Monday, June 16, 2008

As the wind blows...

An English post. Again. Well, I started this blog off as a english one, so it makes sense to end it like that. doesnt it?

We all have multiple faces. We are different to different people. What we are is defined differently in every equation. To me, dreams, was one such equation. A person who writes poem, a guy who takes on serious stuff, someone who romanticizes love and is willing to believe in its magic.

As said in a previous post, one day you wake up and you know you have changed. Something that formed the core part of that personality has changed. You cannot be the same anymore.
When i can no longer believe in love, when i can no longer write poems, it seems kinda weird to keep writing the same.

Having said that, the blog world has given me a lot of good friends and made me meet some interesting people around the world.

I will no longer be continuing this blog or this gmail id. I can be reached at my yahoo id.

As everything else, It was very beautifull while it lasted... I guess dreams always tend to be that way.. until you wake up

D

Thursday, June 12, 2008

போட்டினு வந்துட்டா...

ஒரு single வீடியோவை பார்த்து தமிழ் கலை உலகமே பதறி போனதாக தகவல். அதனால் நடந்த இரகசிய மீட்டிங்ல இருந்து அந்த வீடியோவை பார்த்த விட்டு வந்து கொண்டு இருந்த சில பிரபலங்களிடம் கேள்வி பதில்..

"இந்த வீடியோவை பார்த்த பின் என்ன நினைக்கறீங்க?"
விஜய்: என்னை பார்த்து தமிழ்நாட்டுலயே இந்த கேள்வியை கேட்ட முதல் ஆள் நீ தான்.. பார்த்தேன்.. கண்ணா... வாழ்க்கை ஒரு சக்கரம். இன்னைக்கு தெலுங்கில எடுத்ததை நாளைக்கு தமிழ்ல எடுப்பேன்..


(வீடியோ பார்த்து வேகமாய் எங்கயோ கிளம்பி கொண்டு இருக்கின்றார் தல)
"தல எங்க போறீங்க?"
அஜீத்: ஒருத்தனுக்கு ஆட தெரியலைனா ஆடி காமிச்சடலாம்... பாட தெரியலனா பாடி காமிச்சடலாம்.. ஒரு வேளை செய்ய தெரியலைனு சொன்னா... செஞ்சும் காமிச்சடலாம்.. ஆனா இதை... அனுப்பி தான் காமிக்கனும்.. அனுப்பறேன்.. மொத்த சென்னையிலும் பின்னால அனுப்பறேன்...

எப்பவும் போல யாரும் கேட்காமயே வந்து பதில் சொல்றார்...
சிம்பு: இதெல்லாம் ஒரு வீடியோவா? இதை காமிக்க ஒரு சிடியா? உங்களுக்கே இல்லை கொஞ்சம் கடியா? நயந்தாராவாச்சும் இருக்கா இதுல ரெடியா?

இவரு தனியாவே பேசிட்டு இருக்காரு.. பக்கத்துல தான் யாரும் காணும்..
தனுஷ்: ஹலோ... என் பேரு தனுஷ். உங்க பேரு பாலய்யாவா? எங்கப்பாவா.. அவரு ஒரு பெரிய டைரக்டரு.. உங்க அப்பா? ஓ அப்படியா... உங்க வீடு எங்க இருக்கு? ஓஹோ.. எப்படி நிறுத்தனீங்க? எங்க மாமா கிட்ட சொல்லி நானும் எடுக்க வைக்கனும்.. அடுத்த படுத்தல..

கண்கள் சிவக்க... மிக மிக கோவமாய் வந்து கொண்டு இருக்கின்றார், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர்.. புரட்சி கலைஞர்.. விஜயகாந்த்த்த்த்....
கேப்டன்: எனக்கு எடுத்ததுல எல்லாம் வெற்றி கிடைக்கனும்னு தான் எனக்கு விஜயராஜ் அப்படினு எங்கம்மா பேரு வைச்சாங்க. என்னைக்காச்சும் ஒரு நாள் ரஜினிகாந்த் மாதிரி ஆகனும்னு தான் நான் அதை விஜயகாந்த்னு மாத்தி வைச்சேன்.. எனக்கு போட்டியா யாரும் வர முடியாது. இதப்பாருங்க தமிழ்நாட்டுல மொத்தம் ஓடுற ரயிலுங்க எண்ணிக்கை 5842. அதுல இந்த நேரத்துக்கு ஓட வேண்டியது 1765. அதுல நேரத்துக்கு இப்ப சரியா ஓடுறது 547. அதுல நான் இப்போ நிறுத்த போறது 542. மீதி 5 வண்டியில நம்ம நாட்டுக்காக இரவும் பகலும் காவல் நிக்கிற இராணுவ வீரர்கள் இருக்கிறதால, அதை எல்லாம் மட்டும் நிறுத்தமாட்டேன்..
(கண்கள் இன்னும் சிவப்பாக.. பற்களை நற நறவென கடிக்க ஆரம்பிக்கிறார்.. நான் அங்க இருந்து எஸ்கேப் ஆகிறேன்)

அட.. அப்படி என்ன வீடியோ அது?



ஜெய் சந்திரகேசவா!!!!

Friday, June 06, 2008

வயதுக்கு வந்த தருணம்..

மு.கு: இது அந்த மாதிரி பதிவு இல்லை. பெயரை பார்த்து ஏமாறாதீர்கள்

நான் காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இருந்த பொழுது. ஒரு வார விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற பொழுது என் தந்தையுடன் சதுரங்கம் (chess) விளையாட நேரிட்டது. ஆரம்பித்து பத்து நிமிடங்களில் நான் ஜெயிக்க போவது எனக்கு தெரிந்து விட்டது. என் தந்தையுடன் விளையாடி பல வருடங்கள் ஆகி இருந்ததும், இதற்கு முன் ஜெயிக்கிற மாதிரி கிட்ட கூட வராததும் நினைவிற்கு வந்தது. லேசான ஆச்சர்யத்துடன், தோற்று போனேன். (நமக்கு பிடித்தவர்களிடம் ஜெயிப்பதை விட தோற்பதே சுகம் தான்)

ஹ்ம்ம்ம்.. தூங்க போகும் முன் ஒரு ரோஜா மொட்டை பார்க்கின்றோம். அடுத்த முறை அதை கவனிக்கும் பொழுது அது மலர்ந்து அழகான ரோஜாவாகி நிற்கின்றது.

வாழ்க்கையில் எப்பவுமே இப்படி தான். ஒரு படியில நின்னுட்டு இருப்போம். திடீர்னு ஒரு நாள் வேறு ஒரு படிக்கு வந்துவிட்டதை உணர்வோம். நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். தாண்டி வந்த படிகளும் அடைந்து விட்ட உயரமும் இன்னும் சற்றே தெளிவாக காட்டும் நமது சுற்றத்தை. பின்னால் திரும்பி பார்த்தால்.. நாம் செய்தது சிலபல சின்ன பிள்ளை தனமாக இருக்கும். இத்தனைக்கும் நல்லா யோசிச்சு செய்வதாக நாம் நினைத்து செய்தது கூட.

காதலும் கூட அப்படி தானோ என்று எனற்கு தோன்றுகின்றது. குழந்தையாக இருந்த பொழுது ரசித்த ரயில் வண்டி பயணங்கள், பெரியவரானதும் சீக்கிரம் போய் சேர்ந்தால் மதி என்றாகும் நிலைமை போல. லேசான அலுப்பு தட்டி விடுகின்றது. அப்படி தோன்றிய பின்னும் முன்ன மாதிரி கவிதை எழுத முடியுமா என்று தெரியலை. சாமிக்கு பூஜை செய்யும் ஒருவன் மனதில், திடீரென இது சாமி இல்லை.. கல் தான் என தோன்றி விட்டால், எப்படி அவனால் வழக்கம் போல முழு மனதுடன் தான் நேற்று வரை செய்ததை எல்லாம் செய்ய முடியும்? காதல் கவிதைகளும் அப்படி தான். இந்த.. காதல் ரசிக்கும் தன்மை போயிடுச்சுனா அந்த சந்தேகம் எப்பவும் இருந்துட்டே இருக்கும். கவிதை எழுத வராது. சிரிப்பு தான் வரும்.



என்னடா சொல்ல வர அப்படினு கேட்பவர்களுக்கு: ஆக நான் சொல்ல வருவது என்னனா, எனக்கு காதல் - கவிதை எழுத கொஞ்ச நாளா வரலை. அதுக்கு தான் இந்த பில்ட் அப்.

இதுக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

Tuesday, June 03, 2008

வெறியும் பற்றும்

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் என்ன வித்தியாசம்? தன்னால மட்டும் தான் முடியும்னு சொன்னா தலைக்கனம். தன்னாலயும் முடியும்னு சொன்னா தன்னம்பிக்கை (சரி.. சரி.. கஜினில பார்த்துட்டீங்க..)

பற்றுக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம்?

வெறினா உடனே என்ன நியாபகம் வரும்? ஜாதி வெறி. மத வெறி. கட்சி வெறி.. அது தப்புனு உடனே சொல்லிடறோம். (அதுவே தப்பு இல்லைனு நினைச்சீங்கனா.... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! சந்தோஷமா இருங்கப்பு) அது போக நிறைய இருக்கு.

மொழி வெறி: இதுவும் தப்பு தாங்க. மொழி என்பது மனதில் தோன்றும் எண்ணங்கள் பிறரை சென்று அடையும் ஒரு வழி. அவ்வளவு தான். தமிழ்ப்பற்று இருக்கலாம். வெறி இருக்க கூடாது! தமிழ் பதிவுல ஆங்கில வார்த்தை போட கூடாது.. தமிழ் சினிமாக்கு தமிழ் பெயர் வைச்சா வரி விலக்கு.. என்னங்கடா காமெடி பன்னறீங்க!!!!! ;)

கலாச்சார, பண்பாட்டு வெறி: ஒரு முறை ஒரு அரசியல்வாதி சொன்னான் கமலை(நடிகர் கமல்) பற்றி ஒரு பேட்டியில். உதட்டுக்கு உதடு முத்தம் கொடுக்கிறது தமிழ் கலாச்சாரம் இல்லை அப்படினு. (தெரியலை. இவன் ஒரு வேலை கை கொடுக்கிறது தான் முத்தம்னு நினைச்சிட்டு இருக்கானோ?). ஜீன்ஸ் போட கூடாது, கதர் போடனும்னு இன்னமும் சொல்லிட்டு திரியற ஆளுங்க இருக்காங்க. தப்புனு சொல்லலை. கலாச்சார பாசம் இருக்கலாம். நீங்க போடாதீங்க. உங்க பொண்ணை தாவணி கட்டி காலேஜ் அனுப்புங்க. அடுத்தவர்களை கட்டாயப்படுத்த உங்களுக்கு உரிமை இல்லை.

நம்ம மும்பைல காமெடி செய்வாங்க. பார்க்ல காதலர்கள் உட்கார்ந்தா அது இந்திய கலாச்சாரம் இல்லைனு இவனுங்க ரகளை செய்த காலம் உண்டு. ஏன்டா.. பிறந்ததுல இருந்து அங்க தான இருக்க. பாம்பே ரெட்லைட் ஏரியாவை முதல்ல சுத்தம் செய்யறது தான! காதலர்கள் தான் கிடைத்தாங்களா? (திரும்ப எதுவும் செய்ய முடியாதுல.. ஸ்டூடண்ட்ஸ் பவர் மண்ணாங்கட்டி எல்லாம் சும்மா! வெத்து பேச்சு. இந்த லூசு சிம்பு படத்துல தான் பேசிட்டு திரிவான். பார்த்து நம்பிடாதீங்க! உயிரோட நாலு பொண்ணுங்களை எரிச்சப்ப எல்லா காலேஜ் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து கிழிச்சத தான் பார்த்தேன்ல! அட.. சும்மா அமைதி ஊர்வலம் போலாம் வாங்கடானு சொன்னா கூட இஞ்ஜினியரிங் பசங்க எங்க வந்தாங்க!)

உங்க வீட்டுல இருக்கும் வரை நீ உன் கலாச்சாரம்னு சொல்லி கோமணம் கட்டிகிட்டு இரு. We dont care. அடுத்தவங்க எப்படி இருக்கனும்னு நீ சோல்லாத!

1000 வருஷம் முன்னாடி சைவர்களும் வைணவர்களும் அடித்து கொண்டு செத்தார்கள். 500 வருஷம் முன்னாடி சமணர்களை கழுவில் ஏற்றியது சைவமும் வைணவமும். 100 வருஷம் முன்னாடி பொண்ணுங்களை உயிரோட எரிச்சீங்க. (இப்பவும் தான்!). கலாச்சாரம், பண்பாடு என்பது காலத்துக்கு ஏத்த மாதிரி மாற தான் செய்யும்! புரிஞ்சுகோங்க. "மாற்றம் என்பது மானிட தத்துவம்.. மானிட தத்துவம் மகத்துவம் அறிவீர்"... கண்ணதாசன் வரிகள்.(I think so )

தேசிய(இந்திய) வெறி: First, I have to agree i had this for a long time. It took me 3 years staying outside India to cure me out of this. I dont think it has made me less Indian. If anything, now i understand more abt why I am proud to be an Indian. And NO. it doesnt mean I think we are the best, most generous, kind hearted, blah blah blah... greatest culture in the world.

நீங்க காசுக்காக வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வேலை பார்ப்பதை .. Microsoft Runs because of Indians என்றும், தமிழ் மன்னர்கள் மலேசியா மேல எல்லாம் படை எடுத்ததை மறந்து, India never Invaded any country என்றும், முதன் முறையா மதபோதகர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பினது நாம தான் என்பதை மறந்து India never aggresively spread its religion என்றும் சொல்லி chain mail அனுப்பினா உண்மையாகாது!

