ஆதலினால் காதல் செய்வீர்..
மு.கு2: நம்ம சச்சின் கோப்ஸ்க்கும், மருதத்துக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.. அந்த பதிவும் விரைவில் வரும்... வரும்... வரும்...வரும்...
மு.கு: அட எத்தனை நாள் தான் கவிதையெ எழுதறது.. கொஞ்சம் வித்தியாசம் இருக்கட்டுமேனு முயற்சி செய்தேன்.. திட்டாதீங்க... And this is just a story.. இது.. சர்வேசனின்.. "U turn" போட்டி அப்ப எழுத ஆரம்பிச்சது.. அப்ப போட தோணல..
தீபா தன் கல்யாண பத்திரிகையோடும், தோழி காவ்யாவோடும் சென்று கொண்டு இருந்தது, அவளின் காதலன் சூர்யாவின் அறைக்கு. ஆம். சந்தேகம் என்றால் அவள் பத்திரிக்கை படிக்கின்றேன் கேளுங்கள்.. அடுத்த மாதம் 25 ஆம் தேதி அவளுக்கும் ரமேஷ்க்கும் கல்யாணம் என பத்திரிகை சொல்கின்றது!
காவ்யா வெளியே காத்து இருக்க, தீபா உள்ளே சென்றால்.
.......
"சூர்யா, என்னை மன்னித்து விடுடா.. என்னால எங்க அப்பா அம்மா பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாதுடா.. புரிஞ்சிகோடா pls"....
"தீபா.. இது காதல்... இப்படி எல்லாம் தெரிஞ்சு தான நீ காதலிச்ச..இப்ப ஏன் என்னை விட்டுட்டு போற? நீ இல்லாம .. .. ஏன்டி இப்படி பண்ணற?"
"டேய்.. இது காதல்.. எல்லாம் சரி தான். ஆனா எங்க அம்மா அப்பாவா இல்ல இந்த காதலானு யோசிச்சா எனக்கு அம்மா அப்பா தான் டா வேணும். நிஜமா..உன் கூட வந்துட்டாலும், எனக்கு என் அம்மா அப்பாவை விட்டு கூட்டிட்டு வந்துட்டான்னு உன் மேல என் வாழ்நாள் முழுதா கோபம் இருக்கும்.. அது போக அவங்க சாபத்துல எல்லாம் நாம சந்தோஷமாகவும் இருக்க முடியாது.."
"தீபா.. தீபா.. காதல்.. இது.. கத்திரிகாய் இல்ல, அம்மா வேணாம்னு சொல்லிடாங்க.. அப்படி இப்படின்னு.. நீ இல்லாம நானும் நான் இல்லாம நீயும் சந்தோஷமா இருப்போமா? இரெண்டு வருஷமா காதலிச்சோமே.. அப்ப அது எல்லாம் பொய்யா? என்னை எப்பவும் விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னியே.. அது பொய்யா? நீ.. நான்..நாம.. நம்ம காதலே பொய்யா?"
"சூர்யா எத்தனை முறை உனக்கு சொல்றது.. நீ ஒரு மாதமா இதையே சொல்லற.. புரிஞ்சுகோடா.. உனக்கு என்ன?.. நான்தான வேணும்.. இந்தா என்னை இப்பவே எடுத்துக்கோ.. ஆனா இதுக்கு மேல மறந்திடு.." துப்பட்டாவை இழுக்க அது கீழே விழுந்தது....
பளார் என்று கன்னத்தில் அடித்து விட்டு.. அவள் கண்களை ஒரு முறை பார்த்தான் சூர்யா.."
'ஓரெழுத்து பொய் நீ
ஈரெழுத்து பொய் நான்..
மூன்றெழுத்து பொய் நம்ம..
நான்கெழுத்து பொய் காதல்..'அப்படிங்கிறது சரியாதான்டி இருக்கு.. " சொல்லிக்கொண்டே அவள் துப்பட்டாவை எடுத்து மேலே போர்த்தி விட்டு வெளியில் வேகமாக நடந்தான் சூர்யா..
இதை எல்லாம் வெளியில் நின்றி கேட்டு கொண்டு இருந்த காவ்யா...உள்ளே வந்தாள்.. "என்னடி.. அவன் கிட்ட போய் இப்படி சொல்லற? உனக்கு அடுத்த மாதம் கல்யாணம்.. அவன் எதாச்சும் பண்ணி இருந்தான்னா?" இது காவ்யா..
"ஹேய் அவனை பத்தி எனக்கு தெரியும்.. சரியான sentiment லூசு.. இப்படி எல்லாம் ஏதாச்சும் செய்தால் தான் விட்டுட்டு போவான்.. ஆமா ஒரே காலேஜ்.. இரெண்டு வருஷமா காதலிச்சோம்.. பையன் வேலையும் பண்ணறான்.. மாதம் 6000 ரூபாய் சம்பளம் வாங்கிறான்.. அதுல எல்லாம் சென்னைல இவன் கூட வாழ பத்துமா? இவன் கூட போய் நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்? அப்பா பார்த்து இருக்கும் பையன்.. US ல வேலை பாக்கிறான்.. மாதம், ஒரு லட்சம் சம்பளம்.. அவனை விட்டுட்டு காதல், கத்திரிகாய்னு இவன் கூட வர நான் என்ன கேனைச்சியா?"
அடித்ததை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்க வாசலில் நின்ற சூர்யா காதில் இது விழ உறைந்தான்.. காதலில் சாதல் இது தானோ?
