Poem II ..என் கவிதை கிறுக்கல் எல்லாமே..
ஆமாங்க.. NewYear அன்னைக்கு வேலை வெட்டி இல்லாம blog போடுறேன். நேற்று Nite, party.. படம் (திருவிளையாடல் ஆரம்பம்) .. என ஒரே கலக்கல்.. காலை எழ மணி 10:00 AM. இது கவிதை பற்றி..கவிதை எழுதுவதை பற்றி! இந்த Blog போடனும் என்று போன முறையே நினைத்து, நழுவி இப்பொழுது, நம்ம தனுசின் "copy அடித்த"விளையாடல் பத்தி போடலாம் என்று நினைக்கையில் இது முந்தி கொண்டது! நம்ம Divya கூட இதே டாபிக்ல ஒரு blog போட்டாச்சு.. அதை படிக்காதவர்கள் Link போய் படிக்கலாம்.
நான் முதல் முதலாய் எழுதிய கவிதை "அம்மா" என்ற தலைப்பில்.. நான் 7த்ல நடந்த competitionல first prize வாங்கினேன்! இதுல Comedy என்னனா அப்ப எல்லாம் கவிதையும் வராது..ஒன்னும் வராது! classஅ cut அடிக்கலாம் என்று போனது..fullஅ பக்கத்தில் இருக்கும் என் நண்பன் ஒருவனை பார்த்து bit! (கவிதையை கூட விடாம bit அடிச்சதை நினைத்தா பெருமையாய் இருக்கு!) அவனுக்கு ஒன்னும் கிடைக்கல.. prize எனக்கு தான் கொடுத்தாங்க! பின்ன கஷ்டப்பட்டு bit அடிச்சோம்ல! ஆக இதை எல்லாம் என்னொட கணக்குல எடுத்துக்க முடியாது!
கவிதை எல்லாராலும் எழுத முடியும்க! ஆனா சாதாரண "mental state" ல எழுத முடியாது. An poem is an overflow of emotions! அதுனால தான் காதலிச்சா கவிதை தானா வருது! உங்களுக்கு எல்லாம் தான் நம்ம கதை தெரியுமே! நமக்கும் அப்படி தான்.. ஆனா நான் காதல் பற்றி எல்லாம் எழுதியது கிடையாது! என்னொட முதல் கவிதை / ஹைக்கூ இது (approx)
"பூப்பதற்க்குள் பறிக்க படுகின்றன
பட்டாசு factory இல் குழந்தைகள்!"
எப்பவாவது தான் இது எல்லாம்.. Mostly நம்ம எழுதறது "செய்யுள்" range ல தான் இருக்கும்! (அப்ப)
மேகமெல் லாமே கர்ண வான்
தீயது வற்க்கு அந்தன் மைச்செய்யும்
காதலு லாமேக் கவிதை தான்
படித்த வற்க்கு பைத்தியந் தான்
இந்த range தான்! அதுல பெருசா இலக்கணம் எல்லாம் இல்ல. முதல்ல ஒரு Base.
மேகம் எல்லாமே கர்ணன் தான்
தீயவற்க்கும் நன்மை செய்யும்
காதல் எல்லாமே கவிதை தான்
படித்தவற்க்கு பைத்தியம் தான்
standard நாலடியார் format! அப்புறம் பகுபதம் எல்லாம் பார்த்து நல்லா புரியற மாதிரி இருப்பதை தமிழாசிரியற்களுக்கு மட்டுமே புரியும் Format! இது மாதிரி தான் comedy பண்ணிட்டு இருந்தேன்.. இது தமிழ் exam ல ரொம்ப usefull அ இருக்கும்! சும்மா அங்கங்க இது மாதிரி நாலு line எழுதி , பின் "என்று சொல்கின்றார் ஒரு புதுக்கவிஞர்" அப்படினு buildup! எழுதினது நான் தான் என்று யாருக்கும் தெரியாது! பையன் எவ்வளவு படிச்சி தமிழார்வமோட இருக்கான் என்று paper திருத்துற வாத்தி +2ல தமிழ்ல நிறைய மார்க் போட்டு நாம தமிழ்ல district rank ;)
ஆக back to topic, ஒரு கவிதை எழுத first தேவை "emotions". எப்படி வந்தாலும்..