Without knowing the truth and just blindly following something is similar to the 'Faithfullness' trait of a dog. You dont have to be a human to do it. புரிந்து நேசியுங்க. அது தான் மனிதம். அந்த நேசம் வெறியாகாம பாத்துக்கோங்க. கர்ணன் எவ்வளவு தான் நல்லவனா வல்லவனா இருந்தாலும், அதர்மம்னு புரியாம அவன் வைத்திருந்த நட்பு தான் அவனை கொன்றது.

இப்படி சொல்லிட்டே போகலாம். கடவுள்ல இருந்து காதல் வரை எதுல வெறி இருந்தாலும் தப்பு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!

அப்புறம் இன்னும் ஒரு பரவலான அபிப்பராயம்.. இந்த குறிப்பிட்ட ஜாதி/மதம்/மொழி சம்பந்த பட்டவர்கள் அதுல வெறியா இருப்பாங்கனு. Pls dont generalise. இந்த வெறிக்கு மதம் ஜாதி மொழி தேசம் இதெல்லாம் ஒரு சாக்கு தான்.

வெறி என்பது ஒரு நோய். எப்போ உங்க கொள்கைக்காக அடுத்தவங்க கஷ்டபடுவது தப்பே இல்லைனு நினைக்கறீங்களோ (ஏனா உங்க கொள்கை அவ்ளோ உசத்தில :P) அப்போ உங்களுக்கு அந்த நோய் முற்றி விட்டதுனு சொல்லலாம். உன் கொள்கைக்கு நீ உயிரை கொடு. என்னத்தனா பன்னு. அதுக்கு சம்பந்தம் இல்லாதவரை அது எப்போ பாதிக்க ஆரம்பிக்குதோ.. அப்போ அந்த கொள்கை மேல உள்ள உன்னோட பற்று வெறியா மாறுது. அந்த வெறி உன்னையும் உன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் கெடுதல் மட்டுமே செய்ய முடியும்.

அப்ப வித்தியாசம் வெறிக்கும் பற்றுக்கும் புரியுதாங்க? Any 'நச்' one liners?

Wednesday, May 28, 2008

பொம்மை காதல்

மு.கு: கதை கொஞ்சம் நீளமா போயிடுச்சு.. அதுனால எக்ஸ்ட்ரா கல்லெல்லாம் எரியாதீங்க மக்கா!
---------------------------------------------------

இரகசிய கனவுகள் ..ஜல் ஜல்.. என் இமைகளை தழுவுது.. சொல் சொல்... நூறாவது நாளாக ஒரு நிமிஷம் முழுவதாய் பாடி முடித்தும் செல்பேசியை எடுக்கவில்லை அவள். இன்றோடு சரி. இனிமேல் அவளை அழைக்க போவதில்லை என முடிவு செய்தவனாக, மனசு சரியில்லாமல் 7த் கிராஸில் இருக்கும் பார் ஒன்றுக்கு நண்பனையும் வர சொல்லிவிட்டு கிளம்பினேன்.

வருகின்றேன் என சொன்னவனை தேடிக்கொண்டிருந்தன என் கண்கள். அப்பொழுது தான் அந்த சப்தம் கேட்டது.
'ஹார்ப் இருக்கா?'
அட, நமக்கு பிடிச்ச பிராண்ட் என திரும்பி பார்க்க, அவனும் திரும்பி பார்த்தான். 25 வயதுமிக்க இளைஞன். முழுக்கை சட்டை, டை என பக்காவாக உடை அணிந்து இருந்தான்.
ஒரு கணம் கண்கள் சந்தித்துக்கொண்டன.
'வாங்க சார், இந்த டேபிள்ல நான் மட்டும் தான இருக்கேன்.. நீங்களும் வாங்க'
சரி, வருவதாக சொன்னவனை தான் காணோம். 'பார்'இல் மட்டுமே பூக்கும் விநோத நட்பில் ஒன்றாக போகட்டும் என்று அவன் அருகில் சென்று அமர்ந்தேன்.
'ஹாய்.. ஐ ஆம் சூர்யா'
'நான் மதன் சார். ICICI பாங்கில் அக்கவுண்ட் மேனஜராக இருக்கின்றேன். cross cut ப்ராஞ்ச் தான். கண்ணன் டிபார்ட்மண்ட்டல் ஸ்டோர் எதிர்ல..' இப்படியாக அவன் முழு நீள பயோடேட்டாவை உள்ளே ஏத்தி இருந்த சரக்கு வெளியே கொண்டு வந்தது.

திடீரென கேட்டான்.
'காதலிச்சு இருக்கீங்களா சார்'
'ஹ்ம்ம்.. ஆமா...' அவள் என்னோடு பேசி கிட்டதட்ட மூன்று மாதம் ஆகுது. அந்த சோகத்தில் தான் நான் இங்கே வந்திருப்பதை சொன்னேன்.
'என்ன சார் பிரச்சனை உங்களுக்குள்ள'
வெளியாளிடம் அதிகம் சொல்ல விரும்பாமல், சும்மா ஆரம்பித்த சண்டை, ஈகோவில் சிக்கி, காரணமில்லாமல் நீண்டு இப்பொழுது அவள் என்னோடு பேசாமல் இருப்பதும், இனி நானும் அப்படி தான் இருக்க போவதாக எடுத்த முடிவையும் சொன்னேன்.
'அப்படி எல்லாம் விடக்கூடாது சார்.. என்ன இருந்தாலும் அது நம்ம காதல்... நம்ம காதலை நம்மளும் கைவிட்டுட்டா அது அநாதை ஆயிடும்ல..'
'...'
'காதல் கூட குழந்தை மாதிரி தான் சார்.. அது பிறந்து கொஞ்ச காலம், நாம தான் அத கவனமா பார்த்து வளர்க்கனும். விட்டுடோம்னா, அது செத்துடும்.. இல்லை அநாதை ஆயிடும்.. அதே காதல், கொஞ்ச நாள் கழிச்சு, அதை வளர்த்த உங்களையும் உங்க காதலியையும் கையை கெட்டியமா பிடிச்சு சேர்த்து நடக்க வைக்கும்.. ஆனா அதுக்கு நிறைய நாள் ஆகும்...அவ விட்டுட்டு போயிட்டாள் என்று நிங்களும் போயிட்டா?'
'ஹ்ம்ம்..மதன்.. தூங்கிறவங்களை தான் எழுப்ப முடியும்.. தூங்கிறவங்களை போல நடிக்கிறவங்களை எழுப்பவே முடியாது.. காலம் ஆற்ற முடியாது காயம் எதுவும் இல்ல மதன்.. கொஞ்ச நாளுல சரியாகி விடுவேன்..'
'அப்படி இல்லை சூர்யா. இப்போ அப்பா, அம்மா, குழந்தைனு 3 பேர் இருக்கும் ஒரு குடும்பத்தில், குழந்தை இறந்திட்டா, ஒரு 5 வருஷம் கழிச்சு அந்த குடும்பத்தை பார்த்தால், இன்னொரு குழந்தை இருக்கலாம். சிரிச்சிட்டு கூட இருக்கலாம். ஆனா, இழந்த அந்த குழந்தைய நினைச்சு வேதனை அவங்களுக்கு இல்லை. மறந்துட்டாங்கனு சொல்லறது எப்படி மடத்தடமோ, அது தான் காதலுக்கும்... புதைக்கலாம்.. ஆனா அந்த வலி கண்டிப்பா இருக்கும்.. ........நீங்க இன்னும் முயற்சி செய்யனும் சார்'
'அதுவும் சரி தான்'

'....'
சில நிமிட மௌனங்களில் இன்னொரு கிளாஸ் காலி செய்தான்.

'நானும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் சார்'
'அப்படியா? ம்ம்ம் ....உன் கதைய சொல்லு'
'பேர் தெரியாது சார். அவ என் கூட இதுவரை பேசினதே இல்லை'
புருவம் உயர்த்தினேன்..
'ஆமா... காதலிக்க ஆரம்பிச்சு ஒன்றரை வருஷம் ஆகுது..'
'ஹ்ம்ம்... அப்' இடையில் செல்பேசி அடிக்க ஆரம்பித்தது. நண்பன் தான். என்னை அவசரமாய் வெளியே வர சொன்னான். மதனிடம் சொல்லிவிட்டு, என் செல் நம்பரும், காசும் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

'டேய், கடைக்கு வந்துட்டு ஏன்டா வெளிய நின்னுட்டு இருக்க'
'அது சரி.. நீ முதல்ல ஏன் அந்த லூசு டேபிள்ல உட்கார்ந்துகிட்டு இருக்கனு சொல்லு?'
'லூசா???'
'ஆமாம்டா.. அரை பைத்தியம். பாங்கில் வேலை செய்யறான். ஆனா, வேலைக்கு போகும் முன், தினமும் காலையில் பக்கத்தில் இருக்கும் ஆலூக்காஸ் ஜெவல்லரி டிஸ்ப்ளேவில் இருக்கும் மாடல் பொம்மைக்கு ரோஜாப்பூ வைப்பான். ஐ லவ் யூ சொல்லுவான்.... சாயங்காலமும் செய்வான்.. கேட்டால் அது தான் என் காதலினு சொல்லுவான்! லோக்கல் நியூஸ்ல கூட கொஞ்ச நாள் முன்னாடி வந்துச்சேடா. ஒன்றரை வருஷமா இதே அலப்பரை தான்..'
என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றேன்..
'இதுக்கே திகைச்சிட்டியே.. இவன் போன வேலன்டைன்ஸ் டேக்கு என்ன செய்தான் தெரியுமா..' என கதை பேச ஆரம்பிக்க, அப்படியே கிளம்பினோம்..

மறுநாளில் இருந்து முடிவெடுத்தப்படி , நானும் அவளை அழைக்கவில்லை.

சில மாதங்கள் கழித்து

இன்னமும் அவள் வந்து பேசவில்லை. நானும் அவளை மறக்க பல முயற்சிகள் எடுத்து தினமும் தோற்றுக்கொண்டிருந்தேன்.

அன்று அதே பாருக்கு அதே நண்பனை வரச்சொல்லி இருந்தேன். அங்கே சென்றதும், சென்ற முறை அவன் அமர்ந்திருந்த டேபிளில் அவனை கண்கள் தேடின. காணவில்லை.
'என்ன சார்.. மதன் சாரை பார்க்கறீங்களா' பார் செர்வர்.
'ஆமாம்பா'
'அவர் யோக காரர் சார்.. பைத்தியம் கணக்கா பொம்மையை டாவடிச்சிட்டு இருந்தாரு. கடசில நிஜத்தில அந்த பொம்மைக்கு போஸ் கொடுத்த மாடல் பொண்ணுக்கு விஷயம் தெரிந்து, வந்து பார்த்து, லவ்ஸ் ஆகி, கல்யாணம் செய்துகிட்டு.... இப்போ சென்னையில் இருப்பதாக கேள்வி சார்'

கேட்டதும், என்னையும் அறியாமல் சிரித்தேன்.. ஏனோ அழ தோன்றியது. அதனால் சிரித்தேன்.

போதுமான காதல் இருந்தால், தூங்குவது போல் நடிப்பவர்களை மட்டும் அல்ல, இறந்து போனவர்களையும், உயிரற்ற பொம்மையையும் கூட உயிரூட்டி எழுப்பி விடலாம் என அவன் சொல்லாமல் சொல்லி சென்றதாக பட்டது.

உடனே அவள் செல்பேசிக்கு அழைப்பதென முடிவு செய்தேன்.. இன்னமும் அதே ரிங்டோன் பாடல் வைத்திருந்தாள்... ஒலிக்க தொடங்கியது...
இரகசிய கனவுகள் ஜல் ஜ
'ம்ம்ம்' பதில் எதிர்முனையில்.
அந்த விநாடி, மகரத்தை இதை விட அழகாய இசைக்க கூடியவர் எவரும் இல்லாமல் போனார்கள். என் மனதையும் தான்!

அந்த அதிர்ச்சியில் சட்டென்று முழிப்பு வந்தது. கனவு மட்டுமே தரும் ஏமாற்றம் மனதில் மெதுவாக படர தொடங்கியது. என்றைக்கோ பாரில் பார்த்தவன் மதன். அவனுக்கு கல்யாணம் ஆச்சு என்றெல்லாம் கனவு வருதே என சிரித்துக்கொண்டேன். என்னவள் குரல் பல நாட்கள் கழித்து கனவிலாவது கேட்டது, மனதை மெதுவாக குளிர செய்தது.

விடியக்காலை கண்ட கனவு பலிக்கும் என்பார்களே.. அதனால், பல மாதம் கழித்து அன்று அவள் செல்பேசிக்கு அழைத்துப்பார்த்தேன். 'தாங்கள் அழைத்த தொலைபேசி எண் தற்போது உபயோகத்தில் இல்லை' பதிலாய் கிடைத்தது!

அதன் பின் என் நண்பனை அழைத்து மதனை பற்றி விசாரித்தேன்.
'ஓ அந்த பைத்தியமா, அவனை சிகிச்சைக்கு கேரளாவிற்கு அவன் பெற்றோர் அழைச்சிட்டு போயிருக்காங்கடா.. போய் ஒரு இரெண்டு மாதம் ஆகும்.. ஏன் கேட்கிற' என்றான்.

என்னையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. சிரிக்க தான் தோன்றியது. அதனால் அழுதேன்.

Monday, May 26, 2008

காதல் முகமூடி (அழகிய கவிதை -VII)

மு.கு: இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை
5. ஒற்றை வலி கவிதை
6. விழிக்கத்தி




விரதங்களின் முடிவு
பசியும்..
காதலின் முடிவு
பிரிவும்..
காத்திருப்பில் கலைந்த மேகங்கள்!

