Friday, May 09, 2008

குருவியும் குட்டையை குழப்பும் விமர்சனங்களும்...

மு.கு1: மக்கா, கொஞ்ச நாளா வேலை ஜாஸ்தி. அதான் அதிகம் வரல இந்த பக்கம்... வருவேன்...

மு.கு2: இது எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. ஏற்கனவே சில பதிவர்கள் இப்படத்தை பற்றி தங்கள் கருத்தை சொல்லி உள்ளனர். அதே போல் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவ்வளவே...

மு.கு3: நான் விஜய் ரசிகன் அல்ல. நான் ரஜினி ரசிகன். நமக்கு ஒரே தலைவரு தான்! அவரு பேரு சொன்னா.. சும்மா அதிருமில்ல....

மு.கு4: விஜய் இப்பதிவை எழுத காசி கொடுக்கவில்லை :P (அண்ணா, கொடுக்கிறதுன்னா சொல்லுங்க, account number அனுப்பி வைக்கிறேன் ;) ) அதே மாதிரி, த்ரிஷா செம க்யூட் அப்படினு நினைக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை ;)
------------------------------------------------------------------------


குருவி.. உயர பறக்கும் என பார்த்தால் குட்டையை குழப்புகிறது. படம் மோசம் -- இந்த பாணியில் தான் பத்திரிக்கைகளும், பொதுவாக பதிவர்களும் விமர்சனம் எழுதி, கிண்டலடித்து உள்ளன. இதெல்லாம் படித்து விட்டு, சரி படத்துக்கு போக வேண்டாம் என தான் முடிவெடுத்து இருந்தேன். ஆனா, எங்க பக்கத்து வீட்டுல, ஒரு தீவிர விஜய் ரசிகை இருக்காள். பொண்ணுக்கு எட்டு வயசு. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் US தான். அவ்வளவா தமிழ் படம் பார்க்க மாட்டா. ஆனா, விஜய் என்றால் பிடிக்கும். இணையதளத்தில் விமர்சனங்கள் படித்து அவளை அழைத்து செல்ல யாருக்கும் தைரியம் இல்லாததால், நான் அழைத்து சென்றேன்.

படமும் பார்த்தாச்சு. பார்த்து முடிச்சதும் முதலில் மனதில் பட்டது, எதுக்கு இவ்வளவு நெகட்ட்டிவ் விமர்சனங்கள் படத்தை பற்றி? என்பது தான். அட ஆமாம்ப்பா, ஒத்துக்கொள்கின்றேன். படத்தின் ஸ்டண்ட்டுகள் நம்ப முடியவில்லை. லாஜிக் இடிக்குது. எல்லா விஜய் படத்திலும் இருக்கும் தீம் எட்டி பார்க்குது. காமெடி சரியில்லை. விவேக் இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். க்ளைமாக்ஸ் கொஞ்சாம் நீளம். வயலன்ஸ் ஜாஸ்தி.

So?

விஜய் படமுங்க! பேர பார்க்கல? தமிழ் படங்களில் ஸ்டண்ட்டுகள் நம்பும் படி எதில இருந்து இருக்கு? இல்ல லாஜிக் இடிக்காம எந்த படம் வந்து இருக்கு? (டாகுமெண்ட்டரி படங்கள் பத்தி பேச வேண்டாம் :P) எல்லா படத்திலும் விவேக் ஏதாவது இடத்தில் இரட்டை அர்த்த ஜோக்குகள் சொல்ல தான செய்யறார்!

என்ன நினைச்சீங்க? விக்ரம், கமல் , சிவாஜி மாதிரி.. விஜய்யோட ஆக்டிங் பெர்வார்மன்ஸ் பார்க்கவா போனீங்க? For Gods sake, he is an Entertainer. அவன் அப்படி தான் நடிப்பான்! ஏனா விஜய் is more to an entertainer side than he is to an actor side!!! இன்னுமா தெரியாது உங்களுக்கு?

ஏன் பத்திரிக்கைகள் இப்படி வாரி விடுகின்றன? எதுக்கு இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள். இந்த விமர்சங்கள் ஒரு பதிவுக்கு வரும் கமெண்ட் மாதிரி. முதல்ல ஒருத்தன் ஒன்னு சொன்னா, உடனே எல்லாரும் அதையே சொல்லவேண்டியது!

பாடல்களை கொஞ்சம் இனிமை ஆக்கி இருக்கலாம். அதை தவிற The film was entertaining. I went for a Vijay movie. and i got one. நான் என்ன அவன் ஆஸ்கார் ரேஞ்சுக்கு நடிப்பான். நான் படம் பார்த்து அப்படியே செண்ட்டி ஆகி அழனும்னா போனேன்!

அட சரி, சட்டையை கழட்டி சண்டை போடுறான். ஏன் ரஜினி செய்யலயா? எதுக்கு எல்லாருக்கும் வெவ்வேறு அளவுகோல்? அட தனுஷும் சிம்புவும் செய்யாத காமெடியா??

நக்கல் பன்னறது வேற. but it is different to kill a film by negative comments through out the media and internet!

இறுதியா, திரும்ப ட்ரைவ் செய்து வரும்போது, அந்த குட்டிப்பொண்ணு, "ஐ லைக் விஜய்.. படம் நல்லா இருந்துச்சுல்ல" அப்படினு சொன்னா. அப்ப யோசிக்க ஆரம்பித்தது தான் இதெல்லாம்! இனிமே படம் பார்க்கும் முன் அதை பற்றி பதிவுகளையோ, விமர்சனங்களையோ படிக்க கூடாது போல!

என்னமோ "பெரியார்" ரேஞ்சுல படம் எடுத்தா மட்டும் நீங்க பார்த்து ஓட வைக்க போறீங்களா.... ஒருத்தன் காமெடியா ...I mean entertaining ஆ படம் எடுத்தா உங்களுக்கு பிடிக்காதே! (அண்ணா, இதுல எந்த உள்குத்தும் இல்லைனா! அட..உங்களை வைச்சு காமெடி எதுவும் செய்யலனா!)

எனக்கு படம் பிடிச்சு இருந்தது. இதற்கு முந்தைய விஜய் படங்களில் இல்லாத எதுவும் இந்த படத்தில் புதுசா இல்லை! இது ஒரு விஜய் படம்!




அப்புறம் த்ரிஷாவும் இருக்காங்க!

14 மறுமொழிகள்:

கப்பி | Kappi said...

//நான் ரஜினி ரசிகன். நமக்கு ஒரே தலைவரு தான்! அவரு பேரு சொன்னா.. சும்மா அதிருமில்ல....//

இதுக்கு பெரிய ரிப்ப்ப்பீட்ட்ட்டு ஒன்னு போட்டுட்டு....


இது விஜய் படம்தான்..அது தெரிஞ்சுதான் பார்த்தேன்..விஜய் படத்துல பெரிய கதையோ லாஜிக்கோ விஜய்கிட்டருந்து உருக்கவைக்கற நடிப்பையோ விவேக் காமெடியையோ ஒரு சதவீதம் கூட எதிர்பார்க்கவேயில்ல...ஆனாலும் படம் இந்தளவு ஏமாற்றம் தந்ததுக்கு காரணம் கில்லி..தரணி..வித்யாசாகர்..அவ்ளோதான் மேட்டர்..விஜய் படம் மொத்தமா புடிக்காது..விஜய் மேல காண்டுன்னெல்லாம் கிடையாது மக்கா.....ஆனா கில்லி டீம்னால இருந்த எதிர்பார்ப்பு இப்ப சுத்தமா வெடிச்சிருச்சு..இதே படத்தை டைட்டில் கார்டுல 'தரணி'க்கு பதில் 'பேரரசு'ன்னு இருந்தா வாயே தொறக்காம போயிருப்பேன்...100%.. என் கோவமெல்லாம் தில், தூள்,கில்லின்னு எடுத்தவன் இப்படியொரு படம் எடுத்ததுதான் (என் பதிவிலும் கூட விஜயைக் கிண்டலடித்ததைவிட திரைக்கதையையும் கதைக்களனையும் தான் அதிகமாக கிண்டலடித்திருக்கிறேன்).....

தமிழ் சினிமாவில் வரும் படங்களில் 90% மொக்கையாத்தான் இருக்கு...நானும் அவற்றில் 50-60% படங்களாவது பார்த்துவிடுவேன்...ஒரு மொக்கையையும் விடாம...நேத்து 'விளையாட்டு'ன்னு ஒரு படம் பார்த்தேன்...காதல் படத்துல சந்தியாவுக்கு தோழியா கண்ணாடி போட்டுட்டு நடிச்ச பொண்ணுதான் ஹீரோயின்..படம் செம மொக்கை..ஆனா படம் முடிஞ்சதும் அப்படியொரு படம் பார்த்ததையே மறந்தாச்சு..ஆனால் இந்த படத்தைப் பார்த்ததும் ஏமாற்றம் வருகிறதென்றால் அதற்கான காரணம் - விஜய்-தரணி-வித்யாசாகர்...

விஜய் எண்டர்டெயினர்தான் ஒத்துக்கறேன்...ஆனா 'இந்த மாதிரி பொழுதுபோக்குதான் சரியானது..மக்கள் இதுதான் விரும்பறாங்க'ன்னு சொன்னா அதுக்கு மேல பேசறதுக்கு ஒன்னுமேயில்ல..இதே விஜய் நடிச்ச கில்லி,சச்சின், வசீகரா இதெல்லாம் கூட எண்டர்டெயினர்ஸ் தான்..இதுல கில்லி சூப்பர்டூப்பர் ஹிட்டு..அந்த மாதிரி பொழுதுபோக்கு படங்களில் நடிக்கட்டுமே??

எண்டர்டெயினர் என்ற போர்வையில என்ன வேணும்னாலும் நடிக்கலாம் மக்கா...ஆனா அதுதான் உகந்ததா? அது தான் தமிழ் சினிமாவுக்கும் சமூகத்திற்கும் ஆரோக்கியமானதா? இரட்டை அர்த்த வசனம், பஞ்ச் டயலாக்கு, திரை முழுக்க ரத்தம், டப்பாங்குத்து பாட்டு இதெல்லாம் இருந்தாதான் பொழுதுபோக்கு திரைப்படம்னு இவங்களா ஒரு பிம்பத்தை உருவாக்கி அதையே தொடர்ந்தா கிண்டலடிக்காம என்ன பண்ணலாம் சொல்லு.."அந்த மாதிரி நீ ஒரு படம் எடுத்து ஓட வை"ன்னு சொல்லாத..அது நாக்கு தெள்ளிது :))

ரஜினி பண்ணாததை விஜய் பண்ணிட்டானான்னு ஒரு கேள்வி...ரெண்டு பேருக்கும் ஏன் வெவ்வேற அளவுகோல்ன்னும் கேட்டிருக்க..எங்க அப்பாவால எம்ஜியாரையும் ரஜினியையும் எப்படி ஒரே அளவுகோலில் பார்க்கமுடியாதோ அதே போல் என்னாலும் ரஜினியையும் விஜயையும் ஒரே அளவுகோலில் வைக்க முடியாது..அதே போல் //தனுஷும் சிம்புவும் செய்யாத காமெடியா??// தனுஷ் சிம்புவையும் விஜயையும் கண்டிப்பா ஒரே தராசில் வைக்க முடியாது...அதனாலதான் அவனுங்க பண்ணா சும்மா இருக்கறதும் இவன் பண்ணா கிண்டல் பண்றதும்..

தொன்னூறுகளுக்கு முன் வந்த ரஜினி திரைப்படங்களுக்கும் அதற்குப்பின் வந்த திரைப்படங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்...அந்தளவுக்கு ரசிகர்வட்டம் விஜய்க்கும் இப்ப பெருகிட்டு இருக்கு..அவர் அதை உணர்ந்து உருப்படியான 'எண்டர்டெயின்மெண்ட்' படங்களைத் தரனும்னு எதிர்பார்க்கறது எனக்கு தப்பா தெரியல..நான் சிவாஜிலயும் லாஜிக் எதிர்ப்பார்க்கல...குருவிலயும் எதிர்பார்க்கல...ஆனா குருவி என்னைப் பொருத்த வரை எண்டர்டெயினர் இல்ல!!


//ஏன் பத்திரிக்கைகள் இப்படி வாரி விடுகின்றன? //

பாபா-வை வாரிவிட்டதை விடவா?? ரஜினி எண்டர்டெயினர் தானே?? இது ஒன்னும் குறிவச்சு வாரிவிடறதில்ல..சொல்லப்ப்போனால் அஜீத்தை விடவும் மற்ற கதாநாயகர்களை விடவும் விஜய்க்கு ஊடகங்களின் ஆதரவு பெருமளவு இருக்கின்றது. (அஜீத்தை இதைவிட சிறப்பா வாரிவிடுவாங்க..குறிவைச்சு..அதை பிறகு பேசலாம்) சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் விஜயை பிடித்திருப்பதற்கு தொலைக்காட்சி சேனல்களும் பத்திரிகைகளும் முக்கிய காரணம். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஏத்திவிட்டு அழகு பார்ப்பதே மீடியா தான்..அதை மறுக்கவே முடியாது..ஆனாலும் இந்த படத்தை வாரிவிடறாங்கன்னா..எங்கேயோ தப்பு மாதிரியில்ல?


/திரும்ப ட்ரைவ் செய்து வரும்போது, அந்த குட்டிப்பொண்ணு, "ஐ லைக் விஜய்.. படம் நல்லா இருந்துச்சுல்ல" அப்படினு சொன்னா. அப்ப யோசிக்க ஆரம்பித்தது தான் இதெல்லாம//

மெட்ராஸ் கமலா தியேட்டர்ல திருப்பாச்சி படம் பார்க்க போனோம்...திரிசா தலைய விரிச்சிப்போட்டு விஜய் கண்ண்டிச்சு காமெடி பண்ணிட்டிருந்தாங்க...எங்களுக்கு சிரிப்பு வரல..ஆனா தியேட்டர்ல எங்க நாலு பேரைத் தவிர மத்த எல்லாரும் சிரிச்சுட்டிருந்தாங்க..அப்பவே யோசிச்சதுதான்...மக்களுக்கு விஜயைப் பிடிச்சிருக்கு...விஜய் படங்களும் பிடிச்சிருக்கு..ஜனரஞ்சகம்னு..

ஆனா இந்த படத்துல அப்படி ஜனரஞ்சகமா இருக்கா? இல்ல இதான் ஜனரஞ்சகம், பொழுதுபோக்குன்னு திணிக்கற மாதிரி இருக்கா? அந்த பக்கத்து வீட்டு சிறுமிக்கு 'இந்த மாதிரி படம் தான் பொழுதுபோக்கு திரைப்பட்ங்கள்'னு சொல்லித்தரோமா? இந்த படம் ஹிட்டான விஜய் அடுத்தடுத்து இதே மாதிரி பொழுதுபோக்கு திரைப்படங்கள் தருவாரா? இல்லை இதைவிட ஆரோக்கியமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள படத்தில் நடிப்பாரா? அடுத்த இ.தளபதின்னு யாரோ வருவாங்க..அவங்க எந்த மாதிரி படத்துல நடிப்பாங்க?


//இதற்கு முந்தைய விஜய் படங்களில் இல்லாத எதுவும் இந்த படத்தில் புதுசா இல்லை! //

ஆனால் எல்லாமே ஓவர்டோஸா இருந்தது (எனக்கு) அது ஒன்னு தான் பிரச்சனை!!

மத்தபடி இது விஜய் படம் தான்..திரிசாவும் இருக்காங்க...பார்த்துட்டு போயிட்டே இருக்கலாம்...

தரணி-விஜய்ன்னு எதிர்பார்த்து..அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கற நடிகரோட படம்னு யோசிச்சாத்தான் கொஞ்சம் கடுப்பாகும்..அதுக்கென்ன இதையே டிரெண்ட் ஆக்கிட்டோம்னா அப்புறம் இதுமாதிரியான கலந்தாடல்களுக்கான தேவையிருக்காது!!

:)

ரசிகன் said...

//அப்புறம் த்ரிஷாவும் இருக்காங்க!//

அப்பாடா கடைசியாவாவது கண்ணுல பட்டுச்சே,:p

ரசிகன் said...

//த்ரிஷா செம க்யூட் அப்படினு நினைக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை//

எந்தக்காலத்துல இருக்கிங்க மாமேய்:))))

ரசிகன் said...

//(டைட்டில் கார்டுல 'தரணி'க்கு பதில் 'பேரரசு'ன்னு இருந்தா வாயே தொறக்காம போயிருப்பேன்...100%.. என் கோவமெல்லாம் தில், தூள்,கில்லின்னு எடுத்தவன் இப்படியொரு படம் எடுத்ததுதான் (.....//

நியாயமான ஃபீலிங்கு.. சேம் பிளட்:)

Dreamzz said...

@கப்பி

கப்பி! As i said.. நான் இது எழுதினது more towards பத்திரிக்கை விமர்சனம் than பதிவர்கள் விமர்சனம்.

ஒரு படம் வெளியான உடன், பத்திரிக்கைகள் , பல பதிவர்கள் -- எல்லாரும் ஒரு படத்தை பற்றி நெகட்டிவாக கமெண்ட் சொல்லிவிட்டால், பார்க்கும் எல்லாருக்கும் அந்த pre judice வந்துடும். அப்புறம் அதே ஒரு வேவ் ஆகி எல்லா இடத்துலயும் பத்திக்கும்.

இதே பில்லா யோசிச்சு பாருங்க! படம் was not that good என்பது என் அபீப்ராயம். ஆனால் ஹிட் ஆக்கி விட்டார்கள். எப்படி? மீடியா ஹைப்.

Journalism, Media should reflect peoples mind and report on it. Not create hypes and decide the success or failure of a film என்பது தான் என் கருத்து. ஒரு பதிவராக நமது தனி கருத்தை சொல்ல நமக்கு கண்டிப்பா உரிமை உண்டு!

உங்களை சொன்னதா நினைச்சுகாதீங்க கப்பி!

ஏகப்பட்ட பத்திரிக்கை , பதிவர்களின் விமர்சனம், அப்புறம் அரசியல் ரீதியா - வரும் விமர்சனம் இப்படி எல்லாம் படிச்சுட்டு, படம் ரொம்பவும் கேவலமா இருக்க போதுனு நினைச்சுட்டு போனா, It appeared as just another Vijay movie to me. அதான் மேட்டரு! ;)

Dreamzz said...

//தரணி-விஜய்ன்னு எதிர்பார்த்து..அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கற நடிகரோட படம்னு யோசிச்சாத்தான் கொஞ்சம் கடுப்பாகும்//

அது தான் மேட்டரே! எவ்வளவு நாள் ஆனாலும் விஜய் இளைய தளபதி தான்! எப்படி ஒரே ஒரு வாத்தியாரோ.. அதே மாதிரி தான்.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்.

நீ விஜய்ட்ட இருந்து ரொம்ப எதிர்பார்க்கிற மக்கா! வேறென்ன சொல்ல!!!

நீ சொன்னாப்ல, எப்படி ரஜினி தெளிவடைய கொஞ்ச நாள் ஆச்சோ.. அதே மாதிரி, விஜய்யும் நாளைக்கே மாறிட போறதில்லை. Maturity comes with experience. இப்போதைக்கு விஜய் இன்னமும் அரை குடம் தான். சத்தம் போட தான் செய்யும். அது நிரம்ப இன்னும் நாள் பல இருக்கு!


இதுக்கே இவ்ளோ feel பன்னறியே.. கந்தசாமி ட்ரைலர் பார்த்தியா :P

கப்பி | Kappi said...

//உங்களை சொன்னதா நினைச்சுகாதீங்க கப்பி! //

எலேய் மக்கா..நான் எப்ப அப்படி நெனச்சேன்? இல்ல அப்படி நினைச்சுக்கோடான்னு இப்படி சூதானமா சொல்றியா? :))

மக்கா...நீ விஜய்க்கு சொன்னது எல்லாம் தமிழ் பத்திரிகைகளுக்கும் பொருந்தும்..சொல்லப்போனால் தமிழ் சஞ்சிகைகளில் திரை விமர்சனம் என்பது நடிகரை, இயக்குனரை தயாரிப்பாளரை சார்ந்துதான்...இதுக்கு மேல எதிர்பார்க்கமுடியாது..விகடன்ல முன்னொருகாலத்துல விமர்சனம் நல்லாருக்கும்..ஆனா கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளா?

சரத்குமார் படம் என்ன குப்பையானாலும் சன் டிவி டாப்-10ல 2வதா இருக்கும்..விஜய் படம் தியேட்டரை விட்டு ஓடின பிறகும் முதல் இடத்துல இருக்கும்..நான் ஏற்கனவே சொன்னதுபோல் விஜயை குழந்தைகள் பெண்களிடையே ரசிகர்கள் உண்டாக்கியதும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழகு பார்ப்பதும் அதன் மூலம் வருவாய் குவிப்பதும் ஊடகங்கள் தான்...இல்லனா இதுவரை வந்த எத்தனை படம் ஓடியிருக்கும் சொல்லு??

//Not create hypes and decide the success or failure of a film//
//It appeared as just another Vijay movie to me.//

அதனால இந்த படம் ஹிட்டாகனும்னு சொல்ல மாட்டேன்னு நினைக்கறேன் :)

//எவ்வளவு நாள் ஆனாலும் விஜய் இளைய தளபதி தான்!//

அதான் மக்கா..அது தெரிஞ்சதுதான்...இந்த படம் விஜய்க்காக இல்லைனாலும் தரணிக்காக தியேட்டரை விட்டு ஓடனும்..தரணி படத்துல விஜய்-விக்ரம்னு இல்ல யார் நடிச்சாலும் ஓடும் என்ற எண்ணமும் எதிர்பார்ப்பும் இருந்தது இந்த படத்துல வெடிச்சுது...

விஜய்..அவர் இன்னும் சில ஆண்டுகளில் கத்துக்கொள்வாரா..இப்படியே தொடர்வாரா என்றெல்லாம் தெரியல மக்கா...keeping fingers crossedu

//கந்தசாமி//

:)))

விக்ரம் + சுசு கணேசன் - இதுக்கு பிறகும் பார்ப்பேன்னு நினைக்கற? :))

Anonymous said...

அடடா ....என்னாச்சி dreamzz....?பதிவுக்கு, கவிதைக்கு விஷயமா கிடைக்கலை??இப்பிடி ஒரு பதிவைப் போட்டு சும்மா குட்டையைக் குழப்பிருக்கியே???
அன்புடன் அருணா

G3 said...

Periyavanga ennamo pesikareenga.. naan vandhadhukku attendence mattum pottukaren :)

My days(Gops) said...

padam enakkum pudichi irundhadhu...

*sumthing is better than nothing* thaaan :)

k4karthik said...

நானும் தான் பார்த்தேன்..

என்னே இருந்தாலும் கழுகுக்கு கிஸ் குட்டுத்துட்டு, அம்மாம் பெரிய எடத்துலே இருந்து கீழ குதிச்சு, ஓடி, ரயில ஏறி புடிச்சு , விரல் காட்றது எல்லாம் ஒன்லி விஜய் பாசிபுல்...

போக்கிரி படம் மாதிரி இல்லேனாலும்.. படம் ஓகே தான்..

திரிஷா மட்டும் என் இம்புட்டு அழகா இருக்காங்கன்னு தான் எனக்கு புரியவே மாட்டேங்குது..

ஸ்ரீ said...

மக்களே நாம தேடிக்கிட்டு இருந்தவன் இவன் தான். ஏன்யா ட்ரீம்ஸ் உனக்கு மனசாட்சியே இல்லையா? எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல செல்லம் :(.

ஜி said...

:)))

Anonymous said...

/நக்கல் பன்னறது வேற. but it is different to kill a film by negative comments through out the media and internet!/
Very true! :)