Friday, March 21, 2008

கடவுள் இறந்த கதை

P.s: Hi ppl, Was away in a client place with no internet access.. will be visiting ur blogs soon... And BTW, This is just a story....
----------------------------

நான் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் வருடம் அவளை பார்த்தேன். அவள் பெயர் தீபிகா. நன்றாக படிக்கும் மாணவி. உலக அழகியாக இல்லா விட்டாலும், திரும்பி பார்க்க வைக்கும் மென்மையான அழகு. பெண்களுடன் அதிகம் பேசாத எனற்கு, கல்லூரி பஸ்ஸில், கடைசி நிறுத்தம் வரை உடன் வருவதாக பழக்கமானாள். தினமும் ஒரு மணி நேர பேருந்து பயணம். அதில் இறுதி 20 நிமிடங்களான கடைசி நிறுத்ததிற்கு செல்லும் இரண்டே பேர், நாங்கள். அப்படி தான் பழக்கமானாள் தீபிகா. அதிகம் பேசாத பெண் என்று அவளை பற்றி நினைத்து கொண்டிருந்த எனற்கு ஆச்சர்யம். சினிமாவில் இருந்து கிரிக்கெட் வரை சமமாக சளைக்காமல் என்னுடன் பேசிய ஒரே தோழி. கொஞ்சம் நாட்களிலேயே, நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். சில நேரம் அவளை நட்பையும் தாண்டி பிடித்திருக்கின்றதோ என்று கூட யோசித்ததுண்டு.

அப்படியொரு வழக்கமான நாளில் தான், அவள் குடும்பத்தை பற்றி பேச ஆரம்பித்தோம். சினிமா, காதல், கடவுள் என பலவும் பேசிய நாங்கள், எங்கள் பெற்ரோரை பற்றி பேசாதது எனற்கு சற்றே ஆச்சர்யமாக இருந்தது.
'உங்க அப்பா என்னடா செய்யறார்?' அவள்.
'ஓ, அவர், மெடிக்கல் ஷாப் ஒன்று நடத்தி வருகின்றார். he is a Pharmacist" நான்.
'அம்மா?'
'அம்மா, home maker.. ஆமா உங்க அப்பா அம்மா?'
'என் அப்பாவை எனக்கு தெரியாது..'
திகைப்பில் மேற்கொண்டு என்ன கேட்க என தெரியாமல்.. சில வினாடிகள் மௌனம் காத்தேன்.. கனமான மௌனத்தை கலைக்கும் விதமாக அவளே வேறு ஏதோ ஒன்றை பற்றி பேச ஆரம்பித்தாள். இருந்தாலும், அப்பொழுது யாருடன் இருக்கின்றாள், உறவினர்களோடா? அம்மா எங்கு இருக்கின்றார்கள் என மனதில் எழுந்த கேள்விகளை அடக்கி கொண்டேன்.

அறியாமை பேரின்பம். ஆம். உண்மை தான். Blessed is Innocence. And so is ignorance too, at times. தன்னை வளர்த்து வருபவன், ஒரு நாள் வெட்டுவான் என தெரியாததில் தான், கொஞ்சம் மகிழ்ச்சியாவது தங்கும் கசாப்பு கடைக்காரனின் ஆட்டிற்கு. சில உண்மைகள் தெரியாமல் இருப்பது தான் நல்லது.


ஷ்யாம். அவன் தான் காரணம். என் அழகிய அறியாமை கூடு பிய்த்தெறியப்பட.
'என்னடா மச்சான், தினமும் தனியா போறியாம் அந்த பொண்ணோட..'
'ஏன் அதுக்கு என்ன?'
'டேய்.. பொண்ணு யாருன்னு தெரியாதா.. அவங்க அம்மா நம்ம ஊரு..' ரெட்லைட் ஏரியா பெயரை சொல்லி.. 'பயங்கர பாப்புலர்டா.... அம்மாவிற்கு 5000 ரூபாய். பொண்ணுக்கு எவ்வளவு?'
கெட்ட வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, நிற்க பிடிக்காமல்,நகர்ந்தேன்.

