விளக்கம்...
போன பதிவுல போட்ட கவிதைக்கு பலர் விளக்கம் கேட்டி இருக்காங்க. அதில் சில மட்டும்..
இதுல என்ன விஷயம் என்றால், கவிதையா எழுதினால் விரசமில்லாம இருக்கும் பல விளக்கமெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சா.. ஒரு மாதிரி இருக்கும்.. So let me try to say w/o any such thing...
இத படிச்ச பின்னும் புரியலனா நான் பொருப்பு இல்லப்பா ;)
1. இரவெல்லாம்
பகல் தேடும் நிலவு உனது..
வழியெல்லாம்
உனை தேடும் விழிகள் எனது..
விளக்கம்: இரவு மட்டும் இருந்துவிட்டு பகலை தொலைக்கும் நிலவு போல, அவனை தொலைக்கின்றாள் அவள்..
மேகங்கள் மறைத்தாலும் நிலவை தேடுவது போல - அவன், அவளை தேடுகின்றான்..
2.இதழெல்லாம்
பூக்கும் புன்னகை உனது..
மலரெல்லாம்
மொய்க்கும் மறதி எனது..
விளக்கம்: புன்னகையாக பூத்தவளை பூக்களிலே தேடுகின்றான் அவன். Or in other words, He flirts with other women whenever he sees a reflection of her in that person even hough it is not the same. அது தான் 'மறதி"
3.இசையெல்லாம்
இரைந்து கிடக்கும் ஸ்வரங்கள் உனது...
பூமியெங்கும்
விளைந்து இருக்கும் மூங்கில் எனது..
இது easy. இசை - புல்லாங்குழல் - மூங்கில் - இது தான் சம்பந்தம். ;)
இதுக்கு கமெண்ட் எல்லாம் கிடையாது! ஏனா இது பதிவு இல்ல ;)) அப்ப என்னனு உங்களால கேட்க முடியாது :P