Tuesday, January 30, 2007

The Next: "முதல் கனவு" - பாகம் III

கவிதை குழந்தை

இன்னைக்கு சூர்யாவுக்கு மனசு அலைபாய்கின்றது. என்னமோ நடப்பதும், அது என்ன என அறியாமலும் அவன் தவிப்பு. இதுக்கு காரணம் அனன்யாவா, இல்லை அவனேவா என தெரியவில்லை. உலகமே நேற்றை விட சற்றே அழகு கூடினால் போல்.. வெளியில் பார்க்கின்றான். டீ எடுத்து கொண்டு போகும் ஒரு சிறுவன். கை பேனாவை தேடுகின்றது
"மலரும் முன்னே
பறித்து கசக்கப்படுவது
இளமையில் வறுமை"
அவன் முதல் கவிதை இது. இப்படி தான் பல கவிஞர்களை தங்களுக்கே தெரியாமல் படைக்கின்றார்கள் பெண்கள். இப்படித்தான் பல பெண்களை, சரஸ்வதிக்கு போட்டி ஆக்குகின்றது ஆண் வர்க்கம். அவனுடைய சில கவிதைகள் தான் ஆங்காங்கே பிரதிபலிப்பாக.


நீ பேசும் ஓசை
"நான் காதல் பேசினாள் நீ மௌனம் பேசுகிறாய்
நான் கவிதை பேசினாள் நீ கண்ணீர் பேசுகிறாய்
நான் அறிந்தது அற்ப மானுட மொழிகள் தான்
எங்கே கற்பேன் தேவதை மொழிகளை?"


தேதி: Jan 2000
வாங்க! அடுத்த நூற்றாண்டுக்கு வந்திட்டோம்! இன்னைக்கு நான் புத்திசாலி தனமா ஒரு காரியம் பண்ணேன். நம்ம கணக்கு வாத்தியார், என் தொலைப்பேசி எண்ணை கேட்டு வாங்கி குறிச்சு வைத்தார். அவர் அந்த பக்கம் அசந்ததும், அதை எடுத்து பார்த்து அனன்யா நம்பர் பார்த்திட்டேன். 441254. அவள் நம்பர். இப்ப கூப்பிடப் போறேன்.
"ஹலோ"
(அவள் தான். அவள் ஹலோ இழுக்கிற அழகிலயே தெரியுது! ஹை!)
"ஹலோ.. அனன்யாவா?"
"ஆமா. நீங்க யார் பேசுரது?"
"நான் சூர்யா பேசுறேன்"
"சூர்யா...??"
(ஆஹா..)"உங்க கூட Maths tuition படிக்கிறேனே"
"ஓ சொல்லு.. என் நம்பர் உனக்கு எப்படி கிடைச்சுது"
"அது எப்படியோ கிடைச்சது. எங்க உன்னைய ஆளையே காணோம்?"
"இப்பெல்லாம் weekends மட்டும் காலையில் வறேன்"
"ஓ சரி"
"சொல்லு.. என்ன விஷயம்?"
(தெரியாத மாதிரி act பாருடா!)"உன் கிட்ட அன்னைக்கு ஒன்னு சொன்னேனே.. நீ திரும்ப ஒன்னும் சொல்லல?"
"என்ன சொன்ன?"
(ஆ... இந்த பொன்னுங்களே இப்படி தான்!) "ஆங். எங்க வீட்டுல உப்பு இல்ல கொஞ்சம் கேட்டுஇருந்தேன்"
(சிரிப்பு சத்தம்.. என்ன அழகா சிரிக்கிறா..) "நான் அன்னைக்கே கொடுத்து விட்டேனே உப்ப?"
(ம்ம்ஹும்.. இது தேறாது.. ரூட்ட மாத்து!)"ஹே விளையாடத.. உன்னை நிஜமா எனக்கு ரொம்ப பிடிக்கும்"
"ஹே காதல் அது இதுன்னு பேசாத.. வேற பேசு"
(ம்ம்...இது இப்படி போகுதா!) "சரி என்ன பேசலாம் நீயே சொல்லு அனன்யா"

இப்படி ஆரம்பிச்சு, தினமும் பேசிக்கிறோம். தொலைபேசி கண்டுபிடித்தவனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இப்ப அனன்யாவும் நானும் நல்ல நண்பர்கள். பேச ஆரம்பிச்சா 2 மணி நேரம் வரை போகும். என்ன அழகா பேசறா. அவள் குரலை கேட்டுகிட்டே இருக்கனும் போல இருக்கு! ம்ம்.. எல்லாம் public exam வரை தான். அதுக்கு பின்னே அவள் சென்னை போறாளாம். போய் கடிதம் போடுவேன் என்று சொல்லி இருக்கா! நட்பு ஒரு ஜோதி. காதல் ஒரு ஜோதி. நட்பு காதலின் அடியாகுமா? அழித்து விடுமா?

