கடவுள் நிஜம் தான்
மு.கு: இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் நாள்.. பதிவு போடாம இருக்க முடியுமா? ;).. நம்மளை பத்தி நமக்கே தெரிந்து இருந்தா அடுத்தவங்க நம்மளை தேவை இல்லாம புதுசா முட்டாளாக்க முடியாது பாருங்க. அப்புறம் என்ன..எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------
எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் கண் எதிரில் ஒரு தவறு நடந்து அதை நீங்கள் தட்டி கேட்க தவறினால, அது உங்களை சேரும் பாவமா? .... நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க இந்த கூத்து நிறைவேறியது. இது என் தவறா?
அது ஒரு அழகிய கிராமம். சற்று பசுமை மறந்த வயல்வெளியின் அருகே நடந்தேறியது இந்த சம்பவம்.
'இந்த முறையும் பொட்ட புள்ளையா பிறந்தா, வாயில நெல்மணிய போட்டு முடிச்சுடு. என் கண்ணுல காட்டாத' வயதான பாட்டி ஒருத்தி உரத்த கத்தி கொண்டு இருந்தாள்.
அட.. என்ன நடக்குது என வீட்டிற்க்குள் எட்டி பார்த்தேன். ஒன்னு, இரண்டு, மூனு என வரிசையாக மூன்று பெண் குழந்தைகள் சுவறோரம் முகம் வீங்கி அமர்ந்து கொண்டிருந்தன. அழுததால் முகம் வீங்கி இருந்ததா இல்லை பசியினால் முகம் வீங்கி இருந்ததா என தெரியவில்லை.
'ஆத்தா, இந்த முறை மட்டும் பொட்டை புள்ளை பிறக்கட்டும்.. அப்புறம் வைச்சுகிறேன் அந்த ...' என கெட்ட வார்த்தையும் சகிதமுமாய், சாராய நெடியுடன் ஒருவன். குடும்ப தலைவன் போலும்.
திரை மறைக்கப்பட்டு பின்னால் ஒருத்தி பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருந்தாள். அருகே மருத்துவச்சி ஒருத்தி, துணையாய் இருந்தாள். நான் என்பதால், அவர்களிடம் அனுமதி கேட்காமலேயே எட்டி பார்த்தேன். அவள் துடிப்பதை பார்த்தால் இதுவும் பெண் குழந்தை தான் என எனக்கு தோன்றியது. சில நேரம் கழித்து, குழந்தையும் சுகமாய் பிறந்தது. என் யூகம் போலவே பெண் குழந்தை தான். என் யூகம் எப்பொழுதும் பொய்யானதே இல்லை!
'ங்ஏஏஏஏ' என அழுது கொண்டு இருந்த அவளின் பிஞ்சு விரல்களை தொட்டுப்பார்த்தேன். என் ஸ்பரிசம் பட்டதும் அழுவதை சட்டென்று நிறுத்தியது குழந்தை. யாரும் கவனிக்கவில்லை.
அழுகை நின்ற நிசப்தத்தில் 'என்னங்க வேணாங்க.. பச்சை குழந்தைங்க...' என முடியாமல் முனகி கொண்டிருந்த தாயின் முனகல் கேட்டது. அவள் கண்களில் கண்ணீர் அரும்ப ஆரம்பித்து இருந்தது.
'இதுவும் பொட்டையா, உன்னை கட்டிகிட்டதுக்கு எனக்கு வேணும்டி. என்னை கொலைகாரனா ஆக்கிட்டல... நீ ...' என கெட்ட வார்த்தையால் திட்டி கொண்டே, குழந்தையை பிடுங்கி சென்றான். என் ஸ்பரிசம் நீங்கியதில் குழந்தை மீண்டும் கத்த தொடங்கியது. 'மகமாயி என் புள்ளையை காப்பாத்து...' எனும் தாயின் கதறல், அந்த சப்தத்திலும் எனற்கு கேட்டது.
நான் அவளை விட்டு விட்டு, அவனை பார்க்க ஆரம்பித்தேன். அவன் நேராக அந்த குழந்தையின் முகம் கூட பாராமல், கிழவியிடம் செல்ல, கிழவி, பல முறை செய்த பழக்கத்தில், நெல்மணி கொண்டு குழந்தையின் அழுகையை நிறுத்தினாள் நிரந்திரமாக. அழகான குழந்தை உயிரற்ற பிணம் ஆயிற்று.
இதற்கு முன்பு பார்த்திருந்தாலும், ஏனோ மனசு கனமாக அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். இப்பொழுது சொல்லுங்கள். என் மேல் தவறா? நான் தடுத்து இருக்க வேண்டுமோ?
