Sunday, April 29, 2007

நான் அவ(ள்/ன்) இல்லை!

மு.கு: ஒரு உண்மை கதை. ஒரு பட அலசல். சில கேள்விகள்..

நம்ம கதை ஹீரோ பெயரு ராஜ். இவர் அமெரிக்காவில இருக்கும் 3rd Generation இலங்கை தமிழர். இவர் இன்னைக்கு இந்தியாவில் - பொள்ளாச்சிக்கு செல்ல கிளம்புகின்றார். எதுக்கு? இவர் காதலியை பார்க்க. இவர் இதற்கு முன் அவளை பார்த்ததே இல்லை. அப்புறம் எப்படி காதலிச்சாங்க? கனவில் கடவுள் வந்து சொன்னாராம். ஹி ஹி.. அது எல்லாம் இல்ல. எல்லாம் Internet Chatting தான். 4 மாதமா பேசிக்கிறாங்க. அவள் பேரு ஜாஸ்மின். ஆரம்பத்தில் நட்பா பழகி, பின்ன பேசி, போடோ எக்ஸ்சேஞ் பன்னி.. இப்ப Internet காதலர்கள்.

இப்ப நம்ம ஹீரோ இந்தியா எதுக்கு போறாரு? அங்க ஜாஸ்மின் வீட்டுல கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க என்று கேள்வி. அதுக்கு தான் இவரு போறாரு.

சென்னை விமான நிலையம்:
வருகிறேன் என்று சொன்ன ஜாஸ்மினை காணவில்லை. ராஜ்க்கு இங்கு வேறு யாரையும் தெரியாது. இரு வழியாக ரு ஹோட்டலில் ரூம் புக் செய்து, அப்புறம் ஜாஸ்மினுக்கு போன் செய்தால் மறுமுனையில் யாரும் எடுப்பாரில்லை. நள்ளிரவில் போன் கால். ஜாஸ்மினடமிருந்து. தன்னை வீட்டில் சிறை வைத்திருப்பதாகவும், தன்னால் வர முடியாமல் போனதன் காரணம் அது தான் எனவும் சொன்னாள். மேலும், தான் பொள்ளாச்சியிலிருந்து வர வேண்டுமானால், கொஞ்சம் பணம் தேவை என்றும் தனக்கு தெரிந்த ஒரு தோழியை நாளை அனுப்பி வைப்பதாகவும் சொன்னாள்.

தோழியும் வந்தாள். பணமும் கொடுத்தான். 3000$. பயனில்லை. இரண்டு நாள் கழித்து தனக்கு திருமணம் ஆகி விட்டது என்றும், மன்னிக்கும் படியும் இன்னொரு போன். அதன் பிறகு எவ்வளவு முயற்சித்தும் பயன் இல்லை. ஆகையால் ராஜ் மீண்டும் அமெரிக்காவுக்கே கிளம்பி சென்று விட்டான்.

இங்க தாங்க நாங்க வரோம். நம்ம பேரு சூர்யா! ராஜ் எனக்கு நண்பன்.. கொஞ்சம். காதலியை கைபிடிக்க சென்றவன் சோகக்கடலில் கவிழ்ந்து வந்தான். விவரங்கள் கேட்டேன். ஐயோ பாவம். சரி அவள் புகைபடம் இருக்கா என்று கேட்டேன். e-mail இல் காண்பித்தான்.



ஆமா நம்ம அஸினக்கா தாங்க. இத காண்பிச்சு யாரோ ஒருத்தர்/ஒருத்து ஜாஸ்மின் என்ற பெயரில்..மீதி கதை நான் சொல்ல வேண்டியது இல்லை. ஆம் இது ஒரு உண்மை சம்பவம்.












நான் அவன் இல்லை - இன்றைய சமுதாயம் பார்க்க வேண்டிய படம். பாட்டு சீன தவிர மீதி எல்லாம் பார்க்கின்ற மாதிரி தான் இருக்கு. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள். அந்த படத்தில ஒரு வசனத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை.



