Tuesday, January 30, 2007

The Next: "முதல் கனவு" - பாகம் III

கவிதை குழந்தை

இன்னைக்கு சூர்யாவுக்கு மனசு அலைபாய்கின்றது. என்னமோ நடப்பதும், அது என்ன என அறியாமலும் அவன் தவிப்பு. இதுக்கு காரணம் அனன்யாவா, இல்லை அவனேவா என தெரியவில்லை. உலகமே நேற்றை விட சற்றே அழகு கூடினால் போல்.. வெளியில் பார்க்கின்றான். டீ எடுத்து கொண்டு போகும் ஒரு சிறுவன். கை பேனாவை தேடுகின்றது
"மலரும் முன்னே
பறித்து கசக்கப்படுவது
இளமையில் வறுமை"
அவன் முதல் கவிதை இது. இப்படி தான் பல கவிஞர்களை தங்களுக்கே தெரியாமல் படைக்கின்றார்கள் பெண்கள். இப்படித்தான் பல பெண்களை, சரஸ்வதிக்கு போட்டி ஆக்குகின்றது ஆண் வர்க்கம். அவனுடைய சில கவிதைகள் தான் ஆங்காங்கே பிரதிபலிப்பாக.


நீ பேசும் ஓசை
"நான் காதல் பேசினாள் நீ மௌனம் பேசுகிறாய்
நான் கவிதை பேசினாள் நீ கண்ணீர் பேசுகிறாய்
நான் அறிந்தது அற்ப மானுட மொழிகள் தான்
எங்கே கற்பேன் தேவதை மொழிகளை?"


தேதி: Jan 2000
வாங்க! அடுத்த நூற்றாண்டுக்கு வந்திட்டோம்! இன்னைக்கு நான் புத்திசாலி தனமா ஒரு காரியம் பண்ணேன். நம்ம கணக்கு வாத்தியார், என் தொலைப்பேசி எண்ணை கேட்டு வாங்கி குறிச்சு வைத்தார். அவர் அந்த பக்கம் அசந்ததும், அதை எடுத்து பார்த்து அனன்யா நம்பர் பார்த்திட்டேன். 441254. அவள் நம்பர். இப்ப கூப்பிடப் போறேன்.
"ஹலோ"
(அவள் தான். அவள் ஹலோ இழுக்கிற அழகிலயே தெரியுது! ஹை!)
"ஹலோ.. அனன்யாவா?"
"ஆமா. நீங்க யார் பேசுரது?"
"நான் சூர்யா பேசுறேன்"
"சூர்யா...??"
(ஆஹா..)"உங்க கூட Maths tuition படிக்கிறேனே"
"ஓ சொல்லு.. என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சுது"
"அது எப்படியோ கிடைச்சது. எங்க உன்னைய ஆளையே காணோம்?"
"இப்பெல்லாம் weekends மட்டும் காலையில் வறேன்"
"ஓ சரி"
"சொல்லு.. என்ன விஷயம்?"
(தெரியாத மாதிரி act பாருடா!)"உன் கிட்ட அன்னைக்கு ஒன்னு சொன்னேனே.. நீ திரும்ப ஒன்னும் சொல்லல?"
"என்ன சொன்ன?"
(ஆ... இந்த பொன்னுங்களே இப்படி தான்!) "ஆங். எங்க வீட்டுல உப்பு இல்ல கொஞ்சம் கேட்டுஇருந்தேன்"
(சிரிப்பு சத்தம்.. என்ன அழகா சிரிக்கிறா..) "நான் அன்னைக்கே கொடுத்து விட்டேனே உப்ப?"
(ம்ம்ஹும்.. இது தேறாது.. ரூட்ட மாத்து!)"ஹே விளையாடத.. உன்னை நிஜமா எனக்கு ரொம்ப பிடிக்கும்"
"ஹே காதல் அது இதுன்னு பேசாத.. வேற பேசு"
(ம்ம்...இது இப்படி போகுதா!) "சரி என்ன பேசலாம் நீயே சொல்லு அனன்யா"

இப்படி ஆரம்பிச்சு, தினமும் பேசிக்கிறோம். தொலைபேசி கண்டுபிடித்தவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இப்ப அனன்யாவும் நானும் நல்ல நண்பர்கள். பேச ஆரம்பிச்சா 2 மணி நேரம் வரை போகும். என்ன அழகா பேசறா. அவள் குரலை கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு! ம்ம்.. எல்லாம் public exam வரை தான். அதுக்கு பின்னே அவள் சென்னை போறாளாம். போய் கடிதம் போடுவேன் என்று சொல்லி இருக்கா! நட்பு ஒரு ஜோதி. காதல் ஒரு ஜோதி. நட்பு காதலின் அடியாகுமா? அழித்து விடுமா?

கடிதம் போட்டா... நானும் பதில் கடிதம் அனுப்பினேன். பின்ன பேச்சே இல்ல. ஓ சொல்ல மறந்துட்டேனே. நான் கோயம்புத்தூரிலேயே ஒரு காலெஜ்ல BE சேர்ந்தி இருக்கேன். அடுத்த வாரம்ல இருந்து ஐயா காலேஜ் student! அனன்யா என்ன செய்யரா என்று தெரியல. ம்ம் சரிங்க.. காலேஜ்ல ராகிங் எல்லாம் இருக்குமாம்ல.. thrillingஆ இருக்கு!

இன்னும் அனன்யா பத்தி ஒரு செய்தியும் இல்ல. இன்னைக்கு தான் நான் முதல்முதல்ல எனக்கு ஒரு e-mail ID உருவாக்கினேன். அனன்யா கிட்ட பேசினா அவளையும் ஒன்னு செய்ய சொல்லனும். அப்புறம் இங்க collegeல எனக்கு நிறைய புது நண்பர்கள். ஒரு பொண்ணு ரொம்ப நல்லா பெசுரா. பேரு திவ்யா. நான் அனன்யா கிட்ட பேசும் போது நான் அவளை காதலிக்கின்றேன், தெரியும். ஆனா, காதல் இல்லாம ஒரு பொண்ணு இவ்ளோ close ஆ பேசி பழக முடியுமா? நம்ப முடியல. ஆனா நடக்குது!

என்ன இவ்ளொ சந்தோஷமா இருக்கேன் என்று பார்க்கறீங்களா.. அனன்யா.. கோயம்புத்தூரில தான் BSc படிக்கிறா. ஆமாங்க! இன்னைக்கு ஏதேச்சையா அவள் வீட்டு பழைய நம்பருக்கு call பண்ணா, எதிர்முனையில் சங்கீதமாய் ஒரு ஹலோ. அதை மறக்க முடியுமா. என்னோட அப்பா அம்மா திண்டுக்கல் போயிட்டாங்க. நான் hostel ல இருக்கேன். அது தான் அவளும் என்னை தொடர்பு கொள்ள முடியலயாம். நான் போட்ட கடிதம் அவ அப்பா கிட்ட மாட்டி பெரிய பிரச்சனையாம். அவ அதை படிக்கவே இல்லையாம். என்னமோ போங்க. எவ்ளொ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா. ஆனா அவ கூட பேசுவது தான் கஷ்டம். அவள் எடுத்தா மட்டும் தான் பேசுவேன். இல்லனா "ஹலோ மயில்சாமி இருக்காரா" தான்! அவங்க அப்பா வரும் முன், அவள் வீடு வந்த பின் ஆகிய சிறிய இடைவேளையில் தான் அது நடக்குது!