எப்படியோ.. அதை விட்டு விட்டு நகரத்திற்கு வந்தேன். ஸ்கூல் ட்ரெஸ்ஸில் ஒரு 4ஆம் வகுப்பு சிறுமி ஒரு கோவிலின் முன் நின்று 'சாமி, இன்னைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு. நீ தான் என்னை பாஸ் செய்ய வைக்கனும்' என வேண்டிக்கொண்டிருந்தாள்.
எனற்கோ 'மகமாயி.. என் புள்ளையை காப்பாத்து' என கெஞ்சிய அந்த தாயின் ஞாபகம் தான் வந்தது. திடீரென்று சிரிக்க தொடங்கினேன்..... மழை கொட்ட தொடங்கியது.
நான் கடவுள்.
----------------------
பி.கு: Story Inspired by http://godisimaginary.com/. Even though the Site talks mainly about western religions, obviously the reasoning can be cross applied acros all religions. Well, today happens to be April 1st. What better date to bring out how we are fooling ourselves! (Doesn't mean I am going to stop fooling myself)
22 மறுமொழிகள்:
//என் மேல் தவறா? நான் தடுத்து இருக்க வேண்டுமோ?
//
அட பாவி தினேஷ், இது கதையா? Grrrrrr.
*ahem, சரி, ப்ரிய தர்ஷனி சவுக்கியமா? :p
Me the pashtuu. இந்த ஜி3 அக்காவை முந்திகிட்டு பொங்கல், புளியோதரை வாங்கறது எவ்ளோ கஷ்டமா இருக்கு? :))
ஹாய் தினேஷ்,
//இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் நாள்.. பதிவு போடாம இருக்க முடியுமா?//
ஆஹா, நீ எம்பூபூபூபூபூபூபூபூட்டு நல்லவன்பா.. இப்படி உண்மைய ஒத்துகிறயே..
ஹாய் தினேஷ்,
//உங்கள் கண் எதிரில் ஒரு தவறு நடந்து அதை நீங்கள் தட்டி கேட்க தவறினால, அது உங்களை சேரும் பாவமா? //
அது எப்படி? அது நம்மளோட ஒரு இயலாமைதானே...
//Doesn't mean I am going to stop fooling myself)//
ஆஹா... நல்லா வெவரமாதான் இருக்காங்கப்பா...
We all are mute witnesses to the death of truth and humanity. May Justice rot in hell :(
;)))))))))))))))))
@ambi
//அட பாவி தினேஷ், இது கதையா? Grrrrrr.//
அது சரி. :P
//Me the pashtuu. இந்த ஜி3 அக்காவை முந்திகிட்டு பொங்கல், புளியோதரை வாங்கறது எவ்ளோ கஷ்டமா இருக்கு? :))//
யாரு வந்தாலும் நம்ம கடைல டீ மட்டும் தான்.. மறந்துடீங்களா?
@சுமதி
////இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் நாள்.. பதிவு போடாம இருக்க முடியுமா?//
ஆஹா, நீ எம்பூபூபூபூபூபூபூபூட்டு நல்லவன்பா.. இப்படி உண்மைய ஒத்துகிறயே..//
இதுல நோட் செய்ய வேண்டிய மேட்டர்.. >>>>>நம்ம<<<<<< ஸ்பெஷல் நாள். ஹிஹி :)
@சுமதி
//அது எப்படி? அது நம்மளோட ஒரு இயலாமைதானே...
//
அப்ப கடவுளுக்கு இயலாமைனா, அவர் எல்லாம் வல்லவர் கிடையாது. அப்படியா ;)
@harish
//We all are mute witnesses to the death of truth and humanity. May Justice rot in hell :(//
heh! :) we also happen to be witnesses to some great acts of humanity.. I am just crossing my fingers that they balance each other out :D
// இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் நாள்..//
வருசம் பூராவும் நமக்கு ஸ்பெஷல் தான் மாப்பு..என்ன இது புதுசா :)))
//நான் கடவுள்.
//
வசூல்ராஜால ஒரு டயலாக் வரும்..."கடவுள் இல்லைங்கறான் பாரு..அவனை தாராளமா நம்பலாம்..கடவுள் இருக்குன்றவனைக் கூட நம்பலாம்..ஆனா நான் தான் கடவுள் சொல்றவனை நம்பவே கூடாது"....இது திடீர்னு ஞாபகம் வந்துச்சு....ஏன்னா நானும் கடவுள் தான் :))
//வசூல்ராஜால ஒரு டயலாக் வரும்..."கடவுள் இல்லைங்கறான் பாரு..அவனை தாராளமா நம்பலாம்..கடவுள் இருக்குன்றவனைக் கூட நம்பலாம்..ஆனா நான் தான் கடவுள் சொல்றவனை நம்பவே கூடாது"....இது திடீர்னு ஞாபகம் வந்துச்சு....ஏன்னா நானும் கடவுள் தான் :))//
அதுவே அன்பே சிவம் ல
நான் கடவுள்.. நீங்களும் தான்
அபப்டினு சொன்னார் அதே கமல்...