"இருக்கும் கவிஞர் இம்சை போதும் .. என்னையும் கவிஞன் ஆக்காதே" என்பதிலும் ஒரு உண்மை இருக்கு! அப்புறம் தேவை ஒரு கருத்து.. ஒரு உவமை.. அதாவது "example". A is like B so C is like D என்று சொல்லி Aக்கும் Cக்கும் ஒரு link தரணும்.
இப்போ ஒரு simple example. வெளியில் சிரித்து உள்ளே உடைந்தது மாதிரி நமக்கு எல்லாருக்குமே ஒரு காலத்தில் நடந்து இருக்கும்! இப்போ இதுக்கு ஒரு "natural" உவமை. மழை பெய்வது அழுவது மாதிரி என்று வைத்து கொண்டால், மின்னலை சிரிப்பது மாதிரி வைக்கலாம். இத கவிதையாய் எழுதினா
"மின்னல் சிரிக்குது..
பின்னால் ..
அழ காத்திருக்குது
மேகம்"
கவிதை is simply about the concept and the placement of words and their choosing.
நம்ம இதை வைத்து எந்த concept லையும் எழுதலாம்! comedy, love, war, country என்று!
இது ஒரு வகை கவிதை தான்! இது போக இன்னும் பலவகை இருக்குது!
ரொம்ப யோசிக்காமல் "word rhyme" பண்ணி
"கடல் அடிக்குது
வானம் இருட்டுது
கனவு கதைக்குது
நினைவு இடிக்குது"
என்றும் எழுதலாம்!
நான் எழுதுவது Mostly முதல் வகை!
அப்புறம் எல்லாத்துக்கும் ஒரு inspiration தேவை!
நமக்கு அது இரெண்டு line தான்
"தமிழ் பேசும் நல்லுலகம்
தாவணி போட்ட என்னவள்" ;)
"தீயிற்க்குள் விரலை விட்டால் நந்தலாலா" என்று பாரதில ஆரம்பித்து,
"சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்" என தமிழ் பாடிய பாரதிதாசன்,
"நானே முழுமுதற் கடவுள்" என முழங்கும் கண்ணதாசன்,
"முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ" என கலக்கிய வைரமுத்து,
"யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்" எனும் வாலி என்று பல சிகரங்களை ரசித்து கடைசியா
"எதை கேட்டாலும் வெட்கத்தை தருகின்றாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்"
என உருகும் தபூ சங்கர் வரை.. படித்து / கேட்டு ரசித்து இருக்கின்றேன்.
வாழ்க தமிழ்! வளர்க கவிதை!
61 மறுமொழிகள்:
super appu...eppadi ellam kavidhai ezhudhreenga....eppadi ellam yosikareenga....bayangara range-a iruku :)
andha kutti hykoo ellam super....keep writing :)
தொகுப்பு சூப்பர்! இன்னும் முயற்ச்சி செய்யவும்... வாழ்த்துக்கள்... ஹாப்பி 2007!
"எதை கேட்டாலும் வெட்கத்தை தருகின்றாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்"... my favourite line too da..
nalla neraya jobs kaivasam vachirukka. kalakura kanna..namma pudhusu kanna pudhusu stylea edho pudhusu pudhusa unnul irukkum gyaniyai thatti ezhupara...
solla mudiyadhu..konja naala canada best poet award vanginalum vanguva...all the best...readya iru edhukum.
@bharani
//super appu...eppadi ellam kavidhai ezhudhreenga....eppadi ellam yosikareenga....bayangara range-a iruku :)
//
ellam scene thaan!
apparam new yearkku enna paneenga?
