நான் அவ(ள்/ன்) இல்லை!
மு.கு: ஒரு உண்மை கதை. ஒரு பட அலசல். சில கேள்விகள்..
நம்ம கதை ஹீரோ பெயரு ராஜ். இவர் அமெரிக்காவில இருக்கும் 3rd Generation இலங்கை தமிழர். இவர் இன்னைக்கு இந்தியாவில் - பொள்ளாச்சிக்கு செல்ல கிளம்புகின்றார். எதுக்கு? இவர் காதலியை பார்க்க. இவர் இதற்கு முன் அவளை பார்த்ததே இல்லை. அப்புறம் எப்படி காதலிச்சாங்க? கனவில் கடவுள் வந்து சொன்னாராம். ஹி ஹி.. அது எல்லாம் இல்ல. எல்லாம் Internet Chatting தான். 4 மாதமா பேசிக்கிறாங்க. அவள் பேரு ஜாஸ்மின். ஆரம்பத்தில் நட்பா பழகி, பின்ன பேசி, போடோ எக்ஸ்சேஞ் பன்னி.. இப்ப Internet காதலர்கள்.
இப்ப நம்ம ஹீரோ இந்தியா எதுக்கு போறாரு? அங்க ஜாஸ்மின் வீட்டுல கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க என்று கேள்வி. அதுக்கு தான் இவரு போறாரு.
சென்னை விமான நிலையம்:
வருகிறேன் என்று சொன்ன ஜாஸ்மினை காணவில்லை. ராஜ்க்கு இங்கு வேறு யாரையும் தெரியாது. இரு வழியாக ரு ஹோட்டலில் ரூம் புக் செய்து, அப்புறம் ஜாஸ்மினுக்கு போன் செய்தால் மறுமுனையில் யாரும் எடுப்பாரில்லை. நள்ளிரவில் போன் கால். ஜாஸ்மினடமிருந்து. தன்னை வீட்டில் சிறை வைத்திருப்பதாகவும், தன்னால் வர முடியாமல் போனதன் காரணம் அது தான் எனவும் சொன்னாள். மேலும், தான் பொள்ளாச்சியிலிருந்து வர வேண்டுமானால், கொஞ்சம் பணம் தேவை என்றும் தனக்கு தெரிந்த ஒரு தோழியை நாளை அனுப்பி வைப்பதாகவும் சொன்னாள்.
தோழியும் வந்தாள். பணமும் கொடுத்தான். 3000$. பயனில்லை. இரண்டு நாள் கழித்து தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றும், மன்னிக்கும் படியும் இன்னொரு போன். அதன் பிறகு எவ்வளவு முயற்சித்தும் பயன் இல்லை. ஆகையால் ராஜ் மீண்டும் அமெரிக்காவுக்கே கிளம்பி சென்று விட்டான்.
இங்க தாங்க நாங்க வரோம். நம்ம பேரு சூர்யா! ராஜ் எனக்கு நண்பன்.. கொஞ்சம். காதலியை கைபிடிக்க சென்றவன் சோகக்கடலில் கவிழ்ந்து வந்தான். விவரங்கள் கேட்டேன். ஐயோ பாவம். சரி அவள் புகைபடம் இருக்கா என்று கேட்டேன். e-mail இல் காண்பித்தான்.
ஆமா நம்ம அஸினக்கா தாங்க. இத காண்பிச்சு யாரோ ஒருத்தர்/ஒருத்து ஜாஸ்மின் என்ற பெயரில்..மீதி கதை நான் சொல்ல வேண்டியது இல்லை. ஆம் இது ஒரு உண்மை சம்பவம்.
நான் அவன் இல்லை - இன்றைய சமுதாயம் பார்க்க வேண்டிய படம். பாட்டு சீன தவிர மீதி எல்லாம் பார்க்கின்ற மாதிரி தான் இருக்கு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள். அந்த படத்தில ஒரு வசனத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.
"இந்த பெண்கள் எல்லாம் ஏமாந்ததற்கு காரணம் இவர்கள் பேராசை இல்ல, லஞ்சம், மூட நம்பிக்கை... " என்பது போல வரும் ஒரு வசனம். பேராசை இதில் முக்கியமான பங்கு என்பது என் கருத்து. பேராசை இருக்கலாம் தப்பில்லை. ஆனால் முட்டாள்களுக்கு இருக்கு கூடாது. நாம் எல்லாருமே ஏதாவது ஒரு சமயத்தில் முட்டாளாகத்தான் இருக்கின்றோம்.
"என்று தனியும் எங்கள் சுதந்திரத் தாகம்..
என்று மாடியும் இந்த அடிமையின் மோகம்"
என்று அன்றே கேட்டான் ஒருத்தன். இன்னும் மோகமும் விட்ட பாடில்லை, சுதந்திரமும் வந்த பாடில்லை. இன்னமும் western மோகமும், மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகவும் தான் இருக்கின்றோம்.
ஹேர் டை அடிச்சால் சுதந்திரம் எனவும், கிழிந்த பேண்ட் போட்டால் பேஷன் எனவும் நினைப்பவர்கள் இருக்கத்தானே செய்கின்றார்கள்!
வாயில் இருந்து லிங்கம் எடுக்கிறவன், தலை முடிய புதர் மாதிரி வைத்து ஊர ஏமாத்திறவன், கட்டி பிடிச்சு பக்தி மார்க்கத்த வளர்க்கின்றவர்கள் என ஏகப்பட்ட சாமியார்களை நம்ம மக்கள் நம்பிகிட்டு தான் இருக்காங்க... இவர்கள் என்றைக்கு தங்களை நம்ப ஆரம்பிக்க போகின்றார்கள்?
"என்று திருந்தும் என் தமிழனின் நெஞ்சம்?"