இன்னைக்கு அவள் வீட்டுக்கு போகப்போறேன். எவ்ளோ நாள் கழிச்சு, அவளை பாக்கப் போறேன். அவ அம்மா மட்டும் தான் இருப்பாங்க. அப்பா வருவதற்க்கு முன், நான் கிளம்பனும். மதியம் சாப்பாடு அங்க! கூட வாங்க. ஆனா கண்டுக்ககூடாது. இதோ அவள் இருக்கும் apartment வந்துடுத்து. அடப்பாவி contractor. apartment கட்ட சொன்னா, maze கட்டி வைத்து இருக்கான். இருங்க.. அவள் நம்பருக்கு அடிக்கின்றேன்.. எனக்காக வெளியில நிற்பதாய் சொன்னா.. ஒரு வேளை அடையாளம் தெரியலையோ. அங்க ஒரு பொண்ணு வீட்டுக்கு வெளியில குறுக்கும் நெடுக்கும் நடக்குது. அதுவா? பார்த்தா அனன்யா மாதிரியே இல்ல! சரி இருங்க, அவள் நம்பர்க்கு அழைக்கின்றேன்.. ஆஹா.. அந்த பொண்ணு உள்ள போறா.. அவள் தான்!
"அனன்யா..."
"ஹே சூர்யா.. என்ன ஆளே தெரியாம மாறிட்டே"
(அத நான் சொல்லனும்..)"நீயும் தான்"

ம்ம்.. அப்புறம் ஏன் கேட்கறீங்க, அனன்யாவும் அவங்க அம்மா கிட்டயும் நல்லா பேசி, அவங்கள பாட சொல்லி.. அப்படியே அனன்யாவ எனக்கு ரொம்ப பிடிச்ச "யமுனை ஆற்றிலே" பாட வைத்து, நான் பாடாமல் தப்பித்தேன். ம்ம்ம்..அது தான் அனன்யா என்று இன்னும் நம்ப முடியல. வந்ததும் phone பண்ணி உன் வீட்டுக்கு தான வந்தேன் என்று confirm செய்துக்கிட்டேன். 1.5 வருடத்துல இவ்ளோ மாற்றம்! ஆச்சர்யம். அழகு. என்ன பேசி என்ன பண்ண ..அவ கிட்ட திரும்ப காதல் பத்தி பேசி, இருக்கிற நட்பும் இழக்க கூடாதே என்றும் ஒரு கவலை.

பேசாம ஒரு நாள் weekend, வெளியில கூப்பிடவா? வருவாளா?
- இன்னும் கனவு மிச்சம் இருக்கு!

Wednesday, January 24, 2007

Second Part: "முதல் கனவு" - பாகம் II

மு.கு: இது கதையோட Layout.
(title, poem)
(one Flashback)
(title, poem)
(Date,1st paragraph (para) corresponding to that date)
(2n para - does not happen as the date of first para. Instead is a day/week/month later)
(3rd para - same ..) and so on.
இது முதல்பாகம்
-------------------------------------------------------------------------------

கண்ணெதிரே
பத்து மாதம் சுமக்க வில்லை
பார்த்து சொன்ன வார்த்தையில்
என் தாய் ஆனவள் நீ


சூர்யாவுக்கு அப்போ 7ஆம் வகுப்பு படித்தான். அவனும் அவன் நண்பர்களும் தினமும் சென்று பழகிய வழியில் பள்ளிக்கு நடந்து கொண்டு இருந்தனர். அப்போ தான் அந்த சத்தம்.
"ஐயோ..." "ஏல நில்லுடா... மவனே" ஒருவன் ஓடி வர, அவனை துரத்தி கொண்டு 3 பேர், வீச்சறுவாளுடன். துரத்த பட்டவன் சூர்யாவுக்கு 15 அடியில் வந்ததும், அவனுக்கு விழுந்தது முதல் வெட்டு. பின் சரமாதிரி வீச்சுக்கள். ரத்தம் கொட்டுவதை வேடிக்கை பார்த்து நின்று கொண்டு இருந்தான் சூர்யா. தலை கழுத்தோடு இருக்க முடியாத கோனத்தில்.
ரத்தம் அவன் shoe தொடப்பார்க்க பின் நகிர்ந்தான். அதுக்கு பின், இரண்டு வாரம் அவன் உடனிருந்த நண்ப்ர்கள் பள்ளி வரவில்லை. ஜுரம் வந்து. சூர்யாவுக்கு ஜுரம் வரவில்லை. பல கேள்விகள் வந்தன.


சுட்டும் விழிச்சுடர்
"மௌனம் பேசும் மலர் ஜாதி அவள்
வரம் வேண்டி நிற்கும் ஊமை பக்தன் நான்
தேவதை கதைகளின் தலைவி அவள்
தெருவோர வழிப்போக்கன் நான்"


தேதி: sep 1999
ஆமாங்க! உங்களை பார்த்து மூன்று மாதம் ஆச்சு!. என்ன .. அதுக்குள்ள மறந்துடீங்களா? நான் தான் சூர்யா! கால் இப்ப பரவாயில்லை. டாக்டர் பயம்புடுத்தினால் போல் இல்லாம நல்லா நடக்க முடியுது. மத்த பசங்க எல்லாம் school க்கு போய் 3 மாதம் ஆகுது. நான் இந்த மூனு மாசத்துல ஏதொ அப்பப்ப சொந்தமா படிச்சதோட சரி. இந்த வாரம் தான் போகப் போறேன். அப்பா சொல்லி, கோயம்புத்தூரிலேயே சேர்ந்துட்டேன். அது போக மூன்று Tuition
வேற இன்னையில் இருந்து. Physics, Chemistry and Maths. புது friends.. புது school! எப்படி இருக்கு என்று அப்புறம் சொல்லறேன்..

கோயம்புத்தூர் பசங்க ரொம்ப மரியாதையா பேசராங்க! ஒரு மாதிரி இருக்கு. Class எல்லாம் பரவாயில்லை! Maths வாத்தியார் ரொம்ப famous ஆளாம்! Super Suresh அவருக்கு பசங்க வைத்து இருக்கும் பேரு! இவரே tuition உம் எடுக்கிறாரு. மொத்த classஉம் இவர் கிட்ட தான் போகுது.. என்னை தவிற. அவசரப்பட்டு வேற யார் கிட்டயோ சேர்ந்து விட்டோமோ என்றும் தோணுது. பள்ளி வாத்தியார் கிட்ட திரும்ப எவனாவது போவானா என்றும் தோணுது! இவர் சொல்லுவதை தான் பள்ளில படிக்கின்றேன்.. எதுக்கு இவர் கிட்டயே? என்ன சொல்லறீங்க..