வானமாய் நானிருந்தாலும்
சிறு சிறு கோடுகளில்
என்னை அழகாக்கும்
வர்ணவில் நம் காதல்..



"இப்படியே பின்னால சுத்திட்டு இரு..
உனக்கு பைத்தியம் தான் பிடிக்கும்"
அது சரி.. அப்பொழுதாவது
பைத்தியத்தை உனற்கு பிடிக்குமா?





அழகான உன் கோபங்களில்
ரசித்து மடியும்
விட்டில் பூச்சியாய்
நானும் என் காதலும்..

இடிகள் இடித்தாயிற்று
மின்னலும் வெட்டிவிட்டது
இனி..
மழை விழத்தானடி
மனம் காத்திருக்கிறது..



காதல் முகமூடி...
வெளியே சிரித்துக்கொண்டே
உள்ளே அழ கற்றுத்தரும்..
காதலின் வரம்.

'அழகிய கவிதை..'
சொல்லிக்கொண்டே..
படித்து விட்டு
கிழித்தும் எறிந்தாய்..
--------------------------------------------------------------------------------
பி.கு: இத்துடன் அழகிய கவிதை நிறைவு பெறுகின்றது.

Tuesday, May 13, 2008

கண்ணை விட்டு



கண்ணை விட்டு கண்ணிமைகள்
விடை கேட்டால்
கண்கள் நினையாதா?

என்னை விட்டு உன் நினைவை
நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?

ஏதோ ஏதோ
எந்தன்
இதயத்தை அழுத்தியதே..

அதோ அதோ
எந்தன்
உயிரையும் கொளுத்தியதே..

எந்த ஒரு இனிமையும்
எனக்கென்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்..

உன்னை விட்டு தன்னந்தனி
பாதை ஒன்று எனற்கில்லை
என்னிடத்தில் ஏன் கோபம்..

போதுமடி இந்த தொல்லை
என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண்மௌனம்..

பி.கு: கேட்டதும் பிடித்ததால் இங்கே..

Friday, May 09, 2008

குருவியும் குட்டையை குழப்பும் விமர்சனங்களும்...

மு.கு1: மக்கா, கொஞ்ச நாளா வேலை ஜாஸ்தி. அதான் அதிகம் வரல இந்த பக்கம்... வருவேன்...

மு.கு2: இது எவருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. ஏற்கனவே சில பதிவர்கள் இப்படத்தை பற்றி தங்கள் கருத்தை சொல்லி உள்ளனர். அதே போல் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அவ்வளவே...

மு.கு3: நான் விஜய் ரசிகன் அல்ல. நான் ரஜினி ரசிகன். நமக்கு ஒரே தலைவரு தான்! அவரு பேரு சொன்னா.. சும்மா அதிருமில்ல....

மு.கு4: விஜய் இப்பதிவை எழுத காசி கொடுக்கவில்லை :P (அண்ணா, கொடுக்கிறதுன்னா சொல்லுங்க, account number அனுப்பி வைக்கிறேன் ;) ) அதே மாதிரி, த்ரிஷா செம க்யூட் அப்படினு நினைக்கும் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை ;)
------------------------------------------------------------------------


குருவி.. உயர பறக்கும் என பார்த்தால் குட்டையை குழப்புகிறது. படம் மோசம் -- இந்த பாணியில் தான் பத்திரிக்கைகளும், பொதுவாக பதிவர்களும் விமர்சனம் எழுதி, கிண்டலடித்து உள்ளன. இதெல்லாம் படித்து விட்டு, சரி படத்துக்கு போக வேண்டாம் என தான் முடிவெடுத்து இருந்தேன். ஆனா, எங்க பக்கத்து வீட்டுல, ஒரு தீவிர விஜய் ரசிகை இருக்காள். பொண்ணுக்கு எட்டு வயசு. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் US தான். அவ்வளவா தமிழ் படம் பார்க்க மாட்டா. ஆனா, விஜய் என்றால் பிடிக்கும். இணையதளத்தில் விமர்சனங்கள் படித்து அவளை அழைத்து செல்ல யாருக்கும் தைரியம் இல்லாததால், நான் அழைத்து சென்றேன்.

படமும் பார்த்தாச்சு. பார்த்து முடிச்சதும் முதலில் மனதில் பட்டது, எதுக்கு இவ்வளவு நெகட்ட்டிவ் விமர்சனங்கள் படத்தை பற்றி? என்பது தான். அட ஆமாம்ப்பா, ஒத்துக்கொள்கின்றேன். படத்தின் ஸ்டண்ட்டுகள் நம்ப முடியவில்லை. லாஜிக் இடிக்குது. எல்லா விஜய் படத்திலும் இருக்கும் தீம் எட்டி பார்க்குது. காமெடி சரியில்லை. விவேக் இரட்டை அர்த்த வசனம் பேசுகிறார். க்ளைமாக்ஸ் கொஞ்சாம் நீளம். வயலன்ஸ் ஜாஸ்தி.

So?

விஜய் படமுங்க! பேர பார்க்கல? தமிழ் படங்களில் ஸ்டண்ட்டுகள் நம்பும் படி எதில இருந்து இருக்கு? இல்ல லாஜிக் இடிக்காம எந்த படம் வந்து இருக்கு? (டாகுமெண்ட்டரி படங்கள் பத்தி பேச வேண்டாம் :P) எல்லா படத்திலும் விவேக் ஏதாவது இடத்தில் இரட்டை அர்த்த ஜோக்குகள் சொல்ல தான செய்யறார்!

என்ன நினைச்சீங்க? விக்ரம், கமல் , சிவாஜி மாதிரி.. விஜய்யோட ஆக்டிங் பெர்வார்மன்ஸ் பார்க்கவா போனீங்க? For Gods sake, he is an Entertainer. அவன் அப்படி தான் நடிப்பான்! ஏனா விஜய் is more to an entertainer side than he is to an actor side!!! இன்னுமா தெரியாது உங்களுக்கு?

ஏன் பத்திரிக்கைகள் இப்படி வாரி விடுகின்றன? எதுக்கு இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்கள். இந்த விமர்சங்கள் ஒரு பதிவுக்கு வரும் கமெண்ட் மாதிரி. முதல்ல ஒருத்தன் ஒன்னு சொன்னா, உடனே எல்லாரும் அதையே சொல்லவேண்டியது!

பாடல்களை கொஞ்சம் இனிமை ஆக்கி இருக்கலாம். அதை தவிற The film was entertaining. I went for a Vijay movie. and i got one. நான் என்ன அவன் ஆஸ்கார் ரேஞ்சுக்கு நடிப்பான். நான் படம் பார்த்து அப்படியே செண்ட்டி ஆகி அழனும்னா போனேன்!

அட சரி, சட்டையை கழட்டி சண்டை போடுறான். ஏன் ரஜினி செய்யலயா? எதுக்கு எல்லாருக்கும் வெவ்வேறு அளவுகோல்? அட தனுஷும் சிம்புவும் செய்யாத காமெடியா??

நக்கல் பன்னறது வேற. but it is different to kill a film by negative comments through out the media and internet!

இறுதியா, திரும்ப ட்ரைவ் செய்து வரும்போது, அந்த குட்டிப்பொண்ணு, "ஐ லைக் விஜய்.. படம் நல்லா இருந்துச்சுல்ல" அப்படினு சொன்னா. அப்ப யோசிக்க ஆரம்பித்தது தான் இதெல்லாம்! இனிமே படம் பார்க்கும் முன் அதை பற்றி பதிவுகளையோ, விமர்சனங்களையோ படிக்க கூடாது போல!

என்னமோ "பெரியார்" ரேஞ்சுல படம் எடுத்தா மட்டும் நீங்க பார்த்து ஓட வைக்க போறீங்களா.... ஒருத்தன் காமெடியா ...I mean entertaining ஆ படம் எடுத்தா உங்களுக்கு பிடிக்காதே! (அண்ணா, இதுல எந்த உள்குத்தும் இல்லைனா! அட..உங்களை வைச்சு காமெடி எதுவும் செய்யலனா!)

எனக்கு படம் பிடிச்சு இருந்தது. இதற்கு முந்தைய விஜய் படங்களில் இல்லாத எதுவும் இந்த படத்தில் புதுசா இல்லை! இது ஒரு விஜய் படம்!




அப்புறம் த்ரிஷாவும் இருக்காங்க!

Sunday, April 27, 2008

அழகு குட்டி செல்லம்

இந்த கதை ஆரம்பிச்சது கொஞ்சம் பலமா காற்று வீசின அந்த நாளில். அப்போ தான், எங்க பேக்யார்ட் கதவு ஒன்னு, உடைந்து போனது. அடுத்த வாரம் மாற்றனும்னு ஒரு மாதமா சொல்லிட்டு இருக்கேன்! நேரம் தான் கிடைக்கல ;) (அட நிஜமா நான் ரொம்ப பிஜிங்க.. நம்புங்கனா..)

<>

சரி, நம்ம செடிக்கெல்லாம் தண்ணீர் ஊற்றலாம் என்று (யாருப்பா அது பக்கத்து வீட்டு வெள்ளைகாரிய சைட் அடிக்கனு தப்பா சொல்றது) வெளியில் வந்த எனற்கு சின்ன ஹார்ட் அட்டாக்! ஒரு குட்டிப்பொண்ணு, ஒரு நாய்க்குட்டி ரொம்ப ஜாலியா எங்க வீட்டு பின்னால விளையாடிட்டு இருக்காங்க! ஆஹா! என்னடா இது அப்படினு சுற்றும் முற்றும் யாரும் இருக்கார்களா என்று பார்த்தால், யாருமே இல்லை.

இதுக்கு முன்ன இந்த குழந்தையை நம்ம சுத்து வட்டாரத்துல பார்த்ததே இல்லை! சைனா சாயல் குழந்தை. சரி என்று வெளியில் சென்று குழந்தையிடம் பேச்சு கொடுத்தோம். நாய்க்குட்டியும் சரி அந்த பொண்ணும் சரி உடனே ஒட்டிக்கொண்டார்கள் என்னிடம். என்ன, பெயர் கேட்டால் தான் சொல்லவில்லை!

"What is your name"
'No'
"Does your mom know you are here?"
'No'
"Where is your house. Do you want to come out and show me"
'No'
"What you want to do?"
'Play Doggie'
"What is your name"
'No'

என பதில் சொல்லும் தெளிவான குழந்தை! நான் வெளியில் அவர்கள் பெற்றோர் இருக்கார்களா என தேட செல்கையில்

'Where are you going?'
"I am looking for your parents"
'Ok. come back soon'
"....."

முக்கால் மணி நேரம் ஆயிற்று. யாரும் வந்தாப்ல இல்ல. குழந்தையை தேடி. இவ்ளோ நேரமா குழந்தைய காணோம். இப்படியா இருப்பாங்க. சரி இன்னும் 15 நிமிஷம். யாரும் வரலை என்றால், போலீஸை அழைப்பதாக முடிவு செய்தோம்.

10 நிமிஷம் கழிச்சு, ஒரு சைனா ஜோடி,
'Sophiaa..'
என கத்திக்கொண்டே ரோட்டில் வந்தது. அப்புறம் என்ன, அந்த அம்மா ஒரே அழுகை, அவர் நன்றி சொல்ல, என்னை வீட்டுக்கு விளையாட வருமாறு அழைத்துவிட்டு பை பை சொல்லி சிரித்துக்கொண்டே சென்றாள் Sophia!

சரி, இது நடக்கும் பொழுதே, பதிவிடலாம் என முடிவு செய்வதால், செல்லில் க்ளிக்கியது தான் மேல் உள்ள புகைப்படம்!

----

முக்கால் மணி நேரம் குழந்தை காணாமல் போனது தெரியாமல் என்ன தான் செய்வார்களோ! ஏதோ எங்க வீட்டுக்கு வந்ததால் சரி. வார இறுதி ஆனால், தண்ணி அடித்து தாறு மாறாக கார் ஓட்டுபவர்களும் அதிகம்! இந்த ஊர் வேறு ஒரு மாதிரி ஊர்! என்னத்த பிள்ளைய பெத்து...

இதுக்கு நடுவில எங்கம்மா ஐடியா வேற, போலீஸ் வந்தும் யாரும் வரவில்லை என்றால், குழந்தையை நாமே வளர்க்கலாம் என்று! (நான் உடனே, நாய்க்குட்டு மட்டும் வேணும்னா வளர்க்க ஓகேனு சொன்னோம்ல!!) கலிகாலம்!

Wednesday, April 23, 2008

விழிக்கத்தி (அழகிய கவிதை VI)

இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை
5. ஒற்றை வலி கவிதை
6. விழிக்கத்தி



எழுத்து அறிவித்தவன்
இறைவன் ஆவான்
கண்ணீரை கற்று தந்தவள்
காதலி ஆவாள்

இரவு முழுதும்
இனிய கனவுகள் தரும்
காதல்..
விழிகள் நெடுக
முட்கள் தைத்து தூங்க சொல்வாள்
காதலி..

சிந்தனை சிறையில் இருந்தேன்..
'ஹலோ.. என்ன பகல் கனவா?'
கனவே வந்து தட்டி எழுப்பியது
நான் ஒருவனாகத்தான் இருக்கமுடியும்!



ஓராயிரம் யானைகள் கொன்றால்
பரணியாம்!
என்னாயிரம் கனவுகள் வென்றதால்
காதலியோ?

மொழிகளற்ற கவிதை
உனற்கான என் காதல்...
எப்படி சொல்லுவேன் அதை
ஒற்றை மொழி கவிதையில்..