அன்று பேருந்து பயணம் கனமாக தொடங்கியது. என் கண்களை படிக்கும் வித்தை கற்று கொண்டாள் போலும்..
'யாரு சொன்னா உன்கிட்ட?' அவள்
'என்ன.... எத..'
'எங்கம்மா பத்தி தான்.. அதான் உன் கண்ணுல தெரியுதே..'
'ஒன்னும் இல்ல.. ம்ம்.. ஆக்ஷ்வலா.. IT dept ஷ்யாம்.'
'ஹ்ம்ம்.. கடவுள் நம்பிக்கை இருக்கா உனக்கு?'
'ம்ம்ம் பின்ன... ஏன்?'
'எனக்கும் இருக்கு.. மனதை விற்கும் மனிதர்களுக்கு நடுவில் உடம்பை விற்பது... வித்தியாசமாக படுகின்றது போலும்.. எல்லாவற்றிர்க்கும் ஒரு காரணம் இருக்குடா. இப்படிபட்ட தேவை இருக்கும் ஆண்கள் இருக்கும் வரை இந்த தொழிலும் இருக்கும். இதனால் தான் குடும்ப பெண்கள் கொஞ்சமாச்சும் நிம்மதியா நடக்க முடியுது இரவினில்..'
'.....'
'....எங்கம்மாக்காக தான்டா நான் படிக்கின்றேன். படிச்சு, ஒரு நல்ல வேலை கிடைச்சிட்டா.. ' சொல்லி முடிக்க முடியாமல் அழ தொடங்கினாள் அவள்.

ஸ்கூல் பேக்கின் மீது கால் பட்டாலே, சரஸ்வதி கோவப்படுவாள் என சொல்லி வளர்க்கப்பட்ட வீட்டில் பிறந்ததாலோ என்னவோ.. அதற்கு பின் என்னையும் அறியாத ஏதொ ஒன்று எங்களுக்குள் ஒரு மெல்லிய இடைவெளியாக வளர்ந்து பெரியதாகி எங்களை பிரித்துப்போனது. மௌனங்களாகவே நீண்டு போனது, அடுத்த ஒரு வருட பேருந்து பயணங்கள்.

என் சோகமான நாட்களில் எல்லாம் மழை பெய்யும். அன்று எழுந்த பொழுது மழை கொட்டிக்கொண்டு இருந்தது. மனிதப்பாவங்களுக்கு எல்லாம் கடவுள் ஒட்டு மொத்தமாக அழ முடிவெடுத்தது போன்றதொரு மழை. தேர்வு இருந்ததால் கல்லூரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். தீபிகா வழக்கம் போல் இல்லாமல், அன்று வராமல் இருந்தது மனதை ஏதோ செய்தது. அதிகம் யோசிக்காமல், கடைசி நேர படிப்பினில் கவனம் செலுத்தினேன். எக்ஸாம் எதிர்பார்த்ததை விட எளிதாக தான் இருந்தது. முடித்து விட்டு வெளியே வரும் பொழுது தான் கவனித்தேன், தீபிகா, எக்ஸாமிற்கு வராமல் போனதை. செம்ஸ்டர் எக்ஸாம் இல்லையென்றாலும் கூட, ரிவிஷன் டெஸ்டிற்க்கும் தவறாமல் வருவாளே என யோசித்து கொண்டு இருந்த பொழுது தான், கேட்டது, சக மாணவிகள் இருவர் பேசிக்கொண்டது.
"ஹேய்.. தீபிகா நேற்று இரவு தற்கொலை செய்ய முயற்சி செய்தாளாம். இப்போ" ஒரு ஹாஸ்பிடல் பெயர் சொல்லி, "அங்கே இருக்கின்றாளாம்"..
கேட்டதும், ஒரு நிமிடம் என் இதய துடிப்புகள் சுதாரித்து மெதுவாய் துடிப்பதாயின. மீதி நாள் மட்டம் போட்டு விட்டு, அவள் இருந்த மருத்துவமனைக்கு கிளம்பினேன்.

"பாவி பொண்ணு.. 20 மாத்திரை போட்டு இருக்கா..." வெளியில் அவள் அம்மா புலம்பிக்கொண்டு இருந்தாள். இதற்கு முன் பார்த்திடா விட்டாலும் முகசாயல் காட்டி கொடுத்தது. அந்தம்மாவின் கண்ணை பார்க்கும் சக்தி இல்லாமல், தீபிகாவை காண உள்ளே சென்றேன். இயந்திரத்துடனும், க்ளுக்கோஸ் ட்ரிப்புடனும் இணைக்கப்பட்டு அவள்.

அவள் கண்கள் மூடிக்கொண்டு இருந்ததால், தூங்குவதாக நினைத்து, அருகில் அமர்ந்தேன்.
"ஏன் டா என்னை இப்போ போய் பார்க்க வந்த.. சாக கூட விடமாட்டேங்கறாங்கடா.."
"தீபிகா..என்ன..ஆச் " சொல்லி முடிக்கும் முன், உதட்டின் மேலும், கன்னங்களின் மேலும் இருந்த கீறல் தழும்புகள் காட்டிக்கொடுத்தன. திடீரென்று பேசமுடியாமல்... நெஞ்சிலிருந்து ஒரு சோக குமிழி வெடிப்பது போலதொரு பிரம்மையில் மௌனமானேன். நான் கவனித்து விட்டதை பார்த்த அவளும் மௌனமானாள். அவள் கைப்பிடித்து வெகுநேரம் அமர்ந்து இருந்தேன். இறுதியாக 'சரி.. கிளம்பறேன் தீபிகா. வீட்டுல கூட சொல்லிட்டு வரலை நான்.. நாளைக்கு வருகின்றேன்...' சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டேன்.
"கடவுள் பொய்டா.." என்று சொன்னாள்...
'தீபிகா.. நான் உன்னை ..'
'ப்ளீஸ்.. ஏதும் சொல்லாத... வேண்டாம்'

அன்று வீட்டிற்கு சென்ற பொழுது, தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு பின் தான் உள்ளே சென்றேன். அன்று இறந்தது என் கடவுள்.