பசங்க பார்க்க தான் மரியாதை எல்லாம்! பழகி பார்த்தா எல்லாம் அதே கதி தான்! சொல்ல போனா இன்னும் மோசம்! ஒருத்தனை இன்னைக்கு Avila Convent முன்னாடி வைத்து அடிச்சிட்டாங்க. பாவம் அவன். எங்க ஊருல என்ன பிரச்சனைனாலும், girls convent முன்னால எல்லாம் அடிக்க மாட்டோம். girls convent என்று சொன்னதும் நினைவுக்கு வருது. classல எந்த பொண்ணு கிட்டயும் பேச கூடாது என்று எனக்கு தடை. ரொம்ப பேசரனான்! பசங்களுக்கு நம்மளை பத்தி இன்னும் தெரியல. அதுனால கேட்கற மாதிரி ஒத்துகிட்டேன். அப்புறம், நம்ம tuition பத்தி சொல்ல மறந்துட்டேனே. physics வாத்தி படு அசத்தல். chemistry எனக்கு பிடிக்காத subject. ஆனா வாத்தியார் பொருமையா என்க்கு சொல்லி கொடுக்கின்றார். Maths வாத்தியார் கொஞ்சம் தலைக்கணம்.. ஆனா சொல்லி கொடுப்பதில் குறை இல்லை.

இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்தேன். Maths tuition ல. என்ன சொல்லுவது... அவளை.... பார்த்த உடன்... அதாவதுங்க.. சில பொண்ணுங்களை பார்த்து ரசிக்க தோனும், சிலரை பார்த்தால் பழகி பேச தோணும், இவளை பார்த்ததும் அவளோட வாழனும் போல தோணுச்சு. எனக்கு வேற எப்படியும் சொல்லத்தெரியல. அவள் பேர் தெரியல. போகும்போதே வாத்தியார் அவளை திட்டிகிட்டு இருந்தார். இதுக்கு முன் நான் பார்த்ததே இல்ல. வாத்தியார் கிட்ட college பொண்ணுங்க எல்லாம் வரும். சரி திரும்ப பார்ப்பேன் என நம்புவோம். கண்டதும் காதல் எல்லாம் படத்த பார்த்து கிண்டல் பன்றவன் நான். திருநெல்வேலிக்கே அல்வாவா?

அனான்யா. அது தான் அவள் பேரு. SBOA ல 12த் படிக்கிறா. இன்னைக்கு திரும்ப பார்த்தேன். அதே tuitionல. எவ்வளவு நிம்மதியா இருக்கு. நல்ல வேளை.. நான் கூட எங்க college student ஓ என்று கவலைபட்டேன். அந்த பொண்ணை ஒரு 3,4 தடவை பார்த்து, இது வரை பேசியது கூட இல்லை.. ஏன் அவளை பத்தியே நினைக்கின்றேன் என தெரியல. அவளுக்காக, Maths Tuition வெளியில காத்திட்டு இருக்கேன். அவள் வந்ததும் தான் நானும் போறேன். அவள் என்னைப் பார்த்தாவே தெரியல. காத்திருத்தல் காதலின் ஆரம்பமா?? நான் காதலிக்கின்றேனா? எனக்கே நம்ப முடியல!

என்ன பண்ணாலும் மனசு அவள்ள் பின் தாங்க போகுது. இன்னைக்கு பேசாம சொல்லிடப் போறேன் ... என்ன சொல்லறீங்க. அவ இப்ப வெளியில போவா. என்னை தாண்டும் பொழுது கூப்பிட்... ஷ்ஷ்... அவள் எழுந்திரிச்சிட்டா. பேசாம பாருங்க.
"அனான்யா"
"yeah?"
"ம்ம்ம்.... உங்க note கொஞ்சம் தர முடியுமா.. நளைக்கு தரேன்"
"sorry.. எனக்கு நாளை class ல ஒரு test இருக்கு.. இன்னொரு நாள் தரேனே"
"ok.... thanks"
தெரியும் தெரியும்... திட்டாதீங்க.. சொதப்பிட்டேன்.. ஆனா இன்னைக்கு தான் முதல் முறை அவள் கூட பேசி இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பயமா இருக்குங்க. சொல்ல முடியலனா கூட, அவளுக்கு இந்த கடிதம் கொடுக்கப்போறேன்.
இந்தாங்க படிச்சு பாருங்க. "தொட்டவுடன் என்னை சுட்ட நிலவே.. உன்னை நான் காதலிக்கின்றேன்.." இவ்ளோ தாங்க. இத அவ கிட்ட குடுக்க தைரியம் வருமா? பார்ப்போம்.
"அனான்யா... உங்க கிட்ட ஒன்னு பேசனும்"
'என்ன?"
"கொஞசம் இங்க வாங்களேன்"
"என்ன சொல்லுங்க. நீங்க சூர்யா தான?"
"ஆமாங்க" (ஆஹா.. நம்ம பேரே இப்ப தான் தெரியுதா..)
"....."
"என்னமோ சொல்லனும்னு சொன்னீங்க.. என்ன?"
"ம்ம்... இத படிச்சு பாருங்க.. நாளைக்கு பேசுவோம்"
ஐயோ.. நான் escape! நாளைக்கு என்ன சொல்லுவா? இன்னைக்கு ராத்திரி தூங்கினாப்ல தான்.

அவளை பார்த்து ஒரு வாரம் ஆகுதுங்க. அன்னைக்கு கொடுத்த பின் பார்க்கவே இல்ல. கவலையா இருக்கு.. பயமா இருக்கு. யார் கிட்ட கேட்கனும் தெரியல. என்ன ஆகி இருக்கும்??
-மேலும் தொடரும்

Tuesday, January 23, 2007

"முதல் கனவு" - பாகம் I

மு.கு: எல்லாரும் கதை எழுதறாங்க! அதுனால இது நம்ம முயற்சி. படிச்சிட்டு அடிக்க கூடாது

கனவின் ஆரம்பம்

"கனவில் வந்ததற்கே கவிஞன் ஆனேன்
நேரில் வந்துவிடு கடவுள் ஆகின்றேன்"


கூர்மையான காது சூர்யாவுக்கு. அடுத்த அறையில் தந்தை அவர் நண்பனிடம் பேசுவது கேட்டது. "பையன் டாக்டர் ஆவானா?"
தந்தையின் நண்பர் பிரபல ஜோதிடர். வங்கியில் அப்பாவுடன் வேலை பார்த்தாலும், சொந்த ஈடுபாடு காரணமாக ஜோதிடம் செய்பவர். தன் தந்தைக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அறவே கிடையாது என தெரியும் சூர்யாவுக்கு.அவனுக்கோ அதை விட அதில் நம்பிக்கை கம்மி.
"பையன் டாக்டர் ஆவது கஷ்டம்.."
"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க" அம்மா குரல். பையன் டாக்டர் ஆகனும் என்பது அவர்கள் ஆசை. "ஆமாங்க.. இருப்பதை தான் சொல்ல முடியும்!.. அப்புறம் இன்னொன்னு..பையன் 16 வயதில் ஒரு பெண்ணை காதலித்து அவளை தான் கல்யாணம் செய்வான்"
"என்னது 16 வயதுலயா?". அதற்கப்புறம் சூர்யா எதுவும் கேட்கவில்லை. நம்மளாவது காதலிப்பதாவது என மனதில் நினைத்துக்கொண்டான். அவனுக்கு அப்ப வயது 12.


