Sunday, April 27, 2008

அழகு குட்டி செல்லம்

இந்த கதை ஆரம்பிச்சது கொஞ்சம் பலமா காற்று வீசின அந்த நாளில். அப்போ தான், எங்க பேக்யார்ட் கதவு ஒன்னு, உடைந்து போனது. அடுத்த வாரம் மாற்றனும்னு ஒரு மாதமா சொல்லிட்டு இருக்கேன்! நேரம் தான் கிடைக்கல ;) (அட நிஜமா நான் ரொம்ப பிஜிங்க.. நம்புங்கனா..)

<>

சரி, நம்ம செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றலாம் என்று (யாருப்பா அது பக்கத்து வீட்டு வெள்ளைகாரிய சைட் அடிக்கனு தப்பா சொல்றது) வெளியில் வந்த எனற்கு சின்ன ஹார்ட் அட்டாக்! ஒரு குட்டிப்பொண்ணு, ஒரு நாய்க்குட்டி ரொம்ப ஜாலியா எங்க வீட்டு பின்னால விளையாடிட்டு இருக்காங்க! ஆஹா! என்னடா இது அப்படினு சுற்றும் முற்றும் யாரும் இருக்கார்களா என்று பார்த்தால், யாருமே இல்லை.

இதுக்கு முன்ன இந்த குழந்தையை நம்ம சுத்து வட்டாரத்துல பார்த்ததே இல்லை! சைனா சாயல் குழந்தை. சரி என்று வெளியில் சென்று குழந்தையிடம் பேச்சு கொடுத்தோம். நாய்க்குட்டியும் சரி அந்த பொண்ணும் சரி உடனே ஒட்டிக்கொண்டார்கள் என்னிடம். என்ன, பெயர் கேட்டால் தான் சொல்லவில்லை!

"What is your name"
'No'
"Does your mom know you are here?"
'No'
"Where is your house. Do you want to come out and show me"
'No'
"What you want to do?"
'Play Doggie'
"What is your name"
'No'

என பதில் சொல்லும் தெளிவான குழந்தை! நான் வெளியில் அவர்கள் பெற்றோர் இருக்கார்களா என தேட செல்கையில்

'Where are you going?'
"I am looking for your parents"
'Ok. come back soon'
"....."

முக்கால் மணி நேரம் ஆயிற்று. யாரும் வந்தாப்ல இல்ல. குழந்தையை தேடி. இவ்ளோ நேரமா குழந்தைய காணோம். இப்படியா இருப்பாங்க. சரி இன்னும் 15 நிமிஷம். யாரும் வரலை என்றால், போலீஸை அழைப்பதாக முடிவு செய்தோம்.

10 நிமிஷம் கழிச்சு, ஒரு சைனா ஜோடி,
'Sophiaa..'
என கத்திக்கொண்டே ரோட்டில் வந்தது. அப்புறம் என்ன, அந்த அம்மா ஒரே அழுகை, அவர் நன்றி சொல்ல, என்னை வீட்டுக்கு விளையாட வருமாறு அழைத்துவிட்டு பை பை சொல்லி சிரித்துக்கொண்டே சென்றாள் Sophia!

சரி, இது நடக்கும் பொழுதே, பதிவிடலாம் என முடிவு செய்வதால், செல்லில் க்ளிக்கியது தான் மேல் உள்ள புகைப்படம்!

----

முக்கால் மணி நேரம் குழந்தை காணாமல் போனது தெரியாமல் என்ன தான் செய்வார்களோ! ஏதோ எங்க வீட்டுக்கு வந்ததால் சரி. வார இறுதி ஆனால், தண்ணி அடித்து தாறு மாறாக கார் ஓட்டுபவர்களும் அதிகம்! இந்த ஊர் வேறு ஒரு மாதிரி ஊர்! என்னத்த பிள்ளைய பெத்து...

இதுக்கு நடுவில எங்கம்மா ஐடியா வேற, போலீஸ் வந்தும் யாரும் வரவில்லை என்றால், குழந்தையை நாமே வளர்க்கலாம் என்று! (நான் உடனே, நாய்க்குட்டு மட்டும் வேணும்னா வளர்க்க ஓகேனு சொன்னோம்ல!!) கலிகாலம்!

13 மறுமொழிகள்:

தமிழ் said...

நேரம் தான் கிடைக்கல ;) (அட நிஜமா நான் ரொம்ப பிஜிங்க.. நம்புங்கனா..)

:)))))))))

நிவிஷா..... said...

\\இதுக்கு நடுவில எங்கம்மா ஐடியா வேற, போலீஸ் வந்தும் யாரும் வரவில்லை என்றால், குழந்தையை நாமே வளர்க்கலாம் என்று! \\

ippadithana 24 years back road la ungala pudichutu vanthanga unga mummy????


natpodu
Nivisha.

Sumathi. said...

ஹாய் தினேஷ்,

பாவம் உங்கம்மாவுக்கு ரொம்ப நல்ல மனசு, உன்னை வளக்கறது போதாதுன்னு இந்த குழந்தையும் கூட எடுத்துக்கலாம்னு சொல்றாங்க.

Sumathi. said...

ஹாய்,

அந்த டாகி நிஜமாவே அழகாதன் இருக்கு.

Sumathi. said...

ஹாய்,

//ippadithana 24 years back road la ungala pudichutu vanthanga unga mummy????//

ஹா ஹா ஹா ஹா ...நானும் இதத் தான் கேக்கறேன்.

ஷாலினி said...

//(யாருப்பா அது பக்கத்து வீட்டு வெள்ளைகாரிய சைட் அடிக்கனு தப்பா சொல்றது)//

eye witness aana naney than :P

ஷாலினி said...

//முக்கால் மணி நேரம் குழந்தை காணாமல் போனது தெரியாமல் என்ன தான் செய்வார்களோ! //

:( .. onum solla thonala..kovam than varuthu intha story ya ketathum..

nalla vela, nallavanga kita vanthu senthuthu rendu vaalum :)

Sudha said...

Nice post.The child and the doggie looks cute.

Sudha said...

Hey i want to post one of your good posts in my blog.I have created a blog for that.It will feature articles written by different bloggers having value to others.Give me one of your post(assumed permission is given;)

ஸ்ரீ said...

Ippodhaiku Attendance. Not at office so extra curricular vela ippo pannala appurama padichittu commenturen ;)

ரசிகன் said...

மாம்ஸ் என்னோட பின்னூட்டம்ல்லாம் எங்க போச்சு???

ரசிகன் said...

//(யாருப்பா அது பக்கத்து வீட்டு வெள்ளைகாரிய சைட் அடிக்கனு தப்பா சொல்றது) //

அவ்வ்வ்வ்வ் நான் இல்ல.. நான் இல்ல:)))))

Anonymous said...

Knocked ur blog door few days back, it was locked......glad to know that the doors are opened now!!

Expecting new fragrance from ur indoor.....soon.......:)))