காதலும் க்ரைமும்
மு.கு: திரும்பவும் ஒரு கதை முயற்சி செய்யறேன்.. வீட்டுக்கு ஆள் அனுப்பாம, படிச்சு கமெண்ட்ட மட்டும் போடுங்க மக்கா..
---------------------------------------------------------------------
வருடம்: 2020 சூர்யா. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவன். கடந்த 5 வருடங்களாக மிக இரகசியமான ஆராய்ச்சி ஒன்றில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர். அவர் அடைய முயலுவது - சம அண்டத்திற்கு ஒரு திறவுகோல்.. ஆங்கிலத்தில் Portal to a parallel Universe. அதாவது, நம் அண்டத்தை போலவே, எண்ணில் அடங்கா அண்டங்கள் நம்மை சுற்றி, நாம் அறிய முடியாத கோணங்களில் இருப்பதாகவும், நாம், ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும் ஒவ்வொரு நொடியும், ஒரு புதிய அண்டம் உருவாகி அதில் நம்மை போலவே ஒருவன், நாம் எடுக்காமல் விட்ட அந்த முடிவை எடுத்து வாழ்வதாகவும் ஒரு கருத்து உண்டு. அப்படி அண்டங்கள் உண்டு. அந்த அண்டங்களுக்கு பயணிக்க, ஒரு வழி உருவாக்க முடியும் என்றும், அதையே தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டும் வாழ்பவர் இந்த சூர்யா.
இப்போ, கொஞ்சம் ஊதுபத்தி சுத்தி பின்னால போவோம்.. காலத்தில் (ஆமா, இப்படி சீரியஸான கதையில் காமெடி எழுதலாமா வேண்டாமா? சரி.. கழுத இருந்துட்ட போது..)
வருடம்:2000சூர்யா. இஞ்ஜினீயரிங் மாணவன். இறுதி ஆண்டு.
ஒரு பொருள்
இருப்பதை விட
இல்லாமிலிருப்பது
கனமாகாது
எனும் விஞ்ஞானகூற்றை
உடைத்தெறிந்தது..
நீ விட்டு சென்று
போன என் இதயம்..
என்று காதல் கவிதை கிறுக்கி கொண்டு இருக்கும் ஒரு சாதா மாணவன். அவன் காதலிக்கும் பெண்ணின் பெயர் கேட்டால் இராட்சஸி என்று சொல்லுவான். அவளை பார்த்தால், அவளோ தேவதை மாதிரி இருப்பாள். பெயர் அமுதா. இருவரும் நல்ல நண்பர்கள். இவன் காதலை சொல்லி விட்டான். அவளும் சம்மதித்து விட்டாள். காதலர்கள் பிரியும் பொழுது எல்லாம் , சூரியன் சிகப்பாய் விடியுமாம். அன்றும் அப்படி தான் விடிந்தது. சூர்யாவிற்கு தெரியாது, பிரியப்போவது அவன் காதல் தான் என்று. ஒரு ஜீனியர் பெண்ணை கிண்டலடித்த நண்பனுக்காக பேசப்போகி, அது சண்டையாகி, நீ பெண்களை மதிக்காதவன்.. உன்னை போயா நான் காதலித்தேன்.. என்று 3 வருட காதலை வீதியில் பறக்க விட்டு சென்றாள் அமுதா. அவளாய் பேசட்டும் என்று அவனும்.. அவன் பேசட்டும் என்று இவளும் காத்திருக்க, விரிசல் கசப்பாகி, கசப்பு கோபம் சேர்க்க, பிடிவாதத்தில் பிறிந்து போன பல்லாயிர கணக்கான காதல்களில் ஒன்றானது இவர்களதும்.
மீண்டும் வருடம் 2020:இந்தியாவின் தலை சிறந்த குடிமகன் விருதை பெற்ற அவனிடம், நிருபர் கூட்டம்..
"சூர்யா, உங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?"
"காதல்"
"காதலா? உங்களுக்கு தான் கல்யாணமே ஆகவில்லையே?"
"ஆனால் காதலிச்சேன். நடக்கல. அந்த வேகத்தில் காதலிக்க தொடங்கியது தான் இந்த விஞ்ஞானத்தை. அது தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது..
"பிறப்பால் நீங்க ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் தான்.. அப்ப இந்த நிறைவேறாத காதல் தான் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததா?"
பதிலாய் ஒரு மெல்லிய சிரிப்புடன் பேட்டியை முடித்துக்கொண்டான் சூர்யா. (என்ன தான் இந்தியாவின் தலை சிறந்த குடிமகன் விருது எல்லாம் வாங்கினாலும், அவன் படைப்பாளி நாந்தான.. நான் அவன் இவன் என்று பேசலாம் தப்பில்லை!) தமிழகத்தில் எங்கோ ஒரு வீட்டில், அர்ஜீன், கவிதா எனும் இரெண்டு குழந்தைகளுக்கு தாயான அமுதா, தன்னையும் அறியாமல் கண்ணீர் வடித்தாள்..
மற்றொரு நாள்..
"வெற்றி.. வெற்றி.." என சந்தோஷ கூக்குரல் இட்டு, ஒரு பொத்தானை அழுத்தினான் சூர்யா
காற்று லேசானதை போல் ஒரு மெல்லிய படறல்.. அவனை வேறு அண்டத்திற்கு.. அந்த அண்டத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது... சென்னை மாநகரில், ஒரு பிளாட்டில் ஒரு நடத்தர வயது சூர்யாவை அங்கு கண்டான். அவன் மனைவி... அமுதா!!!.
தான் தவற விட்ட வாழ்க்கையை இங்கு நடந்து கொண்டிருப்பதை பார்த்த ஆனந்த கண்ணீர் அவன் கண்களில். கண்ணீர் வற்றியது. பொறாமை பொங்கியது. அழகான இரு குழந்தைகளுக்கு தாயாக, தன் மனைவியாக அமுதா இருப்பதும், வேறு ஒருவன் அவனாய் இருப்பதும் விஞ்ஞானி சூர்யாவிற்கு நெஞ்சை அடைத்தது. கோபத்தில், விஞ்ஞானி சூர்யா, கொலையாளி சூர்யா ஆனான். கொலை செய்த உடலை அவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பிவிட்டு, விஞ்ஞானி சூர்யா சாதாரண சூர்யாவாக மாறினான். தன் வாழ்க்கையில் அன்று வரை கிடைக்காத ஏதோ ஒன்று கிடைத்ததாக நம்பினான். சந்தோஷமாக வாழ தொடங்கினான்..
விஞ்ஞானி சூர்யாவின் உலகத்தில்: 2020
"விஞ்ஞானி சூர்யா தனது வேலையின் பொழுது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார்" என செய்திகள் ஒரு நாள் தலைப்புச் செய்தியாகவும், பின், மக்கள் மறந்த செய்தியாகவும் ஆனது.
(இது ஒரு விஞ்ஞான கதை என படித்து வருபவர்களுக்கு... கதை முற்றும்.. கமெண்ட் போட்டுட்டு, இல்லை கல்ல போட்டுட்டு போலாம்..)
மாற்று சூர்யாவின் உலகத்தில்: 2020
"சூர்யா... உங்களை கைது செய்யறோம்.. நீங்க சூர்யா இல்லை என்பதும், சூர்யாவை கொலை செய்துவிட்டு அவரை போல வந்த வேற்று அண்ட மனிதர் என்பதும் எங்களுக்கு தெரிந்து விட்டது." போலீஸ் தான்...
"எப்படி... " சூர்யா திகைக்க..
சூர்யாவிற்கு தெரியாது. நான் தான் அதை போலீஸிடம் சொல்லி அவரை கைதி செய்ய சொன்னேன் என்று.. என்னதான் நாம உருவாக்கினவங்க என்றாலும், தப்பு செய்தா.. தண்டனை கொடுக்கனும்ல...
டேய்.. அதெப்படிடட நீ சொல்லுவா.. சம்பந்தம் இல்லாம? இதை நாங்க நம்பனுமா? அப்படினு கேட்டீங்கனா....
//ஒரு பொத்தானை அழுத்தினான் சூர்யா
காற்று லேசானதை போல் ஒரு மெல்லிய படறல்.. அவனை வேறு அண்டத்திற்கு.. அந்த அண்டத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது//
இதை எல்லாம் நம்பறீங்க.. இதையும் நம்ப மாட்டீங்களா எனும் ஒரு நப்பாசையில் எழுதிய முடிவு அது என சொல்லி விடை பெறுகின்றேன்.. (அப்ப கேள்விதாள் எங்க என்று கேட்க கூடாது!)
23 மறுமொழிகள்:
ஹாய் ட்ரீம்ஸ்,
அட பரவாயில்லையே...காதலும் வித்தியாசம் க்ரைமும் வித்தியாசம். ம்ம்ம்ம்... நல்ல முயற்சி.தொடரவும்.
கதை எல்லாம் ஓகே !! அதை ஏன் ராசா இப்படி டிஸ்கி எல்லாம் போட்டு சொதப்பி விடற??
BTW,Parallel Universe-க்கு போனா அங்கு நடக்கும் செயல்களை மற்ற யூனிவெர்ஸில் இருந்து வந்தவன் மாத்த முடியாது அப்படிங்கற கருத்து கூட இருக்கு!!
means you can only watch what is happening in the parallel universe but you cant change anything in there!
ஏதோ ஒன்னு!!! விஞ்ஞான கதை எழுத முயற்சித்ததற்கு வாழ்த்துக்கள்!! :-)
சூப்பரு..
சுஜாதா இடத்தை கண்டிப்பா நீ நிரப்புவ ராசா....
//நான் தான் அதை போலீஸிடம் சொல்லி அவரை கைதி செய்ய சொன்னேன் என்று.. என்னதான் நாம உருவாக்கினவங்க என்றாலும், தப்பு செய்தா.. தண்டனை கொடுக்கனும்ல...
//
த.சி.உ....