கண்ணிமைக்கும் நொடியில்

"நீ தான் ஆசைகளின் மும்மூர்த்தியோ?
உன் கண் அசைவில்
படைத்து, காத்து, அழிக்கிறாய் ..
என்னுள் கோடி ஆசைகளை"



தேதி: April 12 1999
நான் தான் சூர்யா. எனக்கு வரும் october ஓட 15 முடிஞ்சு, 16 ஆரம்பம். இன்னைக்கு தான் 11த் பரிட்ச்சை எழுதி முடிச்சேன். அடுத்து 12த். நடுவுல விடுமுறையே நிறைய இல்ல. ஒரு வாரம் கழிச்சு special class. கதை மேலும் சொல்லுவதற்க்கு முன், என்னை பத்தி இன்னும் கொஞசம் சொல்லிடறேன். சராசரி உயரத்துக்கு ச்ற்றே கூட. சொந்த ஊரு திருச்சி. எங்க அம்மாக்கு நான் டாக்டர் ஆகனும் என ஆசை. எனக்கு அது எல்லாம் ஒன்னும் தெரியாது. நல்லா படிப்பேன். Cricket, Football நல்லா விளையாடுவேன். எனக்கு சாமி, ஜோசியம் எல்லாம் அறவே நம்பிக்கை இல்ல. ஆனா எனக்கு சிவன் தான் இஷ்ட கடவுள். என் ராசி சிம்ம ராசி. என்னடா நம்பிக்கை இல்லை என்று சொல்லிட்டு இப்படி சொல்றேன் என்று பார்க்கறீங்களா.. ஆமாங்க.. நான் அப்படிதான்! சரிங்க நான் கிளம்பனும். அப்புறம் பார்ப்போம்.

வாங்க வாங்க.. என்ன hospital வாசம், காலுல பெரிய கட்டு என்று பார்க்கறீங்களா.. இன்னைக்கு தான் முதல் நாள் 12த் school. போயிட்டு வரும் போது லாரில மோதிட்டேன்.
அது தான் இப்படி. டாக்டர் ஒரு மாதம் கழிச்சு தான் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார். அம்மா, அப்பாக்கு ஒரே கவலை. 12த்ல தான் இவனுக்கு இப்படி எல்லாம் ஆகனுமா என்று.. எனக்கு இது தான் முதல் மருத்துவமனை வாசம். இந்த வாசமும் பிடிக்கல.. வாசமும் ப்டிக்கல.. கால் அசைச்சா ஒரே வலி.

ம்ம்.. இன்னைக்கு வந்து பார்த்த சொந்தகார டாக்டர் இங்க Treatment சரியா பண்ணல.. அதுனால கோயம்புத்தூர் போய் பெரிய Hospital ல சேர்க்க சொல்லி அப்பாவிடம் பேசினார்.
அப்பாவும் அந்த ஊருக்கே Transfer கேட்டு இருப்பதால நாளைக்கு கிளம்பறோம்.

யம்மா.. கோயம்புத்தூர் எவ்வளவு பெரிசா இருக்கு பார்த்தீங்களா! என்னை பார்க்க தாத்தா பாட்டி நாளைக்கு வராங்க! இங்க உள்ள டாக்டர் scan எல்லாம் எடுத்துட்டு suspense ல என்னை விட்டுட்டு போகிவிட்டார். ஆ..அவர் வரும் சத்தம் கேட்குது! நான் தூங்குவது போல் நடிக்கிறேன்.. சொல்லாதீங்க.
"என்னங்க ஆச்சு?" - அப்பா. "பையன் ankle bone வரை fracture இருக்கு. சரியாக மூனு மாதம் ஆகும். Major Surgery செய்யனும். பையன் திரும்ப Normal ஆ நடப்பது கஷ்டம்."

எங்க நமக்கு மயக்கம் ஆவதற்க்கு முன் கத்தியை வைத்து அறுப்பாங்களோ என்று ஒரு எண்ணம். நல்ல வேளை அது நடக்கல. 4 மணி நேரம் ஆபரேஷன். ஒரு நாள் முழிக்காம இருந்தேன். அடிச்சு போட்டா எப்படி இருக்கும் என்று எனக்கு அப்ப தான் தெரியும். இன்னும் இது போல இரெண்டு செய்யனும் என்று யாரோ சொன்னது எனக்கு நியாபகம் வருது. வலியிலும் சிரிக்கின்றேன்.
- கனவுகள் தொடரும்

Friday, January 19, 2007

In America ... அந்த சொர்க்கமே வந்தாலும்..

முதல்ல இத பத்தி நம்ம சுஜாதா ஒரு கட்டுரை எழுதனாங்க! படிச்சு பார்த்தப்ப வித்தியாசமா இருந்துச்சு! நம்ப முடியல! இப்ப..

முதல் முதல் வந்து இங்க இறங்கினப்ப.. இங்க உள்ளதெல்லாம் ஏதோ படத்துல உள்ள மாதிரி அழகான வீடுகள், நிஜமாவே color figures! என்று பட்டிகாட்டான மிட்டாய் கடையில விட்டாப்ல இருந்துச்சு! நான் இருக்கிற ஊர்ல வெள்ளைகாரனை விட, chinese கூட என்பதால, race problem இல்ல.. ஆனா அப்ப கூட 'சில' கிழங்க நம்மளை பார்த்து ஒரு மாதிரி look விடும்.. நம்மளும் சளைக்காம திரும்ப lookஉவது தான் இப்பேல்லாம்!.