//andha kutti hykoo ellam super....keep writing :) //
thxnga! sure i will!
@karthi
/தொகுப்பு சூப்பர்! இன்னும் முயற்ச்சி செய்யவும்... வாழ்த்துக்கள்... ஹாப்பி 2007! //
solliteengalla, vidunga kalaki viduvom! ungalukkum oru Happy new year valthukkal!
@rammy
//solla mudiyadhu..konja naala canada best poet award vanginalum vanguva...all the best...readya iru edhukum. //
athigama pesadha enru sonna enga ketkara! pechai kuraikanum! :P
எல்லோரும் கவிதை எழுதலாமாம், இன்ஸ்பிரேஸ்ன்வேணுமாம்.இமோஷன்ஸ்வேணுமாம்.இது எங்களை போல ஆட்களுக்கு சொல்ற நக்கல். எனக்கெல்லாம் இமோஷனெல்லாம் வந்தாமௌனம்தான்.வாய் ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்கும்.
அடடா!எதை சொல்ல எதை விட?குட்டி குட்டியா கவிதைகள்.ஆன் த ஸ்பாட் ரம்யமானக் கவிதைகள்.பிட் அடிச்சு முதல் பரிசு!;0தமிழில் டிஸ்டிரிட் முதலா?கண்ணு கட்டுதுப்பா.புதுவருட ஆரம்பமே டக்கர் ஆரம்பம்.all the best.--SKM
@skm
//எனக்கெல்லாம் இமோஷனெல்லாம் வந்தாமௌனம்தான்.வாய் ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்கும்.// neenga enna kavidhaiyai sollava poreenga.. as long as the hands are functional! :P
//அடடா!எதை சொல்ல எதை விட?குட்டி குட்டியா கவிதைகள்.ஆன் த ஸ்பாட் ரம்யமானக் கவிதைகள்.//
ramyamaana kavidhaigala... aahaa. ithu varai sonnathula unga valthu thaan super! ungalukku extra 5 mark!
//பிட் அடிச்சு முதல் பரிசு!;0தமிழில் டிஸ்டிரிட் முதலா?//
vidunga vidunga..athellam iruppathu thaan.. appuram tamila district rank, first illa ;)
//புதுவருட ஆரம்பமே டக்கர் ஆரம்பம்.all the best.//
thxnga skm.. ungalukkum oru kalakallaana varudama irukka enathu valthukkal!
super innu solli appadiya ponna athuilla oru touch irukathu..
hats off to ur first hychoo.. nice.. one..
start dragging ur last paragraph further.
another extrapolated information.
Movie: - Aythu Ezhthu
Lyrcist: - Vairamuthu
Composer: A.R.R
Singer: Not required for this context
Song: Yakkai thiri Kadhal Sudhar
the speciality of the song is ( main course of the song ) use only Object - Example prinicple. Uvamanam - Uvameyam coupling design pattern in namma S/w language illa sollalam.
Add-on news vandhu: This song is techinically sandwitched by pop/folk mix. first part is pop and second part folk and again pop. quite a experimental approach from the troop.
// Sarvam Sooinyam - All r Zero
// Kadhal Pinyam - Love is inifinity
super illa.. :)
Add-on: To re-load that recent Thambi - Movie has another song
Sudum Nilavu Sudatha Suriyan based on the same design pattern :) using simple words than the former.
:)
ஆநா இந்த ரம்யா கவிதைகள் வந்து super போங்க
நான் யார் இந்த ரம்யாஇன்னு பார்கனுமெ
:)
@adiya
//super innu solli appadiya ponna athuilla oru touch irukathu..
hats off to ur first hychoo.. nice.. one..
start dragging ur last paragraph further. //
lastpara konjam neelam enru solreengala illa, innum konjam neelama pottu irukalam enru solreengala? ;)
// Sarvam Sooinyam - All r Zero
Kadhal Pinyam - Love is inifinity //
correcta soneenga ! intha paatu lyrics nakku romba pidikkum...super lyrics ithellam!