தீபாவும் காவ்யாவும், பத்திரிக்கையை கட்டிலின் மேல் வைத்து விட்டு கிளம்பினார்கள்.. திரும்ப போகும் வழியில்..
காவ்யா தீபாவிடம்.. "ஏன்டி.. அவன் வரும் சத்தம் தான் கேட்டுதே.. அப்புறம் ஏன் அப்படி பேசின?"
"இல்லனா அவன் என்னை மறக்க மாட்டான்டி.. ரொம்ப நல்லவன்டி அவன்.. இப்ப அவனுக்கும் என் மேல வெறுப்பு வந்து.. வேற பொண்ண ரொம்ப கஷ்டபடாம கல்யாணம் பண்ணிப்பான் .. அதாண்டி அ.." சொல்லி முடிக்காமலே அடக்கி வைத்திருந்த அழுகையில் வாய் பொத்தி அழத்தொடங்கிய தீபாவின் மனசுக்குள்
"சபாஷ் தீபா.. ஒரே கல்லுல இரெண்டு மாங்காய்.. அவனையும் நம்ப வைச்சு கழட்டி விட்டாச்சு.. இவ கிட்டயும் நல்ல பேர் எடுத்தாச்சு.." ... சிரித்துக்கொண்டாள்.
காதல் ஜெயிக்கிறதா? தோற்கின்றதா..
முற்றும்.. விடைகள் இல்லாமல்.
20 மறுமொழிகள்:
//'ஓரெழுத்து பொய் நீ
ஈரெழுத்து பொய் நான்..
மூன்றெழுத்து பொய் நம்ம..
நான்கெழுத்து பொய் காதல்..//
ada ada ada....ithu superruuuu dreamzzz:)
அட்ரா அட்ரா!!!
எம்புட்டு ட்விஸ்ட்டு!!!எம்புட்டு ட்விஸ்ட்டு!!!
கலக்கு ராசா கலக்கு!!!
B-)
WOW!!!! Fantastic story dreamzz..I love it!!!:)
twist and turns supera kuduthirukeenga.....excellent!! :)
kanna kattuthu makka..avvvvv
short and sweet story..:)
முதல் முயற்சிக்கு வாழ்த்துகள்!!!
திருப்பங்களுடன் கதை அருமை!!!!!
but yen antha ponnu avana vena nu nenaikira?? ivlo love and understanding iruntha kalyanam panika vendiyathu thaney?
is it because of her parents???:-S
Dreamzz,
Your short stories are damn good. Keep writing.
// கப்பி பய said...
kanna kattuthu makka..avvvvv//
ரிப்பீட்டே!
என்ன தான் சொல்ல வர்ற நீ ???
//'ஓரெழுத்து பொய் நீ
ஈரெழுத்து பொய் நான்..
மூன்றெழுத்து பொய் நம்ம..
நான்கெழுத்து பொய் காதல்..//
ஓரெழுத்து பொய் நீ
ஈரெழுத்து பொய் நான்..
மூன்றெழுத்து பொய் மனசு..
நான்கெழுத்து பொய் காதல்..
:P
tw-twist-ist!! he hee....
//அவனையும் நம்ப வைச்சு கழட்டி விட்டாச்சு.. இவ கிட்டயும் நல்ல பேர் எடுத்தாச்சு.." ... சிரித்துக்கொண்டாள்.//
sirikura visayamaya idhu!?
என்னா ஒரு வில்லத்தனம்,அட கதையில அந்த பொண்ணுக்கு:))))))))))
கதையில இத்தனை டுவிஸ்ட்டு இருக்கே.. சர்வேஸன் கதைப் போட்டி அப்போ இதையே அனுப்பியிருக்கலாம்ல்ல:))))))
//அடித்ததை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்க வாசலில் நின்ற சூர்யா காதில் இது விழ உறைந்தான்.. காதலில் சாதல் இது தானோ?//
அடடா.. 1 ஸ்டு டுவிஸ்ட்டு:))
//இல்லனா அவன் என்னை மறக்க மாட்டான்டி.. ரொம்ப நல்லவன்டி அவன்.. இப்ப அவனுக்கும் என் மேல வெறுப்பு வந்து.. வேற பொண்ண ரொம்ப கஷ்டபடாம கல்யாணம் பண்ணிப்பான் .. அதாண்டி அ.." சொல்லி முடிக்காமலே அடக்கி வைத்திருந்த அழுகையில் வாய் பொத்தி//
2 வது டுவிஸ்ட்டு
//தீபாவின் மனசுக்குள்
"சபாஷ் தீபா.. ஒரே கல்லுல இரெண்டு மாங்காய்.. அவனையும் நம்ப வைச்சு கழட்டி விட்டாச்சு.. இவ கிட்டயும் நல்ல பேர் எடுத்தாச்சு.." ... சிரித்துக்கொண்டாள்.//
இது டாப்பு டக்கரு மூனு:))))
சின்னக் கதையா இருந்தாலும் ,டாப்பேய்ய்ய்.....
இந்த பொம்பளங்களே இப்படித்தான் மொதலாளி குத்துங்க மொதலாளி குத்துங்க. அட்ராசக்கை இன்னாமா டுஸ்டு குடுக்குறார்யா. முடியல.....
அட.. நல்லா இருக்கே.. அப்பவே போட்டிக்கு அனுப்பியிருக்கலாமே.. ஆங். அந்த கவிதையும் நல்லா இருக்கு. ஆனா எங்கோ கேட்ட மாதிரி இருக்கு. :-)
Post a Comment