Busstand ல நின்னா போதும்... நம்ம கலர பார்த்து உடனே "Jerusalem Weekly" எடுத்திட்டு வந்துட்டுவாங்க! முதல்ல எல்லாம் அத polite அ வாங்கி அவங்க போனப்ப்பறம் குப்பை தொட்டிக்கு போகும் அது. இப்ப எல்லாம் என் பக்கமே வருவது இல்ல.. அதுக்கு...இதுதான் காரணம்.ஒரு நாள் bad mood ல வாங்கி அவங்க முன்னாலயே போட்டிட்டேன்!
(அந்த நேரம் பாத்து bus வந்துடுச்சு.. அன்னைக்கு escape ஆன lady.. அப்பறம் என்னை பாத்தா வருவதே இல்ல :((( )

அப்பறம் Office ல நடந்த dialogues. என்க team லயே நான் தான் சின்ன பையன்.. இந்த வெள்ளைகார பய வரும்வரை.. என்னோட ஒரு வயது கம்மி. 22
ஒரு நாள் ஏதேச்சையா பேசும் போது அவன் desktop ல இருந்த photova பாத்து அறிவு மழுங்கி..
நான் : Hi, thats ur baby?
அவன் : Yeah!
நான் : the baby is so cute. I din't know you were married!
அவன் : Yeah, got married last year.
நான் : oh, who are the other two kids near by? neighbour hood kids?
அவன் : No, they are mine too.
நான் :(confusion ல முழிக்க)
அவன் : they are my wife's from her first marriage.
நான் மனசுக்குள்ள (அடப்பாவிகளா!.... &*^%*^&*%*)

இன்னொரு நாள்
Coll1: Hi, I heard in India, you marry the girl your parents see for you?
நான் :oh....yeah..
Coll1: But how can you marry someone you dont know?
coll2:so how do they look for a girl? they place an ad or what?
நான் : hmm.. they do that sometimes too
coll2: But what if you donot like the girl?
நான் : (எப்பவும் போல come back ல)Well, atlest I can blame my parents if my marriage life goes wrong!
Then they both stare at me as if I am nuts!

ஒன்றா.. இரெண்டா....இது மாதிரி பல comedy நடக்கும்!

என்ன தான் இருந்தாலும் கொஞச நாள்ல நம்ம ஊர miss பன்னுவோம். காசுக்காக வந்த ஊர் தான் இது!
-------------------------------------------------------------------------------
சரி உங்களுக்காக ஒரு பாட்டு! ஒகே! Movie: கண்ணும் கண்ணும்

ஏனோ கேட்ட பின் ரொம்ப ஆழமா மன்சுல நின்னுச்சு!
சில அழகான வரிகள் இதோ
"அன்பே அன்பே நான் வாழ்க்கையை
இங்கே இங்கே தான் வாழ்கின்றேன்""

"அன்னை இல்லை இல்லை என்று
என் அடி மனம் அழுததென்ன
என்னை விட இளைய பெண்கள்
என் அன்னை என ஆனதென்ன"

"சின்னஞ்சிற்று மழை துளி நான்
தன்னந்தனியாய் இருந்ததென்ன
சில துளி சேர்ந்ததால்
சமுத்திரம் ஆனதென்ன"

இதே படத்தில இன்னொரு பாட்டில ஒரு line
"எத்தனையோ கவிதை எழுதி
இதயம் எல்லாம் வென்று விட்டேன்
காதல் எனும் கவிதை மட்டும்
இலக்கணப் பிழையாய் வந்ததென்ன"

இப்போதைக்கு அவ்ள தான்க! நிறுத்திக்கிறேன்... ஆனா திரும்ப வருவேன்!

Saturday, January 13, 2007

Silver Jubilee! ... கண்ணால பார்த்தே கொன்னுடுவாடா..

மு.கு: மக்களே.. சரியாத்தான் வந்து இருக்கீங்க... புது layout..எப்படி? கண்ணு வலிக்கற மாதிரி இருந்தா சொல்லுங்க....மாத்தப் பார்க்கின்றேன்!

காலை எழுந்ததும்... ட்ரிங்...ட்ரிங்...ட்ரிங்...
நான் : ஹலோ
நண்பன்: டேய் .. நான் தான்டா...
(we speak generally)
நண்பன்: ஆமாம்.. அப்படி என்ன ஆணி புடுங்கர.. ஒரு mail கூட அனுப்புவது இல்ல..
நான் : ஆமாம்ல மக்கா ..Project busy ஆன stage ல.. அதான் ...
நண்பன்: பின்ன எப்படி Blog எல்லாம் நடத்துற?
நான் : ஒரு blog post போட என்ன ஒரு 30 minutes ஆகுமா..
நண்பன்: எப்படா உனக்கு time கிடைக்கும்?
நான் : எல்லாம் ஆணி புடுங்கர side gapல தான்ல...
நண்பன்: டேய்.. அந்த நேரத்துல ஒரு blog போடுறது தப்பில்ல?
நான் : இல்ல... ஒரு blog தானல?
நண்பன்: ஒரு 25 பேர blogroll வேற பண்ணி இருக்க.. அவங்களுக்கும் comment போடுவ.. 25 பேருக்கு ஆளுக்கு ஒன்னு என்று comment போட்டா அது?
நான் : அதுவும் தான்ல..
நண்பன்: இது உன்னோட 25வது blog.. அப்ப மொத்தம் இது வர 25 post போட்டு இருக்க.. அது?
நான் : ம்ம்.. சரி கொஞசம் over மாதிரி தான் இருக்கு..
நண்பன்: உன் 25 postக்கும் வந்த commentக்கு reply comment பண்ணது?
நான் : ....
நண்பன்: ஆக.. 25 post போட்டு, அதுல வர்ற 50 commentக்கு 100 reply செய்து.. 25 பேர blog roll போட்டு..அவங்க இது வரை போட்ட 25 க்கும் மேலான post க்கு comment பன்ற... அதுவும் ஒன்னா.. ஏதோ cricket விளையாடற மாதிரி இதுல நான் 85ல்ல இருந்து steady அ 100 வந்தேன் என்று வெட்டி பந்தா பன்னி... இப்போ தப்பா தெரியல?
நான் :(இவ்ளோ நேரம் bun வாங்கியதுக்கு come back ஆ) அடிங்.. நம்மலாம் blog போடுவது தமிழ் சேவை ... தெரியும்ல... அது தப்பா...
நண்பன்: ஆமாம்டா.. இவரு செய்வது தமிழ் சேவை... சிம்பு Little super star.. அஜீத் அடுத்த super star.. Bush உலகத்தையே காப்பாத்துராறு... தாங்காதுடா சாமி.. நீங்க பன்றது என்னனு நாங்க சொல்லனும்.. நீங்களே சொல்லிக்க கூடாது!
(Call அ இதோட censor பன்றேன்..இதுக்கு மேல ... வேண்டாம்.. விடுங்க ;) )
-----------------------------------------------------------------------------------

ஆமாம்க..போன வருஷம் ஆரம்பித்து.. நம்ம வெள்ளி விழா post இது! முதல் முதலா நான் படித்த blog நம்ம bharani..(Google search ல எப்பவோ வந்தது.. அதுல பார்த்த கவிதை ஒன்னு ரொம்ப பிடிச்சதால உள்ள போனேன்.. "தன் துணையை தானே தேடிம் தைரியம் உள்ளவர்க்கு.." என்று something கவிதை அது) ஒரு இரெண்டு மாதம் தொடர்ந்து படிப்பேன்.. comment எல்லாம் இட மாட்டேன்.. ஒரு நாள் ..சரி.. நம்மளும் ஒரு blog போடுவோம் என்று முடிவு. (காரணம் வேறு என்ன.. ஆணி புடுங்கர எடத்துல வெட்டியா இருந்தது தான்..) சரி.. என்ன பேரு வைக்கலாம் என்று யோசனை... அப்ப.. என்னோட Project Manager கிட்ட இருந்து ஒரு decision waiting.. அத நம்ம வெள்ளை கார பயபுள்ள ஒருத்தன் "Have the Gods spoken?" என்று என்கிட்ட கேட்டான் (அதாவது மேலிடத்தில் முடிவு செய்தாச்சா.. என்ற meaning ல) உடனே நம்ம "அட.. இது நன்னா இருக்கே.. ' என்று அத சூட்டியாச்சு! அப்பறம் dreams என்பது பெயர் காரணம் இல்லாத என்னோட "orkut&gmail" பேரு..