//..ஆநா இந்த ரம்யா கவிதைகள் வந்து super போங்க
நான் யார் இந்த ரம்யாஇன்னு பார்கனும//
ரம்யா கவிதையா?இது என்ன எனக்கு தெரியாத புது கதை? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க! ரம்யா = one among you என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்!
எனக்கு தெரியும் just out of curiosity இப்படி கவிதை எழதவைத்தது யார்ன்னு ஒரு Question ? :)
i forget to tell one more info w.r.t to
// Sarvam Sooinyam - All r Zero
Kadhal Pinyam - Love is inifinity //
reciprocal of Zero is Inifinity - see kavighar solves simple Maths also in this. :)
//இப்படி கவிதை எழதவைத்தது யார்ன்னு ஒரு Question ? :)//
namma aalu thaan... vera yaaru!
//i forget to tell one more info w.r.t to
// Sarvam Sooinyam - All r Zero
Kadhal Pinyam - Love is inifinity //
reciprocal of Zero is Inifinity - see kavighar solves simple Maths also in this. :)//
athu sari thaan.. ithu thaan தமிழ்க்கண்க்கு போல!!
//நான் யார் இந்த ரம்யாஇன்னு பார்கனும//
வேணா கேட்டு பாருங்க்..foto போடுவாங்களா என்று! எனக்கென்னமோ doubt தான்!
hey.. i was just kidding.. i haven;t commented in the a fhoto way :) kewl..
i try to grow the tree. check panni sollu inga. i am not convinced with that either
onniyum pannala....unbathum uranguvahduma pochi new year..ungaluku???
//சும்மா அங்கங்க இது மாதிரி நாலு line எழுதி , பின் "என்று சொல்கின்றார் ஒரு புதுக்கவிஞர்" அப்படினு buildup!//
very funny!!i can see that
u have lots of talents ..bring it out!!
All the very best and happy newyear.
Ahaaaaaaaaaaaaaaaaaaa.........
Mudhalla enga boss treat?!!"+2ல தமிழ்ல நிறைய மார்க் போட்டு நாம தமிழ்ல district rank ;)? " Seri adhu kudunga medhuva.....
but this is pularichings of ASIA :P
Ungalukull ivlo thamizh patraaaaaaaa
And awesome way to explain abt kavidhai!!!
Naccchu! (Not the negative-natchu)
Great going.... neraya kavidhai ezhudi podungo...:) Padikka avaludan,
Marutham
Dreamzz,
First time visiting.Romba nalla Yezhuthareenga...Really u are blessed with good poetic and writing skills.Keep Going....
Ungal yezhuthukkal migavum arumai..
Thanks for your time !
- Hayagriva Dasan
@adiya
//hey.. i was just kidding.. i haven;t commented in the a fhoto way :) kewl.. //
ada ithula poi ennanga irukku.. nan ellam ethukkum tension agathaven ;)
// try to grow the tree. check panni sollu inga. i am not convinced with that either //
ennathu maram valarthuirukeengala.. vanthu parkaren!
@bharani
//onniyum pannala....unbathum uranguvahduma pochi new year..ungaluku??? //
New year eve, puthu veedu vangina partynga! apparam nite thiruvilayadal aarambam, parthu Jan 1st athikalai 12 manikke elundhitten!
@appukka
//very funny!!i can see that
u have lots of talents ..bring it out!!
All the very best and happy newyear. //
enakke comedya thaan irukkum! talents ellam irukku engareenga.. thxnga!
U 2 have a gr8 new year kka.
//Ahaaaaaaaaaaaaaaaaaaa.........
Mudhalla enga boss treat?!!"+2ல தமிழ்ல நிறைய மார்க் போட்டு நாம தமிழ்ல district rank ;)? " Seri adhu kudunga medhuva.....
but this is pularichings of ASIA :P
Ungalukull ivlo thamizh patraaaaaaaa
And awesome way to explain abt kavidhai!!!
