ!!
வழக்கம் போல செம ரொமாண்டிக் கவுஜை தான் போ!!
நடத்து!! B-)

ஸ்ரீ said...

"" எல்லாவற்றையும் விட..
அழகியது
உனற்கும் எனற்குமான
கருப்பு வெள்ளை நினைவுகள்..""

ஆஹா கனவுகளுக்கு இப்படி ஒரு மறுபெயரா? சூப்பரப்பு.

"" நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..""

அய்யய்யோ ஏங்க இருந்து தோணுதுப்பா உங்களுக்கு?

என்னமோ போங்க சூப்பர்னு சொன்னா கம்மி இது அநியாயத்துக்கு சூப்பர்.

k4karthik said...

வழக்கம் போல கவிதையும், கவிதைக்கான போட்டோவும் அருமை.. அருமை.. அருமை..

k4karthik said...

//ஆயிரம் நட்சத்திரம்
மின்னினாலும்
ஒற்றை சூரியனில் தான்
விடியலும் இருட்டலும்..

ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்..//

இது அட்டகாசம்..

Divya said...

அழகிய கவிதை தொடரை மேலும் மெருகேற்றியிருக்கிறது கவிதையின் ஒவ்வொரு வரிகளும், வாழ்த்துக்கள்!

Anonymous said...

\\எனற்கு பிடித்த
மாதங்களில் தை
மரணங்களில் நீ..\\

தை மாதம் 'தேவதை'யின் பிறந்த நாளோ??

Anonymous said...

\\மழை பேசும்
மொழியெல்லாம்
எனற்கு புரியாது..
நான் குடையில்லா ரசிகன்..
என் காதலுக்கும்
நான் ரசிகன் தான்..\\

உன் காதலை நீயேதான் ரசிச்சுக்கனும்,
இதுக்குன்னு ரசிகர் மன்றமெல்லாமா வைப்பாய்ங்க???

Anonymous said...

\\ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்..\


ஆயிரம் பேரை சைட் அடிச்சாலும், உன்னை மட்டுமே காதலிப்பேன்னு இப்படி 'அழகு கவிதை'யா சொல்லிப்புட்டியே.....கலக்குறே மாம்ஸ்!!!

Anonymous said...

\\இரவெல்லாம்
பகல் வர காத்திருந்து
பகலெல்லாம்
இரவு வர காத்திருக்கும்
விந்தையின் பெயர் தான்
காதலோ?\\

பகலும் ராத்திரியும் மாத்தி மாத்தி வந்துட்டேதான் இரும்பா.....இதுக்கெல்லாம் ரொம்ப யோசிச்சு உன் கொஞ்சுண்டு மூளையை ஏன் கஷ்டபடுத்துறே.......'இது பெயர் தான் காதலா? இல்ல அது தான் காதலான்னு எல்லாரையும் குழப்புறே'....போதும்பா சாமி தாங்கல!

Anonymous said...

\சிகப்பு ரோஜா
மஞ்சள் வெயில்
நீல வானம்
எல்லாவற்றையும் விட..
அழகியது
உனற்கும் எனற்குமான
கருப்பு வெள்ளை நினைவுகள்..\\

black & white காலத்து காதலா....அம்புட்டு வயசாகிடுச்சுங்களா உங்க காதலுக்கு.......சும்மா 24 வயசுன்னு ஊரை ஏமாத்திட்டு இருக்கிறீங்க!

Anonymous said...

\\இமை மூட
காத்திருக்கும் விழியானதடி
என் காதல்..
காத்திருப்பின் சிகப்பில் கூட
கண்ணீரில்லாமல்
காதல் தான் வழிகின்றது..\\

ரொம்ப வழியுது....தொடச்சுக்கோ ராசா!!

Anonymous said...

\நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..\\

அட இங்க பாருடா......புரியலினாலும் பிடிக்குமாம்! அது சரி....ஒவரா முத்திப் போச்சு!

'என் தாய்மொழி தெரிந்திருக்க தேவை இல்லை, என் தாய்க்கு மகளாக இருந்தால் போதும்'
அப்படின்னு எங்கயோ ஒரு கவிதை படிச்ச ஞாபகம்.......எங்கேன்னு தான் தெரியல்ல.......உங்களுக்கு அப்படி ஒரு கவிதை வரி படிச்சமாதிரி ஞாபகம் இருக்கா கவிபேரரசே??

ramya said...

so once i came, i saw trisha n an awsome poem..kalakara po as usuall...

Arunkumar said...

as usual SUPERB.. ellame kalakkals esp last ones..

ரசிகன் said...

//மழை பேசும்
மொழியெல்லாம்
எனற்கு புரியாது..
நான் குடையில்லா ரசிகன்..
என் காதலுக்கும்
நான் ரசிகன் தான்..//

மாம்ஸ்... உங்க பாசத்தை நெனச்சா எனக்கு அப்டியே புல்லறிக்குது... என்னோட பேரையெல்லாம் கவிதையில எழுதி என்னிய பேமஸ் பண்ணிட்டிங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))))))

ரசிகன் said...

//நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..//

அவ்வ்வ்வ்.... எப்டி மாம்ஸ்..
கலக்கல்..:)

ரசிகன் said...

//ஆயிரம் நட்சத்திரம்
மின்னினாலும்
ஒற்றை சூரியனில் தான்
விடியலும் இருட்டலும்..

ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்..//

என்னத்த சொல்ல.,. உருக்கிட்டிங்க .. மனசை :))

ரசிகன் said...

//எனற்கு பிடித்த
மாதங்களில் தை
மரணங்களில் நீ..//
ரசித்த வரிகள்.. ஆழமான அர்த்தமும் பொதிந்திருக்கு :))))))

(யாருப்பா அது? எவ்ளோ ஆழம்ன்னு கேக்கறது ?..:P )

ரசிகன் said...

ஜஞ்சு.......

ரசிகன் said...

சிக்ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ரசிகன் said...

ஒரு எக்ஸ்ரா...

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//காத்திருப்பின் சிகப்பில் கூட
கண்ணீரில்லாமல்
காதல் தான் வழிகின்றது..//

அட :))

//மழை பேசும்
மொழியெல்லாம்
எனற்கு புரியாது..
நான் குடையில்லா ரசிகன்..
என் காதலுக்கும்
நான் ரசிகன் தான்..//

புரியாமல் இரசிப்பதும் எத்துனை அழகு இல்லையா Dreamzz!!

//ஆயிரம் நட்சத்திரம்
மின்னினாலும்
ஒற்றை சூரியனில் தான்
விடியலும் இருட்டலும்..//

இரசித்தேன் மிகவும் :)

//எனற்கு பிடித்த
மாதங்களில் தை
மரணங்களில் நீ..//

'பிடித்தது' என்றிருக்குமோ!!

தமிழ் said...

/ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்../

அருமையான வரிகள்

Shwetha Robert said...

A love poem with loads of inner pain, very well expressed(-: