Tuesday, March 25, 2008

காதல் பிறந்த கதை

மு.கு: மக்கா, இந்த கதை காதல் கதை. அழுகாச்சி கதை இல்ல. அதுனால தைரியமா படிங்க! ஓகேவா.. அருணாக்கா, சீக்கிரமா கவிதை எழுத கண்டிப்பா முயற்ச்சிக்கின்றேன். ஸ்ரீ நீ கேட்ட சந்தோஷமான முடிவும்!
---------------------------------------------------------------------


என்னைகாச்சும், நமக்கு வாழ்க்கையில நடந்ததை யோசிச்சு, மறந்துபோன முக மனிதர்கள் நியாபகம் வந்து, அவிங்க மேல திடீர்னு காதல் வருமா? எனக்கு அப்படி தான் வந்துச்சு. அட, என்னடா அது நமக்கு மட்டும் ஒரு பிகரும் சிக்க மாட்டேங்கிது அப்படினு, என் வாழ்க்கையில் இதற்கு முன் சந்தித்த பெண்களை எல்லாம் திருப்பி பார்த்து கொண்டிருந்தது என் மனம்.

முதன் முதலா, அட இந்த பொண்ணு அழகா இருக்கா என்று தோன்றிய 8ஆம் வகுப்பு ஸ்ரீவித்யா.. பசங்களும் பொண்ணுகளும் கலந்து உட்கார்ந்த வகுப்பறையில் என்னை வாடா போடா என்று பேசிய என் ஒரே ஸ்கூல் தோழி 6ஆம் வகுப்பு கிருத்திகா (அட.. அதுக்கு பின்னால பன்னி கழுதைனு எல்லாம் சொல்லுவா.. அதெல்லாம் எதுக்கு).. நான் கடன் வாங்கிய ஸ்கேலை தொலைத்து விட்டேன் என என்னை அடித்த 3ஆம் வகுப்பு குண்டு குட்டிப்பெண்.. அவளிடம் இருந்து என்னை காப்பாற்றிய என் 3ஆம் வகுப்பு உயிர் தோழி.. அவள். பெயரும் முகமும் மறந்த போனவள்.

இவளை பற்றி சொல்லியே ஆகனும். நான் அந்த ஸ்கூலில் ஒரே வருடம் படித்திருந்தாலும், புதிதாய் போய் சேர்ந்த இரெண்டாம் நாளே, 'என்ன உன் கிட்ட யாருமே பேசாமாட்டேங்கறாங்களா' என தானாய் வந்து பேசிய பெண். அப்பொழுது முழுகாம இருந்த என் அம்மா தினமும் சாப்பாட்டு எடுத்திட்டு வருவதை பார்த்து, "Aunty, நான் சாப்பட வைக்கின்றேன்.. நீங்க ஏன் தினமும் கஷ்டபடுகிறீர்கள்" என கேட்ட குட்டி தேவதை. நான் ஒரு மாதம் மானிட்டராக இருந்த பொழுது (அட.. Class leader பா.. computer monitor இல்லை) பசங்க பேசறாங்க என டீச்சரிடம் மாட்டி விட, அன்று மதியம் அடிக்க வந்த பசங்களை ஒட ஓட விரட்டி அடித்த வீர மங்கை.

எல்லாவற்றையும் விட, shoe லேஸ் கட்ட தெரியாதா என கிளாஸில் ஒரு டீச்சர், மொத்த வகுப்புக்கு முன்னே கேலி செய்து, அவிழ்ந்த லேஸ் கட்டிகொண்டு பின் வகுப்புக்குள் வா என வெளியே நிறுத்தி விட, நான் பேந்த பேந்த என முழிக்க, பின் நான் அழ ஆரம்பித்ததும், டீச்சர் அனுமதிக்க மறுத்த போதும், பயப்படாமல் எழுந்து வந்து என் shoe lace கட்டி விட்ட ... என் அழகிய தேவதை.

காதல்ல பல வகை உண்டு. ஆண் பெண் சங்கதி எல்லாம் தெரிந்து, இன கவர்ச்சியுடன் கலந்து வருவது மட்டும் காதல் இல்லை. இது வேற மாதிரி. எனக்கு சொல்ல தெரியல. எல்லாமே சொல்லி தான் தெரியனும்னு இல்லை. எப்படி இந்த பெண்ணை இவ்ளோ நாள் மறந்தேன்? அவள் முகம் பெயர் என எதுவுமே நியாபகம் இல்லை.. அவள் எனக்காக செய்தவைகளை தவிற. முகமும் பெயரும் தெரியவில்லை என்றாலும், அவளை பற்றி நினைத்ததும், மனதில் வீசும் அந்த மெல்லிய தென்றலை தவிற... வேறு சுவடே இல்லை.

ஒரு விதை மரமாவதில், எத்தனையோ நீர் துளிகள் தேவைப்படலாம். ஆனால், உயிரற்ற விதையில், உயிர் கலக்கிய அந்த முதல் மழைத்துளி ஆனவள் அவள். என் மனதில்.

இப்படி ஒரு பொண்ணு நியாபகம் வந்தால் எப்படிங்க காதல் வராம இருக்கும்.
'அம்மா.. நான் மூணாவது படிக்கறப்ப, ஒரு பொண்ணு வாசல்ல வந்து உங்க கிட்ட இருந்து லஞ்ச் பேக் வாங்கிட்டு வருவாளே.. அவள் பெயர் என்ன?'
'யாரு பிரியதர்ஷினியா? அவளை பத்தி எதுக்குடா கேட்கிற?'
'ஒன்னும் இல்லை சும்மா தான்..'

சில மாதங்கள் கழித்து, என் அலுவலக family party ஒன்றில்..


'அங்கிள், உங்க லேஸ் அவிழ்ந்து இருக்கு.' ஒரு குட்டிப்பெண் குழந்தை, ஆபிஸ் பார்ட்டியில் என்னிடம் அழைத்து சொன்னாள்.

குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், கொஞ்சம் பேச்சு கொடுத்துக்கொண்டு இருந்தேன்.சற்று நேரம் கழித்து ஒரு அழகிய பெண், அம்மாவாக இருக்கும் போல..
'ஓ இங்க இருக்கியா ஸ்வேதா' என சொல்லிக்கொண்டே வந்தாள்.

என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு, அவளும் பேசினாள்.. பேசிய பின் ஆச்சர்யம். ஆம் நீங்கள் யூகித்தது தான். அவளே தான். ப்ரியதர்ஷினி. என்னை இன்னமும் நியாபகம் வைத்திருந்தாள். மகிழ்ச்சியாய் இருந்தது.


'குழந்தை செம க்யூட்'
சொன்ன ஒரு சில வினாடிகள், என் கண்கள் ஏமாற்றத்தை காட்டின போலும்.
'என் குழந்தை இல்லை. என் அண்ணன் குழந்தை. எனக்கு இனிமே தான் டும் டும் டும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க'
'...'
'இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.

இப்போ சொல்லுங்க.. காதல் பிறந்த கதை தான?

36 மறுமொழிகள்:

Dreamzz said...

Reserved for that unknown lil girl :D

G3 said...

modhal comment poda vandhu emaatradhil velinadappu seyyum therindha appavi G3 :P

Divya said...

மலரும் நினைவுகளா??

\\'இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.\\


அழகு:))

வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்.

dubukudisciple said...

enna dreamz kalyanama sollave illaye??

Dreamzz said...

@DD
//enna dreamz kalyanama sollave illaye??//

yakkov.. ithu enna puthu purali.. enakku muthalla yaaru ponunu sonneengana nalla irukkum :)

Dreamzz said...

@G3
//modhal comment poda vandhu emaatradhil velinadappu seyyum therindha appavi G3 :P//

veetuku aautovil aal anuppa pogum
appaviyin sagotharan dreamz :P

Dreamzz said...

@divya
//மலரும் நினைவுகளா??//
haha...

//வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்./
ethukunga?

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

cute story dreamzz :)

katikurathukku kathukiteengala :))

Dreamzz said...

@sathish
//cute story dreamzz :)

katikurathukku kathukiteengala :))//

kattika eppove kathukittenpa.. ponnuku thaan waiting ;)

எழில்பாரதி said...

ட்ரீம்ஸ்..... கலகல் போங்க....


சூப்ப‌ர்!! வாழ்த்துக‌ள்!!!



எப்போடியோ உங்க கதையை எங்களுக்கு மறைக்காம சொன்னதுக்கு பாராட்டுக்கள்!!!

இப்போலாம் யாரு shoe lace க‌ட்டிவிடுறாங்க‌!!!!

ஸ்ரீ said...

அட்ரா சக்கை சூப்பர்யா கனவுகாரா. கனவுல இருந்தப்போ வந்த தேவதையா?

அழகான நடை ரொம்ப பிடிச்சிருந்தது. இதை விட்டுட்டு "கடவுள் இறந்தா" நமக்கென்னப்பு :)? இனிமே இதே கண்டினியூ பண்ணுங்கப்பு.

Sanjai Gandhi said...

அடேய் திருட்டுபயலே... சொல்லவே இல்ல.. எதேதோ சொன்னியே.. இத சொல்லல பாத்தியா?... என்னவோடா.. சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துக்கள்டா கண்ணா.. :)

Dreamzz said...

@ezhil
//எப்போடியோ உங்க கதையை எங்களுக்கு மறைக்காம சொன்னதுக்கு பாராட்டுக்கள்!!!//

thevai thaan enakku :P ithu verum kadhainga!

Dreamzz said...

@sri
//அழகான நடை ரொம்ப பிடிச்சிருந்தது. இதை விட்டுட்டு "கடவுள் இறந்தா" நமக்கென்னப்பு :)? இனிமே இதே கண்டினியூ பண்ணுங்கப்பு.//

innum chinna kulandhaiyaave irukka.. kadavulum kaadhalum onnu thaanappu :)

Dreamzz said...

@sanjai
//அடேய் திருட்டுபயலே... சொல்லவே இல்ல.. எதேதோ சொன்னியே.. இத சொல்லல பாத்தியா?... என்னவோடா.. சந்தோஷமா இருக்கு.. வாழ்த்துக்கள்டா கண்ணா.. :)//

neengaluma?? yen ellarkum indha kola veri!

Anonymous said...

அட இது எப்பிடிப்பா?இவ்ளோ சீக்கிரம் நல்ல கதாசிரியர் ஆகிட்டே?
சும்மா அதிருதுல்லே!!! கதை???கதைதானா? அனுபவமா?
அன்புடன் அருணா

Anonymous said...

//ஒரு விதை மரமாவதில், எத்தனையோ நீர் துளிகள் தேவைப்படலாம். ஆனால், உயிரற்ற விதையில், உயிர் கலக்கிய அந்த முதல் மழைத்துளி ஆனவள் அவள். என் மனதில்.//

இந்த வரிகள் கதைக்குள் உன் ஸ்டைல் கவிதையாகி நின்றது...
அன்புடன் அருணா

Anonymous said...

ஸ்ரீ said...
அழகான நடை ரொம்ப பிடிச்சிருந்தது. இதை விட்டுட்டு "கடவுள் இறந்தா" நமக்கென்னப்பு :)? இனிமே இதே கண்டினியூ பண்ணுங்கப்பு.

repeattttu!!!!
anbudan aruna

k4karthik said...

//இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.//

எப்படி இப்படி? காலை காட்டு ராசா...

k4karthik said...

//இதை விட்டுட்டு "கடவுள் இறந்தா" நமக்கென்னப்பு :)? இனிமே இதே கண்டினியூ பண்ணுங்கப்பு.//

ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டு...

கப்பி | Kappi said...

:))

Swamy Srinivasan aka Kittu Mama said...

\\'இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.\\

ada ada...super !

dreamzkku dum dum dum aa..ponnu yaaru..?
-K mami

நிவிஷா..... said...

Shoe lace katti vitta 'devathaikku' eppo thali katta poreenga????

Congrats & Hearty wishes:)))


natpodu,
Nivishaa

ambi said...

தினேஷு, கதை (ஆட்டோபயோகிராபி?) சூப்பரோ சூப்பர். ஷூ லேசை வெச்சே அமுக்கிட்டியேபா! :))

@all, என்னாப்பா! எல்லோரும் விடிய விடிய கதை கேட்டுட்டுட்டு சீதைக்கு ராமன் செட்டப்பா?னு கேக்கறீங்க. :p

பொண்ணு பேரு திவ்யதர்ஷனினு சொல்லி இருக்கானே தினேஷ். :))

Dreamzz said...

@All
அடப்பாவிகளா! ஒருத்தன் ஒரு கதை எழுதிட கூடாதே! இதுக்கு தான் நான் காதல் கதை எல்லாம் எழுதுவது இல்லை!

யப்பா மக்கா, ஷூ லேஸ் கட்டினதுக்கு வேணும்னா நானும் ஷூ லேஸ் கட்டி விட்டுக்கிறேன்.... தாலி எல்லாம் கட்ட முடியாது.. ஆளை விடுங்கப்பா.. எல்லாரும் ஒரு கொலை வெறியோட தான்யா இருக்கீங்க!

Dreamzz said...

@ambi
//@all, என்னாப்பா! எல்லோரும் விடிய விடிய கதை கேட்டுட்டுட்டு சீதைக்கு ராமன் செட்டப்பா?னு கேக்கறீங்க. :p

பொண்ணு பேரு திவ்யதர்ஷனினு சொல்லி இருக்கானே தினேஷ். :))//

அம்பி, உங்க ஆபிஸ் பிகர் பேரெல்லாம் சொல்ல படாது. கதையை ஒழுங்கா படிங்க... ப்ரியதர்ஷினி நம்மாளு பேரு.....( ஐ மீன் கதையில...)

தமிழ் said...

/Reserved for that unknown lil girl :D/

/பொண்ணு பேரு திவ்யதர்ஷனி/

??????????

நடக்கட்டும்

கோபிநாத் said...

\\இப்போ சொல்லுங்க.. காதல் பிறந்த கதை தான?\\

கலக்கிட்டிங்க தல ;))

ரசித்தேன் ;)

ரசிகன் said...

அடடா... சூப்பரேய்ய்ய்ய்...:))

ரசிகன் said...

// திகழ்மிளிர் said...

/Reserved for that unknown lil girl :D/

/பொண்ணு பேரு திவ்யதர்ஷனி/

??????????

நடக்கட்டும//

:))

ரசிகன் said...

//Divya said...

மலரும் நினைவுகளா??

\\'இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.\\


அழகு:))

வாழ்த்துக்கள் ட்ரீம்ஸ்.//
வழிமொழிகிறேன் :)

ஜி said...

:))))

Nice one

Unknown said...

kadhal oru vali. Irindhum adhu tharum sugam.. adhai solla mudiyadhu ningalum muyarchi seidhu parungal. anubavikkalam.

Unknown said...

nan avalai kadhal seidhadu unmai..adha naal than kadhalukku ennai pidikkavillai.

Unknown said...

kavidhai ezhudha theriyadhai ennai KAVIGNAN aakinai.. unadhu peyarai ezhudhiya pinbu arindhen... kadhalukku mariyadhai thandaval aval. en aval..

Dreamzz said...

@pallavi
enungakka, ungalukku blog edhum unda?