Naccchu! (Not the negative-natchu)
Great going.... neraya kavidhai ezhudi podungo...:) Padikka avaludan,
Marutham //
vaamma minnal.. thideernu vara.. thideernu kaanama poidira! ithulla treat veraya unakku! :P
neriya kavidhai ellam eludha solreenga! parpom.. yerkanavey athaa eludhi uyira vanguren enru saga blog vasigal complaint! ;)
@hayagriva desan
//First time visiting.Romba nalla Yezhuthareenga...Really u are blessed with good poetic and writing skills.Keep Going....//
first time visitkku oru thanx! unga url enna enru soneenganna unga pakkam naan vara mudiyum (if u have one i mean..)
//Ungal yezhuthukkal migavum arumai..//
innoru thanks..
//Thanks for your time !//
itha naan solli irukkanum neenga munthikiteenga!
And also have a nice New 2007!
/எழுதினது நான் தான் என்று யாருக்கும் தெரியாது! பையன் எவ்வளவு படிச்சி தமிழார்வமோட இருக்கான் என்று paper திருத்துற வாத்தி +2ல தமிழ்ல நிறைய மார்க் போட்டு நாம தமிழ்ல district rank //
ஆஹா..நம்ம ஜாதி.. நாமளும் இப்படித் தான் கவிதை எல்லாம் எழுதி தமிழ் ஐயாவை மயக்கி மார்க் வாங்குவேன்.. அப்போவெல்லாம் தமிழ் தாகம் எடுத்து தடாகம் நோக்கி கிடந்தது..இப்போது அவசரமாய் வாழ்றதுல உக்கார்ந்து எழுத நேரமே இல்லை..
ட்ரீம்ஸ், இலக்கணம் புலிமா, தேமான்னு எல்லாமே உங்க பதிவை பாத்தவுடன் நினைவுக்கு வருது.. என்னை என் பள்ளி காலத்துக்கே அழைத்து சென்றது இந்த பதிவு.. அதுவும் நீங்களும் நம்ம ஆளுன்னு நினைக்கிறப்போ சந்தோசமா இருக்கு..
//முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ" என கலக்கிய வைரமுத்து,//
இது கவிஞர் முத்துலிங்கம், ட்ரீம்ஸ்.. வைரமுத்து இல்லை.. அப்பவே பல தடவை இலங்கை வானொலியில் இதை சொல்லக் கேட்டிருக்கிறேன்..
கவிதை எழுதுறதை பத்தி சூப்பரான பதிவு..புதுசா எழுதுறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு நினைக்கிறேன் ட்ரீம்ஸ்
எப்பா, இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு.. பின்ன, நான் ரவுண்ட் அடிக்க போயிருந்த நேரத்துல நீங்க பின்னூட்ட மழையா போட்டுட்டீங்க.. பதிலுக்கு நான் என்ன கைமாறு செய்றதுங்க ட்ரீம்ஸ்..
அது தான், லேட்டா வந்தாலும் ஒரு ஐந்து பின்னூட்டத்தை போட்டு தாக்கியாச்சு :-)
//ஆஹா..நம்ம ஜாதி.. நாமளும் இப்படித் தான் கவிதை எல்லாம் எழுதி தமிழ் ஐயாவை மயக்கி மார்க் வாங்குவேன்.. //
ahaa.. neengalum tamil jathiya? vaanga vaanga! same blood!
//இது கவிஞர் முத்துலிங்கம், ட்ரீம்ஸ்.. வைரமுத்து இல்லை.//
appadiya.. enakku theriyaaam pochu.. sari vidunga.. mathiduvom!
//கவிதை எழுதுறதை பத்தி சூப்பரான பதிவு//thanksnga! hopefully usefulla irukkum!