"இந்த பெண்கள் எல்லாம் ஏமாந்ததற்கு காரணம் இவர்கள் பேராசை இல்ல, லஞ்சம், மூட நம்பிக்கை... " என்பது போல வரும் ஒரு வசனம். பேராசை இதில் முக்கியமான பங்கு என்பது என் கருத்து. பேராசை இருக்கலாம் தப்பில்லை. ஆனால் முட்டாள்களுக்கு இருக்கு கூடாது. நாம் எல்லாருமே ஏதாவது ஒரு சமயத்தில் முட்டாளாகத்தான் இருக்கின்றோம்.

"என்று தனியும் எங்கள் சுதந்திரத் தாகம்..
என்று மாடியும் இந்த அடிமையின் மோகம்"
என்று அன்றே கேட்டான் ஒருத்தன். இன்னும் மோகமும் விட்ட பாடில்லை, சுதந்திரமும் வந்த பாடில்லை. இன்னமும் western மோகமும், மூடநம்பிக்கைகளுக்கு அடிமையாகவும் தான் இருக்கின்றோம்.

ஹேர் டை அடிச்சால் சுதந்திரம் எனவும், கிழிந்த பேண்ட் போட்டால் பேஷன் எனவும் நினைப்பவர்கள் இருக்கத்தானே செய்கின்றார்கள்!

வாயில் இருந்து லிங்கம் எடுக்கிறவன், தலை முடிய புதர் மாதிரி வைத்து ஊர ஏமாத்திறவன், கட்டி பிடிச்சு பக்தி மார்க்கத்த வளர்க்கின்றவர்கள் என ஏகப்பட்ட சாமியார்களை நம்ம மக்கள் நம்பிகிட்டு தான் இருக்காங்க... இவர்கள் என்றைக்கு தங்களை நம்ப ஆரம்பிக்க போகின்றார்கள்?

"என்று திருந்தும் என் தமிழனின் நெஞ்சம்?"

38 மறுமொழிகள்:

Harish said...

Naane Firstu

Harish said...

Ada makka...Asin kadhai over. Appalika neenga sona matter....hmmm....mudalla nama aaluga ozhunga vote podatum....appo daan tirundalaam....thirutalaam :D

CVR said...

தலைவரே!!
அந்த கதை உண்மையாவே நடந்துச்சா???

அட பாவமே!!! :O

Bharani said...

heard abt the first incident....kaasu konjam illa....love pannum bothe niraya kaasu anupi irundhaaram....lot of money...

Bharani said...

second part edho school katurai maadhiri ezhudhi irukeenga...//என்று அன்றே கேட்டான் ஒருத்தன்//...indha maadhiri dialogs ellam kettu romba varudham aachi...

ACE !! said...

First story naanum kettirukken..
Second story.. innum paakkala.. paathuttu solren

MyFriend said...

நான் ஏழாவதா? என்ன கொடுமை "I'm not ACE" இது!!! :-P

MyFriend said...

ஒரு விமர்சனத்துக்கு முன்னாடி ஒரு குட்டி கதையா???

MyFriend said...

இன்னும் அந்த படம் பார்க்கலை.. பிஜியோ பிஜி.. பார்த்துட்டு வந்து சொல்றேன். :-)

MyFriend said...

வந்ததுக்கு ஒரு 10... ;-)

சுப.செந்தில் said...

அப்பறம் அந்த ஜாஸ்மினைப் பிடிச்சாங்களா?ஏன்னா 3000$ ஆச்சே :)

சுப.செந்தில் said...

//"என்று திருந்தும் என் தமிழனின் நெஞ்சம்?" //

இங்க நிக்கிறீங்க!

சுப.செந்தில் said...

என்னாச்சு ட்ரீம்ஸ் சிறு சிறு எழுத்துப் பிழைகளோட ஒரு பதிவு?
நீங்கதானா? :)

சுப.செந்தில் said...

வந்ததுக்கு roundaaaaaaaaaaaaa

சுப.செந்தில் said...

14 round இல்லயே அதான் 15 ஹே ஹே ஹே

Priya said...

முதல் சம்பவம் கொஞ்ச நாள் முன்னாடி கேள்விப் பட்டேன்.

என்ன தான் நீங்க பாக்கலாம்னு சொன்னாலும் நான் அவன் இல்லை பாக்க தைரியம் வரல :)

Priya said...

//"என்று திருந்தும் என் தமிழனின் நெஞ்சம்?" //

எல்லா சமுதாயத்துலயும் இந்த மாதிரி ஆளுங்க இருக்க தான் இருப்பாங்க. ஏன் தமிழர்களை மட்டும் குறை சொல்றிங்க? விடுங்க பட்டா தான் திருந்துவாங்க.