இரெண்டு கடவுள்கள் இறந்து போனது மட்டுமே மனதில் வெறுமையாக, மழை கொட்டி வெறுமையான வானம் போல். கடவுள் மனிதனை படைத்து, உடைக்க, மனிதனும் கடவுளை படைத்து உடைப்பதாகப் பட்டது எனற்கு.


அதற்கு பின் அவளை பார்க்க போகவில்லை.

17 மறுமொழிகள்:

CVR said...

என்ன சொல்லுறதுன்னு தெரியல!

Divya said...

கையாள தயங்கும் கருவினை மையமாக கொண்டு கதையை தடுமாற்றமில்லாமல் நகர்த்தியிருக்கிறீர்கள்.........முயற்சியை பாராட்டுகிறேன் ட்ரீம்ஸ்!

Anonymous said...

//என் சோகமான நாட்களில் எல்லாம் மழை பெய்யும். அன்று எழுந்த பொழுது மழை கொட்டிக்கொண்டு இருந்தது. மனிதப்பாவங்களுக்கு எல்லாம் கடவுள் ஒட்டு மொத்தமாக அழ முடிவெடுத்தது போன்றதொரு மழை.//

நம்முடன் சேர்ந்து அழும் மழையை வாழ்வில் தவிர்க்க முடியாதுதான்...அழகான ஆழமான வரிகள்!
அன்புடன் அருணா

Anonymous said...

என்னாச்சி dreamzz உனக்கு?
அழ வைச்சுட்டேடா...நீ கவிதையே எழுது எல்லோரையும் அதுதான் சந்தோஷமாகக் கட்டிப் போட்டு வைக்கும்!
அன்புடன் அருணா

Nimal said...

ட்ரீம்ஸ்...

கனமான ஒரு கருவுக்கு சிறப்பாக கதைவடிவம் கொடுத்திருக்கிறீர்கள்...

மனிதர்கள் மனிதத்தை கொன்றபின்னால் கடவுளர்கள் வெறும் கதாபாத்திரங்கள் தானே...!

கப்பி | Kappi said...

அருமை!

MyFriend said...

நல்லா இருக்கு தினேஷ் அண்ணா. கதை ரொம்ப நேர்த்தியா இருக்கு. :-)

எழில்பாரதி said...

நல்ல அருமையான கதை ட்ரீம்ஸ்!!!

தொடருங்கள்!!! வாழ்த்துகள்!!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

என்ன சொல்ல என்று தெரியவில்லை! நெஞ்சை தொட்டது Dreamzz...

தமிழ் said...

நல்ல முயறசி

வாழ்த்துக்கள்

Sumathi. said...

Hai Dreams,

//இதனால் தான் குடும்ப பெண்கள் கொஞ்சமாச்சும் நிம்மதியா நடக்க முடியுது இரவினில்..'//

mm its a different angle. nalla iruku.

Dreamzz said...

@வேதா

//உன்னுடைய எழுத்தில் ரொம்ப நல்ல முன்னேற்றமும் முதிர்ச்சியும் தெரியுது ட்ரீம்ஸ் வாழ்த்துக்கள் கதையை விட அதை நகர்த்திய விதமும் வசனங்களும் ரொம்ப நல்லா இருக்கு :)//

எனக்கு வயசாயிடிச்சுனு சொல்ல வரீங்களோ?

G3 said...

:((

Unknown said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!
ஒரு பெரிய பெருமூச்சு தான் வருகின்றது. நான் எப்பொழுதுமே சந்தோசமான முடிவை எதிர்பார்ப்பவன்.கதைகளில் கூட....

மனதை கனக்க வைத்து விட்டீர்கள்!

TKB காந்தி said...

//தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு பின் தான் உள்ளே சென்றேன். அன்று இறந்தது என் கடவுள்.//

ரொம்ப நல்ல இருக்கு உங்கள் naration, wonderful wordings. Keep it very high up!

ரசிகன் said...

//ande said...

//தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு பின் தான் உள்ளே சென்றேன். அன்று இறந்தது என் கடவுள்.//

ரொம்ப நல்ல இருக்கு உங்கள் naration, wonderful wordings. Keep it very high up!//

வழிமொழிகிறேன்:)

ஜி said...

:(((