//அது தான், லேட்டா வந்தாலும் ஒரு ஐந்து பின்னூட்டத்தை போட்டு தாக்கியாச்சு :-) // 5 comment pottu manasai kularadichiteenga! thxngov!
புத்தாண்டு வாழ்த்துக்கள் dreamzz. புது வருஷம் எப்படி போகுது?
கலக்கல் போஸ்ட்டுங்க. கவிதை எழுதறத ஒரு procedure ரோட சொல்லி குடித்திருக்கிங்க. ரொம்ப அருமை... என்ன இருந்தாலும் அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணும் :(
//"பூப்பதற்க்குள் பறிக்க படுகின்றன
பட்டாசு factory இல் குழந்தைகள்!"//
Superb..
//மழை பெய்வது அழுவது மாதிரி என்று வைத்து கொண்டால், மின்னலை சிரிப்பது மாதிரி வைக்கலாம். இத கவிதையாய் எழுதினா
"மின்னல் சிரிக்குது..
பின்னால் ..
அழ காத்திருக்குது
மேகம்"//
ஆஹா.. சூப்பர் போங்க.
//புத்தாண்டு வாழ்த்துக்கள் dreamzz. புது வருஷம் எப்படி போகுது?//
vaanga priya.. enga romba naaala alai kaanum? new year kondattama?
//... என்ன இருந்தாலும் அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணும் :( // aiyoo.. appadi ellam thevai irudha nanellam enga itha panna poren!
//ஆஹா.. சூப்பர் போங்க.
//
thxnga! apparam, New year eppadi pochu? namakku ok va irundhadhu!
கவிதை எழுதுவது எப்படி? ஒரு புத்தகம் ஒன்னு போட்டுறலாம்:) சூப்பர்:)
நீங்க அடிக்கடி நம்ம வீட்டுப்பக்கம் வரீங்க, நாம கொஞ்சம் பிஜி:)ஹிஹி அதான் லேட்:)
//கவிதை எழுதுவது எப்படி? ஒரு புத்தகம் ஒன்னு போட்டுறலாம்:) சூப்பர்:)
நீங்க அடிக்கடி நம்ம வீட்டுப்பக்கம் வரீங்க, நாம கொஞ்சம் பிஜி:)ஹிஹி அதான் லேட்:) //
எதோ கடைசியா வந்தீங்களே! naamellam krisha fan.. enga kadamaiya palan ethir paakkaama seivom! so onnum kavala padatheenga! unga kadaikku namma regular customer!
etho book poda poreengala! valthukkal! :P
hay ennada idhu...ippadi ootaranga pasanga, namma adiya unna vidama thorathararu...kalakunga sir..
VANDHAEN..MEENDUM VANDHAEN.. :p
Avangaluku elaam pugachal :P
Nenega podunga boss!! ;)
Am serious- we want more......
DIL MANGE MORE :P
hehehe
@rams
//hay ennada idhu...ippadi ootaranga pasanga, namma adiya unna vidama thorathararu...kalakunga sir.. //
athu appadi thaan irukkum... vaaliba vayasu.. kandukaatha!
@marutha
/VANDHAEN..MEENDUM VANDHAEN.. :p
Avangaluku elaam pugachal :P
Nenega podunga boss!! ;)
Am serious- we want more......
DIL MANGE MORE :P
hehehe //
enna madam, appappa vareenga, vera oru thagavalum illa! bayangarama padikareengala enna?
yaru unakku, adiyaku ellam valiba vayasa...ezhukazhudai vayasachu...chumma ipadiye nanga valibar sangamnu solika than mudiyum...but nenapu pozhapa kedukama parthuko periya manusha..
எனக்கு5 மதிப்பெண்கள் அதிகம் கொடுத்ததற்கு நன்றி.
//appuram tamila district rank, first illa ;)//
நான் தமிழில் பாஸ் ஆனதே பள்ளி நாட்களில் அதிசயம்.அப்படி பட்டவளுக்கு நீங்க டிஸ்டிரிக்ட் rank என்றால் முதலில் வருவதற்கு சமம்.