எதிரே நடக்கையில்
ஏதேச்சையாக
உந்தன் விழிக்கத்திகளை
வீசி செல்கின்றாய்..
தன் மேல் தான் எறிவதாக சொல்லி
துடிக்க மறுத்து அடம் செய்கின்றது
எனது இதயம்!

நீ நடந்து என் பக்கம் வர
உன் காலடி தடங்களில்
தெரிந்த காதல் சுவடுகள்..
நீ என்னை விட்டு விலகி
செல்லும் தடங்களில் மட்டும்
தெரியாமலேயே போனது..
நிழல்கள் தங்கிவிட
நிஜங்கள் நீங்கிவிடுமோ?



ஓர் நாள் ஓர் மாதம்
என குறித்து வைத்து சொன்னாலும்
எல்லா நாளும் எல்லா மாதங்களும்
எனை குறித்து வைக்காமலேயே
கொன்று போகுது உன் காதல்.

இன்னும் ஒரு வருடம் வரும்
இன்னும் ஒரு காதலர் தினம் வரும்
இன்னும் ஒரு காதல் கூட வரலாம்..
ஆனால்..
நீ வரத்தானடி நான் காத்திருக்கின்றேன்..


--
பி.கு: கடைசி இரண்டு கவிதைகள், காதலர் தினம் ஒட்டி எழுதியது. வெளியில சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

Saturday, April 19, 2008

Once a Papa!

அட! சும்மா இருந்த என்னை பாட்டு, பாடனும்னு நம்மளை வைச்சு காமெடி செய்ய பார்க்கிறார் ஸ்ரீ!. சரி! இது ஒரு டேக்! நீங்க பள்ளி பாடத்துல படிச்ச பாடின பாட்டெல்லாம் போடனுமாம்! இப்படினு சொல்லிட்டு, எனக்கு தெரிஞ்ச அம்மா இங்கே வா வா பாடலை ஏற்கனவே சொல்லிடாங்க! எனக்கு சின்ன வயசுல பிடிக்கிற பாடல் எல்லாம் ரேஞ்சா தான் பிடிக்கும்.. பூப்போட்ட தாவணி... நேத்து ராத்திரி யமமா டைப்ல! அதெல்லாம் சொல்ல முடியுமா! அதுனால, நம்ம வாத்தியார் நடித்த அன்பே வா படத்துல எனக்கு பிடிச்ச பாட்டு ஒன்னு சொல்லிகிறேன்!

Once a Papa
Met a Mama
In a little Tourist Bus
என்னடி பாப்பா
சொன்னது டூப்பா
கன்னம் சிவந்தது
What is this!

My dear பாப்பா
காலையில் டோப்பா
What about the Hair oil
ஈவினிங் ப்யூட்டி
என்னடி ட்யூட்டி
meet me in the boardmail!



பி.கு: வழக்கம் போல ரூல்ஸ் எல்லாம் கண்டிப்பா தெரியனும்னா லீங்க்ல போய் பார்த்துகோங்க மக்கா! நான் நல்ல மூட்ல இருப்பதால, யாரையும் டேக் செய்யாம விட்டுடறேன்!

Sunday, April 13, 2008

இன்னும் ஒர் வருடம்..

இன்னும் ஒரு வருடம் முடிய இன்னும் ஒரு வருடம் தொடுங்குது! அதனால நான் எல்லார்க்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லிகிறேன்!

சர்வசித்து வருடம் முடிந்து, சர்வதாரி வருடம் ஆரம்பம் ஆகுது!



ஏவிய அம்பாய் இடர்கள் மறைந்திட
தாவிய மானென தாக்கள் பறந்திட (தா = வருத்தம்)
தூவிய பூவாய்ச் சுகங்கள் மணந்திட
பாவிய ஆலென பண்பு பரவிட
மேவிய வண்ணமாய் மெய்யருள் கூடிட
ஓவிய மென்றெம் உலகு சிறந்திட
காவிய கீத கலையுடன் ஓங்குக
மாவிய ஆண்டில் வளம்!

பி.கு: மக்கா, அர்த்தம் கேட்காதீங்க! நான் எழுதினது இல்ல! சும்மா நல்லா இருக்கேனு G3 செய்துட்டேன்!

Saturday, April 05, 2008

ஒற்றை வலி கவிதை (அழகிய கவிதை V)

இதற்கு முந்தைய அழகிய கவிதைகள் இங்கே.
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே
4. கவிதைகளின் கவிதை



ஒற்றை வரி கவிதை
காதல்
ஒற்றை வலி கவிதை
காதலி..

காதலில் என்ன பிடிக்கும்?
காத்திருத்தல்...
அதில் தான்
காதல் திருத்தமாக எழுதப்படும்



எத்தனை நாள் காத்திருந்தாலும்
மழையை வேண்டத்தான் செய்யும்
வரண்ட பூமி..
நானும் என் காத்திருப்பும் கூட
அப்படி தான்..

காதல் மொழி..
நீ வரும் வரை
துடித்து கொண்டிருக்கும்
என் இதயம்
நீ வந்ததும்
அதிர தொடங்குவது



"உனக்கு என்ன சாமி பிடிக்கும்டா?"
'காதல் சாமி'
"அது எங்க இருக்கு?"
'என் கண் முன்னாடி'
வெட்கிச்சிரிக்கின்றாய்..
அட உண்மை தான்..
நீ என்னை பார்த்திருக்கையில்
காதல் saw me தானே!

'உன் காதல் எவ்வளவு ஆழம்டா"
'ஐந்து அடி, மூன்று அங்குலம்'
'ஹையே..'
பழித்து காட்டியே
பறித்தும் கொள்கின்றாய்
என்னையும் என் கனவுகளையும்.



பட்டு மோசடி..
நீ தீண்டவென
உயிர் துறந்த
பட்டுப்பூச்சியின் நூற்புடவையை
எவனோ ஒருவன்
விலை போட்டு
உன்னிடமே விற்பது!

கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர ஆராய்ந்தால் மட்டுமே மெய்யாம்..
விரல் தீண்டும் தூரம் வா
தேவதைகள் மெய்யா பொய்யா?
பார்க்கலாம்..

Tuesday, April 01, 2008

கடவுள் நிஜம் தான்

மு.கு: இன்னைக்கு நம்ம ஸ்பெஷல் நாள்.. பதிவு போடாம இருக்க முடியுமா? ;).. நம்மளை பத்தி நமக்கே தெரிந்து இருந்தா அடுத்தவங்க நம்மளை தேவை இல்லாம புதுசா முட்டாளாக்க முடியாது பாருங்க. அப்புறம் என்ன..எல்லாருக்கும் வாழ்த்துக்கள்.
---------------------------------------------------------------------


எனக்கு ஒரு சந்தேகம். உங்கள் கண் எதிரில் ஒரு தவறு நடந்து அதை நீங்கள் தட்டி கேட்க தவறினால, அது உங்களை சேரும் பாவமா? .... நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க இந்த கூத்து நிறைவேறியது. இது என் தவறா?

அது ஒரு அழகிய கிராமம். சற்று பசுமை மறந்த வயல்வெளியின் அருகே நடந்தேறியது இந்த சம்பவம்.

'இந்த முறையும் பொட்ட புள்ளையா பிறந்தா, வாயில நெல்மணிய போட்டு முடிச்சுடு. என் கண்ணுல காட்டாத' வயதான பாட்டி ஒருத்தி உரத்த கத்தி கொண்டு இருந்தாள்.
அட.. என்ன நடக்குது என வீட்டிற்க்குள் எட்டி பார்த்தேன். ஒன்னு, இரண்டு, மூனு என வரிசையாக மூன்று பெண் குழந்தைகள் சுவறோரம் முகம் வீங்கி அமர்ந்து கொண்டிருந்தன. அழுததால் முகம் வீங்கி இருந்ததா இல்லை பசியினால் முகம் வீங்கி இருந்ததா என தெரியவில்லை.

'ஆத்தா, இந்த முறை மட்டும் பொட்டை புள்ளை பிறக்கட்டும்.. அப்புறம் வைச்சுகிறேன் அந்த ...' என கெட்ட வார்த்தையும் சகிதமுமாய், சாராய நெடியுடன் ஒருவன். குடும்ப தலைவன் போலும்.

திரை மறைக்கப்பட்டு பின்னால் ஒருத்தி பிரசவ வலியினால் துடித்துக்கொண்டிருந்தாள். அருகே மருத்துவச்சி ஒருத்தி, துணையாய் இருந்தாள். நான் என்பதால், அவர்களிடம் அனுமதி கேட்காமலேயே எட்டி பார்த்தேன். அவள் துடிப்பதை பார்த்தால் இதுவும் பெண் குழந்தை தான் என எனக்கு தோன்றியது. சில நேரம் கழித்து, குழந்தையும் சுகமாய் பிறந்தது. என் யூகம் போலவே பெண் குழந்தை தான். என் யூகம் எப்பொழுதும் பொய்யானதே இல்லை!

'ங்ஏஏஏஏ' என அழுது கொண்டு இருந்த அவளின் பிஞ்சு விரல்களை தொட்டுப்பார்த்தேன். என் ஸ்பரிசம் பட்டதும் அழுவதை சட்டென்று நிறுத்தியது குழந்தை. யாரும் கவனிக்கவில்லை.

அழுகை நின்ற நிசப்தத்தில் 'என்னங்க வேணாங்க.. பச்சை குழந்தைங்க...' என முடியாமல் முனகி கொண்டிருந்த தாயின் முனகல் கேட்டது. அவள் கண்களில் கண்ணீர் அரும்ப ஆரம்பித்து இருந்தது.

'இதுவும் பொட்டையா, உன்னை கட்டிகிட்டதுக்கு எனக்கு வேணும்டி. என்னை கொலைகாரனா ஆக்கிட்டல... நீ ...' என கெட்ட வார்த்தையால் திட்டி கொண்டே, குழந்தையை பிடுங்கி சென்றான். என் ஸ்பரிசம் நீங்கியதில் குழந்தை மீண்டும் கத்த தொடங்கியது. 'மகமாயி என் புள்ளையை காப்பாத்து...' எனும் தாயின் கதறல், அந்த சப்தத்திலும் எனற்கு கேட்டது.

நான் அவளை விட்டு விட்டு, அவனை பார்க்க ஆரம்பித்தேன். அவன் நேராக அந்த குழந்தையின் முகம் கூட பாராமல், கிழவியிடம் செல்ல, கிழவி, பல முறை செய்த பழக்கத்தில், நெல்மணி கொண்டு குழந்தையின் அழுகையை நிறுத்தினாள் நிரந்திரமாக. அழகான குழந்தை உயிரற்ற பிணம் ஆயிற்று.

இதற்கு முன்பு பார்த்திருந்தாலும், ஏனோ மனசு கனமாக அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். இப்பொழுது சொல்லுங்கள். என் மேல் தவறா? நான் தடுத்து இருக்க வேண்டுமோ?

எப்படியோ.. அதை விட்டு விட்டு நகரத்திற்கு வந்தேன். ஸ்கூல் ட்ரெஸ்ஸில் ஒரு 4ஆம் வகுப்பு சிறுமி ஒரு கோவிலின் முன் நின்று 'சாமி, இன்னைக்கு எனக்கு எக்ஸாம் இருக்கு. நீ தான் என்னை பாஸ் செய்ய வைக்கனும்' என வேண்டிக்கொண்டிருந்தாள்.

எனற்கோ 'மகமாயி.. என் புள்ளையை காப்பாத்து' என கெஞ்சிய அந்த தாயின் ஞாபகம் தான் வந்தது. திடீரென்று சிரிக்க தொடங்கினேன்..... மழை கொட்ட தொடங்கியது.

நான் கடவுள்.

----------------------
பி.கு: Story Inspired by http://godisimaginary.com/. Even though the Site talks mainly about western religions, obviously the reasoning can be cross applied acros all religions. Well, today happens to be April 1st. What better date to bring out how we are fooling ourselves! (Doesn't mean I am going to stop fooling myself)

Tuesday, March 25, 2008

காதல் பிறந்த கதை

மு.கு: மக்கா, இந்த கதை காதல் கதை. அழுகாச்சி கதை இல்ல. அதுனால தைரியமா படிங்க! ஓகேவா.. அருணாக்கா, சீக்கிரமா கவிதை எழுத கண்டிப்பா முயற்ச்சிக்கின்றேன். ஸ்ரீ நீ கேட்ட சந்தோஷமான முடிவும்!
---------------------------------------------------------------------


என்னைகாச்சும், நமக்கு வாழ்க்கையில நடந்ததை யோசிச்சு, மறந்துபோன முக மனிதர்கள் நியாபகம் வந்து, அவிங்க மேல திடீர்னு காதல் வருமா? எனக்கு அப்படி தான் வந்துச்சு. அட, என்னடா அது நமக்கு மட்டும் ஒரு பிகரும் சிக்க மாட்டேங்கிது அப்படினு, என் வாழ்க்கையில் இதற்கு முன் சந்தித்த பெண்களை எல்லாம் திருப்பி பார்த்து கொண்டிருந்தது என் மனம்.

முதன் முதலா, அட இந்த பொண்ணு அழகா இருக்கா என்று தோன்றிய 8ஆம் வகுப்பு ஸ்ரீவித்யா.. பசங்களும் பொண்ணுகளும் கலந்து உட்கார்ந்த வகுப்பறையில் என்னை வாடா போடா என்று பேசிய என் ஒரே ஸ்கூல் தோழி 6ஆம் வகுப்பு கிருத்திகா (அட.. அதுக்கு பின்னால பன்னி கழுதைனு எல்லாம் சொல்லுவா.. அதெல்லாம் எதுக்கு).. நான் கடன் வாங்கிய ஸ்கேலை தொலைத்து விட்டேன் என என்னை அடித்த 3ஆம் வகுப்பு குண்டு குட்டிப்பெண்.. அவளிடம் இருந்து என்னை காப்பாற்றிய என் 3ஆம் வகுப்பு உயிர் தோழி.. அவள். பெயரும் முகமும் மறந்த போனவள்.