அதான்ப்பா.. தரையில் சிரித்தபடி உருளுகிறேன்...
கதை நல்லா இருக்கு..
உன் கவிதை போல, உன் கதைக்கும் நானே முதல் ரசிகன்...
@CVR
//BTW,Parallel Universe-க்கு போனா அங்கு நடக்கும் செயல்களை மற்ற யூனிவெர்ஸில் இருந்து வந்தவன் மாத்த முடியாது அப்படிங்கற கருத்து கூட இருக்கு!!//
ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பா... கதை சொன்ன அனுபவிப்பா... எதுக்கு இம்புட்டு ஆராய்ச்சி..??
linear programming kelvi pattu erkan,
xterme programming kevli pattu erukan,
parallel programming kevli pattu erukan
paralle unverse maha kalakal eruku..
kavithai superb thalai... ethu kudu oru newtons law of motion maathri dreams law of love innur oru chapter tamil nadu educational book illa pootudualam
:)
தல வித்தியாசமான கதை நல்லா இருக்கு..ஆனா கடைசியில காமெடி பண்ணிட்டிங்க ;)))
நல்ல முயற்சி தல :))
:'(
கை குடுடா பேராண்டி.
இன்னொரு சுஜாதா'ன்னு
போடலாம்னு...
கமண்ட்ட க்ளிக் பண்ணினா....
அட இங்க ஒருத்தர் அதையே போட்டுட்டாருப்பா.
என் மேல சத்தியமா நீ சுஜாதா இடத்தை நிரப்புவடா பேராண்டி.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
கதை ரொம்ப... ரொம்ப...
அருமை.
(எத்தினி ரொம்ப வேணாலும் போடலாம் போலிருக்கு.)
தாத்தா புதுத் தெம்போட வந்திருக்கேன்.
அதுக்கு முக்கிய காரணம்,
நீயும் உன் ஆறுதல் வார்த்தைகளும்தாண்டா ராசா.
நீ நல்லா இருக்கணும்.
மறுபடியும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி
........
வாழ்த்துக்கள்.
//டேய்.. அதெப்படிடட நீ சொல்லுவா.. சம்பந்தம் இல்லாம? இதை நாங்க நம்பனுமா? அப்படினு கேட்டீங்கனா....
//ஒரு பொத்தானை அழுத்தினான் சூர்யா
காற்று லேசானதை போல் ஒரு மெல்லிய படறல்.. அவனை வேறு அண்டத்திற்கு.. அந்த அண்டத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது//
இதை எல்லாம் நம்பறீங்க.. இதையும் நம்ப மாட்டீங்களா //
எங்கள வெச்சு ஏதோ காமெடி பண்றாப்போல தெரியுது ??
//k4karthik said...
சூப்பரு..
சுஜாதா இடத்தை கண்டிப்பா நீ நிரப்புவ ராசா....//
ஹாஹாஹா.. சூப்பரு... உன்னைய வெச்சு அண்ணன் காமெடி பண்ணிட்டு போயிட்டாரு பாரு :P
//ஒரு பொருள்
இருப்பதை விட
இல்லாமிலிருப்பது
கனமாகாது
எனும் விஞ்ஞானகூற்றை
உடைத்தெறிந்தது..
நீ விட்டு சென்று
போன என் இதயம்..//
இது செம டாப்பு.. உன் ஸ்பெஷாலிட்டியே உன் கவிதைகள் தான்.
வலையுலக தபு சங்கர் ட்ரீம்ஸ்.. வாழ்க வாழ்க !! :P
rounda oru 15 pottu me the escape :)
கவிதை மாதிரி கலக்கலைன்னாலும் நல்லாவே இருக்கு dreamzz!!
அன்புடன் அருணா
Adada ,science fiction subjectlam eduthu dreamz asatharare nu yosicha kadaisiyila neegle kadaikulla poyi kadaya mudichuttenga.I thing you went from three dimension to 2 dimension .That is why story ended.:D
Unga story oru classic adventure dhan. Kalakateenga.
kadhai nalla dhaan irukku, aana sila edathula semma comedy !
//
காதலா? உங்களுக்கு தான் கல்யாணமே ஆகவில்லையே?"
"ஆனால் காதலிச்சேன். நடக்கல. அந்த வேகத்தில் காதலிக்க தொடங்கியது தான் இந்த விஞ்ஞானத்தை. அது தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது..
kadhal tholvila vinyanathai kadalicharaa :) hah sokku.
-K mami
ஒரு பொருள்
இருப்பதை விட
இல்லாமிலிருப்பது
கனமாகாது
எனும் விஞ்ஞானகூற்றை
உடைத்தெறிந்தது..
நீ விட்டு சென்று
போன என் இதயம்..
idhu superu.
dreamzz kavidhai kalakkals.
kadhai differenta science fiction + comedy kalandhu irundhudhu. Good effort :)
:)))) ennamo comedy maathiri irunthaalum different story.. nice one
Nalla muyarchi :) ungalukkae urithaana kurumbukalutan :))
P.S: kavithai azhagu
என்னத்த சொல்ல. :-P
Post a Comment