கடிதம் போட்டா... நானும் பதில் கடிதம் அனுப்பினேன். பின்ன பேச்சே இல்ல. ஓ சொல்ல மறந்துட்டேனே. நான் கோயம்புத்தூரிலேயே ஒரு காலெஜ்ல BE சேர்ந்தி இருக்கேன். அடுத்த வாரம்ல இருந்து ஐயா காலேஜ் student! அனன்யா என்ன செய்யரா என்று தெரியல. ம்ம் சரிங்க.. காலேஜ்ல ராகிங் எல்லாம் இருக்குமாம்ல.. thrillingஆ இருக்கு!

இன்னும் அனன்யா பத்தி ஒரு செய்தியும் இல்ல. இன்னைக்கு தான் நான் முதல்முதல்ல எனக்கு ஒரு e-mail ID உருவாக்கினேன். அனன்யா கிட்ட பேசினா அவளையும் ஒன்னு செய்ய சொல்லனும். அப்புறம் இங்க collegeல எனக்கு நிறைய புது நண்பர்கள். ஒரு பொண்ணு ரொம்ப நல்லா பெசுரா. பேரு திவ்யா. நான் அனன்யா கிட்ட பேசும் போது நான் அவளை காதலிக்கின்றேன், தெரியும். ஆனா, காதல் இல்லாம ஒரு பொண்ணு இவ்ளோ close ஆ பேசி பழக முடியுமா? நம்ப முடியல. ஆனா நடக்குது!

என்ன இவ்ளொ சந்தோஷமா இருக்கேன் என்று பார்க்கறீங்களா.. அனன்யா.. கோயம்புத்தூரில தான் BSc படிக்கிறா. ஆமாங்க! இன்னைக்கு ஏதேச்சையா அவள் வீட்டு பழைய நம்பருக்கு call பண்ணா, எதிர்முனையில் சங்கீதமாய் ஒரு ஹலோ. அதை மறக்க முடியுமா. என்னோட அப்பா அம்மா திண்டுக்கல் போயிட்டாங்க. நான் hostel ல இருக்கேன். அது தான் அவளும் என்னை தொடர்பு கொள்ள முடியலயாம். நான் போட்ட கடிதம் அவ அப்பா கிட்ட மாட்டி பெரிய பிரச்சனையாம். அவ அதை படிக்கவே இல்லையாம். என்னமோ போங்க. எவ்ளொ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா. ஆனா அவ கூட பேசுவது தான் கஷ்டம். அவள் எடுத்தா மட்டும் தான் பேசுவேன். இல்லனா "ஹலோ மயில்சாமி இருக்காரா" தான்! அவங்க அப்பா வரும் முன், அவள் வீடு வந்த பின் ஆகிய சிறிய இடைவேளையில் தான் அது நடக்குது!

இன்னைக்கு அவள் வீட்டுக்கு போகப்போறேன். எவ்ளோ நாள் கழிச்சு, அவளை பாக்கப் போறேன். அவ அம்மா மட்டும் தான் இருப்பாங்க. அப்பா வருவதற்க்கு முன், நான் கிளம்பனும். மதியம் சாப்பாடு அங்க! கூட வாங்க. ஆனா கண்டுக்ககூடாது. இதோ அவள் இருக்கும் apartment வந்துடுத்து. அடப்பாவி contractor. apartment கட்ட சொன்னா, maze கட்டி வைத்து இருக்கான். இருங்க.. அவள் நம்பருக்கு அடிக்கின்றேன்.. எனக்காக வெளியில நிற்பதாய் சொன்னா.. ஒரு வேளை அடையாளம் தெரியலையோ. அங்க ஒரு பொண்ணு வீட்டுக்கு வெளியில குறுக்கும் நெடுக்கும் நடக்குது. அதுவா? பார்த்தா அனன்யா மாதிரியே இல்ல! சரி இருங்க, அவள் நம்பர்க்கு அழைக்கின்றேன்.. ஆஹா.. அந்த பொண்ணு உள்ள போறா.. அவள் தான்!
"அனன்யா..."
"ஹே சூர்யா.. என்ன ஆளே தெரியாம மாறிட்டே"
(அத நான் சொல்லனும்..)"நீயும் தான்"

ம்ம்.. அப்புறம் ஏன் கேட்கறீங்க, அனன்யாவும் அவங்க அம்மா கிட்டயும் நல்லா பேசி, அவங்கள பாட சொல்லி.. அப்படியே அனன்யாவ எனக்கு ரொம்ப பிடிச்ச "யமுனை ஆற்றிலே" பாட வைத்து, நான் பாடாமல் தப்பித்தேன். ம்ம்ம்..அது தான் அனன்யா என்று இன்னும் நம்ப முடியல. வந்ததும் phone பண்ணி உன் வீட்டுக்கு தான வந்தேன் என்று confirm செய்துக்கிட்டேன். 1.5 வருடத்துல இவ்ளோ மாற்றம்! ஆச்சர்யம். அழகு. என்ன பேசி என்ன பண்ண ..அவ கிட்ட திரும்ப காதல் பத்தி பேசி, இருக்கிற நட்பும் இழக்க கூடாதே என்றும் ஒரு கவலை.

பேசாம ஒரு நாள் weekend, வெளியில கூப்பிடவா? வருவாளா?
- இன்னும் கனவு மிச்சம் இருக்கு!