//neenga enna kavidhaiyai sollava poreenga.. as long as the hands are functional!//
மூளை வேலை நிறுத்தம் செய்துவிடும்.;)--SKM
//மூளை வேலை நிறுத்தம் செய்துவிடும்.;)//
athu sari thaan. athukaaga, veetula sandai pottu mudinja vudan, irukira emotion vechi kavidha ellam eludha mudiyadhu.. ;)
ethavathu highly emotional nigalchi nadanthathum, poruthu, yaar kittayachum solli alanum/sirikanum, illa madila padukanum illa tholla saiyanum endrellam thonum phasela eludhanum!
It is an outlet for our emotions.. oru nanbar kitta solvatharku bathil, naama atha oru paperla capture panrom!
//andha coffee blog enga pidicheenga? //
desipundit.com and link it further
andha photo la irukarathu yaarunu sollave illaye...ipadiyum oru azhaka :-)
@syam
ahaa! shreya theriyadhu.. namma "thiruvilayaaal aarambam" heroine, future "sivaji" heroine!
இந்த பதிவக்கு 2 நாள் முன்னாடியே கமெண்டின நியாபகம்.. மரதியா, வரலியா?
//அதை படிக்காதவர்கள் Link போய் படிக்கலாம்.
//
திவ்யாவோட எந்த பதிவுன்னு சொன்னா டைரக்ட்டா போயிடுவேன்:P
புது வருஷம் அதுவுமா திருவிளையாடல் ஆரம்பம் படத்தப் பாத்தீங்களா?
என்ன கொடுமை தி.. ட்ரீம்ஸ்? அந்த படத்தப்பத்தி நானும் ஒரு ரிவ்யூ எழுதலாம்னு இருக்கேன்.
//
"பூப்பதற்க்குள் பறிக்க படுகின்றன
பட்டாசு factory இல் குழந்தைகள்!"
//
அழகு கவிதை
கவிதை ஃபார் டம்மீஸ்-னு ஒரு புக் போடுங்க :)
//
என்ன இருந்தாலும் அதுக்கெல்லாம் ஒரு ஞானம் வேணும் :(
//
சரியா சொன்னீங்க ப்ரியா...
//
andha photo la irukarathu yaarunu sollave illaye...
//
ippidi oru kelviya kekkalaama thalivare?
//திவ்யாவோட எந்த பதிவுன்னு சொன்னா டைரக்ட்டா போயிடுவேன்:P
// avanga munnala orupathivu pottanaga enru theriyum .. ஆனா தேடி பார்த்து கண்டு பிடிக்க முடியாமா தான் நானே general Link கொடுத்து இருக்கேன்! அவங்க திரும்பி வரட்டும், பின் கேட்டு போடுறேன்!
//கவிதை ஃபார் டம்மீஸ்-னு ஒரு புக் போடுங்க :)
//
நான் ரெடி! யார் படிப்பா என்னை தவிற! LOL
@arun
//இந்த பதிவக்கு 2 முன்னாடியே கமெண்டின நியாபகம்.. மரதியா, வரலியா?
//
அப்படியா!பரவாயில்லை விடுங்க!இப்பொ வருது!
////
andha photo la irukarathu yaarunu sollave illaye...
//
ippidi oru kelviya kekkalaama thalivare? //
நல்லா கேளுங்க! அவரு கேட்ட பின் எனக்கே doubt!
ada 50th comment nan podalamnu nenacha, vida matareengale...eppadiyum nee than 50th comment, so adhu nan potta madiri than, as u n me r not different from school days...