என்னை வெள்ளி விழா post போட வைத்த பெருமை உங்களையே சாரும்.. ஆமா..உங்கள தான்!
----------------------------------------------------------------------------------
சரி நம்ம 25வது postக்கு ஒரு கவிதை போடாமா உங்கள escape ஆக விடுவேனா...

யாரிவள்?
கவிதை கொஞ்சம் காவியம் கொஞ்சம்
கலந்தவள் அவள்..

ஆண் பாதி பெண் பாதி
சிவன் வீட்டில்..
அவள் முழுமை நான் வெறுமை
என் வீட்டில்..

தூண்டில் புழு
மீனுக்கு ஏங்குமா?
அவளுக்காக காத்திருக்கும்
நான்..

அவள் வருகையில் விடிந்து
அவள் பிரிகையில் மடியுது
என்நாட்கள்.

நான் காதல் பேச..
அவள் கண்ணீர் பேசுகிறாள்..
பேசும் வார்த்தைகளை
திருடி
மௌனம் தருபவள்.

பிரிந்து செல்வோம் என்று
போகையில்
என்னை அழைத்து சென்று விட்டாள்..
நானின்றி நான்..

கண்ணெட்டும் தூரம் வரை
நான் காண்பதெல்லாம் அவள்..
யாரிவள்?
என்னவள்!
--------------------------------------------------------------------------------
அப்புறம் எல்லாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Tuesday, January 09, 2007

Film - உன்னை நான் சந்தித்தால்...

ஆமாங்க... T.R, சிம்பு, S.J.Surya எல்லாம் படம் பண்றாங்க!.. இது நமது!

மு.கு: இப்படத்தில் வரும் பாத்திரங்கள் கற்பனை அல்ல. யாரேனும் நடிகர்களை நியாபகப்படுத்தினால், அது உண்மை! (தம்பு, சினுசு, கருத்து கண்ணப்பன், shreya, Nayanthaara, Reema Sen)
Scene 1 :
Location: ஒரு பெரிய வீட்டுள்ளே ..
தம்பு : (அட.. எற்கனவே வெட்டி நம்ம கலாய்ச்சிட்டார்.. இப்ப வெரயா?)
சினுசு: (அருண் நம்ம படத்துக்கு விமர்சனம் பொட்டுவிட்டார் என்று இங்க எனக்கு இதுவா!)
தம்பு : அண்ணே...
சினுசு : மச்சி.. யாரு நீ? நான்.. உனக்கு.. அண்ணணா?
தம்பு : அட அது இல்ல.. நீங்க தான்.. திருவிளையாடல் தனுசா?
சினுசு : அது நாந்தான்! நீ தான் வல்லவன் பல்லனா? அந்த படத்துல பல்லெல்லாம் அழகா இருந்துச்சு!! என்ன ஆச்சி ?
தம்பு : ஹெ.. இதப்பாருடா..என்கிட்டயே நக்கலா?.. ஆமா.. தாடி எல்லாம் வெச்சு முடி வளர்த்து வேட்டி கட்டினா படம் super start படம் மாதிரி ஒடுமா?
சினுசு : மச்சி.. எங்க கதை இருக்கட்டும்..நீ கைய கால ஆட்டி style ன்ற பேருல comdey பண்றியே?
தம்பு : இந்த பல்லன் பார்க்கறதுக்கு தான் comedy...உள்ளெ இறங்கிட்டேன்... வேட்டை ஆடிக்கிட்டே விளையாடுவேன்!!
சினுசு : நீ சொல்றது "சிலு"வெளையாடல்.. நான் இறங்கினேன்..திருவெளையாடல்.
தம்பு : ஹேய்.. நீ superstar பொண்ண கல்யானம் பன்னி superstar ஆக ஆசை படுற.. நான் நானே Superstar ஆகனும் என்று நினைக்கின்றேன்!
சினுசு : அது எப்படி நீ மட்டும் யாருமே சொல்லாம "little super star" ஆன?
தம்பு : நடிச்சு ..மிரட்டி அதுனால எல்லாம் வருவதற்க்கு பேரு title இல்ல.. அது தானா வரனும்!
சினுசு : ஹி ஹி.. ஹிஹி...ஆமா... முதல் காதல் ஜெயிக்கனும் என்பது இல்லை.. கடசில யாரவது காதலிச்சா போதும் .. அப்படினா எதுக்கு முதல்ல காதலிக்கனும்? சாகும் பொது love பண்ணா பத்தாதா?
தம்பு : இது நம்ம கிட்ட நடக்காது.. அது என்ன ஒரு பொண்ண மூனு முறை ஒரு நாள் பார்த்தா love செய்வியா? அப்படி தான், நம்ம தலைவரும், அவர் பொண்ணும் வந்த programma, record பன்னி மூன்று முறை பார்த்து love ஆச்சா?
சினுசு : என்ன சொன்னாலும், நீ "skit" கொடுக்கலாம்.. நான் தான் "hit" கொடுக்கரென்!
தம்பு : இத பாருடா! என்கிட்டியே வா..நீ ரொம்ப பேசற.. என்னை tension ஆக்குற.. உள்ள உசுப்பேத்துற..
சினுசு : ஐயே... என்ன இப்படி rhyming அ film காட்டினா நாங்க மயங்கிடுவொமா? இது எந்த மகுடிக்கும் மயங்காத பாம்புடி!
தம்பு : ஹே! என்கிட்ட நீ மோதினா தாங்க மாட்ட.. நான் திரும்ப மோதினா தூங்க மாட்ட!
சினுசு : மச்சி, நாம பார்க்கறதுக்கு தான் சும்மா.. வா...வா.. என்ன படமா?

(கதவு திறக்கும் சத்தம்... இருவரும் திரும்பி பார்க்கின்றார்கள்... டுமீல்..டுமீல்)
கருத்து கண்ணப்பா entry!
க. க : டேய்.. தமிழ்நாட்டுல மனசாட்சியே இல்லாத இரண்டு பேரு இனி Permanenta Missing டா! இனி நான் தாண்டா shreya, Reema, Nayanthaara கூட எல்லாம் ..
(மேலே பார்க்கின்றார்)

Song Scene : இடம்: யாருக்கு தெரியும்!
"அம்மாடி ஆத்தாடி...நீ தான் எனக்கு பிரியாணி..
நீ ஜாடி.. நான் மூடி... அட சேர்ந்துபுட்டா shelf தான் டா..
புதுசா மாவு அரைப்போமா.. பழய மாவ எரிவோமா..
ராமர் வில்லு நமக்கேதுக்கு.. கண்ணே சொல்லு நானனுனக்கு...
ஹே யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மா..யம்மம்மா"

பி.கு: இது ஒரு ஜாலி post! அப்புறம், sideல நம்ம நமீதா படம் இருக்கு! சிலர் சொன்னாப்புல இல்லாம, அழகா தான் இருக்கங்க!
Added later: அதாகப்பட்டது, நம்ம படம் எடுக்க, ஒரு நல்ல Financier தேவை..மீதி எல்லாம் நான் பார்த்துப்பேன்!