இவளை பற்றி சொல்லியே ஆகனும். நான் அந்த ஸ்கூலில் ஒரே வருடம் படித்திருந்தாலும், புதிதாய் போய் சேர்ந்த இரெண்டாம் நாளே, 'என்ன உன் கிட்ட யாருமே பேசாமாட்டேங்கறாங்களா' என தானாய் வந்து பேசிய பெண். அப்பொழுது முழுகாம இருந்த என் அம்மா தினமும் சாப்பாட்டு எடுத்திட்டு வருவதை பார்த்து, "Aunty, நான் சாப்பட வைக்கின்றேன்.. நீங்க ஏன் தினமும் கஷ்டபடுகிறீர்கள்" என கேட்ட குட்டி தேவதை. நான் ஒரு மாதம் மானிட்டராக இருந்த பொழுது (அட.. Class leader பா.. computer monitor இல்லை) பசங்க பேசறாங்க என டீச்சரிடம் மாட்டி விட, அன்று மதியம் அடிக்க வந்த பசங்களை ஒட ஓட விரட்டி அடித்த வீர மங்கை.

எல்லாவற்றையும் விட, shoe லேஸ் கட்ட தெரியாதா என கிளாஸில் ஒரு டீச்சர், மொத்த வகுப்புக்கு முன்னே கேலி செய்து, அவிழ்ந்த லேஸ் கட்டிகொண்டு பின் வகுப்புக்குள் வா என வெளியே நிறுத்தி விட, நான் பேந்த பேந்த என முழிக்க, பின் நான் அழ ஆரம்பித்ததும், டீச்சர் அனுமதிக்க மறுத்த போதும், பயப்படாமல் எழுந்து வந்து என் shoe lace கட்டி விட்ட ... என் அழகிய தேவதை.

காதல்ல பல வகை உண்டு. ஆண் பெண் சங்கதி எல்லாம் தெரிந்து, இன கவர்ச்சியுடன் கலந்து வருவது மட்டும் காதல் இல்லை. இது வேற மாதிரி. எனக்கு சொல்ல தெரியல. எல்லாமே சொல்லி தான் தெரியனும்னு இல்லை. எப்படி இந்த பெண்ணை இவ்ளோ நாள் மறந்தேன்? அவள் முகம் பெயர் என எதுவுமே நியாபகம் இல்லை.. அவள் எனக்காக செய்தவைகளை தவிற. முகமும் பெயரும் தெரியவில்லை என்றாலும், அவளை பற்றி நினைத்ததும், மனதில் வீசும் அந்த மெல்லிய தென்றலை தவிற... வேறு சுவடே இல்லை.

ஒரு விதை மரமாவதில், எத்தனையோ நீர் துளிகள் தேவைப்படலாம். ஆனால், உயிரற்ற விதையில், உயிர் கலக்கிய அந்த முதல் மழைத்துளி ஆனவள் அவள். என் மனதில்.

இப்படி ஒரு பொண்ணு நியாபகம் வந்தால் எப்படிங்க காதல் வராம இருக்கும்.
'அம்மா.. நான் மூணாவது படிக்கறப்ப, ஒரு பொண்ணு வாசல்ல வந்து உங்க கிட்ட இருந்து லஞ்ச் பேக் வாங்கிட்டு வருவாளே.. அவள் பெயர் என்ன?'
'யாரு பிரியதர்ஷினியா? அவளை பத்தி எதுக்குடா கேட்கிற?'
'ஒன்னும் இல்லை சும்மா தான்..'

சில மாதங்கள் கழித்து, என் அலுவலக family party ஒன்றில்..


'அங்கிள், உங்க லேஸ் அவிழ்ந்து இருக்கு.' ஒரு குட்டிப்பெண் குழந்தை, ஆபிஸ் பார்ட்டியில் என்னிடம் அழைத்து சொன்னாள்.

குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால், கொஞ்சம் பேச்சு கொடுத்துக்கொண்டு இருந்தேன்.சற்று நேரம் கழித்து ஒரு அழகிய பெண், அம்மாவாக இருக்கும் போல..
'ஓ இங்க இருக்கியா ஸ்வேதா' என சொல்லிக்கொண்டே வந்தாள்.

என்னிடம் பேசிக்கொண்டு இருப்பதை கண்டு, அவளும் பேசினாள்.. பேசிய பின் ஆச்சர்யம். ஆம் நீங்கள் யூகித்தது தான். அவளே தான். ப்ரியதர்ஷினி. என்னை இன்னமும் நியாபகம் வைத்திருந்தாள். மகிழ்ச்சியாய் இருந்தது.


'குழந்தை செம க்யூட்'
சொன்ன ஒரு சில வினாடிகள், என் கண்கள் ஏமாற்றத்தை காட்டின போலும்.
'என் குழந்தை இல்லை. என் அண்ணன் குழந்தை. எனக்கு இனிமே தான் டும் டும் டும் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க'
'...'
'இப்பவாச்சும் நீயே கட்டிப்பியா?
'என்.. எ..'
'Shoe laceஐ சொன்னேன்' என்றாள் கண் சிமிட்டி.

இப்போ சொல்லுங்க.. காதல் பிறந்த கதை தான?

Monday, March 24, 2008

வெண்மேகம் பெண்ணாக..

கேட்டதும் பாடல் பிடிச்சதால, பாட்டும், வரிகளும் இங்க ....
-----------------------------------------------------------------


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே.. (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே)
(வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

(உன்னாலே)

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)


வீடியோவுடனான பாடல்..

Friday, March 21, 2008

கடவுள் இறந்த கதை

P.s: Hi ppl, Was away in a client place with no internet access.. will be visiting ur blogs soon... And BTW, This is just a story....
----------------------------

நான் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் வருடம் அவளை பார்த்தேன். அவள் பெயர் தீபிகா. நன்றாக படிக்கும் மாணவி. உலக அழகியாக இல்லா விட்டாலும், திரும்பி பார்க்க வைக்கும் மென்மையான அழகு. பெண்களுடன் அதிகம் பேசாத எனற்கு, கல்லூரி பஸ்ஸில், கடைசி நிறுத்தம் வரை உடன் வருவதாக பழக்கமானாள். தினமும் ஒரு மணி நேர பேருந்து பயணம். அதில் இறுதி 20 நிமிடங்களான கடைசி நிறுத்ததிற்கு செல்லும் இரண்டே பேர், நாங்கள். அப்படி தான் பழக்கமானாள் தீபிகா. அதிகம் பேசாத பெண் என்று அவளை பற்றி நினைத்து கொண்டிருந்த எனற்கு ஆச்சர்யம். சினிமாவில் இருந்து கிரிக்கெட் வரை சமமாக சளைக்காமல் என்னுடன் பேசிய ஒரே தோழி. கொஞ்சம் நாட்களிலேயே, நல்ல நண்பர்கள் ஆகிவிட்டோம். சில நேரம் அவளை நட்பையும் தாண்டி பிடித்திருக்கின்றதோ என்று கூட யோசித்ததுண்டு.

அப்படியொரு வழக்கமான நாளில் தான், அவள் குடும்பத்தை பற்றி பேச ஆரம்பித்தோம். சினிமா, காதல், கடவுள் என பலவும் பேசிய நாங்கள், எங்கள் பெற்ரோரை பற்றி பேசாதது எனற்கு சற்றே ஆச்சர்யமாக இருந்தது.
'உங்க அப்பா என்னடா செய்யறார்?' அவள்.
'ஓ, அவர், மெடிக்கல் ஷாப் ஒன்று நடத்தி வருகின்றார். he is a Pharmacist" நான்.
'அம்மா?'
'அம்மா, home maker.. ஆமா உங்க அப்பா அம்மா?'
'என் அப்பாவை எனக்கு தெரியாது..'
திகைப்பில் மேற்கொண்டு என்ன கேட்க என தெரியாமல்.. சில வினாடிகள் மௌனம் காத்தேன்.. கனமான மௌனத்தை கலைக்கும் விதமாக அவளே வேறு ஏதோ ஒன்றை பற்றி பேச ஆரம்பித்தாள். இருந்தாலும், அப்பொழுது யாருடன் இருக்கின்றாள், உறவினர்களோடா? அம்மா எங்கு இருக்கின்றார்கள் என மனதில் எழுந்த கேள்விகளை அடக்கி கொண்டேன்.

அறியாமை பேரின்பம். ஆம். உண்மை தான். Blessed is Innocence. And so is ignorance too, at times. தன்னை வளர்த்து வருபவன், ஒரு நாள் வெட்டுவான் என தெரியாததில் தான், கொஞ்சம் மகிழ்ச்சியாவது தங்கும் கசாப்பு கடைக்காரனின் ஆட்டிற்கு. சில உண்மைகள் தெரியாமல் இருப்பது தான் நல்லது.


ஷ்யாம். அவன் தான் காரணம். என் அழகிய அறியாமை கூடு பிய்த்தெறியப்பட.
'என்னடா மச்சான், தினமும் தனியா போறியாம் அந்த பொண்ணோட..'
'ஏன் அதுக்கு என்ன?'
'டேய்.. பொண்ணு யாருன்னு தெரியாதா.. அவங்க அம்மா நம்ம ஊரு..' ரெட்லைட் ஏரியா பெயரை சொல்லி.. 'பயங்கர பாப்புலர்டா.... அம்மாவிற்கு 5000 ரூபாய். பொண்ணுக்கு எவ்வளவு?'
கெட்ட வார்த்தையில் பதில் சொல்லி விட்டு, நிற்க பிடிக்காமல்,நகர்ந்தேன்.

அன்று பேருந்து பயணம் கனமாக தொடங்கியது. என் கண்களை படிக்கும் வித்தை கற்று கொண்டாள் போலும்..
'யாரு சொன்னா உன்கிட்ட?' அவள்
'என்ன.... எத..'
'எங்கம்மா பத்தி தான்.. அதான் உன் கண்ணுல தெரியுதே..'
'ஒன்னும் இல்ல.. ம்ம்.. ஆக்ஷ்வலா.. IT dept ஷ்யாம்.'
'ஹ்ம்ம்.. கடவுள் நம்பிக்கை இருக்கா உனக்கு?'
'ம்ம்ம் பின்ன... ஏன்?'
'எனக்கும் இருக்கு.. மனதை விற்கும் மனிதர்களுக்கு நடுவில் உடம்பை விற்பது... வித்தியாசமாக படுகின்றது போலும்.. எல்லாவற்றிர்க்கும் ஒரு காரணம் இருக்குடா. இப்படிபட்ட தேவை இருக்கும் ஆண்கள் இருக்கும் வரை இந்த தொழிலும் இருக்கும். இதனால் தான் குடும்ப பெண்கள் கொஞ்சமாச்சும் நிம்மதியா நடக்க முடியுது இரவினில்..'
'.....'
'....எங்கம்மாக்காக தான்டா நான் படிக்கின்றேன். படிச்சு, ஒரு நல்ல வேலை கிடைச்சிட்டா.. ' சொல்லி முடிக்க முடியாமல் அழ தொடங்கினாள் அவள்.

ஸ்கூல் பேக்கின் மீது கால் பட்டாலே, சரஸ்வதி கோவப்படுவாள் என சொல்லி வளர்க்கப்பட்ட வீட்டில் பிறந்ததாலோ என்னவோ.. அதற்கு பின் என்னையும் அறியாத ஏதொ ஒன்று எங்களுக்குள் ஒரு மெல்லிய இடைவெளியாக வளர்ந்து பெரியதாகி எங்களை பிரித்துப்போனது. மௌனங்களாகவே நீண்டு போனது, அடுத்த ஒரு வருட பேருந்து பயணங்கள்.

என் சோகமான நாட்களில் எல்லாம் மழை பெய்யும். அன்று எழுந்த பொழுது மழை கொட்டிக்கொண்டு இருந்தது. மனிதப்பாவங்களுக்கு எல்லாம் கடவுள் ஒட்டு மொத்தமாக அழ முடிவெடுத்தது போன்றதொரு மழை. தேர்வு இருந்ததால் கல்லூரிக்கு செல்ல வேண்டிய கட்டாயம். தீபிகா வழக்கம் போல் இல்லாமல், அன்று வராமல் இருந்தது மனதை ஏதோ செய்தது. அதிகம் யோசிக்காமல், கடைசி நேர படிப்பினில் கவனம் செலுத்தினேன். எக்ஸாம் எதிர்பார்த்ததை விட எளிதாக தான் இருந்தது. முடித்து விட்டு வெளியே வரும் பொழுது தான் கவனித்தேன், தீபிகா, எக்ஸாமிற்கு வராமல் போனதை. செம்ஸ்டர் எக்ஸாம் இல்லையென்றாலும் கூட, ரிவிஷன் டெஸ்டிற்க்கும் தவறாமல் வருவாளே என யோசித்து கொண்டு இருந்த பொழுது தான், கேட்டது, சக மாணவிகள் இருவர் பேசிக்கொண்டது.
"ஹேய்.. தீபிகா நேற்று இரவு தற்கொலை செய்ய முயற்சி செய்தாளாம். இப்போ" ஒரு ஹாஸ்பிடல் பெயர் சொல்லி, "அங்கே இருக்கின்றாளாம்"..
கேட்டதும், ஒரு நிமிடம் என் இதய துடிப்புகள் சுதாரித்து மெதுவாய் துடிப்பதாயின. மீதி நாள் மட்டம் போட்டு விட்டு, அவள் இருந்த மருத்துவமனைக்கு கிளம்பினேன்.