//ada 50th comment nan podalamnu nenacha, vida matareengale...eppadiyum nee than 50th comment, so adhu nan potta madiri than, as u n me r not different from school days... //
athu sari... ippadi ippadi pesiye ... :)
apparam, unga pera shorta ramya /rammy enru maathu d.. ore complaints.. romba neelama one among you ungal thozhi ramya enru kadhai peru madhiri irukkunu ;)
//ippadi ippadi pesiye ... :)
//
BTW, itha vivek laila paathu solluvaare antha stylela padikanum
அட்டகாசமான விளக்கம்..
இது தெரியாம் சில பேர், 'உக்காந்து யோசிப்பீங்களோ.. நின்னுட்டு யோசிப்பீங்களோன்னு' நையாண்டி பண்ணுவாங்க..
நானும் உங்க கட்சிதான். கவிதை யார் வேணும்னாலும் எழுதலாம். ஒரு தாக்கம் இருந்தா போதும்.
ஆனாலும், காதல் கவிதை எழுத மாட்டேன்னு கிட்டத்தட்ட எல்லாமே காதல் கவிதையா சொல்லிட்டீங்க...
@ji
//இது தெரியாம் சில பேர், 'உக்காந்து யோசிப்பீங்களோ.. நின்னுட்டு யோசிப்பீங்களோன்னு' நையாண்டி பண்ணுவாங்க..//
sariya soneenga! thanxnga!
//ஆனாலும், காதல் கவிதை எழுத மாட்டேன்னு கிட்டத்தட்ட எல்லாமே காதல் கவிதையா சொல்லிட்டீங்க...
// ada 5 months munnadi varai appadi thaanunga irundhen.. namma palaya kavidhai ellam blogla padichu parunga.. (3 or 4th blog)
ippo nilamai appadi!
// enga romba naaala alai kaanum? new year kondattama?//
ஆமா sir.. ஊர்ல இல்ல. SFO போயிருந்தேன். வந்ததும் office ல கொஞ்சம் (!) வேலை.
//New year eppadi pochu? namakku ok va irundhadhu! //
புது வர்ஷம் நல்லாவே போயிட்டிருக்கு.. என்ன ok ங்கறிங்க? சூப்பராவே போகும். வாழ்த்துக்கள்.
@priya
//ஆமா sir.. ஊர்ல இல்ல. SFO போயிருந்தேன். வந்ததும் office ல கொஞ்சம் (!) வேலை.//
ada ungalukkuma.. naaanum vacation poittu vandha velai pakka solli nayanayakkaraanga ;)
////New year eppadi pochu? namakku ok va irundhadhu! //
புது வர்ஷம் நல்லாவே போயிட்டிருக்கு.. என்ன ok ங்கறிங்க? சூப்பராவே போகும். வாழ்த்துக்கள். //
etho solreenga! parpom eppadi poguthu enru! valthukku thanks and reciprocated!
dreamzz kannaa pinaaanu (rajini style la padikkavum) asathiteenga baa..
mudhalil shcool bit correct aa adichadhukku vaazthukkal.
//தமிழ்ல district rank ;)/// ada tamizth thalaivaaaa. idhu theriyaama poachae..inimae naan adakki daan vaasikanum :)
//poem is an overflow of emotions! அதுனால தான் காதலிச்சா கவிதை தானா வருது!// Ultimate statement
//"பூப்பதற்க்குள் பறிக்க படுகின்றன
பட்டாசு factory இல் குழந்தைகள்!"// soober
//"மின்னல் சிரிக்குது..பின்னால் ..அழ காத்திருக்குது மேகம்" // kalakkals
// வாழ்க தமிழ்! வளர்க கவிதை! // en kaiyum oongugiradhu...vazga vaazgavae
kavidhaik kalavaigalai super examples poatu thaaki irukeenga dreaamz.. great effort. we need more of your kavidais
inda kavidai font ellam onnume puriyalaiye.... shobha
inda tamil font ellam onnume puriyalaye
@malarvizhi
//inda kavidai font ellam onnume puriyalaiye.... shobha //
agaaa... appadiya? tamil font like Anjali font athu mathiri ethavathu systemla install panni irukeengala?
Post a Comment