Saturday, January 06, 2007

Life II - தேடல் என்பது இல்லை என்றால்..

Warning: எப்போவும் போல காதல், கவிதை இல்லங்க! இதில் வரும் கருத்துக்கள் என்னோட சொந்த கருத்து.. யாரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. The views represented are my own views about life, its purpose and god. It may contain controversial statements about religion, god and some personalities you might happen to respect.
இது படிப்பதற்க்கு முன், இதையும் படிங்க..

நான் அப்போ 7த் படிச்சேன். அன்று இரவு என் கனவில் வந்த ஏசுநாதர், என் வாழ்வில் அவருக்கே தெரியாமல் பல மாற்றங்களை செய்து விட்டார். அன்று காலை எழுந்ததும், Bible a தூக்கி போட்டவன். இன்று வரை அதை தொடும் மனநிலை இல்லை! என்னாடா குழப்பறானே என்று பார்க்கின்றீர்களா... மேலும் படிக்கவும்!

யார் கடவுள்? நம்ம வாழ்க்கை பயன் என்ன? என்று எல்லாம் எப்பவாவது நமக்கு தோணும்!
இது என்னுடைய பயணத்தில் நான் கண்டு அறிந்தவை!

பரிபூரண உண்மை என்பது அதுவும் இல்லை! உண்மைகள் பல state ல இருக்கும்!
இப்போ மஹாபாரதம் எடுத்தா, யாரை கேட்டாலும் சொல்லுவாங்க, துரியோதனன் கெட்டவன் என்று. மஹாத்மா வை கொன்றது தப்பு என்று எல்லாருக்கும் தெரியும். இப்படியான உண்மைகள் - Level 1 என்று கொள்ளுவோம்.

மஹாபாரதம் படிக்கின்ற எல்லாருக்கும், துரியோதனன் நிஜமாவே கெட்டவனா, இல்ல காலத்தாலையும், பிறராலையும் அது மாதிரி சித்தரிக்கப்பட்டவனா என்ற doubt வரும்! அது மாதிரி, godse செய்தது correct என்று ஒரு கோஷ்டி இருக்கு இது Level 2. Level 2 காரர்கள், Level 1 காரர்களிடம் விவாதித்தால், Level 1 காரர்களுக்கு ஒரு வேலை, Level 2 தான் நிஜமோ என்று சந்தேகம் வரும்!

அப்புறம் Level 3 இருக்கு! இது most cases, level 1 மாதிரி இருக்கும்..முடிவில.. ஆனா, இதுக்கு வந்தவர்கள் கம்மி பேரு. இவங்கள் Level 2 அ கடந்து மீண்டும் Level 1 இல் இருக்கும் உண்மையை தெரிந்தவர்கள். துரியோதனன், godse எல்லாம் ஏன் நிஜமா தவறு செய்தவர்கள் என்று இவர்களுக்கு தெரியும்!
(ஒரு வேளை இதுக்கு மேலையும் இருக்கலாம். யாம் அறிந்தது இவ்வளவே)

இதுல mostly, எல்லாரும், Level 1 தான்!. அதுனால தான், level 2 -காரர்கள், அறைகுறையா படிச்சு, அவர்களும் குழம்பி, மற்றவர்களையும் கெடுப்பாங்க!. ex- நம்ம பெரியார். காசில சில பேரிடம் ஏமாந்த அவர், அதுக்காக, கடவுள் இல்லை என்று, comedy செய்து இப்போ, தமிழகத்துல ஒரு கூட்டமே திரியுது! அவரு எண்ணம் நல்லதாய் இருந்தாலும், தான் உண்மையை கண்டுபிடித்திட்டோம் என்று தவறு செய்து விட்டார். சொன்ன முறையும் மோசம்!

சரி back to topic, நம்ம வாழ்க்கை எதை நோக்கி செல்கின்றது? What is the basic principle of life? எது நம்முடைய முடிவுகளின் ஆழ்ந்த காரணம்? பணம்? செல்வம்? மகிழ்ச்சி? நிம்மதி? இதுல நான் ரொம்ப நாளா "மகிழ்ச்சி" என்று நினைத்து இருந்தேன்! ஆனா, இப்போ.. அது காதலோ என்று தோணுது! (உடனே ஆஹா என்று நினைக்காதீங்க!)
எல்லா உயிர் மேலயும் காதல்.. அந்த காதல்!

Consider this scenario:
ஆரம்பத்தில் ஒன்றுமே இல்லை! அப்பறம் awareness ..consciousness.. நாம கடவுள் என்று சொல்வது அது. அதன் விருப்பம் படி from nothingness arised vibrations. from vibrations arised matter. and all of this is part of the same consciousness. so, நாம எல்லாருமே உண்மையில் ஒன்று. at some level we are all one massive consciousness. நாம உலகத்தில் வாழவில்லை. நாம இந்த universe ல வாழலை. நாம தான் இந்த universe. If you divide infinity, how can the divided products be finite?

கிருஷ்ணருக்கு குன்று உச்சியில், "நான் தான் எல்லாம்" என்று தோணுச்சே, ஏசுக்கு, சாத்தான் "I will give you all this land" என்று ஏமாத்த try பண்ணப்போ, "Everything aldready is mine" என்று தோணுச்சே.. அது தான் நான் சொல்ல வருவது.

கல்ல போய் கும்பிடறோம் என்று இல்லை! அந்த கல்ல எதுவா நினைச்சு கும்பிடரோம் என்பதில் இருக்கு answer!. சில பேரு கல்லை பார்த்திட்டு, கடவுளை காண முடியாத குருடர்கள். The power does not lie with god. Miracles do not happen because of divine intervention. But the power lies in us. Miracles happen because we believe it will happen. Our faith and belief is what makes god. நம்ம நம்பிக்கையும், எண்ணமும் தான் கடவுள். அதை எந்த முறையிலும் வழிபடலாம்!

இது தான் உண்மை என்று நான் சொல்லவில்லை.. ஆனா, தமிழ் testல எப்படி புதுக்கவிதைக்கும், 1000 வருஷம் முன் எழுதிய செய்யுள்க்கும் அதே mark ஓ, அது மாதிரி, 1000 years முன்னால் சொன்னால் மட்டும் எதுவும் "ultimate truth" ஆயிடாது! இப்போ சொல்லப்படும் கருத்துகளும் அவைக்கு சமமே!