"பாவி பொண்ணு.. 20 மாத்திரை போட்டு இருக்கா..." வெளியில் அவள் அம்மா புலம்பிக்கொண்டு இருந்தாள். இதற்கு முன் பார்த்திடா விட்டாலும் முகசாயல் காட்டி கொடுத்தது. அந்தம்மாவின் கண்ணை பார்க்கும் சக்தி இல்லாமல், தீபிகாவை காண உள்ளே சென்றேன். இயந்திரத்துடனும், க்ளுக்கோஸ் ட்ரிப்புடனும் இணைக்கப்பட்டு அவள்.

அவள் கண்கள் மூடிக்கொண்டு இருந்ததால், தூங்குவதாக நினைத்து, அருகில் அமர்ந்தேன்.
"ஏன் டா என்னை இப்போ போய் பார்க்க வந்த.. சாக கூட விடமாட்டேங்கறாங்கடா.."
"தீபிகா..என்ன..ஆச் " சொல்லி முடிக்கும் முன், உதட்டின் மேலும், கன்னங்களின் மேலும் இருந்த கீறல் தழும்புகள் காட்டிக்கொடுத்தன. திடீரென்று பேசமுடியாமல்... நெஞ்சிலிருந்து ஒரு சோக குமிழி வெடிப்பது போலதொரு பிரம்மையில் மௌனமானேன். நான் கவனித்து விட்டதை பார்த்த அவளும் மௌனமானாள். அவள் கைப்பிடித்து வெகுநேரம் அமர்ந்து இருந்தேன். இறுதியாக 'சரி.. கிளம்பறேன் தீபிகா. வீட்டுல கூட சொல்லிட்டு வரலை நான்.. நாளைக்கு வருகின்றேன்...' சொல்லிவிட்டு கிளம்ப முற்பட்டேன்.
"கடவுள் பொய்டா.." என்று சொன்னாள்...
'தீபிகா.. நான் உன்னை ..'
'ப்ளீஸ்.. ஏதும் சொல்லாத... வேண்டாம்'

அன்று வீட்டிற்கு சென்ற பொழுது, தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு பின் தான் உள்ளே சென்றேன். அன்று இறந்தது என் கடவுள்.


இரெண்டு கடவுள்கள் இறந்து போனது மட்டுமே மனதில் வெறுமையாக, மழை கொட்டி வெறுமையான வானம் போல். கடவுள் மனிதனை படைத்து, உடைக்க, மனிதனும் கடவுளை படைத்து உடைப்பதாகப் பட்டது எனற்கு.


அதற்கு பின் அவளை பார்க்க போகவில்லை.

Saturday, March 15, 2008

காதலும் க்ரைமும்

மு.கு: திரும்பவும் ஒரு கதை முயற்சி செய்யறேன்.. வீட்டுக்கு ஆள் அனுப்பாம, படிச்சு கமெண்ட்ட மட்டும் போடுங்க மக்கா..
---------------------------------------------------------------------

வருடம்: 2020 சூர்யா. இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவன். கடந்த 5 வருடங்களாக மிக இரகசியமான ஆராய்ச்சி ஒன்றில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர். அவர் அடைய முயலுவது - சம அண்டத்திற்கு ஒரு திறவுகோல்.. ஆங்கிலத்தில் Portal to a parallel Universe. அதாவது, நம் அண்டத்தை போலவே, எண்ணில் அடங்கா அண்டங்கள் நம்மை சுற்றி, நாம் அறிய முடியாத கோணங்களில் இருப்பதாகவும், நாம், ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும் ஒவ்வொரு நொடியும், ஒரு புதிய அண்டம் உருவாகி அதில் நம்மை போலவே ஒருவன், நாம் எடுக்காமல் விட்ட அந்த முடிவை எடுத்து வாழ்வதாகவும் ஒரு கருத்து உண்டு. அப்படி அண்டங்கள் உண்டு. அந்த அண்டங்களுக்கு பயணிக்க, ஒரு வழி உருவாக்க முடியும் என்றும், அதையே தனது வாழ்க்கை லட்சியமாக கொண்டும் வாழ்பவர் இந்த சூர்யா.

இப்போ, கொஞ்சம் ஊதுபத்தி சுத்தி பின்னால போவோம்.. காலத்தில் (ஆமா, இப்படி சீரியஸான கதையில் காமெடி எழுதலாமா வேண்டாமா? சரி.. கழுத இருந்துட்ட போது..)

வருடம்:2000சூர்யா. இஞ்ஜினீயரிங் மாணவன். இறுதி ஆண்டு.

ஒரு பொருள்
இருப்பதை விட
இல்லாமிலிருப்பது
கனமாகாது
எனும் விஞ்ஞானகூற்றை
உடைத்தெறிந்தது..
நீ விட்டு சென்று
போன என் இதயம்..


என்று காதல் கவிதை கிறுக்கி கொண்டு இருக்கும் ஒரு சாதா மாணவன். அவன் காதலிக்கும் பெண்ணின் பெயர் கேட்டால் இராட்சஸி என்று சொல்லுவான். அவளை பார்த்தால், அவளோ தேவதை மாதிரி இருப்பாள். பெயர் அமுதா. இருவரும் நல்ல நண்பர்கள். இவன் காதலை சொல்லி விட்டான். அவளும் சம்மதித்து விட்டாள். காதலர்கள் பிரியும் பொழுது எல்லாம் , சூரியன் சிகப்பாய் விடியுமாம். அன்றும் அப்படி தான் விடிந்தது. சூர்யாவிற்கு தெரியாது, பிரியப்போவது அவன் காதல் தான் என்று. ஒரு ஜீனியர் பெண்ணை கிண்டலடித்த நண்பனுக்காக பேசப்போகி, அது சண்டையாகி, நீ பெண்களை மதிக்காதவன்.. உன்னை போயா நான் காதலித்தேன்.. என்று 3 வருட காதலை வீதியில் பறக்க விட்டு சென்றாள் அமுதா. அவளாய் பேசட்டும் என்று அவனும்.. அவன் பேசட்டும் என்று இவளும் காத்திருக்க, விரிசல் கசப்பாகி, கசப்பு கோபம் சேர்க்க, பிடிவாதத்தில் பிறிந்து போன பல்லாயிர கணக்கான காதல்களில் ஒன்றானது இவர்களதும்.

மீண்டும் வருடம் 2020:இந்தியாவின் தலை சிறந்த குடிமகன் விருதை பெற்ற அவனிடம், நிருபர் கூட்டம்..
"சூர்யா, உங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?"
"காதல்"
"காதலா? உங்களுக்கு தான் கல்யாணமே ஆகவில்லையே?"
"ஆனால் காதலிச்சேன். நடக்கல. அந்த வேகத்தில் காதலிக்க தொடங்கியது தான் இந்த விஞ்ஞானத்தை. அது தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது..
"பிறப்பால் நீங்க ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் தான்.. அப்ப இந்த நிறைவேறாத காதல் தான் உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததா?"
பதிலாய் ஒரு மெல்லிய சிரிப்புடன் பேட்டியை முடித்துக்கொண்டான் சூர்யா. (என்ன தான் இந்தியாவின் தலை சிறந்த குடிமகன் விருது எல்லாம் வாங்கினாலும், அவன் படைப்பாளி நாந்தான.. நான் அவன் இவன் என்று பேசலாம் தப்பில்லை!) தமிழகத்தில் எங்கோ ஒரு வீட்டில், அர்ஜீன், கவிதா எனும் இரெண்டு குழந்தைகளுக்கு தாயான அமுதா, தன்னையும் அறியாமல் கண்ணீர் வடித்தாள்..

மற்றொரு நாள்..
"வெற்றி.. வெற்றி.." என சந்தோஷ கூக்குரல் இட்டு, ஒரு பொத்தானை அழுத்தினான் சூர்யா
காற்று லேசானதை போல் ஒரு மெல்லிய படறல்.. அவனை வேறு அண்டத்திற்கு.. அந்த அண்டத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது... சென்னை மாநகரில், ஒரு பிளாட்டில் ஒரு நடத்தர வயது சூர்யாவை அங்கு கண்டான். அவன் மனைவி... அமுதா!!!.
தான் தவற விட்ட வாழ்க்கையை இங்கு நடந்து கொண்டிருப்பதை பார்த்த ஆனந்த கண்ணீர் அவன் கண்களில். கண்ணீர் வற்றியது. பொறாமை பொங்கியது. அழகான இரு குழந்தைகளுக்கு தாயாக, தன் மனைவியாக அமுதா இருப்பதும், வேறு ஒருவன் அவனாய் இருப்பதும் விஞ்ஞானி சூர்யாவிற்கு நெஞ்சை அடைத்தது. கோபத்தில், விஞ்ஞானி சூர்யா, கொலையாளி சூர்யா ஆனான். கொலை செய்த உடலை அவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பிவிட்டு, விஞ்ஞானி சூர்யா சாதாரண சூர்யாவாக மாறினான். தன் வாழ்க்கையில் அன்று வரை கிடைக்காத ஏதோ ஒன்று கிடைத்ததாக நம்பினான். சந்தோஷமாக வாழ தொடங்கினான்..

விஞ்ஞானி சூர்யாவின் உலகத்தில்: 2020
"விஞ்ஞானி சூர்யா தனது வேலையின் பொழுது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார்" என செய்திகள் ஒரு நாள் தலைப்புச் செய்தியாகவும், பின், மக்கள் மறந்த செய்தியாகவும் ஆனது.

(இது ஒரு விஞ்ஞான கதை என படித்து வருபவர்களுக்கு... கதை முற்றும்.. கமெண்ட் போட்டுட்டு, இல்லை கல்ல போட்டுட்டு போலாம்..)

மாற்று சூர்யாவின் உலகத்தில்: 2020
"சூர்யா... உங்களை கைது செய்யறோம்.. நீங்க சூர்யா இல்லை என்பதும், சூர்யாவை கொலை செய்துவிட்டு அவரை போல வந்த வேற்று அண்ட மனிதர் என்பதும் எங்களுக்கு தெரிந்து விட்டது." போலீஸ் தான்...

"எப்படி... " சூர்யா திகைக்க..

சூர்யாவிற்கு தெரியாது. நான் தான் அதை போலீஸிடம் சொல்லி அவரை கைதி செய்ய சொன்னேன் என்று.. என்னதான் நாம உருவாக்கினவங்க என்றாலும், தப்பு செய்தா.. தண்டனை கொடுக்கனும்ல...

டேய்.. அதெப்படிடட நீ சொல்லுவா.. சம்பந்தம் இல்லாம? இதை நாங்க நம்பனுமா? அப்படினு கேட்டீங்கனா....

//ஒரு பொத்தானை அழுத்தினான் சூர்யா
காற்று லேசானதை போல் ஒரு மெல்லிய படறல்.. அவனை வேறு அண்டத்திற்கு.. அந்த அண்டத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்றது//

இதை எல்லாம் நம்பறீங்க.. இதையும் நம்ப மாட்டீங்களா எனும் ஒரு நப்பாசையில் எழுதிய முடிவு அது என சொல்லி விடை பெறுகின்றேன்.. (அப்ப கேள்விதாள் எங்க என்று கேட்க கூடாது!)

Thursday, March 13, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

இன்னைக்கு நம்ம ஷோக்கு அசத்த வருவது... மொக்கை மன்னன், ப்ளேடு பக்கிரி, ஆல்-இன்-ஆல் அழகு ராசா ... யாருன்னு தெரிந்து இருக்குமே... அவர்... அவரே தான்... நம்ம 13ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் வாலிபர்...

இவர் நின்னு அடிச்சா சச்சின்...
உட்கார்ந்து அடிச்சா foreign ஜின்..


இவர் சேர்க்கிறது காரு..
தினமும் குடிக்கிறது மோரு.. (அப்படினு சொல்லிட்டு.. ;) )


(இவரு இச்சு அனுபவம்... சொல்லியே ஆகனும்ல..)
இவருக்கு ஆகல இன்னும் மேரேஜ்ஜு.
ஆனா காருக்கு ஆச்சு டேமேஜ்ஜு...


சரி.. பில்ட் அப் போதுமா? மேட்டருக்கு வருவோம்.. (இது மங்களூர் சிவா வீக்கெண்ட் மேட்டரில்லைங்க.. தப்பா நினைச்சுகாதீங்கப்பு)

கோப்ஸ்...
உன் காலுல சீக்கிரம் கட்டனும் ரோப்ஸ்..
(அதான்.. கல்யாணம்... ரொம்ப நாளா புலம்பிட்டு இருக்காரு.. அதான்.. ;) )
அப்படினு வாழ்த்துக்கள் சொல்லிக்கிட்டு.. இந்த கார உனக்கு பரிசா கொடுத்துக்கின்றேன்..
பாரு.. நீ வருவனு ஒரு வெள்ளை கார அம்மணி வெய்ட்டுங்க்ஸ்...



எல்லாரும் கை தட்டியாச்சா.. ஓகே ஓகே..

எல்லாரும் ஹாப்பி பேர்த் டே கோப்ஸ்... அப்படினு பாடுங்க...
நான் அந்த கொடுமைஎல்லாம் (நீங்க பாடுறத சொன்னேன்..) கேட்க விடாம, கோப்ஸ்க்கு ஒரு ear muffler பரிசாக கொடுத்துட்டு எஸ் ஆகிக்கிறேன்...

வர்ட்டா..

Wednesday, March 12, 2008

ஆதலினால் காதல் செய்வீர்..

