Second Part: "முதல் கனவு" - பாகம் II
மு.கு: இது கதையோட Layout.
(title, poem)
(one Flashback)
(title, poem)
(Date,1st paragraph (para) corresponding to that date)
(2n para - does not happen as the date of first para. Instead is a day/week/month later)
(3rd para - same ..) and so on.
இது முதல்பாகம்
-------------------------------------------------------------------------------
கண்ணெதிரே
பத்து மாதம் சுமக்க வில்லை
பார்த்து சொன்ன வார்த்தையில்
என் தாய் ஆனவள் நீ
சூர்யாவுக்கு அப்போ 7ஆம் வகுப்பு படித்தான். அவனும் அவன் நண்பர்களும் தினமும் சென்று பழகிய வழியில் பள்ளிக்கு நடந்து கொண்டு இருந்தனர். அப்போ தான் அந்த சத்தம்.
"ஐயோ..." "ஏல நில்லுடா... மவனே" ஒருவன் ஓடி வர, அவனை துரத்தி கொண்டு 3 பேர், வீச்சறுவாளுடன். துரத்த பட்டவன் சூர்யாவுக்கு 15 அடியில் வந்ததும், அவனுக்கு விழுந்தது முதல் வெட்டு. பின் சரமாதிரி வீச்சுக்கள். ரத்தம் கொட்டுவதை வேடிக்கை பார்த்து நின்று கொண்டு இருந்தான் சூர்யா. தலை கழுத்தோடு இருக்க முடியாத கோனத்தில்.
ரத்தம் அவன் shoe தொடப்பார்க்க பின் நகிர்ந்தான். அதுக்கு பின், இரண்டு வாரம் அவன் உடனிருந்த நண்ப்ர்கள் பள்ளி வரவில்லை. ஜுரம் வந்து. சூர்யாவுக்கு ஜுரம் வரவில்லை. பல கேள்விகள் வந்தன.
சுட்டும் விழிச்சுடர்
"மௌனம் பேசும் மலர் ஜாதி அவள்
வரம் வேண்டி நிற்கும் ஊமை பக்தன் நான்
தேவதை கதைகளின் தலைவி அவள்
தெருவோர வழிப்போக்கன் நான்"
தேதி: sep 1999
ஆமாங்க! உங்களை பார்த்து மூன்று மாதம் ஆச்சு!. என்ன .. அதுக்குள்ள மறந்துடீங்களா? நான் தான் சூர்யா! கால் இப்ப பரவாயில்லை. டாக்டர் பயம்புடுத்தினால் போல் இல்லாம நல்லா நடக்க முடியுது. மத்த பசங்க எல்லாம் school க்கு போய் 3 மாதம் ஆகுது. நான் இந்த மூனு மாசத்துல ஏதொ அப்பப்ப சொந்தமா படிச்சதோட சரி. இந்த வாரம் தான் போகப் போறேன். அப்பா சொல்லி, கோயம்புத்தூரிலேயே சேர்ந்துட்டேன். அது போக மூன்று Tuition
வேற இன்னையில் இருந்து. Physics, Chemistry and Maths. புது friends.. புது school! எப்படி இருக்கு என்று அப்புறம் சொல்லறேன்..
கோயம்புத்தூர் பசங்க ரொம்ப மரியாதையா பேசராங்க! ஒரு மாதிரி இருக்கு. Class எல்லாம் பரவாயில்லை! Maths வாத்தியார் ரொம்ப famous ஆளாம்! Super Suresh அவருக்கு பசங்க வைத்து இருக்கும் பேரு! இவரே tuition உம் எடுக்கிறாரு. மொத்த classஉம் இவர் கிட்ட தான் போகுது.. என்னை தவிற. அவசரப்பட்டு வேற யார் கிட்டயோ சேர்ந்து விட்டோமோ என்றும் தோணுது. பள்ளி வாத்தியார் கிட்ட திரும்ப எவனாவது போவானா என்றும் தோணுது! இவர் சொல்லுவதை தான் பள்ளில படிக்கின்றேன்.. எதுக்கு இவர் கிட்டயே? என்ன சொல்லறீங்க..
பசங்க பார்க்க தான் மரியாதை எல்லாம்! பழகி பார்த்தா எல்லாம் அதே கதி தான்! சொல்ல போனா இன்னும் மோசம்! ஒருத்தனை இன்னைக்கு Avila Convent முன்னாடி வைத்து அடிச்சிட்டாங்க. பாவம் அவன். எங்க ஊருல என்ன பிரச்சனைனாலும், girls convent முன்னால எல்லாம் அடிக்க மாட்டோம். girls convent என்று சொன்னதும் நினைவுக்கு வருது. classல எந்த பொண்ணு கிட்டயும் பேச கூடாது என்று எனக்கு தடை. ரொம்ப பேசரனான்! பசங்களுக்கு நம்மளை பத்தி இன்னும் தெரியல. அதுனால கேட்கற மாதிரி ஒத்துகிட்டேன். அப்புறம், நம்ம tuition பத்தி சொல்ல மறந்துட்டேனே. physics வாத்தி படு அசத்தல். chemistry எனக்கு பிடிக்காத subject. ஆனா வாத்தியார் பொருமையா என்க்கு சொல்லி கொடுக்கின்றார். Maths வாத்தியார் கொஞ்சம் தலைக்கணம்.. ஆனா சொல்லி கொடுப்பதில் குறை இல்லை.
இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்தேன். Maths tuition ல. என்ன சொல்லுவது... அவளை.... பார்த்த உடன்... அதாவதுங்க.. சில பொண்ணுங்களை பார்த்து ரசிக்க தோனும், சிலரை பார்த்தால் பழகி பேச தோணும், இவளை பார்த்ததும் அவளோட வாழனும் போல தோணுச்சு. எனக்கு வேற எப்படியும் சொல்லத்தெரியல. அவள் பேர் தெரியல. போகும்போதே வாத்தியார் அவளை திட்டிகிட்டு இருந்தார். இதுக்கு முன் நான் பார்த்ததே இல்ல. வாத்தியார் கிட்ட college பொண்ணுங்க எல்லாம் வரும். சரி திரும்ப பார்ப்பேன் என நம்புவோம். கண்டதும் காதல் எல்லாம் படத்த பார்த்து கிண்டல் பன்றவன் நான். திருநெல்வேலிக்கே அல்வாவா?
அனான்யா. அது தான் அவள் பேரு. SBOA ல 12த் படிக்கிறா. இன்னைக்கு திரும்ப பார்த்தேன். அதே tuitionல. எவ்வளவு நிம்மதியா இருக்கு. நல்ல வேளை.. நான் கூட எங்க college student ஓ என்று கவலைபட்டேன். அந்த பொண்ணை ஒரு 3,4 தடவை பார்த்து, இது வரை பேசியது கூட இல்லை.. ஏன் அவளை பத்தியே நினைக்கின்றேன் என தெரியல. அவளுக்காக, Maths Tuition வெளியில காத்திட்டு இருக்கேன். அவள் வந்ததும் தான் நானும் போறேன். அவள் என்னைப் பார்த்தாவே தெரியல. காத்திருத்தல் காதலின் ஆரம்பமா?? நான் காதலிக்கின்றேனா? எனக்கே நம்ப முடியல!
என்ன பண்ணாலும் மனசு அவள்ள் பின் தாங்க போகுது. இன்னைக்கு பேசாம சொல்லிடப் போறேன் ... என்ன சொல்லறீங்க. அவ இப்ப வெளியில போவா. என்னை தாண்டும் பொழுது கூப்பிட்... ஷ்ஷ்... அவள் எழுந்திரிச்சிட்டா. பேசாம பாருங்க.
"அனான்யா"
"yeah?"
"ம்ம்ம்.... உங்க note கொஞ்சம் தர முடியுமா.. நளைக்கு தரேன்"
"sorry.. எனக்கு நாளை class ல ஒரு test இருக்கு.. இன்னொரு நாள் தரேனே"
"ok.... thanks"
தெரியும் தெரியும்... திட்டாதீங்க.. சொதப்பிட்டேன்.. ஆனா இன்னைக்கு தான் முதல் முறை அவள் கூட பேசி இருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
பயமா இருக்குங்க. சொல்ல முடியலனா கூட, அவளுக்கு இந்த கடிதம் கொடுக்கப்போறேன்.
இந்தாங்க படிச்சு பாருங்க. "தொட்டவுடன் என்னை சுட்ட நிலவே.. உன்னை நான் காதலிக்கின்றேன்.." இவ்ளோ தாங்க. இத அவ கிட்ட குடுக்க தைரியம் வருமா? பார்ப்போம்.
"அனான்யா... உங்க கிட்ட ஒன்னு பேசனும்"
'என்ன?"
"கொஞசம் இங்க வாங்களேன்"
"என்ன சொல்லுங்க. நீங்க சூர்யா தான?"
"ஆமாங்க" (ஆஹா.. நம்ம பேரே இப்ப தான் தெரியுதா..)
"....."
"என்னமோ சொல்லனும்னு சொன்னீங்க.. என்ன?"
"ம்ம்... இத படிச்சு பாருங்க.. நாளைக்கு பேசுவோம்"
ஐயோ.. நான் escape! நாளைக்கு என்ன சொல்லுவா? இன்னைக்கு ராத்திரி தூங்கினாப்ல தான்.
அவளை பார்த்து ஒரு வாரம் ஆகுதுங்க. அன்னைக்கு கொடுத்த பின் பார்க்கவே இல்ல. கவலையா இருக்கு.. பயமா இருக்கு. யார் கிட்ட கேட்கனும் தெரியல. என்ன ஆகி இருக்கும்??
-மேலும் தொடரும்