ஒரே postல ரொம்ப சொல்லி எல்லாரையும் குழப்பிட்டேன் என்று நினைக்கின்றேன்! அதுனால மேல Bible பத்தி சொன்னது அடுத்த postஇல்!

Monday, January 01, 2007

Poem II ..என் கவிதை கிறுக்கல் எல்லாமே..

ஆமாங்க.. NewYear அன்னைக்கு வேலை வெட்டி இல்லாம blog போடுறேன். நேற்று Nite, party.. படம் (திருவிளையாடல் ஆரம்பம்) .. என ஒரே கலக்கல்.. காலை எழ மணி 10:00 AM. இது கவிதை பற்றி..கவிதை எழுதுவதை பற்றி! இந்த Blog போடனும் என்று போன முறையே நினைத்து, நழுவி இப்பொழுது, நம்ம தனுசின் "copy அடித்த"விளையாடல் பத்தி போடலாம் என்று நினைக்கையில் இது முந்தி கொண்டது! நம்ம Divya கூட இதே டாபிக்ல ஒரு blog போட்டாச்சு.. அதை படிக்காதவர்கள் Link போய் படிக்கலாம்.


நான் முதல் முதலாய் எழுதிய கவிதை "அம்மா" என்ற தலைப்பில்.. நான் 7த்ல நடந்த competitionல first prize வாங்கினேன்! இதுல Comedy என்னனா அப்ப எல்லாம் கவிதையும் வராது..ஒன்னும் வராது! classஅ cut அடிக்கலாம் என்று போனது..fullஅ பக்கத்தில் இருக்கும் என் நண்பன் ஒருவனை பார்த்து bit! (கவிதையை கூட விடாம bit அடிச்சதை நினைத்தா பெருமையாய் இருக்கு!) அவனுக்கு ஒன்னும் கிடைக்கல.. prize எனக்கு தான் கொடுத்தாங்க! பின்ன கஷ்டப்பட்டு bit அடிச்சோம்ல! ஆக இதை எல்லாம் என்னொட கணக்குல எடுத்துக்க முடியாது!

கவிதை எல்லாராலும் எழுத முடியும்க! ஆனா சாதாரண "mental state" ல எழுத முடியாது. An poem is an overflow of emotions! அதுனால தான் காதலிச்சா கவிதை தானா வருது! உங்களுக்கு எல்லாம் தான் நம்ம கதை தெரியுமே! நமக்கும் அப்படி தான்.. ஆனா நான் காதல் பற்றி எல்லாம் எழுதியது கிடையாது! என்னொட முதல் கவிதை / ஹைக்கூ இது (approx)

"பூப்பதற்க்குள் பறிக்க படுகின்றன
பட்டாசு factory இல் குழந்தைகள்!"

எப்பவாவது தான் இது எல்லாம்.. Mostly நம்ம எழுதறது "செய்யுள்" range ல தான் இருக்கும்! (அப்ப)

மேகமெல் லாமே கர்ண வான்
தீயது வற்க்கு அந்தன் மைச்செய்யும்
காதலு லாமேக் கவிதை தான்
படித்த வற்க்கு பைத்தியந் தான்

இந்த range தான்! அதுல பெருசா இலக்கணம் எல்லாம் இல்ல. முதல்ல ஒரு Base.

மேகம் எல்லாமே கர்ணன் தான்
தீயவற்க்கும் நன்மை செய்யும்
காதல் எல்லாமே கவிதை தான்
படித்தவற்க்கு பைத்தியம் தான்

standard நாலடியார் format! அப்புறம் பகுபதம் எல்லாம் பார்த்து நல்லா புரியற மாதிரி இருப்பதை தமிழாசிரியற்களுக்கு மட்டுமே புரியும் Format! இது மாதிரி தான் comedy பண்ணிட்டு இருந்தேன்.. இது தமிழ் exam ல ரொம்ப usefull அ இருக்கும்! சும்மா அங்கங்க இது மாதிரி நாலு line எழுதி , பின் "என்று சொல்கின்றார் ஒரு புதுக்கவிஞர்" அப்படினு buildup! எழுதினது நான் தான் என்று யாருக்கும் தெரியாது! பையன் எவ்வளவு படிச்சி தமிழார்வமோட இருக்கான் என்று paper திருத்துற வாத்தி +2ல தமிழ்ல நிறைய மார்க் போட்டு நாம தமிழ்ல district rank ;)

ஆக back to topic, ஒரு கவிதை எழுத first தேவை "emotions". எப்படி வந்தாலும்..
"இருக்கும் கவிஞர் இம்சை போதும் .. என்னையும் கவிஞன் ஆக்காதே" என்பதிலும் ஒரு உண்மை இருக்கு! அப்புறம் தேவை ஒரு கருத்து.. ஒரு உவமை.. அதாவது "example". A is like B so C is like D என்று சொல்லி Aக்கும் Cக்கும் ஒரு link தரணும்.

இப்போ ஒரு simple example. வெளியில் சிரித்து உள்ளே உடைந்தது மாதிரி நமக்கு எல்லாருக்குமே ஒரு காலத்தில் நடந்து இருக்கும்! இப்போ இதுக்கு ஒரு "natural" உவமை. மழை பெய்வது அழுவது மாதிரி என்று வைத்து கொண்டால், மின்னலை சிரிப்பது மாதிரி வைக்கலாம். இத கவிதையாய் எழுதினா
"மின்னல் சிரிக்குது..
பின்னால் ..
அழ காத்திருக்குது
மேகம்"

கவிதை is simply about the concept and the placement of words and their choosing.
நம்ம இதை வைத்து எந்த concept லையும் எழுதலாம்! comedy, love, war, country என்று!
இது ஒரு வகை கவிதை தான்! இது போக இன்னும் பலவகை இருக்குது!

ரொம்ப யோசிக்காமல் "word rhyme" பண்ணி
"கடல் அடிக்குது
வானம் இருட்டுது
கனவு கதைக்குது
நினைவு இடிக்குது"
என்றும் எழுதலாம்!

நான் எழுதுவது Mostly முதல் வகை!

அப்புறம் எல்லாத்துக்கும் ஒரு inspiration தேவை!
நமக்கு அது இரெண்டு line தான்
"தமிழ் பேசும் நல்லுலகம்
தாவணி போட்ட என்னவள்" ;)

"தீயிற்க்குள் விரலை விட்டால் நந்தலாலா" என்று பாரதில ஆரம்பித்து,
"சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்" என தமிழ் பாடிய பாரதிதாசன்,
"நானே முழுமுதற் கடவுள்" என முழங்கும் கண்ணதாசன்,
"முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ" என கலக்கிய வைரமுத்து,
"யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்" எனும் வாலி என்று பல சிகரங்களை ரசித்து கடைசியா
"எதை கேட்டாலும் வெட்கத்தை தருகின்றாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்"
என உருகும் தபூ சங்கர் வரை.. படித்து / கேட்டு ரசித்து இருக்கின்றேன்.

வாழ்க தமிழ்! வளர்க கவிதை!