"முதல் கனவு" - பாகம் I
மு.கு: எல்லாரும் கதை எழுதறாங்க! அதுனால இது நம்ம முயற்சி. படிச்சிட்டு அடிக்க கூடாது
கனவின் ஆரம்பம்
"கனவில் வந்ததற்கே கவிஞன் ஆனேன்
நேரில் வந்துவிடு கடவுள் ஆகின்றேன்"
கூர்மையான காது சூர்யாவுக்கு. அடுத்த அறையில் தந்தை அவர் நண்பனிடம் பேசுவது கேட்டது. "பையன் டாக்டர் ஆவானா?"
தந்தையின் நண்பர் பிரபல ஜோதிடர். வங்கியில் அப்பாவுடன் வேலை பார்த்தாலும், சொந்த ஈடுபாடு காரணமாக ஜோதிடம் செய்பவர். தன் தந்தைக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அறவே கிடையாது என தெரியும் சூர்யாவுக்கு.அவனுக்கோ அதை விட அதில் நம்பிக்கை கம்மி.
"பையன் டாக்டர் ஆவது கஷ்டம்.."
"என்னங்க இப்படி சொல்லிட்டீங்க" அம்மா குரல். பையன் டாக்டர் ஆகனும் என்பது அவர்கள் ஆசை. "ஆமாங்க.. இருப்பதை தான் சொல்ல முடியும்!.. அப்புறம் இன்னொன்னு..பையன் 16 வயதில் ஒரு பெண்ணை காதலித்து அவளை தான் கல்யாணம் செய்வான்"
"என்னது 16 வயதுலயா?". அதற்கப்புறம் சூர்யா எதுவும் கேட்கவில்லை. நம்மளாவது காதலிப்பதாவது என மனதில் நினைத்துக்கொண்டான். அவனுக்கு அப்ப வயது 12.
கண்ணிமைக்கும் நொடியில்
"நீ தான் ஆசைகளின் மும்மூர்த்தியோ?
உன் கண் அசைவில்
படைத்து, காத்து, அழிக்கிறாய் ..
என்னுள் கோடி ஆசைகளை"
தேதி: April 12 1999
நான் தான் சூர்யா. எனக்கு வரும் october ஓட 15 முடிஞ்சு, 16 ஆரம்பம். இன்னைக்கு தான் 11த் பரிட்ச்சை எழுதி முடிச்சேன். அடுத்து 12த். நடுவுல விடுமுறையே நிறைய இல்ல. ஒரு வாரம் கழிச்சு special class. கதை மேலும் சொல்லுவதற்க்கு முன், என்னை பத்தி இன்னும் கொஞசம் சொல்லிடறேன். சராசரி உயரத்துக்கு ச்ற்றே கூட. சொந்த ஊரு திருச்சி. எங்க அம்மாக்கு நான் டாக்டர் ஆகனும் என ஆசை. எனக்கு அது எல்லாம் ஒன்னும் தெரியாது. நல்லா படிப்பேன். Cricket, Football நல்லா விளையாடுவேன். எனக்கு சாமி, ஜோசியம் எல்லாம் அறவே நம்பிக்கை இல்ல. ஆனா எனக்கு சிவன் தான் இஷ்ட கடவுள். என் ராசி சிம்ம ராசி. என்னடா நம்பிக்கை இல்லை என்று சொல்லிட்டு இப்படி சொல்றேன் என்று பார்க்கறீங்களா.. ஆமாங்க.. நான் அப்படிதான்! சரிங்க நான் கிளம்பனும். அப்புறம் பார்ப்போம்.
வாங்க வாங்க.. என்ன hospital வாசம், காலுல பெரிய கட்டு என்று பார்க்கறீங்களா.. இன்னைக்கு தான் முதல் நாள் 12த் school. போயிட்டு வரும் போது லாரில மோதிட்டேன்.
அது தான் இப்படி. டாக்டர் ஒரு மாதம் கழிச்சு தான் வீட்டுக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார். அம்மா, அப்பாக்கு ஒரே கவலை. 12த்ல தான் இவனுக்கு இப்படி எல்லாம் ஆகனுமா என்று.. எனக்கு இது தான் முதல் மருத்துவமனை வாசம். இந்த வாசமும் பிடிக்கல.. வாசமும் ப்டிக்கல.. கால் அசைச்சா ஒரே வலி.
ம்ம்.. இன்னைக்கு வந்து பார்த்த சொந்தகார டாக்டர் இங்க Treatment சரியா பண்ணல.. அதுனால கோயம்புத்தூர் போய் பெரிய Hospital ல சேர்க்க சொல்லி அப்பாவிடம் பேசினார்.
அப்பாவும் அந்த ஊருக்கே Transfer கேட்டு இருப்பதால நாளைக்கு கிளம்பறோம்.
யம்மா.. கோயம்புத்தூர் எவ்வளவு பெரிசா இருக்கு பார்த்தீங்களா! என்னை பார்க்க தாத்தா பாட்டி நாளைக்கு வராங்க! இங்க உள்ள டாக்டர் scan எல்லாம் எடுத்துட்டு suspense ல என்னை விட்டுட்டு போகிவிட்டார். ஆ..அவர் வரும் சத்தம் கேட்குது! நான் தூங்குவது போல் நடிக்கிறேன்.. சொல்லாதீங்க.
"என்னங்க ஆச்சு?" - அப்பா. "பையன் ankle bone வரை fracture இருக்கு. சரியாக மூனு மாதம் ஆகும். Major Surgery செய்யனும். பையன் திரும்ப Normal ஆ நடப்பது கஷ்டம்."
எங்க நமக்கு மயக்கம் ஆவதற்க்கு முன் கத்தியை வைத்து அறுப்பாங்களோ என்று ஒரு எண்ணம். நல்ல வேளை அது நடக்கல. 4 மணி நேரம் ஆபரேஷன். ஒரு நாள் முழிக்காம இருந்தேன். அடிச்சு போட்டா எப்படி இருக்கும் என்று எனக்கு அப்ப தான் தெரியும். இன்னும் இது போல இரெண்டு செய்யனும் என்று யாரோ சொன்னது எனக்கு நியாபகம் வருது. வலியிலும் சிரிக்கின்றேன்.
- கனவுகள் தொடரும்