மு.கு2: நம்ம சச்சின் கோப்ஸ்க்கும், மருதத்துக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.. அந்த பதிவும் விரைவில் வரும்... வரும்... வரும்...வரும்...

மு.கு: அட எத்தனை நாள் தான் கவிதையெ எழுதறது.. கொஞ்சம் வித்தியாசம் இருக்கட்டுமேனு முயற்சி செய்தேன்.. திட்டாதீங்க... And this is just a story.. இது.. சர்வேசனின்.. "U turn" போட்டி அப்ப எழுத ஆரம்பிச்சது.. அப்ப போட தோணல..



தீபா தன் கல்யாண பத்திரிகையோடும், தோழி காவ்யாவோடும் சென்று கொண்டு இருந்தது, அவளின் காதலன் சூர்யாவின் அறைக்கு. ஆம். சந்தேகம் என்றால் அவள் பத்திரிக்கை படிக்கின்றேன் கேளுங்கள்.. அடுத்த மாதம் 25 ஆம் தேதி அவளுக்கும் ரமேஷ்க்கும் கல்யாணம் என பத்திரிகை சொல்கின்றது!

காவ்யா வெளியே காத்து இருக்க, தீபா உள்ளே சென்றால்.

.......
"சூர்யா, என்னை மன்னித்து விடுடா.. என்னால எங்க அப்பா அம்மா பேச்சை மீறி எதுவும் செய்ய முடியாதுடா.. புரிஞ்சிகோடா pls"....

"தீபா.. இது காதல்... இப்படி எல்லாம் தெரிஞ்சு தான நீ காதலிச்ச..இப்ப ஏன் என்னை விட்டுட்டு போற? நீ இல்லாம .. .. ஏன்டி இப்படி பண்ணற?"

"டேய்.. இது காதல்.. எல்லாம் சரி தான். ஆனா எங்க அம்மா அப்பாவா இல்ல இந்த காதலானு யோசிச்சா எனக்கு அம்மா அப்பா தான் டா வேணும். நிஜமா..உன் கூட வந்துட்டாலும், எனக்கு என் அம்மா அப்பாவை விட்டு கூட்டிட்டு வந்துட்டான்னு உன் மேல என் வாழ்நாள் முழுதா கோபம் இருக்கும்.. அது போக அவங்க சாபத்துல எல்லாம் நாம சந்தோஷமாகவும் இருக்க முடியாது.."

"தீபா.. தீபா.. காதல்.. இது.. கத்திரிகாய் இல்ல, அம்மா வேணாம்னு சொல்லிடாங்க.. அப்படி இப்படின்னு.. நீ இல்லாம நானும் நான் இல்லாம நீயும் சந்தோஷமா இருப்போமா? இரெண்டு வருஷமா காதலிச்சோமே.. அப்ப அது எல்லாம் பொய்யா? என்னை எப்பவும் விட்டுட்டு போக மாட்டேன்னு சொன்னியே.. அது பொய்யா? நீ.. நான்..நாம.. நம்ம காதலே பொய்யா?"

"சூர்யா எத்தனை முறை உனக்கு சொல்றது.. நீ ஒரு மாதமா இதையே சொல்லற.. புரிஞ்சுகோடா.. உனக்கு என்ன?.. நான்தான வேணும்.. இந்தா என்னை இப்பவே எடுத்துக்கோ.. ஆனா இதுக்கு மேல மறந்திடு.." துப்பட்டாவை இழுக்க அது கீழே விழுந்தது....

பளார் என்று கன்னத்தில் அடித்து விட்டு.. அவள் கண்களை ஒரு முறை பார்த்தான் சூர்யா.."
'ஓரெழுத்து பொய் நீ
ஈரெழுத்து பொய் நான்..
மூன்றெழுத்து பொய் நம்ம..
நான்கெழுத்து பொய் காதல்..'
அப்படிங்கிறது சரியாதான்டி இருக்கு.. " சொல்லிக்கொண்டே அவள் துப்பட்டாவை எடுத்து மேலே போர்த்தி விட்டு வெளியில் வேகமாக நடந்தான் சூர்யா..

இதை எல்லாம் வெளியில் நின்றி கேட்டு கொண்டு இருந்த காவ்யா...உள்ளே வந்தாள்.. "என்னடி.. அவன் கிட்ட போய் இப்படி சொல்லற? உனக்கு அடுத்த மாதம் கல்யாணம்.. அவன் எதாச்சும் பண்ணி இருந்தான்னா?" இது காவ்யா..

"ஹேய் அவனை பத்தி எனக்கு தெரியும்.. சரியான sentiment லூசு.. இப்படி எல்லாம் ஏதாச்சும் செய்தால் தான் விட்டுட்டு போவான்.. ஆமா ஒரே காலேஜ்.. இரெண்டு வருஷமா காதலிச்சோம்.. பையன் வேலையும் பண்ணறான்.. மாதம் 6000 ரூபாய் சம்பளம் வாங்கிறான்.. அதுல எல்லாம் சென்னைல இவன் கூட வாழ பத்துமா? இவன் கூட போய் நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்? அப்பா பார்த்து இருக்கும் பையன்.. US ல வேலை பாக்கிறான்.. மாதம், ஒரு லட்சம் சம்பளம்.. அவனை விட்டுட்டு காதல், கத்திரிகாய்னு இவன் கூட வர நான் என்ன கேனைச்சியா?"

அடித்ததை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்க வாசலில் நின்ற சூர்யா காதில் இது விழ உறைந்தான்.. காதலில் சாதல் இது தானோ?

தீபாவும் காவ்யாவும், பத்திரிக்கையை கட்டிலின் மேல் வைத்து விட்டு கிளம்பினார்கள்.. திரும்ப போகும் வழியில்..
காவ்யா தீபாவிடம்.. "ஏன்டி.. அவன் வரும் சத்தம் தான் கேட்டுதே.. அப்புறம் ஏன் அப்படி பேசின?"
"இல்லனா அவன் என்னை மறக்க மாட்டான்டி.. ரொம்ப நல்லவன்டி அவன்.. இப்ப அவனுக்கும் என் மேல வெறுப்பு வந்து.. வேற பொண்ண ரொம்ப கஷ்டபடாம கல்யாணம் பண்ணிப்பான் .. அதாண்டி அ.." சொல்லி முடிக்காமலே அடக்கி வைத்திருந்த அழுகையில் வாய் பொத்தி அழத்தொடங்கிய தீபாவின் மனசுக்குள்
"சபாஷ் தீபா.. ஒரே கல்லுல இரெண்டு மாங்காய்.. அவனையும் நம்ப வைச்சு கழட்டி விட்டாச்சு.. இவ கிட்டயும் நல்ல பேர் எடுத்தாச்சு.." ... சிரித்துக்கொண்டாள்.

காதல் ஜெயிக்கிறதா? தோற்கின்றதா..
முற்றும்.. விடைகள் இல்லாமல்.

Monday, March 10, 2008

ஒரு துளி மௌனம்..


உன் வீதியெல்லாம்
பூத்திருக்க..
எங்கோ பூத்த
ஒற்றை ரோஜா முள்
கீறியதற்கு
என் பூக்களை எல்லாம்
பிய்த்தெறிய சொல்வதின்
நியாயம் என்ன?

விண்ணெழுந்து
ஒன்று கூடி
இடி முழங்கி
மின்னல் வெட்டும்
என் கோபமெல்லாம்
கலைந்து போகின்றது
வெண்மேகமாய்
உன் முன்னால்..

எத்தனையோ வழி இருக்கு
மரணம் தழுவ..
எனை கொல்வது
நீயாயினில்
உன்
ஒரு துளி மௌனம்
போதும்..

Saturday, March 01, 2008

கவிதைகளின் கவிதை (அழகிய கவிதை IV)

மு.கு: இதற்கு முந்தைய கவிதை பதிவுகள்
1. விழியெழுத்து
2. இப்படிக்கு நான்
3. போகாதே

குட்மார்னிங்..
உன்னை மாலை
பார்க்கும் பொழுது
சொன்னேன்..

"இப்ப குட்ஈவினிங் டா"
சிரிக்கிறாய் நீ..

உன்னை பார்க்கும்
பொழுது தான்
என் நாட்கள் விடியுமடி..
அப்படியானால்..
குட்மார்னிங் தானே...



ய்..
எனற்கு
ஒரு முத்தம் கொடுடி...

சீ... போடா..

எத்தணை முறை
கேட்டாலும்..
அள்ள அள்ள குறையாத
பேரூற்று போல...
உன் வெட்கம் மட்டும்.
இன்னும்
எவ்வளவு ஆழத்தில் முத்தம்?



"ன்னால
பத்து நிமிஷம் தான்
பேச முடியும்டா"
சொல்லிவிட்டு
நீ சென்றுவிட்டாய்..

அப்பொழுது ஆரம்பித்த
சண்டை...

நீ வந்து பேசும்
அந்த பத்து நிமிடங்களாக
தாம் இருந்திருக்க கூடாதா
என்று
சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன..
என் நாளின்
மீதி எல்லா பத்து நிமிடங்களும்.



தினமும் பிரியும் பொழுது
சண்டை போடுகின்றோம்..

அப்படியாவது
சில கணங்கள்
நீயின்றி வாழலாம்
என நினைக்கின்றேன் நான்..

மெதுவாக தான் புரிந்தது..
நடுப்பகலில்
வீட்டுக்குள் தாளிட்டு
ஒளிந்து கொண்டாலும்
மனதுக்குள் எட்டிப்பார்க்கும்
நிலவு நீ என...



"னி உங்களை
நீ வா போ..
என சொல்வதில்லை.."
நீ..

ஏன் தீடிரென்று அந்நியம்
என எனற்க்குள் எழும்
கோபமெல்லாவற்றையும்..

"..என்னங்க.. கோபமில்லையே.."
என கொன்றும் விடுகின்றாய்!



"னிமே எனக்கு
முத்தம் கொடுக்காதீங்க.."
கோபமாய் நீ..

"ஏன்? பிடிக்கவில்லையா?"
சந்தேகமாய் நான்...

முத்தத்தால்..
மனதில் வரும்
பக்க விளைவுகளில்
படிக்க முடிவதில்லை..

அடிப்பாதகி..
என் ஒற்றை முத்தத்திற்கே..
இப்படி சொல்கின்றாயே..
மொத்தமாய் என மனதிற்குள்
குதித்து நீ ஆடும் ஆட்டத்திற்கு
நான் என்ன சொல்ல?



காத்திருத்தல் தவம் என்றால்
காதல் வரம்..

இதயம் கோவில் என்றால்
அதில் நீ கர்ப்பகம்..

சிற்பம் கலை என்றால்
நீ அதற்கு உயிர் தரும் தேவதை...

இத்தணையும் கவிதை என்றால்
நீ கவிதைகளின் கவிதை

Tuesday, February 26, 2008

யாரடி நீ மோகினி..

கண்டதும் காதல் எல்லாம்
கட்டுக்கதை..
என சொல்பவன் எவனும்
உன்னை
கண்டதில்லை போலும்

விழி திறந்தும்
கலையாத
கனவு தேவதை
நீ..

உன்னை படைத்த
இறைவன் இரக்கமில்லாதவன்..
என்னை படைக்காமலேயே
இருந்து இருக்கலாம்..
பார்வை இல்லாதவன்
வெளிச்சத்திற்கு ஏங்குவதில்லை!

எல்லாமான கடவுள்
எங்கும் தெரியவில்லை..
எங்கேயோ இருக்கும் நீ
எல்லாமாய் தெரிகின்றாய்..

உன்னில் தொலைந்த இதயத்தை
கண்டுபிடிக்க முடியவில்லை..
என்னில் கிடைத்த காதல்
படித்தறிய முடியவில்லை..

என் இதயத்தை விட்டுவிட்டு
உன் காதலில் உயிர் துடிப்பது
மட்டும் நிஜமாய் போனது..

இதே தலைப்பில் ஒரு படம் இருப்பது, யாத்ரீகனின் இந்த பதிவை பார்த்த பின்பு தான் நியாபகம் வந்தது. அவர் பதிவிட்டிருக்கும் அதே பாட்டு.. இங்கேயும்..

Wednesday, February 20, 2008

போகாதே.. (அழகிய கவிதை - III)



அழகிய விதை
சொல்லவிட்டு சென்றவளே..
மனதில் விதை
விதைத்த வெண்ணிலவே..
எனற்கு பிடித்த
மாதங்களில் தை
மரணங்களில் நீ..

சிகப்பு ரோஜா
மஞ்சள் வெயில்
நீல வானம்
எல்லாவற்றையும் விட..
அழகியது
உனற்கும் எனற்குமான
கருப்பு வெள்ளை நினைவுகள்..



இமை மூட
காத்திருக்கும் விழியானதடி
என் காதல்..
காத்திருப்பின் சிகப்பில் கூட
கண்ணீரில்லாமல்
காதல் தான் வழிகின்றது..

மழை பேசும்
மொழியெல்லாம்
எனற்கு புரியாது..
நான் குடையில்லா ரசிகன்..
என் காதலுக்கும்
நான் ரசிகன் தான்..



நீ வேற்று மொழி
கவிதை போலும்..
பிடித்திருக்கின்றது
ஆனால் புரியவில்லை..

இரவெல்லாம்
பகல் வர காத்திருந்து
பகலெல்லாம்
இரவு வர காத்திருக்கும்
விந்தையின் பெயர் தான்
காதலோ?



ஆயிரம் நட்சத்திரம்
மின்னினாலும்
ஒற்றை சூரியனில் தான்
விடியலும் இருட்டலும்..