ஹாஹா! கமல் வேணா குழப்பலாம்.. நான் தெளிவா இருக்கேன்ல!
வழக்கம் போல ஏதாவது காமெடி பண்ணி இருப்பீங்கன்னு பாத்தா இப்படி ஒரு கரு தேர்ந்தெடுத்து எழுதியதால் நான் நிஜமாகவே ஏமாற்றப்பட்டேன். அருமை. பிடித்திருந்தது
\\\ ஸ்ரீ said...
வழக்கம் போல ஏதாவது காமெடி பண்ணி இருப்பீங்கன்னு பாத்தா இப்படி ஒரு கரு தேர்ந்தெடுத்து எழுதியதால் நான் நிஜமாகவே ஏமாற்றப்பட்டேன். அருமை. பிடித்திருந்தது
\\\
வேற வழி,....ரீப்பிட்டே ;))
////நீ தான் என்னை பாஸ் செய்ய வைக்கனும்' என வேண்டிக்கொண்டிருந்தாள்
'மகமாயி.. என் புள்ளையை காப்பாத்து' என கெஞ்சிய அந்த தாயின் ஞாபகம் தான் வந்தது. திடீரென்று சிரிக்க தொடங்கினேன்//
namba vaazhkaila nadaka vendiyathu ellam thaana nadakkum. namba vendinaalum vendatiyum :)
Good post dreamzz :)
//இப்பொழுது சொல்லுங்கள். என் மேல் தவறா? நான் தடுத்து இருக்க வேண்டுமோ?//
thaduthum ithu nadanthiruntha athu unga thavaru illa..
thadukama ninnatha nenachu vara guilty feeling will kill u forever.
thaduthirukalamo nu yosikira vinadiya thaduka use panni iruntha oru velai kozhai vuyir pogama irunthiruka chance iruku la :)
kadhai nalla irukku:)
thodarnthu kadhaiyaaaaa cholitey irukeenga,
oru post kum adutha post kum naduvil pothiya idaiveli vidanum:))) hehehe,,,
natpodu
Nivisha.
//எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் கண் எதிரில் ஒரு தவறு நடந்து அதை நீங்கள் தட்டி கேட்க தவறினால, அது உங்களை சேரும் பாவமா? ....//
அது நம்மைச் சேரும் பாவம் என்றால் இந்த உலகத்தில் பாவம் பண்ணாதவர்கள் யாருமே இருக்க முடியாதுப்பா ...Dreamz...
அன்புடன் அருணா
தொடர்ந்து சிந்தனைகள் நிறைய குவியுது!!! கலக்குங்க Dreamzz :)
// ambi said...
//என் மேல் தவறா? நான் தடுத்து இருக்க வேண்டுமோ?
//
அட பாவி தினேஷ், இது கதையா? Grrrrrr.
*ahem, சரி, ப்ரிய தர்ஷனி சவுக்கியமா? :p
Me the pashtuu. இந்த ஜி3 அக்காவை முந்திகிட்டு பொங்கல், புளியோதரை வாங்கறது எவ்ளோ கஷ்டமா இருக்கு? :))
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
//Blogger sumathi said...
ஹாய் தினேஷ்,
//இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் நாள்.. பதிவு போடாம இருக்க முடியுமா?//
ஆஹா, நீ எம்பூபூபூபூபூபூபூபூட்டு நல்லவன்பா.. இப்படி உண்மைய ஒத்துகிறயே..//
டவுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:)))
//Dreamzz said...
//வசூல்ராஜால ஒரு டயலாக் வரும்..."கடவுள் இல்லைங்கறான் பாரு..அவனை தாராளமா நம்பலாம்..கடவுள் இருக்குன்றவனைக் கூட நம்பலாம்..ஆனா நான் தான் கடவுள் சொல்றவனை நம்பவே கூடாது"....இது திடீர்னு ஞாபகம் வந்துச்சு....ஏன்னா நானும் கடவுள் தான் :))//
அதுவே அன்பே சிவம் ல
நான் கடவுள்.. நீங்களும் தான்
அபப்டினு சொன்னார் அதே கமல்...
ஹாஹா! கமல் வேணா குழப்பலாம்.. நான் தெளிவா இருக்கேன்ல//
அதுதான் முக்கியம்..:)))))
//Doesn't mean I am going to stop fooling myself)//
உண்மைதான் சில சமயங்களில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதிலும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது. புரியுது.
சூப்பர்..:))))
Post a Comment