Arunkumar said...

dinesh, padam paathutu vandhu padikkiren.

aana 5 heroines romba too much.... avvvvvvvvvvvvvvvvv :-(

Arunkumar said...

padathoda review illenu thonuchu.. adanaale post padichitten.

asin yaarunne theriyaadhu. aana pollachi-la irundhu ponnu venuma !!!

Marutham said...

:) Andha movie ungala romba influence paniduchu pola :P

Hehe

மு.கார்த்திகேயன் said...

அட்டென்டன்ஸ் ட்ரீம்ஸ்.. அட்டென்டன்ஸ்

மு.கார்த்திகேயன் said...

ஐயோ பாவம்.. என் ஆளு அசின் போட்டோவை காண்பிச்சு யாரோ ஏமாத்திருக்காங்க.. அடக் கடவுளே!

ட்ரீம்ஸ் சொந்த அனுபவமா!

மு.கார்த்திகேயன் said...

இதே போல் ஒரு உண்மை சம்பவம் வேளாங்கண்ணியில் நடந்தது.. ஒரு பிச்சைகாரனிடம் இது போல நடிகைகள் போட்டோவை காண்பித்து ஒருவன் ஏமாத்தினானாம்

Anonymous said...

vandhen vandhen!

-porkodi

Anonymous said...

indha asin kadhai naanum kelvi pattirukken! edho magazine la vandhudhe?? unga frienda!!

naan avan illai paaka enakkum dhairiyam varla :-)

lasta, ella aanmimgavaadhigalum kettavanga nu sollida mudiyadhe... sila unmaiyanavargalum undu. sila peru emathavum seiyaranga.. naama nambara alavu nambittu meedhiku pozhappai pathutu pona prachanai illai :-)

-porkodi

Marutham said...

First incident is kodumai!!
Ada pavameeeeeee

Ipdi kooda emaruvangala?

Marutham said...

And u knew that guy..unga friend'a?

Idhumaari pon paarka poradhuku munadi friend ungata photo kamichrukalaam :P
NEenga dhaan blo gpoora ponunga photo poduveengaley :P
Kidding...

Pavam!

Marutham said...

Andha friend kitta iniyadhu emarama iruka solunga.. :P
Ask him to show u the pic ;)

Marutham said...

And idhai VIJAY TV report'la potrukaangala??
I have a feeling i have heard this somewhere... :)

Dreamzz said...

மக்களே.. இந்த வாரம் கொஞ்சம் பிசி. அதுனால individual reply முடியல. மன்னிச்சுக்கோங்க :))

அப்புறம் ,இந்த சம்பவம் நான் கேள்வி பட்டது.. கனடாவில் நடந்ததா.. அந்த ஆள் என் நண்பர் எல்லாம் இல்ல :)

Priya said...

Ippodhaiku present. Will come back read and coment ok.

Raji said...

Ahaha naatula ipdi emathuravangalum irukkaangala...

ambi said...

இப்படியேல்லாம் கூட ஏமாத்தறாங்களா? :(

நான் அவன் இல்லை! படத்த பத்தி நான் ஒன்னும் சொல்றத்துக்கு இல்லை. நாட்டாமை கண்டிப்பா பார்த்திருப்பாரு. ஆமா! நமீதா உண்டே அந்த படத்துல. :p

SKM said...

you have a valid point. padichaachu Dreamz. Have a good day.Romba busy.

My days(Gops) said...

dreamz... idha paartha pada kadhai maadhiri keeeedhu..

padatha paarthutu vandhu commentren ok?

hw r u? long time no c ...

surya said...

Its really an unbelivable story.i have heard of so many such stories where the victim will be ladies but here....
how is he now?is he ok?

Priya said...

ஹேர் டை அடிச்சால் சுதந்திரம் எனவும், கிழிந்த பேண்ட் போட்டால் பேஷன் எனவும் நினைப்பவர்கள் இருக்கத்தானே செய்கின்றார்கள்!

- Neenga epdi dhan follow panreenganu thriyama pochey:))

Priya said...

How can a guy send money to a girl and thaz a huge amt' of dollars. Edhu dhan love is blind sonagalo ennavo.