ஆயிரம் கவிதைகளை
ரசித்தாலும்
அழகிய கவிதை உன்னில் மட்டுமே
என் ஜனனமும் மரணமும்..

Thursday, February 14, 2008

இன்று காதலர் தினமாம்..

மு.கு: (முத்தக் குறிப்பு என அர்த்தமில்லை :P)
Added later. மக்கா இந்த பதிவுல கொஞ்சம் எட்டி பாருங்க. நம்ம சகா என்னமா உருகி இருக்கார்னு.
ஒற்றை அன்றில் ..ஸ்ரீ





காதலர் தின வாழ்த்துக்கள் மக்களே!

Tuesday, February 12, 2008

காதலிப்பது எப்படி...

இதுக்கு முன் எத்தணையோ முறை முயற்சி செய்து இருக்கேன்.. ஆனா இப்போ தான் கடைசியா செட் ஆச்சு! நிஜம் தாங்க. என் இரண்டு வருட தவம்..இது ரொம்ப கஷ்டம். ஆரம்பிக்கும் போது ஈஸியா தெரியும். ஆனா, ஒவ்வொரு படி தாண்டும் போதும்.. ஓவ்வொரு அனுபவம். கண்டிப்பா chance ஏ இல்லனு தான் நினைச்சேன்.. ஆனா கடைசில... நடந்திடுச்சு! நான்.. நான்.. 100வது பதிவு எழுதிட்டேன்! (சரி சரி.. அடிக்க வராதீங்க!)


சரி..பதிவு எங்கே இந்த வாரத்துக்குனு கேட்பவர்களுக்கு.. அது இங்கன இருக்கு. நம்ம வ.வா.ச பாசக்கார பயலுக, அங்க எழுத சொல்லி கூப்பிட்டு இருந்தாங்க. அதுனால அங்கன போய் படிங்க மக்கா! காதலிப்பது எப்படினு தெளிவா சொல்லி இருக்கு!

சரி வந்தது வந்தாச்சு.. ஒரு குட்டி கவிதை..



முறைக்காதீங்க.. சின்னதா கவிதை எழுதினாலும் குட்டி கவிதை தான்.. ஒரு அழகான பெண்'குட்டி' (மலையாளம்.. மலையாளம்) கவிதை கணக்கா இருந்தாலும் அதே தான்! சரியா!

Saturday, February 09, 2008

(அழகிய கவிதை - II) இப்படிக்கு நான்..



இரெண்டு வரி திருக்குறளை
விடவும் அழகு..
உன் இருவிழி திருகுரல்..
வள்ளுவன் தோற்றான் உன்னிடம்..

காதலித்து பார்
கவிதை வரும்.. சரி..
கவிதையை காதலித்தால்..
நீ வருவாயா?



நிலவுப்பெண் தானடி நீ..
இரவெல்லாம் கனவில் தோன்றிவிட்டு
நிஜத்தில் விடிந்ததும்
மறைந்து போகின்றாய்..

சூரியப்பெண் தானடி நீ..
காலையில் விழி திறந்து ஆசை காட்டி
மதியம் சுட்டெரித்து விட்டு
மாலை மயக்கத்தில் மறந்தும் போகின்றாய்..



"உங்களுக்கு என்ன இசை பிடிக்கும்?"
கேட்பது நீ..
உனற்கும் எனற்குமான
குழந்தையின் மழலை பிடிக்கும்..
வெட்கப்படும் நீ..
அட.. இந்த வெட்கத்தை ரசிக்கத்தான்..
நான் திருக்குறளை கூட
கடன் வாங்க வேண்டி இருக்கு..

"காதல் பொய்யா?" ..நான்..
"இருக்கலாம்.. இல்லாமலிருக்கலாம்" ..என நீ..
எல்லாம் நீயாக இருக்கும்பொழுது
மீதி எதுவும் இல்லாமலிருக்கும்
என சொல்கின்றாயோ?



எங்கிருந்து ஆரம்பித்தாலும்
அது கடைசியாக பூமியில் விழுவதாக..
எதைப்பற்றி நான் யோசிக்க ஆரம்பித்தாலும்
அது இறுதியாக உன்னில் முடிகின்றது..

எல்லா கவிதையும்
கற்பனை தான் என்றிருந்தேன்..
அழகிய கவிதை
உன்னை பார்க்கும் வரை...

நீ வந்து அணைக்கும் வரை
எரிந்து கொண்டிருக்கும்
உன் வாசல் தீபமாய் நான்..

A for Anna.. B for Birthday.. C for Cake... K for..?

சரியா தான் யூகிச்சீங்க! கார்த்திக் ராஜா! நம்ம கார்த்தி அண்ணன் தான்!

அண்ணா!
ஊருக்கே நீ ஒரு மன்னா!
அந்த சூரியனுக்கே நீ சன்னா!
லண்டனில் நீ தான் கண்ணா!
எல்லார்க்கும் கொடுக்கும் பன்னா!
கிரிக்கெட்ல நீ போனா 100 ரன்னா!
உன்னை பார்த்துதேன் ஐஷ் ஆகல நன்னா!
நீ எதுல கால வைச்சாலும் வின்னா!
நிக்கிற நீ டன்னா!
(சரி சரி...இதுக்கு மேல எனக்கே தாங்கல.. ஹிஹி)

அண்ணா! பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

உங்க எண்ணப்படி எல்லாம் இனிதாய் நடக்க என் வாழ்த்துக்கள். அப்புறம், அண்ணிக்கு சீக்கிரம் விசா கிடைச்சு, அங்கன வர நான் Uk high commisionகு ரெகமண்ட் செய்யறேன்..

நான் சொல்லியும் கேட்கலனா இந்த போட்டோவ காமிங்க! உங்க பவர் தெரியும்!






அப்புறம் இது சும்மா! பிறந்த நாள் ஸ்பெஷல். அண்ணி, என்னை அடிக்க கூடாது!



நம்ப அண்ணனுக்கு மீதி மூனு இடத்துல போட்டு இருக்கும் வாழ்த்து பதிவையும் பாருங்க!


ஒன்னு



இரெண்டு



மூனு



நாலு (இது தான்)



பின்ன K 4 K <-- இதுல 4 சும்மாவா இருக்கு :) அதுக்கும் காரணம் இருக்குல! அண்ணனுக்கு ஒன்னுனா அவரு தனி ஆளு... இல்ல இல்ல இல்ல இல்ல! நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு ..நாலு பேரு! யாருப்பா அது நாலு ட்ரீட் கேட்கிறது! நம்ம G3 யக்கா சாயல்ல இருக்கே.... அதுவும் நாலு நட்சத்திர ஹோட்டல்ல வேணுமா? (அட... நான் எடுத்து கொடுக்கல...) எல்லாரும் சொன்னாப்ல செய்திடுங்கப்பு! வர்ட்டா!

Monday, February 04, 2008

மனிதனுக்குள்..

சரி.. மனிதனுக்கு பல குணம் உண்டு.. அதில் சில அலசல்...
முதல்ல Prey மற்றும் Predator behaviour in humans...

Brucelee ஒரு படத்தில சொல்லுவார், எல்லா சண்டைக்கும் மிக எளிதாக வெல்லும் வழி ஒன்று உண்டு. அது தான் சண்டையை தவிர்ப்பது. The Better you are at avoiding problems and unnecessary fights, the higher your survival rate. நம்ம எல்லாருக்கும், ஏதெனும் ஒரு சமயம் இந்த இரெண்டு பக்கமும் நிற்க வேண்டி இருக்குது. சில பிரச்சனைகளில் we behave like preys. சில சந்தர்ப்பங்களில் we behave as predators.


சாது மிருகங்கள்ல இரெண்டு வகை. ஒன்னு, முயல் மாதிரி.. இவை ஒளிந்து கொள்வதால் தப்பிப்பவை. இதை போன்ற மனிதர்கள், மத்தவங்க கண்ணுல படாம இருந்து தப்பிப்பவங்க.
Like they avoid getting in line with authoritative figures..

இன்னொன்னு, மான் மாதிரி. ஒரு மான் அல்லது அப்படி சாதுவான மிருகங்கள் எப்படி சிங்கம், புலி போன்ற கொடுமிருகங்களுக்கு இறையாகாமல் தப்பிக்கும்? வேகமாய் ஓடும்.. ஆனா அது predator அதை துரத்தும் பொழுது. முக்கியமான அம்சம்.. கூட்டமாய் இருப்பது. எப்படி நூறு மான்களில் ஒன்றை மட்டும் அந்த சிங்கம் துரத்துது. Their aim is to merge in the crowd. சிங்கம் அல்லது புலி, ஒரு மிருகத்தை என தேர்ந்தெடுத்து தான் துறத்தும். வரிகுதிரைகள் உருவானது evolutionல அப்படி தான். கூட்டமா வரிக்குதிரைகள் நிற்கும் பொழுது, தனியா ஒன்றை தேர்ந்தெடுப்பது, கஷ்டம். எல்லாம் ஒரே மாதிரி blend ஆகி நிற்கும். இப்படிபட்ட நபர்கள், கூட்டத்தில் இருப்பதால் தப்பிப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் எது பெரிய கூட்டமோ, அதில் போய் ஒளிந்து கொள்ளுவார்கள். Numbers is their strength.

நமக்கும் வாழ்க்கையில் அப்படி தான். சில நேரம், கூட்டத்தில் ஒன்றாய் இருப்பது.. ஒரு safety. எல்லாரையும் போல ஆடை அணியனும்... Be a Roman when you are in rome ..போன்றவை அதுனால தான். எந்த இடத்திலும், முக்கியமாக குழந்தைகளும், பெண்களும் "தனியா தெரியற" மாதிரி ஆடை அணிவதை, நகை போடுவதை தவிர்க்கனும்.. இது சமூகத்தின் மோசமான மனிதர்களிடம் இருந்து அவர்களை காப்பபற்றலாம். Obviously, this is not possible all the time.

அடுத்து, predators. இதே மாதிரி தான் இரெண்டு வகை. கூட்டமாய் வேட்டமாடும் விலங்குகள். ஒநாய் மாதிரி. இந்த வகை மனிதர்கள், தனியா இருந்தா, குனிந்த தலை நிமிறாம அமைதியா இருப்பாங்க. ஆனா, கூட்டம் சேர்ந்தா... (சில பொண்ணுங்க தனியா இருந்தா, அமைதியா சீன் போடுறதும், கூட்டமா சேர்ந்தா, தவறி அந்த பக்கம் வரும் பாவ பட்ட பசங்களை கலாய்ப்பதும்..ஹிஹி)

இரெண்டாவது வகை.. புலி மாதிரி. தனியா சிங்கிலா வரும் சிங்கங்கள். (Technically, பெண் சிங்கங்கள் கூட்டமாகவும், ஆண் சிங்கங்கள், pride கிடைக்கும் வரை, தனியாகவும் வேட்டை ஆடும்)

அடுத்த மேட்டர்.. பொதுவா. மனிதர்களில் மூன்று வகை.. Leaders (தலைவர்கள்), Followers (தொண்டர்கள்), Loners (தனியா இருப்பவங்க). இதுல நீங்க எதுனு தெரிஞ்சுகனுமா? ஈஸி.
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.

1. உங்களுக்கு காலேஜ்ல, ஸ்கூல்ல ஒரு தனி "நண்பர்கள்" செட் உங்களை சுத்தி இருந்தது.
2. நீங்க காலேஜ்/ஸ்கூல்ல ஒரு 'நண்பர்கள்" செட்ல இருந்தீங்க.
3. உங்களுக்கு நண்பர்கள் தான் உண்டு.. செட் எல்லாம் இல்லை.

பதில வைச்சு உங்களுக்கே, எது எதுக்குனு தெரிஞ்சு இருக்கும்..
இப்போதைக்கு இவ்ளோ தானுங்க! (இதுக்கே தாங்கல... இரத்தம் வருதுனு யாரோ சொல்லறாங்க) ... வர்ட்டா!

Friday, February 01, 2008

(அழகிய கவிதை - 1) விழியெழுத்து

மு.கு: சொன்ன மாதிரி புதிய கவிதை தொடர். 'அழகிய கவிதை" அப்படினு தொடருக்கு பெயர் வைக்கலாம்னு இருக்கேன்.. என்ன சொல்லறீங்க?



நீ அழைப்பதற்காகவே
தவம் கிடப்பது
நானும் என் தொலைபேசியும்..
யாரை அழைக்க போகின்றாய் முதலில்?

பெயர் தெரியாத பூக்களை
பார்க்கும் போதெல்லாம்..
பெயர் வைக்காத
நம் காதல்
நியாபகம் வருகின்றது..





நமக்குள்..
அழகிய கவிதை
சொல்வதாய் போட்டி..
நான்..
ஏதோதோ நினைத்து
வார்த்தைகளை தேடி பிடித்து
சொல்லி முடிக்க..
நீயோ..
உன் சிறு புன்னகையில்
பரிசை தட்டி செல்கிறாய்..



தேவன்
நம் தலையில் எழுதுவது
தலையெழுத்து..
தேவதை நீ
உன் விழியில் எழுதியது
விழியெழுத்து..

உன் செல்ல கோபங்களில்
கறையாத
என் பிடிவாதங்களை தேடி
முடிவில்லா
ஒரு பயணத்தில் நான்..



எந்த கவிதை அழகென்று
என்னை கேட்கின்றாய்..
உன் விழிக்கவிதையா
உன் இதழ்க்கவிதையா...
ரசிப்பதை தவிற
வேறொன்றும் அறியாத
நடுவராய் நான்.

விட்டுக்கொடுக்க சொல்கின்றாய்..
நானும் அதை தானடி செய்கின்றேன்..
என்னை விட்டு.. உன்னிடம் கொடுக்கின்றேன்..